அசுரன் 14

 

அசுரன் 14

அருண், ரதியின் கையைப் பிடித்து தனது அறைக்கு அழைத்து சென்றான்…. 

அனைவரும்,  படியேறி போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர் 

பின் பார்வையை மெல்லமாக மலரின் பக்கம் திருப்பினர்… 

 

அவள் அங்கு தலையை குனிந்து ஓரிடத்தை வெறித்து பார்த்தபடி கற்சிலை 

போல் நின்று கொண்டு இருந்தாள்… மலர். அவள் சேலை காற்றில் 

அசையவில்லை என்றால் “அது சிலை தானோ” என எண்ண கூடும்…. 

 

அவளுடைய மனக் கஷ்டத்தை சக்கரவர்த்தி மற்றும் விக்ரமினால் புரிந்து 

கொள்ள  முடிந்தது… 

 

ஹாலில் நடந்ததை என்னவென்று கிரகிக்கவே மலருக்கு சில கணம் 

எடுத்தது… 

 

தன் கழுத்தில் தாலி கட்டியவனின் குழந்தை இன்னொரு பெண்ணின் 

வயிற்றில் வளர்வதை நினைத்து அருவருத்து  போனாள்… 

 

கணவனுக்கு பிடிக்காத மனைவி, ஆயினும் என்றாவது ஒரு நாள் அருணின் 

மனது மாறக்கூடும்.. தன்னையும் அவன் ஏற்றுக்கொண்டு வாழ்வான்…  தனது 

வாழ்க்கையும் மற்றவர்களைப் போல சீராகும் என்று இருந்த ஒரு சதவீத 

நம்பிக்கையும் இன்றுடன் தரைமட்டமானது…. இடிந்த மனதுடன் அனைவரும் 

முன்னிலையிலும் மௌனமாக நின்று கொண்டு இருந்தாள் மலர். 

இனி தன்னுடைய வாழ்வு எந்த நிலையிலும் மாறாது என்பதை உறுதி செய்து 

விட்டாள் இக்கணம். 

 

இவ்வளவு பெரிய துரோகத்தை கேட்டு தரையைப் வெறித்து  பார்த்தபடி 

நின்று இருந்தவளுக்கு என்ன ஆறுதல் மற்றவர்களால் சொல்லிவிட முடியும்… 

 

நேற்று வரை அவர்கள் தான் உன் வாழ்க்கை மாறும் அவன் நல்லவன் என்று 

மீண்டும் மீண்டும் சொல்லி நம்பிக்கை ஊட்டி கொண்டு இருந்தார்கள். இன்று, 

என்ன சொல்லி மலருக்கு  ஆறுதல் அளிப்பார்கள்… 

 

அறைக்குள் இருந்த ருத்ராவை அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்து 

இங்கு நடந்ததை விவரித்தனர்… 

 

ரதி மற்றும் அருண் வருகைக்காக அனைவரும் சோபாவில் அமர்ந்து 

காத்திருந்தனர். 

 

ருத்ரா, மலரை ஒரு அலட்சிய பார்வை வீசிவிட்டு நிமிர்ந்து கால் மேல் கால் 

போட்டு அமர்ந்திருந்தார்… ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய 

மகனை பெற்ற தாய் போல், 

         

******************** 

 

இங்கு அருணின் அறையில்…. 

 

அருண் தனக்கு திருமணமானதை கூறியவுடன் அதிர்ந்து…. சிறிய 

யோசனைக்குப் பின் தெளிந்து இப்போ நீ என்ன சொன்னா திரும்ப சொல்லு 

என்று கேட்டாள் ரதி… 

 

மச்….எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன்  கல்யாணம் ஆகிடுச்சு… 

 

கீழ உனக்கு டீ கொடுத்தாலே அவ தான் அந்த பொண்ணு…. அத வேற ஏன் என் 

வாயால சொல்ல வைக்கிற என்றான் அருண் சலித்துக் கொண்டே … 

 

வெல்… வாயால கூட உன்னோட “மனைவி” அப்படின்னு உன்னால சொல்ல 

முடியல…. சோ உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல… அப்படித்தான 

அருண்…..என்று சரியாக அருணின் மனதை கணித்திருந்தாள் ரதி… 

 

அதைக் கேட்டு சந்தோஷமாய் அதிர்ந்தவன்… எக்ஸாக்ட்லி… என்றான். 

 

அப்புறம் ஏன் இந்த கல்யாணத்தை   பண்ணிக்கிட்ட… அதுவும் 

பார்க்க  வேலைக்காரி மாதிரி இருக்கா… அவளை போயி உனக்கு கல்யாணம் 

பண்ணி வச்சிருக்காங்க… உன்னோட பேரன்ட்ஸுக்கு மூளை எதுவும் 

குழம்பிருச்சா…. என்று கேட்டாள் ரதி.. 

 

இதே சேம் பீலிங் தான் எனக்கும் என்னோட ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலா 

இல்லாதவள…. நான் எப்படி மனைவியா ஏத்துக்கிட்டு வாழ முடியும்… 

பட்… என்னோட சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு… என்று தனக்கு திருமணம் 

நடந்த காரணத்தையும்… தன்னை எப்படி திருமணத்திற்கு சம்மதிக்க 

வைத்தார்கள் பெற்றவர்கள் என்று, நடந்த அனைத்தையும் ரதியிடம் 

சுருக்கமாக சொல்லி முடித்தான் அருண். 

 

சோ…. உன்னோட உயிருக்கு பிரச்சனை அப்படின்னு சொல்லி இந்த 

கல்யாணத்தை உனக்கு பண்ணி வச்சுட்டாங்க… வெல்… இதெல்லாம் நம்மள 

மாதிரி பெரிய குடும்பத்துல நடக்கிறது தான்… 

நாம நல்லா இருக்கணும்னா இது மாதிரி எல்லாம் பண்றது ஒன்னும் தப்பு 

இல்ல… 

எனக்கு நீ இந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டதில்ல எந்த பிரச்சனையும் 

இல்ல… 

 

நீ அவள டிவோஸ் பண்ணிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்கலாம்… என்றாள். 

 

ஆர் யூ சுயர்…  நிஜமாத்தான் சொல்றியா ரதி.. என்றான் துள்ளலுடன்… இந்த 

கல்யாணத்த பத்தி உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?  என்ன 

கல்யாணம் பண்ணிக்க நீ ரெடியா இருக்கியா?… என்றான் அருண். 

 

எங்க அப்பா கூட தொழில் முன்னேற்றத்திற்கு இது மாதிரி ஜாதகம் 

சம்பந்தமாக நிறைய விஷயம் பண்ணி இருக்காரு…. 

அதை அவர் ரொம்ப நம்புகிறார் நானும் தான்…  அதனால எனக்கு இது 

ஒன்னும் பெரிய பிரச்சனையா தெரியல அருண்… லீகலி.. டிவோஸ் மட்டும் 

அப்ளை பண்ணிடு. 

 

நோ.. நீட்.. ரதி…  அவள டிவோஸ் பண்ணனும் அப்படிங்கற அவசியம் கூட 

இல்ல… ஏன்னா இந்த கல்யாணம் சட்டப்படி ரிஜிஸ்டர் செய்யல… ஈவன்.. இந்த 

கல்யாணத்துக்கு எந்த எவிடென்ஸும் இல்லை ஒரு போட்டோ கூட நாங்க 

எடுத்துக்கல… 

இந்த கல்யாணம் நடந்த விஷயம் எங்க வீட்ல இருக்கவங்களுக்கு மட்டும் தான் 

தெரியும்… அதனால அவள தாலிய திரும்ப வாங்கிட்டு இந்த வீட்டை விட்டு 

அனுப்பினால் மட்டும் போதும்… 

 

உன்னோட உயிருக்காக அவ தாலியோட இந்த வீட்ல இருந்தா கூட எனக்கு 

எந்த பிரச்சனையும் இல்லை… 

ஆனா நீ எனக்கு உண்மையா இருக்கணும்…  அவள உன்னோட 

வேலைக்காரின்னு மட்டும் நீ நினைக்கணும்… 

நான் இப்ப வரைக்கும் அவளை வேலைக்காரி மாறி தான்  ட்ரீட் பண்ணி 

இருக்கேன்…  அவ மனசுலயும் அது மட்டும் தான் இருக்கு… 

 

அப்போ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… உங்க வீட்ல நீ சம்மதம் 

வாங்கிடு…  நான் எங்க அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்… 

நாம கிராண்டா கல்யாணம் பண்ணிக்கலாம்… என்றாள் ரதி. 

 

************ 

 

இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது… மலரின் வாழ்வுக்கு என்ன பதில் 

சொல்வது… தன் மகனின் குழந்தையை என்ன செய்வது என்று பயங்கர 

குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார் சக்கரவர்த்தி…. 

 

தன் மகனுக்கு பிடித்த இந்த வாழ்க்கையை எப்படியாவது அவனுக்கு 

அமைத்துக் கொடுத்து விட வேண்டும்….  சக்கரவர்த்தியை எப்படியாவது 

சமாளித்து இந்த கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று உறுதியாய் 

அமர்ந்திருந்தார் ருத்ரா… மலரைப் பற்றிய கவலையோ என்னமோ 

அவர்கில்லை.. அவரைப் பொறுத்தவரை மலர் பணத்தை கொடுத்து விலக்கி 

வாங்கி வந்திருக்கும் பொருள் அவ்வளவுதான். 

 

வாழ வேண்டிய வயதில் திக்கு தெரியாமல் திசை மாறிப் போன கப்பலை 

போல திகைத்து நிற்கும் மலருக்கு தன்னால் எந்த வழியில் உதவ 

முடியும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான் விக்ரம். 

 

  மலரின், முகத்தை பார்த்து அவள் மனதில் இருக்கும் எண்ணத்தை படிக்க 

முயன்று தோற்று போய்க் கொண்டு இருந்தாள் அகல்யா. 

 

இங்கு நால்வரும் அவரவர் மனநிலையில் இருந்து யோசித்துக் 

கொண்டிருந்தனர்… 

 

******************* 

 

அங்கு அறையில்…. 

 

எங்க வீட்டை பொருத்தவரைக்கும் எங்க அம்மா அந்த பொண்ண 

வேலைக்காரியா தான் நினைக்கிறாங்க… அதனால உன்னை 

அறிமுகப்படுத்தினால், உடனே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் 

சொல்லுவாங்க… ஆனா எங்க அப்பாவை பத்தி தான் இப்ப நான் 

யோசிக்கணும்… அவர்தான் பாவம் புண்ணியம் இப்படி எல்லாம் பேசுவாரு… 

என்றான் அருண். 

 

நீ கவலைப்படாத உங்க அப்பாவ சம்மதம் சொல்ல வைக்க 

வேண்டியது  என்னோட பொறுப்பு என்றாள் ரதி. 

 

அந்தப் பொண்ணு வேற பிரச்சனை பண்ணாம இருக்கணுமே.. என்றான் 

அருண். 

 

அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை… என்றாள். 

 

நிஜமாவா உன்னால முடியுமா?.. என்று ஆச்சரியமாக கேட்டான்… அருண். 

 

முடிச்சு காட்றேன் பாருங்க…என்றாள். 

 

அப்படி நீ எந்தப் பிரச்சனையும் இல்லாம சம்மதிக்க வச்சிட்டினா… ஐ அம் தி 

ஹேப்பியஸ்ட் பர்சன் இன் தி வேர்ல்ட்….. என்று தன் இரு கைகளையும் பிரித்து 

வானத்தைப் பார்த்து கூறினான்…. 

 

நான் நெனச்சு நடக்காத காரியமே இல்ல அருண்… என்றாள் ரதி. 

 

தட்ஸ் வொய்… ஐ அம் இம்ப்ரஸ்ட்… 

ரியலி ஐ அம் லக்கி டு ஹவ் யூ …  லவ் யூ பேபி…  என்று அணைத்து அவள் 

இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தான் அருண். 

 

ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்து இருக்கேன் எதுவும் ஸ்பெஷல் கவனிப்பு 

இல்லையா பேபி… என்றாள். 

 

ஸ்பெஷலா…..கொடுக்கணும் தான் ஆசை… ஆனா எல்லாரும் கீழ நமக்காக 

வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க… 

 

இப்ப நம்ம கீழ இறங்கலைன்னா எல்லாரும் நம்மள தேடி மேல 

வந்துருவாங்க… என்றான் அருண். 

 

*********** 

ஹாலில்…. 

 

ஏண்டி அடாவடி!…காலையிலேயே உங்க அண்ணன் செம மூடுல இருந்தான்… 

இப்ப அந்த பொண்ணு கையை புடிச்சு பெட்ரூம்குள்ள கூட்டு போய் கதவை 

பூட்டிக்கிட்டான்…. 

இவ்வளவு நேரமா பேசிக்கிட்டு தான்   இருப்பான்னு நீ நினைக்கிறியா… 

ஆனாலும் உங்க அண்ணனுக்கு ரொம்ப தைரியம் டி தாலி கட்டின 

பொண்டாட்டி முன்னாடியே… இன்னொரு பொண்ண கைய புடிச்சு 

பெட்ரூமுக்கு கூட்டிட்டு போறதுக்கு… போய் அரை மணி நேரம் ஆச்சு… 

இப்ப என்ன பண்றானோ…. ம்ஹும்.. 

நம்மள எல்லாம் பார்த்தா அவனுக்கு எப்படி தெரியுதுனு தெரியல… என்று 

கிசுகிசுத்துக் கொண்டிருந்தான்… 

 

“உங்க பிரண்டு தானே… பின்ன வேற எப்படி இருப்பான்” என்றாள் அகல்யா. 

 

காத்திருந்து, பொறுமை இழந்த சக்கரவர்த்தி,  “விக்ரம் அவன போய் கூட்டிட்டு 

வா” என்றார்… 

 

“பேசி முடிச்சிட்டா அவனே  கீழே வருவான் பொறுங்க” என்றார் ருத்ரா.. 

 

“குட் மம்மி” என்பதை போல் கைகளால் சைகை செய்தான் விக்ரம். 

 

ருத்ரா!  கொஞ்ச நேரம் நீ அமைதியா இரு…. விக்ரம்! நீ போய் கூட்டிட்டு வா 

என்றார்.. சக்கரவர்த்தி. 

 

*************** 

 

அருண்…அருண்… அங்கிள், உன்னை கீழே கூப்பிடுறாரு டா… என்று 

விக்ரம்  கதவை தட்டினான்… 

 

இதோ வரேண்டா… என்று கூறிக் கொண்டே அருண் கதவை திறந்தான்.. 

 

மேலிருந்து கீழ் வரை அருணை ஒரு மார்க்கமாக பார்த்தபடி.. 

வாழ்றடா… மச்சான் என்றான் ஒரு கையை உயர்த்தி காட்டி.. 

 

இப்ப நீ என்கிட்ட செமத்தியா, வாங்கி கட்டிக்க போற… மரியாதையா 

போயிரு… என்றான்… பல்லை கடித்த படி… 

 

நீ இப்படியே வந்தா… உன் மரியாதை தாண்டா போகும்… வாயில ஒட்டி இருக்க 

லிப்ஸ்டிக்கை துடைச்சிட்டு கீழ வா…. என்றான் விக்ரம். 

 

வேகமாக தன் கைக்குட்டையை எடுத்து தன் உதட்டில் ஒட்டி இருந்த 

லிப்ஸ்டிக்கை துடைத்தான் அருண்… 

 

உனக்கு ரொம்ப தைரியம் தான்டா மச்சான்… அம்மா, அப்பா, பொண்டாட்டி.. 

எல்லாம் கீழ காத்துகிட்டு இருக்காங்க… நீ மேல ரொமான்ஸ் பண்ணிட்டு 

இருக்க.. என்றான் விக்ரம். 

 

டேய்ய்…. என்று கூறிக்கொண்டே  பல்லை கடித்த படி ஒரு அடி முன்னாடி வர… 

 

அதற்கு மேலும் அங்கு நிற்பானா என்ன.. 

சீக்கிரம் வாடா…என்று கூறிவிட்டு வேகமாக கீழே இறங்கி விட்டான் விக்ரம்… 

 

அவன் பின்னையே ரதியும் அருணும் கைகோர்த்து படி கீழே வந்தனர்… 

 

இறங்கி வரும் இருவரையும் சோபாவில் அமர்ந்திருந்த குடும்பத்தினர் 

திரும்பிப் பார்த்தனர் மலரை தவிர.. 

 

அருண் சக்ரவர்த்தியிடம்… “அப்பா….. இது என் குழந்தை தான், நானும் ரதியும் 

காதலிக்கிறோம்” என்றான். 

 

“என்ன அருண் இது… நம்ம குடும்ப மானத்தை வாங்குறதுக்குனே இப்படி 

எல்லாம் நடந்துக்கிறியா  நீ” என்றார் சக்கரவர்த்தி கோபமாக… 

 

“இப்போ அவன் என்ன பண்ணிட்டான் சொல்லி இப்படி கத்துறீங்க”… 

“பேரன் வரப்போறான்னு சொல்லி சந்தோஷப்படுங்க ” என்றார் ருத்ரா. 

 

“அடேங்கப்பா இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்பது போல் பார்த்து 

வைத்தான்” விக்ரம். 

 

ஆளாளுக்கு தங்களுடைய எண்ணத்தை பிரதிபலித்துக் கொண்டு இருக்க.. 

 

“நா இந்த குழந்தைய அபார்ட் பண்ணபோறேன்”… என்றாள் ரதி சத்தமாக… 

 

அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்… அருண் உள்பட… 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top