அசுரன் 15

தான் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டம் வகுத்தபடியே படியில் 
இறங்கி வந்தாள் ரதி. 

கீழே இறங்கி வந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களது 
எண்ணத்தை தெரிவிக்க… 

“நான் இந்த குழந்தையை அபார்ட் பண்ண போறேன்” என்று சத்தமாக 
கூறினாள்… ரதி. 

அறையில் அவள் கூறியதற்கு முரணாக இங்கு கூறுவதால் அதிர்ந்து 
விழித்தான் அருண். 

“எப்படி அருண் உங்களால என்னை ஏமாத்த முடிஞ்சது இப்படி 
கல்யாணம் பண்ணத என்கிட்ட மறைச்சிட்டீங்களே” மனசார ஒரு 
பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு… எப்படி என்கூட உங்களால வாழ 
முடிஞ்சது.. நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கனவுல கூட 
நினைக்கல அருண்…  என்று அவன் சட்டையை பிடித்தபடி கலங்கிய 
குரலில் பேசியவள் அருணின் கண்ணை பார்த்து ஒற்றை கண் 
சிமிட்டினாள்… 

அவளின் திட்டத்தை கண்சிமிட்டலால் புரிந்து கொண்டான் அருண். 
“ஏதோ பிளான் பண்ணிட்டா போல நாமளும் இதையே கண்டினியூ 
பண்ணுவோம்” என்று எண்ணினான் அருண். 
நான் இந்த கல்யாணத்தை மனசார பண்ணிக்கல… எனக்கு அந்த 
பொண்ண புடிக்கல… அவ கூட வாழ நான் தயாராகவும் இல்லை… என்று 
கூறினான் அருண். 

இல்ல நான் உங்களை நம்ப மாட்டேன் நீங்க என்னை ஏமாத்திட்டீங்க 
என்கிட்ட உண்மைய மறைச்சிட்டீங்க… உங்கள இப்படியே 
விடமாட்டேன் இந்த குழந்தைக்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து நீங்க தான் 
அப்பான்னு ப்ரூவ் பண்ற… உங்க மேல கோர்ட்ல கேஸ் பைல் 
பண்ணுவேன்… இனிமேதான் சக்கரவர்த்தி இன்டஸ்ட்ரீஸ் ஓட மானம் 
காத்துல பறக்க போகுது… என்று கூறினாள்… 

அதைக் கேட்ட அருண் ஜெர்க் ஆகி விட்டான்… 
“நான் உண்மையத்தான் சொல்றேன் ரதி”, நான் உன்னை தான் 
காதலிக்கிறேன்.. என்ன நடந்தாலும், “நீதான் என் மனைவி இதுதான் 
என் குழந்தை” என்றான். 

சக்கரவர்த்தி நீண்ட யோசனையில் இருந்தார். 

நீங்க பொய் சொல்றீங்க… இதுக்கு மேல நீங்க சொல்ற எதையும் நம்ப 
நான் தயாராக இல்லை… நான் இப்பவே கிளம்புறேன்… இதோட பின் 
விளைவுகளை சந்திக்க தயாரா இருங்க!… என்று கூறிவிட்டு கிளம்ப 
ஆயத்தமானாள் ரதி. 

நில்லுமா…. என்று போகும் அவளை தடுத்தார் சக்கரவர்த்தி. 

அருண் சொல்றது உண்மைதாமா.. இந்த கல்யாணத்துல அவனுக்கு 
கொஞ்சம் கூட விருப்பம் இல்ல நாங்க தான் அவன வலுக்கட்டாயமா 
சம்மதிக்க வச்சோம்.. என்றார். 

ஆமா ரதி.. , என் பையன் சொல்றது உண்மைதான்… அவனுக்கு… 
அவனோட அழகுக்கும் திறமைக்கும் தகுந்த பொண்ணா பார்த்து தான் 
கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சோம்… ஆனால் எங்களோட 
சூழ்நிலை, இந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்க 
வேண்டியதா போயிடுச்சு.. என்றார் ருத்ரா. 

இங்கு நடப்பது அனைத்தையும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் 
இருந்து கவனித்தனர் விக்ரமும் அகல்யாவும்… 

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலம… நீ என்ன பண்ணனும்னு 
சொல்லு நாங்க பண்றோம்… எங்களுக்கு இந்த குழந்தையை 
அளிக்கிறதுல விருப்பமில்லை என்றார் சக்கரவர்த்தி ஒரு நீண்ட 
பெருமூச்சுடன் மலரை பார்த்தபடியே… 

மலர் அப்படியேதான் நின்று இருந்தால் எந்த மாற்றமும் இல்லாமல்… 
ரதியும் அவளை கவனித்தாள்.. அருண் அப்படி ஒரு ஜீவன் அங்கு 
இருப்பதையே கண்டுகொள்ளவில்லை.. 

அருண் அந்த பொண்ணோட சேர்ந்து “வாழ மாட்டேன்” என்கிறான் 
அதுக்காக அவனுடைய வாழ்க்கை அப்படியே போகட்டும்னு விட்டுட 
முடியுமா ரதி அவனுக்கு புடிச்ச வாழ்க்கையை அமைத்து கொடுக்க 
வேண்டியது பெத்தவங்க எங்களோட கடமை இல்லையா… என்றார் 
ருத்ரா… 

என்ன… கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் தான் நான் இந்த 
குழந்தையை பெத்து கொடுக்க முடியும்… அப்பதான் என்னோட 
குழந்தைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றாள் ரதி. 

ஆனா ஏற்கனவே கல்யாணம் ஆகி அந்த பொண்ணு வீட்ல 
இருக்கும்போது இப்போ எப்படிம்மா உன்ன கல்யாணம் பண்ண 
முடியும் எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடு இதை சரி 
பண்ணிடலாம் என்றார் சக்கரவர்த்தி… 

என்ன சரி பண்ண போறீங்க அவளை கல்யாணம் பண்ணது சட்டப்படி 
பதியல.. அவனுக்கு கல்யாணம் ஆனது நம்மள தவிர வேற யாருக்கும் 
தெரியாது.. அதனால நம்ம அருணுக்கு இன்னொரு கல்யாணம் 
பண்றதுல சட்டப்படி எந்த பிரச்சனையும் இல்ல… 
அப்புறம் எதுக்காக யோசிக்கணும் ரதிய அருனுக்கே கல்யாணம் 
பண்ணி வச்சிடலாமே… என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் 
பேசினார் ருத்ரா… அவர் மலரின் மனநிலை பற்றி யோசிக்கக்கூட 
தயாராக இல்லை… 

இங்கு நடக்கும் அனைத்து வாதங்களையும் கற்சிலை போல் நின்று 
மலர் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.. அவள் மனதிற்குள் ஒரு 
பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.. இன்னும் எத்தனை 
துன்பங்களையும் துயரங்களையும் தான் பார்க்க வேண்டுமோ… 
ஒவ்வொரு துன்பத்துடனும் வாழ பழகிய பிறகு அதைவிட பெரிய 
துன்பம் வந்து வாட்டுகிறதே… எதற்காக இந்த வாழ்வு… யாருக்காக 
இந்த வாழ்வு.. அந்தக் கடவுளிடம் நான் என்ன கேட்டேன் கொஞ்சம் 
நிம்மதி அதைக் கூட கொடுக்க அவருக்கு மனம் இல்லையா என்று 
நெஞ்சம் வெம்பி கொண்டு இருந்தது அவளுக்கு. 

என்ன ருத்ரா பேசுற… கொஞ்சமாவது மனசாட்சி படி நடந்துக்கங்க… 
இப்படி ஒரு பொண்ணோட மனசு நோகடிச்சுட்டு நம்மளால நிம்மதியா 
வாழ்ந்திட முடியாது ருத்ரா.. என்றார் சக்கரவர்த்தி. 

இப்ப நான் ஒன்னும் அவளை தாலிய கழட்டி கொடுத்துட்டு வீட்டை 
விட்டு போக சொல்லலையே…! அவளும் இந்த வீட்ல ஒரு ஓரமா 
இருந்துட்டு போகட்டும் அதுக்காக என்னோட பையனோட 
வாழ்க்கையை வீணாக்க முடியுமா?.. என்றார் ருத்ரா. 

நீ அவள அனுப்பாம இருக்குறதுக்கு காரணம் அவளோட நன்மைக்கு 
இல்லை… உன்னோட பையனோட உயிரை காப்பாத்துறதுக்கு… அதை 
முதல்ல மனசுல வச்சுக்க.. 
வேணா ருத்ரா!…. நீயும் உன்னோட பையனும் பெரிய பாவம் பண்ண 
பாக்குறீங்க…. அது நம்ம தலைமுறையை பாதிக்கும்… ஒரு பொண்ண 
வாழ விடாமல்… வீட்ல வச்சுக்கிட்டு அவ புருஷனையே 
இன்னொருத்திக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? நீயும் ஒரு 
பொண்ண பெத்தவ அப்படிங்கறத மனசுல வச்சுக்கிட்டு பேசு என்றார் 
சக்கரவர்த்தி. 

அப்பா!… திரும்பத் திரும்ப அவ புருஷன்னு சொல்லாதீங்க பா…. 
கேட்கவே அசிங்கமா இருக்கு என்றான் அருண். 

“சொன்னாலும் சொல்லாட்டாலும் அதாண்டா உண்மை” என்றார் 
சக்கரவர்த்தி. 

அந்தப் பொண்ணே…. பேசாம இருக்கும்போது.. நீங்க எதுக்கு 
அவளுக்காக கத்திக்கிட்டு இருக்கீங்க என்றார் ருத்ரா… 

அந்த பொண்ணுக்கு பதிலா தான் நான் கேட்கிறேன் ருத்ரா!… என்றார் 
சக்கரவர்த்தி. 

உங்க பையன் வாழ்க்கையை விட யாரோ ஒருத்தி ஓட வாழ்கை 
உங்களுக்கு முக்கியமா போச்சா என்றார் ருத்ரா… 

அந்த பொண்ணும் நம்பள நம்பி தான் வந்துருக்கு வந்துருக்கு அதை 
மறந்திராத ருத்ரா!… 

எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு நீங்க சண்டை போடுங்க என்றாள் ரதி.. 

உங்க கல்யாணம் நடக்கும் ரதி! என்றார் ருத்ரா.. 
மலர் கழுத்துல இருக்குற தாலி இறங்கினா… உன் மகன் உயிர்க்கு தான் 
ஆபத்து. அப்புறம் எப்படி இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட 
முடியும்…. 

வெல் அதுல எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் 
பண்ணிக்கிட்டு…  ரிங் மாத்திட்டு… கிராண்டா.. ரிசப்ஷன் 
வச்சுக்கலாம்…..என்றாள் ரதி.. 

ரதியின் யோசனையை…. அருணும்  வேகமாக 
தலையசைத்து  ஆமோதித்தான்.. 

“புல் பிளானிங் ல தான் இந்தப் பொண்ணு  வந்திருக்கும் போல” என்ற 
மனதிற்குள் நினைத்துக் கொண்டான் விக்ரம். 

அப்போ மலர அவங்க வீட்டுக்கு அனுப்பிடலாம் இனிமேல் அந்த 
பொண்ணு இங்க இருக்க வேணாம், அங்கேயாவது போய் நிம்மதியா 
இருக்கட்டும்… என்றார் சக்கரவர்த்தி. 

அது எப்படி முடியும்…. அவள பாதில அனுப்புறதுக்கு தான் அவளை தேடி 
போய் கல்யாணம் பண்ணிட்டு வந்தோமா!… நம்ம ஜோசியர் 
சொன்னது உங்களுக்கு மறந்து போச்சா என்ற ருத்ரா… 

ஆனா மலர் இந்த வீட்ல இருக்கும்போது அருண், ரதிய கல்யாணம் 
பண்றதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்…. 

நீங்களே சொன்னாலும் அந்த பொண்ணு, இந்த வீடு விட்டு போகாது… 
என்றார் ருத்ரா.  மலரை ஓரக்கண்ணால் பார்த்தபடியே… 
இல்ல…இல்ல…  முறைத்தபடியே… 

ஏன்? போக மாட்டா…. அவள  நீ ஏதாவது பண்ணி மிரட்டி வச்சிருக்கியா 
ருத்ரா!… என்றார் சக்கரவர்த்தி… 

நான் என்ன பண்ணப் போறேங்க… அவ இருக்கிறது கிராமம்!… அங்க 
இந்த மாதிரி கல்யாணம் ஆகி மூணு மாசத்துல வாழாம போயி வாழா 
வெட்டியா நிற்க முடியுமா!…  அவங்க தங்கச்சி குடும்பம் என்ன 
நினைப்பாங்க.. அவங்க அம்மா எப்படி நிம்மதியா வாழ்வாங்க.. 
அதெல்லாம் அவ யோசிச்சு பார்ப்பா இல்ல… அப்புறம் அவங்க 
“வீட்டோட” நிலைமை என்ன ஆகும்… அந்த “வீடு” என்ற வார்த்தையில் 
அழுத்தம் கூட்டி இருந்தார் ருத்ரா…. 

என்ன ருத்ரா…!  திடீர்னு மலர் வீட்டு மேல, குடும்பத்து ஆட்கள் மேல 
ரொம்ப அக்கறைப்படுற… என்றார் சக்கரவர்த்தி. 

இது அக்கறை எல்லாம் ஒன்னும் இல்ல, நான் பொதுவா நடக்குற 
விஷயத்தை தான் சொன்னேன்… என்றார் ருத்ரா… 

எனக்கு அந்த பொண்ணு இந்த வீட்ல தாலி ஓட இருக்குறதுல எந்த 
பிரச்சனையும் இல்லை என்றாள் ரதி. 

மலர் சொல்ல வேண்டியது எல்லாம் நீ சொல்லிக்கிட்டு இருக்க ரதி.. நீ 
இந்த வீட்ல தாலியோட இருக்கணுமா வேணுமானு அவதான் இப்போ 
முடிவு சொல்லணும்… என்றார் சக்கரவர்த்தி. 

ஒரு வேலைக்காரி வாழ்க்கை கொடுத்து, நான் ஒன்னும் வாழணும்னு 
அவசியம் கிடையாது,  எனக்கு இந்த கல்யாணம் வேணாம்… இந்த 
குழந்தையும் வேணாம்… என்றாள் ரதி. 

அவ என்னமா முடிவு சொல்றது…. நான் முடிவு சொல்றேன் நீ தான் இந்த 
வீட்டு மருமக… இந்த கல்யாணத்தை கட்டாயம் நான் நடத்தி காட்றேன். 
அதை யார் தடுக்கிறார்கள் என்று பார்ப்போம் என்றார் ருத்ரா..! ஓர 
கண்ணால் சக்கரவர்த்தியை ஒருகணம் பார்த்துவிட்டு… 

மலரோட வாழ்க்கையை கெடுத்துட்டு இந்த கல்யாணத்தை நடக்க 
நான் விடமாட்டேன் என்றார் சக்கரவர்த்தி. 

அவளுக்கான முடிவ அவ சொல்லட்டும்…  நீங்க எதுக்கு தேவையில்லாம 
எங்களோட இப்படி விவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க… 
கொஞ்சமாவது பெத்த பையனோட வாழ்க்கையில அக்கறையுடன் 
நடந்து கொள்ளுங்கள்.. அப்புறமா, ஊர்ல போறவங்க வர்றவங்களுக்கு 
எல்லாம் கவலைப்படலாம்… என்று சலித்துக் கொண்டார் ருத்ரா. 

தனக்காக தனது அம்மா, தனது அப்பாவிடம் போராடிக் 
கொண்டிருப்பதை பார்த்து மனதில் மெச்சி கொண்டான் அருண். ஒரு 
பக்கம் தனது அம்மாவும், மற்றொரு பக்கம் ரதியும் இருக்கும் வரை 
தன்னை யாராலும் அசைக்க முடியாது என்று வடிவேல் பாணியில் 
சிந்தித்து கொண்டான். 

இதுக்கு மேல உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு 
எனக்கு தெரியல… இத பத்தி முடிவு எடுக்க வேண்டியது மலரோட கைல 
தான் இருக்கு என்று கூறிவிட்டு, மலர்  மலர் நீ என்ன முடிவெடுக்க போற 
சொல்லுமா… நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு துணையா நான் 
இருக்கிறேன்.. என்றார் சக்கரவர்த்தி. 

அனைவரும் அமைதியாக மலரின்  முகத்தை பார்த்தபடி, அவளின் 
பதிலுக்காக காத்திருந்தனர்… 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top