அருண் வீட்டில்….
காலையில் அனைவரும் எழுந்து ஹாலில் உட்கார்ந்து டீ பருகி
கொண்டிருந்தனர் அனைவருக்கும் எடுத்துக்கொண்டு வந்து
கொடுத்தாள் மலர்…. சக்கரவர்த்தி, விக்ரம், அகல்யா மூவரும்
சிலவேளைகளில் காலையில் இதுபோல் ஹாலில் உட்கார்ந்து சில
பொதுவான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதும் உண்டு… சில நல்ல
தொழில் சம்பந்தமான ஆலோசனைகளை இருவருக்கும் வழங்குவார்
சக்கரவர்த்தி…
இன்றும் அப்படி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்..
அப்பொழுது வீட்டுக்குள் நவநாகரிக மங்கை ஒருத்தி கையில் ஒரு
கோப்புடன் உரிமை உள்ள இடம் போல் அனுமதி கேட்காமல் உள்ளே
நுழைந்தாள்..
மூவரும் ஒரு சேர திரும்பி வாயிலை பார்க்க… அவளும் அவர்களை
பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
ஹாய்… ஐ அம் ரதி ஜோஸ்… சிஇஓ ஆப் ஜோஸ் என்டர்ப்ரைசஸ்.
என்று தன்னை சக்கரவர்த்தியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
சக்கரவர்த்தியும், விக்ரமும் அவளை தொழில் துறை சம்பந்தமான
கூட்டத்தில் கவனித்துள்ளார்கள்…
ஹாய்… வெல்கம்.. ப்ளீஸ் பி சீட்டட்… என்று புன்னகையுடன் இருக்கையை
காட்ட…
யா.. தேங்க்ஸ்… என்று அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு
நிமிர்ந்து அமர்ந்தாள் ரதி.
மலரிடம், ரதிக்கு தேநீர் கொண்டு வர சொல்ல.. “கிரீன் டீ ” என்று
கூறினாள் ரதி..
மலர், கிரீன் டீ எடுத்து வர அதை வாங்கி குடித்துக் கொண்டிருந்த
ரதியிடம்…
என்ன விஷயமா…. என்று சக்கரவர்த்தி ஏதோ கேட்க வர…. ரதியின் போன்
ஒலித்தது.
ஒன் செகண்ட் ப்ளீஸ்.. என்று கூறிவிட்டு போனை எடுத்து காதில்
வைத்தாள் ரதி…
அவள் போனை எடுத்து காதில் வைத்தது தான் தாமதம் அந்தப் பக்கம்
இச்… இச்… இச்… இச்… என்ற முத்தமழை சத்தம் அருகில் இருந்த
அனைவருக்கும் கேட்டது..
ரதியின் கன்னத்தில் சிவபெறியது… அதைக் கண்ட அனைவரும்
முகத்திலும் ஒரு தர்ம சங்கட புன்னகை வந்தது…
விக்ரம், அகல்யாவின் காதின் அருகில் வந்து “காலையிலேயே எவனோ
ஃபுல் மூடுல இருக்கான்” என்றான் கிசுகிசுப்பாக…
ம்ச்…. சும்மா இருங்க… என்றாள் அகல்யா.
இப்பதான் எழுந்தீங்களா பேபி…
…..*
ம்ம்… குடிச்சுக்கிட்டு இருக்கேன்…
……
எஸ்…. எனக்கும் உங்கள பாக்கணும் போல இருக்கு பேபி…
…..
நீங்க எங்கேயும் வர வேண்டாம்.. உங்க பேபி உங்கள பாக்க வந்திருக்கு…
உங்க வீட்டு ஹால்ல தான் உக்காந்து இருக்கு.. ரெடி ஆயிட்டு கீழ வாங்க
என்றாலே பார்க்கலாம்…
( அங்கு படுக்கையறையில், படுக்கையில் சாவகாசமாக படுத்து கொண்டு
விட்டத்தை பார்த்தபடி போனில் பேசிக் கொண்டிருந்த அருண் துளிக்கு
விழுந்து எழுந்தான்….)
இதை கேட்டுக்கொண்டு இங்கு இருந்த நால்வரும் அதிர்ந்தனர்
ஐந்து நிமிடத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வேகமாக படி
இறங்கி வந்தான் அருண்.
தன் குடும்பமே கீழே அமர்ந்திருப்பதையும் அவர்கள் நடுவில் ரதி
அமர்ந்திருப்பதையும் கண்டான். மலர் ஒரு ஓரமாய் கையில் டீ ட்ரே உடன்
நின்றிருந்தாள்…
அனைவரும் பார்வையும் மேலிருந்து கீழே இறங்கி வரும் அருண் மீது
தான் இருந்தது.
என்ன சொல்லாம கொள்ளாம வந்திருக்க பேபி…, என்று கூறிக்கொண்டே
அனைவரின் முகத்தையும் ஒருமுறை கண்களால் ஆராய்ந்தான் அருண்…
உங்கள சர்ப்ரைஸ் பண்ணலாம்னு வந்தேன் பேபி… என்றாள் ரதி.
வாட்ட… சர்ப்ரைஸ்… என்று கூறியபடி ரதியின் அருகில் இருந்த
சோபாவில் அமர்ந்தான் அருண். உள்ளுக்குள் தன் தந்தையை நினைத்து
சிறு உதறல் இருந்தது.
அருணின் பாவனையை கண்ட விக்ரமிக்கு ஏதோ ஒன்று புரிந்தது. தன்
நண்பனின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துபடி அல்லவா….
“உங்க அண்ணன் தாண்டி அந்த மூடு பார்ட்டி” என்று மெதுவாக கிசுகிசு
தான் விக்ரம் அகல்யாவிடம்… உங்க அண்ணனால மட்டும் எப்படி
முடியுதுன்னு தெரியல, 24ஹவர்ஸ்சும் அதே நினைப்புல தான் இருப்பான்
போல… என்றான்.
அகல்யா தலையை கவிழ்ந்து வாயை தன் முன் கைகளால் மறைத்துக்
கொண்டு சிரிப்பை அடக்கினாள்.
விக்ரம், அருண் இடம் ரதியை காண்பித்து ஏதோ சைகையில்
தலையாட்ட…. “நீ வேற கொஞ்சம் சும்மா இருடா” இன்னும் ரீதியில்
பார்த்து வைத்தான் அருண்…
என்ன பேபி… என்று அழைத்துப் பின் சுற்றம் அறிந்து, என்ன.. ரதி..
வீட்டுக்கே வந்து இருக்க… ஏதாவது முக்கியமான விஷயமா அது என்ன
கையில பைல்?.. இன்னைக்கி ஆபீஸ் போகலையா என்று படபடவென
கேட்டு கொண்டிருந்தான் அருண்.
சக்கரவர்த்தியும் அவன் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்..
மலரின் முகத்தில் இருந்த உணர்வை என்னவென்று சொல்ல இயலாது
அது வெறுமையாக இருந்தது.
உங்களுக்குத்தான் ஒரு குட் நியூஸ் சொல்ல வந்தேன் பேபி…என்றாள்…
என்ன குட் நியூஸ்… ஏதாவது டீலிங் சைன் ஆயிருக்கா…? இன்று அருண்
வினவ.
நோ பேபி… என்று கூற..
திரு… திரு.. வென முழித்துக் கொண்டே.. ஓரக் கண்ணால்
சக்கரவர்த்தியை பார்க்க அவரும் அவனைத் தான் முறைத்துக் கொண்டு
இருந்தார் அந்த “பேபி”யை கேட்டு…
கையில் இருந்த பைலை அவனிடம் நீட்டினாள்…
அதை பிரித்துப் படித்துப் பார்த்த அருணிற்கு தூக்கி வாரி போட்டது…
என்ன ரதி இது?…என்று கேட்டான்..
எஸ் இட்ஸ் ட்ரு….. வி ஆர் கோயிங் டு பி எ பேரன்ட்… என்றாள் சிரித்தபடி
இரு கைகளையும் உயர்த்தி..
என்ன….. இப்பொழுது அதிர்வது குடும்பத்தின் முறையானது.
வேகமாக சக்கரவர்த்தி அவன் கையில் இருந்த பைலை பிடிங்கி
பார்த்தார்… அதில் ரதியின் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு இருந்தது.
தந்தையின் பெயர் அருகில் அருண் தேவ் என்று இருப்பதை பார்த்து
அதிர்ந்து அவனை முறைத்தார்.
அருணுக்கு வயிற்றுக்குள் பய பந்து உருண்டது…
டுடே… தான் ஹாஸ்பிடல் செக்கப் போனேன், 3 மந்த் அப்படின்னு
கன்பார்ம் பண்ணி இருக்காங்க.. பேபி… என்றால் ரதி.
மாத கணக்கை கேட்டு மேலும் அதிர்ந்தான்… அருண்.
ஐயோ… என்று அதிர்ச்சியில் வாயில் கையை வைத்தால் அகல்யா…
மூணு மாசமா…. என்று அதிர்ந்து, ஒரு பேபி பண்ற வேலையா இது…. என்று
முணுமுணு தான் விக்ரம்.
ஹேய்… என்ன சொல்லிட்டு இருக்க ரதி? டாக்டர் தப்பா சொல்லி
இருப்பாங்க… நாம மீட் பண்ணியே டூ மன்த் தான் ஆகுது… என்று தனது
சந்தேகத்தை கேட்டான் அருண்.
அப்போதும் குழந்தை உருவாக வாய்ப்பில்லை… இது தன் குழந்தை
இல்லை…. என்று மகன் மறுக்காததை வைத்தே…. அவனுடைய
லீலைகளை புரிந்து கொண்டார் சக்கரவர்த்தி.
எனக்கும் அந்த டவுட் இருந்துச்சு அதுக்கு அப்புறம் தான் நான் ஒரு
விஷயத்தை கண்டுபிடிச்சேன்…
என்ன என்பது போல் பார்த்தான் அருண்..
ஒரு தேதியை குறிப்பிட்டு அன்னைக்கு நம்ம பார்ல…. என்று எதையோ
அவள் சொல்ல ஆரம்பிக்க, ஒரு நிமிஷம் ரதி…! நம்ம தனியா பேசலாம்
என்று கூறிவிட்டு….
சக்கரவர்த்தியை பார்த்து “அப்பா நான் ஒரு நிமிஷம் பேசிட்டு
வந்துடறேன்” என்று அவரிடம் சொல்லிவிட்டு, அவர் பதில்
அளிப்பதற்குள், ரதியின் கையை பிடித்து வேகமாக தனது அறைக்கு
அழைத்துச் சென்றான் அருண்.
ரதி குறிப்பிட்ட தேதி அவளுடைய திருமணமான தேதி என்பதை மனதில்
குறித்துக் கொண்டாள் மலர்.
பேசுறதுக்கெல்லாம் அப்பா கிட்ட பர்மிஷன் வாங்குறான் உங்க
அண்ணன்… எவ்வளவு நல்லவன் பாத்தியா…. என்றான் விக்ரம்
அகல்யாவிடம்…
அவன் பேசுறதுக்கு மட்டும் தான் அனுமதி வாங்குவான்… என்று
மெலிதாக சிரித்துக் கொண்டே கேலி பேசினாள் அகல்யா.
அறைக்குள் நுழைந்த உடன் என்ன நடந்துச்சு… இது எப்படி நடந்துச்சு…
என்றான் படபடப்பாக அருண்.
எப்படி நடந்துச்சுனு உங்களுக்கு தெரியாதா….. என்றாள் அவனை ஒரு
மார்க்கமாக பார்த்தபடி…
ம்ச்… சேப்டியா தானே இருந்தோம்.. அப்புறம் எப்படி இப்படி… அதுவும் 3
மந்த் எப்படி பாஸிபில்… என்றான்.
நம்ம ரெண்டு பேருக்கும் ஏற்கனவே எங்கேயோ மீட் பண்ண மாதிரி ஒரு
தாட் இருந்துச்சுல்ல…. அது எங்கன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்…
எங்க…
ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த பார்ல அன்னைக்கு நம்ம ரெண்டு பேரும்
இன்டிமேட்டா இருந்தோம் அதற்கான ப்ரூப் இந்த பென்டிரைவில்
இருக்கு… என்று கூறிவிட்டு பென்டிரைவை அவனிடம் நீட்டினாள் ரதி.
ஏய் என்ன நம்ம வீடியோவா… என்று அதிர்ந்து கேட்க..
ப்ளே பண்ணி பாரு பேபி…புரியும்… என்றால் ரதி..
அதை வாங்கியவன் வேகவேகமாக தனது லேப்டாப்பில் போட்டு அதை
பிளே செய்து பார்த்தான்.
மலருடன் திருமணம் ஆன விரக்தியில் முழு போதையில் இருந்தவனிடம்
வந்து பேசிய பெண் ரதிதான்… அவளும் அன்று தன்னுடைய முன்னாள்
காதலனுடன் ஆன காதல் பிரேக் அப் ஆன விரக்தியில் மது அருந்தி
கொண்டு அமர்ந்திருந்தாள்….
போதையில் அங்கிருந்த அருணின் அழகில் ஈர்க்கப்பட்டு அவளாகவே
போய் பேசினாள்.
பின் இருவரும் சிறிது நேரம் சேர்ந்து மது அருந்திவிட்டு, ஒருவர் மீது
ஒருவர் தோளில் சாய்ந்து கொண்டு, புலம்பிக்கொண்டே
முழுபோதையில் ஹோட்டல் அறையை நோக்கி சென்றது அங்கிருந்த
ஹோட்டல் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதைத்தான் அருண்
தனது லேப்டாப்பில் பார்த்துக் கொண்டு இருந்தான்..
அன்னைக்கு தான் நம்ம போதையில பாதுகாப்பு இல்லாம
சேர்ந்திருக்கோம்… என்றாள் ரதி.
அதனாலதான் உங்கள மீட்டிங்ல பாக்கும்போது எங்கேயோ பார்த்த
மாதிரி இருந்தது…அதுக்கப்புறம் டேட்டிங்கில நாம
இன்டிமேட்டா இருக்கும் போது தான்…. ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும்
சேர்ந்து இருந்தது எனக்கு நினைவு வந்துச்சு…
இன்னைக்கு காலையில தல சுத்தி ஒரே மயக்கமா வந்தது…
அதனாலதான் டாக்டர்கிட்ட போய் கன்ஃபார்ம் பண்ணேன்..
நீங்க இப்படி கேப்பிங்கன்னு தெரிஞ்சு தான்.. இந்த ஃபுட் ஏஜ் ஹோட்டல்
மேனேஜர் கிட்ட இருந்து வாங்கி கொண்டு வந்தேன்.
அந்த வீடியோவை பார்த்துவிட்டு ரதி சொல்லியதை கேட்டு தன் முன்
நெற்றியை தன் கைகளால் அழுத்தி தேய்த்துக் கொண்டே யோசித்துக்
கொண்டிருந்தான் அருண்.
இப்பொழுதுதான் மலரின் ஞாபகம் வந்தது.. மலரைப் பற்றி ரதியிடம்
சொல்லாததும் ஞாபகம் வந்தது.
யோசனையில் இருந்த அருணை பார்த்த ரதி என்ன அருண்…
யோசிச்சிட்டு இருக்கீங்க… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்… என்று
கூறினாள்.
என்ன ரதி சொல்ற இப்போதைக்கு கல்யாணம், கமிட்மெண்ட்,
குழந்தைங்க இதெல்லாம் வேணாம்னு நம்ம முடிவு பண்ணி
இருந்தோமே…
பண்ணியிருந்தோம் அருண்… பட் இப்போ அன்பார்ச்சுனேட்டா பேபி
ஃபாம் ஆயிடுச்சு… இப்போ என்ன பண்ண முடியும்..
கல்யாணம் பண்ணிக்கலனா… இந்த சைல்ட் நம்மளோட லீகல் சைல்டா
இருக்காது… அருண் அதனாலதான் கல்யாணம் பண்ணிக்கலாம்
சொல்றேன்… எங்க அப்பாவுக்கும், எனக்கு கிராண்டா கல்யாணம்
பண்ணி வைக்கணும்னு ஆசை…
இந்த குழந்தையை அபார்ட் பண்ணிடலாம் ரதி… நாம கொஞ்ச நாள்
கழிச்சு கல்யாணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் குழந்தைக்கு பிளான்
பண்ணிக்கலாம் என்றான்.
ஏன் அருண் இப்போ கல்யாணம் பண்ணா என்ன பிரச்சனை அதுவும்
இல்லாம… இதுக்கு அப்புறம் அபார்ட் பண்ணா.. என்னோட ஹெல்த்
இஷ்யூ ஆயிடும்… டாக்டர் சொல்லிட்டாங்க… என்றாள் ரதி.
அது வந்து ரதி… அது வந்து…. எப்படி சொல்வது என்று தெரியாமல் திக்கி
திணறிக் கொண்டு இருந்தான் அருண்.
எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் கல்யாணம் ஆகிடுச்சு…
கீழ உனக்கு டீ கொடுத்தாலே அவ தான் அந்த பொண்ணு…. ஒரே மூச்சாக
தரையைப் பார்த்துக் கொண்டே தான் கூற வேண்டியதை கூறி முடித்து
விட்டான் அருண்…
இப்போது அதிர்வது ரதியின் முறையானது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!