அசுரன் 12

ஹாய்… ஐ அம்  மிஸ்டர்.அருண்.. 
என்று ரதியின் கைகளை குலுக்கி தன்னை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டான். 

ஸ்டேஜ்ல நல்லா ப்ரெசன்ட் பண்னீங்க.. ஐ அம் இம்ப்ரெஸ்ட் யுவர் ஆட்டிட்யூட்… என்று 
கூறினாள் ரதி. 

பட்!… உங்க அளவுக்கு ப்ரெசென்ட் பண்ணலைன்னு நினைக்கிறேன். பட் இந்த 
அளவுக்கு அழகான பொண்ணு கொஞ்சம் கூட ஆட்டிடியூட் இல்லாமல் என்னிடம் வந்து 
பேசுறது தான் ஷாக்கிங் அ இருக்கு… என்றான் அருண். 

நான் அப்படித்தான்…. பிடிச்சவங்க கிட்ட ஆட்டிட்யூட் காட்ட மாட்டேன்… என்றாள் ரதி. 

அதைக் கேட்டு அருணின் முகத்தில் மந்தகாச புன்னகை ஒன்று உருவாகியது…. பட் 
உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு காம்ப்ளிமென்ட் நான் எதிர்பார்க்கல…. என்றான். 

உங்க பிரசண்டேஷன பாத்ததுக்கு அப்புறம் இங்க நிறைய பேரு உங்க பார்ட்னர்ஷிப் 
ரெடியா இருக்காங்க போல இருக்கு… என்றாள் ரதி. இன்று தலையைச் சுற்றி 
காண்பித்தாள். 

நாம ஒரு பார்ட்னர்ஷிப் போட்டுக்கலாமா… என இரு பொருள்பட அருண் கேட்க.. 

எஸ்! ஐ பீல் டு… என்று அதே இரு பொருள் படும் பதிலை அளித்தாள் ரதி. 

அதன்பின் தங்கள் தொழில்களைப் பற்றி பொதுவாக பேசிக்கொண்டு இருந்தனர்… 
அன்று முழுவதும் இருவரும் ஒன்றாகவே வலம் வந்தனர்… ஒருத்தருக்கு ஒருத்தர் 
பரிமாறிக்கொண்டு பேசி சிரித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.  தங்களது ஜோடி 
பொருத்தத்தை அறையின் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும்  கண்ணாடிகளில் 
அவ்வப்போது பார்த்து ரசித்துக் கொண்டனர் இருவரும். 

இது அனைத்தையும் ஜோசும் கண்டு கொண்டார்… மனதுக்குள் சிரித்துக் 
கொண்டார்… 

ஏனென்றால் தன் மகள் இப்படி யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பேசி பழக மாட்டாள் 
என்பது அவருக்கு தெரிந்ததுவே… மகளுக்கு, தான் தொந்தரவாக இருக்கக் கூடாது 
என்று எண்ணி நிகழ்ச்சிக்கு இடையிலேயே ரதியிடம் சொல்லிவிட்டு அவர் கிளம்பி 
விட்டார். 

நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீட்டுக்கு கிளம்பும் நேரம் ஒட்டி உரசி கன்னத்துடன் 
கண்ணம் நினைத்து செல்பி எடுத்துக் கொண்டனர்… 

ரதி சிறிது நேரம் அமைதியாக இருந்து பின் அருணை பார்த்து… அருண்..! ஷெல்  வி 
டேட்? என்று கேட்டாள்.. 

அதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து, பின் சந்தோசமாக ” சுயர்” என்றான் என்றான் 
தோலை உயர்த்தி கைகளை விரித்த படியே. (அவன் கேட்க நினைத்த கேள்வியை 
அவனை முந்திக்கொண்டு இவள் கேட்டதால் வந்த அதிர்வு அது) 

பின் அவர்கள் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர். 

நீண்ட நாட்களுக்குப் பின் அருணின் மனம் அமைதி அடைந்திருந்தது. அத்தனை 
ஆண்களின் ரசனையைப் பெற்ற பெண் தன்னை தேடி வந்து பேசி தன்னை 
பாராட்டுவதில் அவனுக்கு பெருமையாக இருந்தது. 

அடிக்கடி தன் போனை எடுத்து அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை 
ரசித்துக்கொண்டான் அதில் ரதியை மட்டும் ஜூம் செய்து அள்ளி முத்தமிடுவது போல் 
சைகை செய்தான்… 

இத்தனை நாள் தான் மட்டும் வீட்டினரால்  ஏமாற்றப்பட்டு விட்டது போல் உணர்ந்த 
அவன் இன்று அதற்கான விடை கிடைத்ததாக எண்ணி,   ரதி நினைவுகளில் மூழ்கி, 

ஊரே அவள பார்த்தா…. 
அவ என்ன மட்டும் பார்த்தா… 
யார் சொன்னாலும் நம்ப மாட்டா… 
அவ தாண்டா நம்பர் கேட்டா… 
பசங்க சீன போட்டா… 
அவ கண்டுக்கவே மாட்டா… 
என் கூட பேச்ச போட்டா… 
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…. 

என்ற பாடல் வரிகளை பாடிக்கொண்டு… காரின் முன் கண்ணாடியில் தன் முகத்தைப் 
பார்த்து தலையை ஸ்டைலாக கோதியபடிய.. 

மிகவும் சந்தோஷமாகவும் புது உற்சாகத்துடன் வீடு வந்தடைந்தான். 

அன்றிலிருந்து அவர்கள் எல்லை தாண்டி பழக ஆரம்பித்திருந்தார்கள்… முதலில் 
போன் மூலம் தொடங்கிய உரையாடல்கள், பின் பார்ட்டி, பப்பில் சென்று 
முடிவடைந்தது. 

இருவருக்கும் இடையில் பல சிந்தனைகள்  ரசனைகள் ஒத்துப் போனது. 

அதில் முதன்மையானது, கல்யாணம் குடும்ப பொறுப்பு ஆகியவற்றில் 
ஆர்வமற்றவர்களாக இருந்தனர். 
அன்பு பாசம் அக்கறை குடும்ப பொறுப்பு இவற்றைத் தாண்டிய ஒரு உலகத்திற்குள் 
வலம் வர நினைத்தனர்.. 

ரதி தன்னைப் போன்றே யோசிப்பதை கண்டு மனம் மகிழ்ந்தான் அருண்.. 

போனில் அவர்களுடைய பேச்சு எல்லை மீறியது…. அந்தரங்க பேச்சுக்கள் 
ஆக்கிரமித்து இருந்தது… அதன் விளைவாக… 

அன்று பப்பில், இருவரும் மது அருந்திவிட்டு உடல்கள் இரண்டும் உரசியபடி… 
ஒருவரின் கண்களை மற்றொருவர் பார்த்துக் கொண்டே… நடனமாடி கொண்டு 
இருந்தனர்…  உடல் உரசும் வெப்பத்தினால் இருவரும் தகித்து கொண்டு இருந்தனர். 

இருவரின் கண்களிலும் மோகம் ததும்பி வழிந்தது… அருணின் கைகள் ரதியின் 
இடுப்பை சுற்றி வளைத்து இறுக்கமாக பிடித்து… தன் உடலுடன் அனணத்து  நடனம் 
ஆடினான்… 

ரதி தன் கைகளை அருணின் தோளின் மேல் வைத்து, தன் முன்னங்காலில் எக்கி 
அருணின் இதழை நோக்கி செல்ல, வேகமாக குனிந்து அவளின் இதழுடன் இதழ் 
பிணைத்தான் அருண். 
இந்த இதழ் முத்தம் அவர்களுக்கு இடையே மோக தீ யை தூண்டி விட்டிருந்தது.. 

அது கொண்டுவந்து அவர்களை நிறுத்திய இடம் ஹோட்டல் அறை… 

அறையினுள் நுழைந்த அருண், வன்மையாக ரதியின் இதழில் முத்தமிட்டான்… நீண்ட 
நெடிய வன்மையான முத்தம்… உனக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல் 
இருந்தது அந்த முத்தம்… அருணின் கைகள் ரதியின் உடலில் ஊர்வலம் போனது… 

சிறிது நேரத்தில் இருவரின் உடைகளும் களைத்து அறையின் ஓர்  மூலையில் 
எறியப்பட்டது. 

தேகம் இரண்டும் பின்னி பிணைந்தது.. முத்தத்தில் மூழ்கி மோகத்தில் திளைத்தனர். 
அருணின் வேகத்தில் சுகம் தாளாமல்  தனது கைகளால் அருணின் முதுகில் தன் 
நகங்களால் கோலம் போட்டாள் ரதி. அந்த ஏசி அறையிலும் வேர்வைத் துளிகள் 
ஊற்றெடுத்து இருவர் உடலையும் நனைத்தது. 

மோகம் உச்சம் பெற்று, சொர்க்கத்தை கண்டு.. பின் சாந்தி அடைந்து.. 
வேக  மூச்சுகளுடன்  ரதியை விட்டு விலகி படுத்தான் அருண்…  

இருவரும் போர்வைக்குள் விட்டத்தை பார்த்து மல்லாந்து படுத்திருந்தனர். 

காதலுக்கான தேடல் நடைபெறாமல், வெறும் காமத்திற்கான தேடல் முடிவடைந்தது. 

யூ ஆர் அமேசிங்… என்றான்.. அவள் முன் நெற்றியில் முத்தமிட்டு, கண்களை மூடி 
அவன் முத்தத்தை ரசித்தவள் “யூ டூ ” என்றாள். 

கூடலுக்கு நடுவே ரதிக்கு பல நினைவுகள் வந்து போனது… கண்களை இறுக மூடி 
திறந்தவள். 

எஸ்….ஐ பவுண்ட் இட்… என்று மனதிற்குள்  சொல்லிக் கொண்டாள் ரதி. 

கடைசி வரைக்கும் அருணுக்கு திருமணமானது அவனுக்கு நினைவே வரவில்லை… 
அதனால் துளி குற்ற உணர்ச்சியும் இல்லை.. ரதியிடம் அதைப் பற்றி கூறவும் இல்லை. 

ரதியே இதைப் பற்றி தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை… 

இவர்களின் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. 

*************************** 

இப்பொழுதெல்லாம் அருண் வீட்டில் மலரை, மனதால் மிகவும் துன்புறுத்தினான்… 
அவனின் மகிழ்ச்சியான வாழ்வின் தடைக்கல்லாக எண்ணினான். அதனால் 
கண்ணில் படும்பொழுதெல்லாம் திட்டி தீர்த்தான் அவளை அவன் அவள் வீட்டிற்கு 
திரும்ப அனுப்புவதே அவனின் ஒரே குறிக்கோளாக இருந்தது. 

ஒரு நாள் அவன் திட்டுகளில் விரக்தியின் எல்லைக்கே சென்று  அவளது அம்மாவிற்கு 
ஃபோன் செய்து, “அம்மா நான் நம்ம வீட்ல வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு போகட்டுமா? 
என்று பாவமாக கேட்டு வைத்தாள் “. 

ஏண்டி மலரு ஏன் திடீர்னு இப்படி கேக்குற உங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா…. 

இல்லம்மா உன்னோட ஞாபகமா இருக்கு அதனால வீட்டுக்கு வரலாம்னு 
நெனச்சேன்… 

அதான் அப்பப்போ வீடியோ கால்ல பேசுறோமேமா.. நீ இங்க வந்து தங்கினா  உங்க 
மாமியார் சங்கடப்படுவாங்க… 

அம்மா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம, இத்தனை நாள் சொல்லாம 
இருந்தேன்…என்னை அவருக்கு சுத்தமா பிடிக்கலமா… என்ன எப்ப பாரு திட்டிக்கிட்டே 
இருக்காரு… 

“புடிக்கிற மாதிரி நீ நடந்துக்க மா”… என்று கூறி சில அந்தரங்க அட்வைஸ்களை 
அள்ளித் தெளித்தார். 

அதைக் கேட்டு மலர் முகம் சுணங்கியது. இப்படியெல்லாம் பண்ணி அவர் மனசுல 
இடம் பிடிக்கிறதுக்கு… பேசாம நான் இப்படியே இருக்கேன்…. என்று மனதில் 
தோன்றியது. 

உன்ன அடிச்சு கொடுமை படுத்துறார? மலரு…. 

இல்லம்மா… 

சாப்பாடு போடாம கொடும படுத்துறாங்களா…? 

இல்லம்மா…. 

அதிகமா வேலை வாங்கி கொடுமை படுத்துறாங்களா…? 

மச்….இல்லம்மா…. 

அப்புறம் என்னடி உனக்கு கவலை? ராணி மாதிரி இருக்க…. அப்புறம் ஏன் 
மாப்பிள்ளையை பிடிக்க மாட்டேங்குது உனக்கு. 

 சத்தியமா!… உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு 
தெரியலமா…இதெல்லாம் பண்ணா தான் கொடுமையா ம்மா… அவர் என் மனச 
கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறாரு.. 

உன்ன விட சின்ன பொண்ணு கவி.. அவ 
எவ்வளவு அழகா அனுசரிச்சு குடும்பம் நடத்துறா… தெரியுமா… 

அம்மா அவருக்கு என்னோட மூஞ்சியவே பார்க்க புடிக்கல…. ஏன் புரிஞ்சுக்க மாட்ற… 
என்று கோபமாக கத்தினாள்… ( இவ்வளவு தூரம் சொல்லியும் தாய்க்கு தன் பிரச்சனை 
புரியவில்லையே என்ற ஆதங்கம் ) 

“சாயந்திரம் குளிச்சிட்டு மல்லிகை பூ….” என்று ஏதோ வாசுகி சொல்ல வர, 

ஐயோ….அம்ம்மா….! நீ ஒண்ணுமே சொல்ல வேணாம் இங்க நான் 
நல்லா,  சந்தோஷமா… இருக்கேன்… போதுமா!… போனை வச்சுருறேன்… நாளைக்கு 
கூப்பிடுறேன். என்று வேகமாக காலை கட் செய்து விட்டு கோபமாக போனை தூக்கி 
மெத்தையில் எறிந்தாள் மலர். 

என்ன நினைச்சுகிட்டு இருக்காங்க… எல்லா பிரச்சனைக்கும் இது ஒன்னு தான் தீர்வா… 
அவர மயக்குறதுக்கு தான் நான் பொறந்து இருக்கனா கேட்கவே நாராசமா இருக்கு. 
என்று மனதிற்குள்ளேயே நொந்துகொண்டாள். இதற்கு மேலும் ஏதாவது கூறினால், 
அந்தரங்க பாடம் நடத்த ஆரம்பித்து விடுவார். 

ஒருவேளை கணவனும் மனைவியும் இணக்கம் ஆக வாழும் சூழ்நிலையில் அவர் 
கூறும் அறிவுரைகள் இனிக்கலாம்… ஆனால் இங்கு கேட்கவே அருவருப்பாக 
இருக்கிறது அவளுக்கு.. 

ஒரு நாள் அருணின் படுக்கை விரிப்பை, சரி செய்து கொண்டு இருந்தாள். அப்போது 
தலகாணிகளுக்கு இடையே ஏதோ பொருள் தட்டுப்பட, அதை எடுத்து அருகில் டேபிள் 
மேல் வைத்தாள் அது இரண்டு காண்டம் பாக்கெட்டுகள்… அதைக் கண்டு அதிர்ந்து 
விழித்தால், 
ஏனென்றால் அருணுக்கு இருக்கும் பெண்கள் பழக்கத்தை பற்றி எல்லாம் மலருக்கு 
தெரியாது… 

“இந்தப் பழக்கம் வேற  அவருக்கு இருக்குமோ” என்று எண்ணிய நேரத்தில்… 

அவனது அலுவலக அறையில் இருந்து அருண் ஒரு பெண்ணிடம் போனில் பேசிக் 
கொண்டிருந்தது காதில் விழுந்தது … அவன் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் 
எல்லாம் காது கொடுத்து கேட்க தகுந்தவைகள் அல்ல… அவன் கிறங்கி குரலில் 
குழைந்து பேசிய மோக வார்த்தைகளை காதால் கேட்டதற்கே உடல் கூசி போனாள் 
மங்கை. 

உடனே உடல் வெடவெடுத்து அறையை விட்டு வெளியே வந்தாள்.. 

அருண் தன் அருகில் வராமல் இருப்பதே பெரும் நன்மையாய் கருதினாள்… 

அன்றிலிருந்து அவன் அருகில் செல்வதையே அருவருப்பாய் எண்ணினாள் மலர். 

அவள் நிலை கண்டு அவளுக்கே வருத்தம் தான் வாழவும் முடியாமல் சாகவும் 
முடியாத நிலை… 

இவளின் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவே அருணின் வீட்டில் 
கால் மேல் கால் போட்டு கையில் ஒரு கோப்புடன்(File) உட்கார்ந்திருந்தாள் ரதி… 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top