ருத்ரா தேவியும் சக்கரவர்த்தியும் ஜோதிடரிடம் “ஜாதகம் அமைந்தால் கூறுங்கள்”
என்று சொல்லிவிட்டு சென்ற பின்பு ஜோசியர் ஆருடம், பார்த்து கட்டங்களை வகுத்து,
இந்த ஜாதக அமைப்பு உள்ள ஒரு பெண் வந்தால் மாங்கல்ய பலம் நன்றாக இருக்கும்
என்று கணித்து அந்த ஜாதகத்தை ஜோதிடர் மட்டுமே இருக்கும் வாட்ஸ் அப்
குரூப்பிற்கு அனுப்பினார்.
இந்த ஜாதக அமைப்பு உள்ள பெண் வேண்டும், தட்சணை தாராளமாக வழங்கப்படும்
என்று குறிப்பிட்டு இருந்தார்… அப்படி அந்த குரூப்பில் இருந்த மலரின் ஊரை சேர்ந்த
ஜோதிடர் மூலமாக மலரின் விவரங்கள் அவர்க்கு தெரிவிக்கபட்டன. அது சக்கரவர்த்தி
குடும்பத்திற்க்கு கை மாற்றபட்டது.
“இந்த பொண்ணு ஜாதக அமைப்பு, உங்க பையனோட ஆயுளுக்கு பலம் சேர்க்கும்,
ரெண்டு பேரும் அந்த கண்டம் முடியுறவரை ஒன்னா இருக்கணும் பாத்துக்கோங்க”
என்றார்.
——————————————-
மலர் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்தாள். வாசுகி சமையல் அறையில் சமையல்
செய்து கொண்டிருந்தார்.
கிளம்பி வெளியே வந்த மலர் தங்கள் வாசலுக்குள் நுழையும் புதிய நபர்களை பார்த்து,
வாங்க சார்! உங்களுக்கு யார் வேணும்? என்று கேட்டாள்.
இங்க சந்திரன்,வாசுகி அப்படிங்கிறவங்க….
உள்ள வாங்க சார்! இந்த வீடு தான்…என்றாள் மலர்.
அம்மா..! உங்களதான் பாக்க வந்து இருக்காங்க , என்று வாசுகியை அழைத்தாள்.
அம்மா, நீங்க பேசிகிட்டு இருங்கமா, நா வேலைக்கு கிளம்புறேன் ம்மா…. என்று
கூறிவிட்டு செல்ல முயன்றவளை சக்கரவர்த்தி தடுத்தார்.
நீயும் இருமா..! உன்கிட்டயும் கொஞ்சம் பேசணும் என்றார்.
நாங்க தான் போன வாரத்துல புரோக்கர் கிட்ட சொல்லி தேன்மலர பொண்ணு கேட்டு
இருந்தோம்.
“இப்போ நாங்க கல்யாணம் பண்ற சூழ்நிலையில இல்லைன்னு சொல்லி” நாங்க
அதை மறுத்துட்டோமே சார். ஜோதிடர் உங்க கிட்ட சொல்லலையா.
தெரியும், அதனால தான் நேர்ல பார்த்து பேசிட்டு போலாம்னு வந்திருக்கோம்.
என்ன பேச போறீங்க என்பது போல் பார்த்தாள் மலர்.
அம்மா நான் சக்ரவர்த்தி, இது என்னோட மனைவி ருத்ரா, நாங்க “சக்கரவர்த்தி
இண்டஸ்ட்ரீஸ்” குடும்பம். எங்களுக்கு அருண்தேவ் , அகல்யா அப்படின்னு ரெண்டு
வாரிசுகள் இருக்காங்க. பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. இப்போ
பையனுக்கு வரன் பாத்துக்கிட்டு இருக்கோம். இப்போ பையன் ஜாதகத்துல நேரம்
சரியில்லை அதுக்கு மாங்கல்ய பலம் உள்ள ஒரு பொண்ணா பாத்து கல்யாணம்
பண்ணி வச்சா அவனோட உயிர் கண்டத்தில் இருந்து தப்பிக்கும் அப்படின்னு சொல்லி
இருக்காங்க. அதுக்கான எல்லா பொருத்தமும் உங்க பொண்ணோட ஜாதகத்துல
இருக்கு, அதனாலதான் உங்க பொண்ண தான் கட்டணும்னு நாங்க இங்க தேடி வந்து
உட்கார்ந்திருக்கோம்.
அது வந்து….. இல்ல சார்….. இப்பதான் சின்ன பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சோம்
அதிலேயே கொஞ்சம் பணம் சிக்கல்… அதனால இப்போ பெரிய பொண்ணுக்கு
கல்யாணம் முடிக்கிற மாதிரி இல்ல… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு
பண்ணிக்கலாம்னு இருக்கோம்.
உங்களோட சூழ்நிலை என்னன்னு எனக்கு தெரியும்…. நீங்க உங்க பொண்ணு
தேன்மலர்க்கு எந்த செலவும் பண்ண வேணாம் மொத்த கல்யாணம் செலவும்
எங்களோடது…..
சக்கரவர்த்தி பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் ஒலித்தது,
அதை எடுத்துக்கொண்டு, ஒரு நிமிஷம்…! என்று கேட்டுவிட்டு போனை எடுத்து
கொண்டு வெளியே போனார்.
அந்த நேரத்தில் ருத்ராதேவி பேச ஆரம்பித்தார்…
உங்களோட நிலைமை என்னன்னு தெரிஞ்சு தான் நாங்க வந்திருக்கோம்! நான்
சொல்றத கேட்டா, உங்களோட குடும்பம் நிம்மதியா இருக்கும். உங்க வீடு கூட
இப்போ அடமானத்தில் தான் இருக்கு அப்படின்னு நான் கேள்விப்பட்டேன்.
இந்த வீட்டை நான் திருப்பி உங்களுக்கு கொடுத்துடறேன் மொத்த கடனையும் நான்
அடிச்சிடுறேன், அதுக்கு பதிலா நீங்க ஒன்னே ஒன்னு மட்டும் செஞ்சா போதும் எந்த
கேள்வியும் கேட்காம, என் பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க பொண்ண
எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க… இந்த பண விஷயம் நமக்குள்ள இருக்கிறது வேற
யாருக்கும் தெரிய வேண்டாம்.
என்னோட பையனுக்கும் இந்த கல்யாணம் பண்றதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்ல,
ஆனா எனக்கு என்னோட பையனோட உயிர் முக்கியம்… அதுக்காக நான் என்ன
வேணா.. செய்வேன். நல்லா புரிஞ்சுக்கோங்க! கல்யாணத்துக்கு யாரும் வரக்கூடாது.
எங்க குடும்ப உறுப்பினர், அப்புறம் நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் வரணும்… வேறு
யாரும் வர வேண்டியது இல்லை… கல்யாணம் ரொம்ப சிம்பிளா ஒரு கோவில்ல
வச்சுக்கலாம் ஏற்கனவே நான் உங்களுக்கு நிறைய செலவு பண்றதுனால
கல்யாணத்துக்கு என்னால செலவு பண்ண முடியாது. ஆனா என்ன நடந்தாலும் இந்த
கல்யாணம் நடந்தே தீரும். அது உங்க விருப்பத்தோடு நடக்கணுமா..! இல்ல உங்க
விருப்பமே.. இல்லாம நடக்கணுமா…!, அப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க
என்று மிரட்டும் தோரணையில் கூறினார். இப்போ என் வீட்டுக்காரர் வந்து இந்த
கல்யாணத்துக்கு சம்மதமானு? கேட்பார். நீங்க “சம்மதம்”னு மட்டும் சொல்றீங்க. வேற
ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை குழப்பி.. நிப்பாட்டலாம்னு பார்த்தீங்க….
அதோட விளைவுகள் விபரீதமா இருக்கும். இந்தக் கல்யாணம் நடக்கிறது மூலமா
உங்க பொண்ணோட வாழ்க்கையும் செட்டில் ஆகிடும் உங்க கடனும் அடஞ்சிடும்
நீங்களும் நிம்மதியா வாழலாம், இதுல யாருக்கும் எந்த நட்டமும் இல்லை, என்று
ருத்ராதேவி சொல்ல, மலரும் வாசுகியும் மிரண்டு முழித்தனர்.
அவங்க கல்யாணம் பண்ணி தரீங்களானு? என்று கேட்க வரல, கல்யாணம் பண்ணி
தான் கொடுக்கணும் அப்படின்னு மிரட்ட வந்து இருக்காங்க, என்று புரிந்து
கொண்டால் மலர்.
போன் பேசி முடித்துவிட்டு, சக்கரவர்த்தி வீட்டினுள் நுழைந்தார் என்னம்மா… முடிவு
பண்ணி இருக்கீங்க..? என்று கேட்டார்.
சார்… நாங்க யோசிச்சு எங்க முடிவ நாளைக்கு சொல்றோம்.. என்று கூறினார் வாசுகி.
ருத்ராவை பார்த்துக் கொண்டே,
சரி மா டைம் எடுத்து யோசிங்க நல்ல முடிவா சொல்லுங்க..! என்னோட பையனும்
நல்லா இருப்பான், உங்களோட பொண்ணும் நல்லா இருப்பா, என்று கூறிவிட்டு
சக்கரவர்த்தி கிளம்ப முற்பட “சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்” என்று ருத்ரா
கூறிவிட்டு சென்றார்.
அவர்கள் கிளம்பி சென்ற பிறகு வாசுகி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். இப்பொழுது
இருக்கும் கடன் பிரச்சனையில் இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் கடனை முடித்து
மலரை திருமணம் செய்து வைக்க இயலாது. அதனால் இப்பொழுது வந்த
சம்பந்தத்தை முடித்து விடவே எண்ணினார். திருமண செலவுகள் இல்லை, வசதியான
சம்பந்தம், நம்முடைய கடன்கள் அனைத்தும் அடைகின்றன, என்று அதன் பலனை
பட்டியலிட்டு பார்த்துக் கொண்டார். ஆனால் போன இடத்தில் மகள் சந்தோசமாய்
வாழ்வாளா! என்று யோசிக்க மறந்து விட்டார். மாலை வேலை முடிந்து வந்த மலரிடம்
பேச துவங்கினார் “என்னம்மா சொல்ற கல்யாணத்த பத்தி”
அம்மா ..! அவங்களே சொல்றாங்க அவங்க பையனுக்கு புடிக்கல அப்படின்னு,
அப்புறம் எப்படிம்மா நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்.
நம்ம கவி கல்யாணம் பண்ணிட்டு போகும்போது அந்த வீட்ல இருக்க யாருக்குமே
பிடிக்கல, ஆனால் இப்போ ஏத்துக்கிட்டு சந்தோசமா பார்த்துக்கிறாங்க. அது மாதிரி
நீயும் கல்யாணம் பண்ணி போன பின்னாடி கொஞ்ச நாள்ல எல்லாம்
சரியாகிவிடும், நீதான் பொறுமையா இருந்து காரியம் சாதிக்கணும். “சக்கரவர்த்தி
இண்டஸ்ட்ரீஸ்” எவளோ பெரிய சம்பந்தம் உன்ன தேடி வந்திருக்கு பாரு.
ஆனா அவங்க நம்மகிட்ட சம்மதமே கேக்கலம்மா, கட்டாயம் சம்மதிக்க வேண்டும்னு
சொல்லிட்டு போயிருக்காங்க.
நீயே யோசிச்சு பாரு மலரு, இப்போ நம்ம இருக்கிற நிலைமையில நம்மளோட கடன
அடைச்சு, உனக்கு கல்யாணம் பண்றது நடக்கிற விஷயம் இல்ல… அதனால உனக்கு
அமைந்து வர சம்பந்தத்தை ஏத்துக்கிட்டு நல்லபடியா வாழ்வதற்கு பாரு.. உன்னோட
குணத்துக்கு நீ எங்க இருந்தாலும் பிழைச்சுக்குவ… அதுவும் இல்லாம அவங்களோட
பையனுக்கு உயிருக்கு ஆபத்து அப்படிங்கறதனால தான் நம்மளே தேடி
வந்திருக்காங்க… உன்னால ஒரு உயிர் காப்பாற்றப்படுதுனா அது நமக்கு சந்தோஷம்
தானே… நல்ல யோசி, யோசிச்சிட்டு எனக்கு காலையில ஒரு முடிவு சொல்லு, நான்
அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.
அம்மா என்னோட வாழ்க்கையில முடிவெடுக்கிற தகுதியை நான் எப்போவோ
இழந்துட்டேன், இப்போ வாழ்க்கையில அது போகிற போக்குல வாழ்ந்துட்டு போறேன்.
எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான் என்றாள் மலர்.
அங்க என்ன பிரச்சனை வந்தாலும் நீ சமாளிச்சு வாழ்ந்து, பழகனும் மலரு, ஏன்னா…
உனக்கு அங்க பணக்கஷ்டம் எதுவும் இருக்க போறது இல்ல.. சின்ன,
சின்ன பிரச்சனை ஏதாவது வந்தாலும் சமாளிச்சு வாழப்பழகு… நான் காலையில
அவங்க கிட்ட போன் பண்ணி சம்மதம் சொல்லிடுறேன்… என்று கூறிவிட்டு போய்
தூங்க சென்றார் வாசுகி.
மலருக்கு தான் தூக்கம் பறிபோனது. “என்னடா வாழ்க்கை” என்றானது.
தகவல் அருண் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டது, மகிழ்ச்சியடைந்தார் சக்கரவர்த்தி.
அதன் பின் ஒரே வாரத்தில் பெண்பார்க்கும் நிகழ்வு, நிச்சயதார்த்தம் எதுவும் இன்றி,
நேரடியாக திருமணம் நடந்தேறியது. (அது எப்படி சிறப்பா நடந்ததுன்னு நமக்கு
தெரியுமே)
தன்னுடைய தந்தை பற்றிய நினைவுகளில் மூழ்கி இருந்த மலர் தன் திருமணம்
அமைந்தது பற்றியும் நினைத்துக் கொண்டே உறங்கிப் போனாள்.
—————————————
இங்கு கோபமாக அலுவலகத்திற்குள் நுழைந்த அருண், பணியாளர்களிடம்
கடுமையை காட்டி, வேலை வாங்கிக் கொண்டு இருந்தான். அனைவரும் முழி பிதுங்கி
வேலை தேய்த்து கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் விக்ரம் உள்ளே நுழைந்தான்.
ஏன்டா…! யார் மேலயோ இருக்கிற கோபத்தை இவங்க கிட்ட காமிச்சுக்கிட்டு இருக்க..
இப்போ நீ எதுக்கு வந்த… உன் ஆபீஸ்ல ஒர்க் இல்லையா…
நீ டென்ஷனா இருப்ப அப்படின்னு, அகல்யா தான் அனுப்பிவச்சா..
ஓஹோ.. அப்போ நீயா வரல….
ஹி… ஹி… சரி…அதைவிடு, கல்யாணம் நடந்தது நடந்து போச்சு… இன்னும் எத்தனை
நாளைக்கு இப்படி கோபமா இருப்ப, கொஞ்ச நாள் பொறுமையா இருடா, அப்புறம்
எல்லாமே உனக்கு புடிச்ச மாதிரி நடக்கும்… நம்பு..
நானும் அதுதான் யோசிச்சிருக்கேன்….
அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு டா….. போகப் போக உனக்கே பிடிக்கும் பாரு,
என்று சொல்லி, அருணின் முறைப்பை பரிசாக பெற்று கொண்டான்.
ஏண்டா சொல்ல மாட்ட…! “சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ்” குடும்பத்து பொண்ண
கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டு, எனக்கு வந்து அட்வைஸ்
பண்ணிக்கிட்டு இருக்க…
டேய் பொய் சொல்லாத டா…. உன் தங்கச்சிய நான் கரெக்ட் பண்ணல, அவதான் என்ன
கரெக்ட் பண்ணா….
ஆமா, அதுவும் இல்லனா கடைசி வரைக்கும் நீ சிங்கள்-ஆ தாண்டா இருந்திருப்ப…
ஆதி கால் பண்ணானா?
பண்ணான்… உன் போன் ஸ்விச் ஆப்… னு சொன்னான்.
ரொம்ப பண்றாண் டா அவன். இப்போ கண்டிப்பா அப்ராட் போயே ஆகணுமா?
அங்க அவனோட ஆபீஸ்ல ஏதோ ஒர்க்கர்ஸ் ப்ராப்ளம் பண்றாங்கடா அதை சால்வ்
பண்ண போயிருக்கான்.
அப்புறம் முக்கியமான விஷயம், இன்னும் டூ மந்த் ல இண்டஸ்ட்ரியலிஸ்ட் மீட் க்கு நீ
தான் போகணும்… ரெடி ஆகிக்கோ.
ஓகே… , போய்டலாம்…என்று சொல்லிவிட்டு தனது வேலைகளை தொடர்ந்தான்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!
————————————-