அசுரன் 11

அன்றொரு நாள் முக்கிய பைல்களை எடுக்க மாலையில் வீடு வந்த அருண் 
பால்கனியில் இருந்து, மூவரும் சிரித்து பேசிக் கொண்டு இருப்பதை கண்டான். (அவள் 
சிரித்தால் தான் அவனுக்கு பிடிக்காதே) 

நான் வீட்ல இல்லாதப்ப ராஜபோக வாழ்க்கை தான் வாழ்றா போல இப்படியே போனா 
உன்னை இந்த வீட்ல இருந்து அனுப்பவே முடியாது போலயே..! என மனதிற்குள் 
எண்ணிக் கொண்டான். 

வீட்டிலிருந்த அனைவரிடமும் சகஜமாக பழக முடிந்த மலரால், அருணின் 
கண்ணெதிரே கூட செல்ல முடியவில்லை…. தான் ஏதாவது செய்து மேலும் அவனின் 
வெறுப்பை பெற வேண்டியது வருமோ? என்ற பயம் அவளுக்கு. 

அருணின் கண்கள் சிந்தும் எரிச்சல் கலந்த அருவருப்பான பார்வையை மலரால் 
சந்திக்க முடியவில்லை… அதனால்… 
அருணின் கண்முன் வருவதையே மலர் தவிர்த்து விட்டாள்… 

அருண், ஏதாவது கேட்டால் மட்டும் கொண்டு செல்வாள். மற்ற நேரங்களில் அவன் 
கண்ணில்  படாதவாறு நடந்து கொண்டாள். 
அப்படியும் சில நேரங்களில் அவளை ரூமுக்கு வரவழைத்து, அவளது மனதை 
புண்படுத்தி அனுப்பி வைப்பான். 

அவன் எவ்வளவு வெறுப்பை வெளிப்படுத்தினாலும் மலர் அவனுக்கு செய்யும் 
கடமைகளில் குறை வைப்பது இல்லை…  அவன் காலையில் குளியல்அறைக்குள் 
இருக்கும் நேரத்தில் அவனுடைய அறையை சுத்தம் செய்து, ஷூ முதல் கொண்டு 
பாலிஷ் போட்டு ரெடியாக வைத்திருப்பாள்…. அவன் கண்ணில் 
படும்பொழுதெல்லாம் அவனுடைய அறை பளிச்சென்று சுத்தமாக இருக்கும். 

இதெல்லாம் அவன் மனதை கவர்வதற்காகவே அவள் செய்கிறாள் என அவன் 
எண்ணிக் கொண்டான்… 
“மயக்க பார்க்கிறா மாட்டிடாத அருண்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 

தினமும் இரவு அவனுக்கு பிடித்த உணவு வகைகளை தன் கையால் சமைத்து டைனிங் 
டேபிள் மேல் எடுத்து வைத்திருப்பாள் மலர். அவன் உணவு உண்ண அமரும் போது 
ஓவனில் சூடு பண்ணி சுடச்சுட பரிமாறுவாள்… 

அன்றொரு நாள் இரவு தூக்கம் முழித்து, தாமதமாக வீட்டுக்கு வந்த அருணுக்கு இரவு 
உணவை எடுத்து வைக்க, அவன் அதை பார்த்து ஏளனமாக புன்னகை ஒன்றை சிந்தி, 
அவளை சாய்வாக நிமிர்ந்து பார்த்து, ஓ நல்ல மனைவியா நடந்துக்கிறீங்களோ… 
இப்படி எல்லாம் செஞ்சி… என் மனசுல இடம் புடிக்கலாம் அப்படின்னு உனக்கு 
யாரு….ஐடியா கொடுத்தது…  என்று ஏளனமாக கேட்டான். 

ஐயோடா….என்றானது மலருக்கு… (என்ன பண்ணாலும் அங்க சுத்தி இங்க சுத்தி 
இதைத்தான் கேட்கிறார் என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்) 

இல்ல சார்… நல்ல வேலைக்காரியா நடந்துக்கணும்னு மட்டும் தான் மனசுல 
நினைச்சி இருக்கேன்… 

குட், அப்படி நினைக்கிறது தான் உனக்கு நல்லது… 
நேத்து நீயும் எங்க அப்பாவும் சரிசமமா டேபிள் ல உட்கார்ந்து சாப்பிட்டுட்டு 
இருந்தீங்க… 
சுதா, இங்க பத்து வருஷமா வேலையில இருக்காங்க… எங்க கூட டேபிள்ல ஒண்ணா 
உக்காந்து நீ சாப்பிட்டு பார்த்து இருக்கியா… 

இல்ல சார்.. 

அப்போ நீ… 

இனிமேல் டேபிள் உக்காந்து சாப்பிட மாட்டேன் சார்… 

புரிஞ்சுகிட்டா சரி யார் யார் எங்கெங்கே இருக்கணும்னு மனசுல ஏத்தி வச்சுக்கோ 
என்றான்… 

அன்றிலிருந்து அவளது உணவை சமையலறையிலேயே சாப்பிட்டுவிடுவாள்… 
அல்லது தட்டில் போட்டு தனது அறைக்கு எடுத்து சென்று சாப்பிடுவாள். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நீ இந்த வீட்டில் யார்? என்பதை 
நினைவுபடுத்திக் கொண்டே இருந்தான் அருண். 

அவள் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது புலம்பி இருந்தால் கூட அருணின் மனது 
சந்தோசப் பட்டிருக்கும் ஆனால் எவ்வளவு கஷ்டப்படுத்தி, அவமானப்படுத்தி 
அனுப்பினாலும் திடமாக நிற்பவளை அவனால் ஏற்றுக்கொள்ளவே 
முடியவில்லை…  அதனாலயே அவளை வலிக்க, வலிக்க வார்த்தைகளால் அடித்தான். 

ஆனால் அவளின் உண்மை நிலை அவனுக்கு தெரியாது… அவள் கண்களில் கண்ணீர் 
வராததால் அவளுக்கு வலிக்கவில்லை என்று நினைத்து விட்டான் போலும். 

ஒரு நாள் அவனது விலை உயர்ந்த சட்டையை அவனுடைய மற்ற துணிகளுடன் 
சேர்த்து துவைத்து மடித்து அயன் பண்ணி வைத்திருந்தாள்… மலர். 

அதைக் கண்டவன் “யார் இதை இங்க வச்சது” என்று கேட்டான்.. 

நான் தான்.. சார்… துவைச்சு, அயர்ன் பண்ணி கொண்டு வந்து வச்சேன் சார்…. 
என்றாள். 

இடியட்… இது என்ன பிராண்ட் தெரியுமா இதோட வேல்யூ என்னன்னு தெரியுமா… 
இதை எப்படி ஹேண்டில் பண்ணனும் தெரியுமா… இத வாஷ் பண்றதுக்கு 
எக்ஸ்பர்ட்  இருக்காங்க.. அவங்க கிட்ட கொடுத்து தான் வாங்கணும்.. 
இப்படி உன் இஷ்டத்துக்கு போட்டு நாசம் பண்ணி வச்சிருக்க என்று வார்த்தைகளை 
கடித்து துப்பினான்… 
அக்கறை இருக்கிற மாதிரி இந்த வேலை எல்லாம் நீ செஞ்சா… உன் கூட சேர்ந்து 
வாழ்ந்துருவேன்னு நினைப்பா… என்று கேட்டான். 

அதனால் அடுத்த முறை அவனுடைய அழுக்கு துணிகளை பார்த்தும் பார்க்காதது 
போல் விட்டு விட்டாள். 

அதற்கும் சாடினான்… 

” இடியட் துணி எல்லாம் துவைக்காம அயர்ன் பண்ணாம இருக்கு இத கூட பாக்காம நீ 
என்ன புடுங்கிட்டு இருக்க… வீட்ல வேலை செய்யாம, சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு 
தூங்கிட்டு இருக்கியா… இந்த மாதிரி வசதி வாய்ப்போட இருக்க தானே உங்க 
வீட்டுக்கு கூட போக மாட்டேங்குற ” என்றான். 

( இவன் என்ன பாஸா இல்ல லூசா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள்.) 

ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்ற பழமொழியின் 
சாராம்சத்தை இப்பொழுதுதான் புரிந்து கொண்டாள் மலர். 

எண்ணெய் வைத்து சீவிய அவளுடைய நீளமான தலைமுடியை பார்த்தாலே 
அவனுக்கு எரிச்சல் வரும்… அவனுடைய அறையில் ஒரு முடி கிடந்தாலும் அதற்கு 
காரணம் மலர்தான் அவளுடைய முடிதான் கொட்டி இந்த வீட்டை அழுக்காகி விட்டது 
என்றபடி திட்டுவான் … 

அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட வீட்டிற்கு வந்து மலரின் மீது தான் 
எரிந்து விழுவான். 

அன்று ஒரு நாள் அருணின் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்… மலர். 

அப்பொழுது அவனது பர்ஸ் தரையில் கிடந்தது அதை எடுத்து டேபிளின் மேல் 
வைக்கப் போனாள். 

அமைதியாக இருந்த ரூமில் யாரோ,”இங்கே என்ன பண்ற” என்று சத்தமாக 
கத்தியதால், திடுக்கென்று உலுக்கி விழுந்தவள் கையில் இருந்த பர்ஸை கீழே போட்டு 
விட்டாள். 

கீழே விழுந்த பர்ஸையும் அவளையும் மாறி மாறி பார்த்த அருண். என்ன பணம் 
ஏதாவது வேணுமா?… என்று கேட்டான். 

இல்லை…என தலையசைத்தாள். 

அப்பறம் எதுக்கு என்னோட பர்ஸ்ச எடுத்த… என்று கேட்டான். 

ரூம் கிளீன் பண்ண வந்தேன் சார்… அப்போ இந்த பர்ஸ் கீழே விழுந்து கிடந்தது சார்… 
அதை எடுத்து டேபிள் மேல வைக்க போனேன்… என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள். 

அதை நம்பாதே பார்வை பார்த்தவன், என்னோட பொருளை என்ன கேட்காமல் 
தொடுற வேலை வச்சுக்காத…  உனக்கு பணம் தேவைப்பட்டால், கேட்டு வாங்கி பழகு.. 
இப்படி யாரும் இல்லாத நேரம் எடுக்கிற வேலை வச்சுக்காத என்றான். 

தலையை குனிந்து இருந்த மலர் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து அடிபட்ட 
பார்வை ஒன்றை வீசினால்,, என்ன அர்த்தத்தில் அவன் சொல்கிறான்.. என்று புரிந்து 
கொள்ள முடியாத அளவுக்கு மலர் ஒன்று முட்டாள் இல்லையே, 

“என்னைப் பார்த்தால் உனக்கு திருட வந்தவள் போலா உள்ளது” என்பது அந்த 
பார்வையின் அர்த்தம்…. ஆனால் அது எல்லாம் அருணுக்கு எங்க புரிய போகிறது. 

அவனுடைய நோக்கம் அவளின் மனதை புண்படுத்துவது. 

அவளும், அவனுடைய திட்டுகளுக்கு பழகிப் போனாள். அவள், அவனை மனதால் 
நெருங்க எடுத்து வைக்கும் முயற்சிகள் அனைத்தையும் தரைமட்டம் ஆக்கி அவள் 
மனதை காயப்படுத்தி அனுப்பி வைப்பான். 
அதனால் அவனை மனதை நெருங்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டாள்… 

********************* 

இரண்டு மாதங்களுக்குப் பின்… 

இண்டஸ்ட்ரியலிஸ்ட் மீட்டிங்கில் அருண் கலந்து கொண்டு உரையாற்றி முடித்து 
இருந்தான்.  
கரவொலி அரங்கத்தை நிறைத்தது.. 

தொழிலதிபர்களின் மிகப்பெரிய சங்கமம் இது.. பெரிய தொழிலதிபர்களும் அதன் 
பின் அவர்களது வாரிசாக வருபவர்களும் இதில் கட்டாயம் கலந்து கொண்டு 
அனுபவம் பெறுவார்கள். 

அருணின் தெளிவான உரையும் அதிலிருந்த புதிய யோசனைகளும் அங்கிருந்த 
பெரிய பெரிய கம்பெனிகளை கவர்ந்தது.. 
அவர்கள் அனைவரும் அருணின் சக்கரவர்த்தி இண்டஸ்ட்ரீஸ் உடன் பார்ட்னர்ஷிப் 
வைக்க முன்வந்தனர். 
தானாக முன்வந்து அனைவரும் அருணை பாராட்டி பேசினர்…. 

பல தொழிலதிபர்களின்  பெண் வாரிசுகளின் கண்கள் அருணை சுற்றி வட்டமடித்துக் 
கொண்டிருந்தன. 

அருணுக்கு அடுத்து மேடையில் ஏறி பேச வந்தது.. சிஇஓ ஆஃப்  ஜோஸ் 
எண்டர்பிரைசஸ்… மிஸ்.ரதி ஜோஸ் என்று அறிவிப்பாளர் அறிவித்தார்… 

அரங்கத்தில் கரவொலிகளுக்கு நடுவே  பேரழகியாக ஜீரோ சைஸ் பிகரில்… டக்…டக்… 
என்ற ஹைஹீல்ஸ் சத்தத்துடன்  ஒயிலாக நடந்து வந்தாள் ரதி என்கிற ரவி ஜோஸ். 

அங்கிருந்த மொத்த ஆண்களின் ரசனையான பார்வையும், பெண்களின் 
பொறாமையான பார்வையும்.. அவளை மொய்த்தது. 

அங்கிருந்த ஆண்கள் சிலர் தங்களுக்கு நடுவே “கட்டுனா இவள மாதிரி பொண்ண 
தான் கட்டணும்டா” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தனர் அது அருணின் 
காதிகளிலும் விழுந்தது. 

மேடையேறி பேசத் தொடங்கினால் ரதி, இப்பொழுது அவளது ஆளுமையும் கம்பீரமும் 
அறிவும் கண்டு அங்கிருந்த மொத்த கூட்டமுமே  ஆச்சரியத்துப் போனர். 

அருண் அவளைக் கண்டு மெய் மறந்தான்… தனக்கு மனைவியாகும் அத்தனை 
தகுதியும் இவள் ஒருத்திக்கே இருப்பதாக எண்ணினான். 
கண்களாலேயே அவளை களவாடிக் கொண்டு இருந்தான்… 
அவனின் தொடர் பார்வை வீச்சால் மேடையில் பேசிக்கொண்டு இருந்த ரதியின் 
பார்வையும் அவனை ஒரு கணம் தொட்டு மீண்டது. 
அவளின் பார்வை தொட்டு மீண்டதை கண்ட அருணின் இதயம் தடதடத்தது. 

உரையை முடித்துவிட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்று பின் மேடையை 
விட்டு கீழே இறங்கி வந்தாள் ரதி. 

ஜோஸ், தனது சக தொழிலதிபர்களுக்கு தனது மகள் ரதியை அறிமுகம் செய்து 
வைத்துக் கொண்டு இருந்தார். 

அந்த கூட்டத்தின் இடையே அருணுக்கு அவளிடம் சென்று பேச தயக்கம். 

எப்பொழுதும் அவனைக் கண்டு அவன் அழகைக் கண்டு பெண்கள் தான் அவன் 
பின்னால் சுற்றி பழக்கம் சுற்ற வைத்து பழக்கம்.. 

முதன்முதலில் தானாக ஒரு பெண்ணிடம் போய் பேசுவது அவனுக்கு என்னமோ போல் 
ஆனது… 

ஆனால், அருண் பேச வருவதையும் பின் தயங்கி நிற்பதையும் ரதியின் கண்கள் காண 
தவறவில்லை, 

அவளிடம் எப்படி பேசுவது என்று யோசித்துக் கொண்டு அதற்கான சரியான நேரம் 
பார்த்து காத்திருந்தான் அருண்.. 

அப்போது பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ரதியே அவன் அருகில் வந்து “ஹாய் 
மிஸ்டர்” இன்று பேச தொடங்கினாள்…. 

ஹாய் என்றான் அருண். 

நம்ம ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி மீட் பண்ணிருக்கோமா உங்களை எங்கோ 
பார்த்த மாதிரி இருக்கு என்றாள் ரதி. 

எனக்கும் அந்த சேம் பீலிங் தான் பட் எங்கன்னு ஞாபகம் இல்ல.. ஐ ஆல்சோ திங்கிங் 
அபௌட் இட்…. 
என்று அவள் கேட்ட கேள்வியை பற்றி கொண்டு பேச தொடங்கினான் அருண். 

ஓகே, எனிவே.. ஐ ஆம் மிஸ் ரதி… என்று தனது கைகளை அவனை நோக்கி நீட்டினாள். 

இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் களவாடிய படியே கைகளை குலுக்கி 
கொண்டனர். 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top