சிலை போல் நின்று இங்கு நடக்கும் அனைத்தையும்
உள்வாங்கிக் கொண்டு இருந்தாள் மலர்.
இப்பொழுது அனைவரும் பேசி முடித்து, தனக்கு பேசுவதற்கு
வாய்ப்பளித்து விட்டார்கள். ஆனால் என்ன பேச…
இந்த திருமணமே அவள் முடிவில் நடக்கவில்லை… முடிவு
எடுத்தார்கள் நடத்தினார்கள்… அவள் அதில் ஒரு பொம்மை
மட்டுமே.. அவள் வாழ்வில் அவளைத் தவிர அனைவரும்
முடிவெடுக்கிறார்கள்…
இப்பொழுதும் தனது அன்னை, தங்கை அவர்களுடைய
வாழ்க்கை மறைமுகமாக இதில் அடங்கியுள்ளது, என்று
மிரட்டி விட்டு முடிவு கேட்கிறார்கள்.. இல்லை, இல்லை நான்
இந்த பதிலை தான் சொல்ல வேண்டும்… என்று அவர்கள்
முடிவெடுத்து விட்டார்கள்.
சிறிது நேரம் மௌனமான யோசனைக்கு பின்… ஒரு நீண்ட
பெருமூச்சுடன்….
“கற்சிலை” இப்போது பேசியது…
“அவங்க இருவரும் கல்யாணம் பண்ணிக்கட்டும், எனக்கு
எந்த பிரச்சனையும் இல்லை, அவங்களோட வாழ்க்கையில
நான் தலையிட மாட்டேன்” என்றாள் மலர்.
“உனக்கு பிரச்சனையே இருந்தாலும், எங்களுக்கு அதைப்
பத்தி கவலை இல்லை… நாங்க சொல்ற வரைக்கும் நீ இந்த
வீட்லதான் இருக்கணும் அதுதான் முடிவு” என்றார் ருத்ரா
அதிகாரமாக…
“சரி” என்று சம்மதமாக தலையசைத்தால் மலர்.
மலர் தெரிஞ்சி தான் பேசுறியா… இதனால பாதிக்கப்பட
போறது உன்னோட வாழ்க்கை தான் யோசிச்சு முடிவு
பண்ணிக்கலாம்.. கொஞ்சம் பொறுமையா இரு…. என்றார்
சக்கரவர்த்தி.
இனிமேல் யோசிக்கிறதுக்கு என்ன சார் இருக்கு… பிடிக்காத
வாழ்க்கையை பிடிக்காத பொண்ணோட எப்படி சார் வாழ
முடியும்… எனக்கு அருண் சார் அவங்கள கல்யாணம்
பண்ணிக்கிறதுல முழு விருப்பம் தான்… நீங்க எந்த பேப்பர்ல
சைன் பண்ண சொல்றீங்களோ… நான் சைன் பண்ணி
கொடுத்துடுறேன் என்றாள் மலர்.
இப்பொழுதுதான் அருணுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது…
“அப்போ உன்னோட வாழ்க்கை” என்று கேட்டார்
சக்கரவர்த்தி.
இந்த கேள்விக்கு பதில் என்கிட்ட இல்ல சார்.. என்றாள் மலர்.
என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் செல்ல போக… இந்த
விஷயத்தை பத்தி உங்க அம்மாகிட்ட எல்லாம்
சொல்லிக்கிட்டு இருக்காத அப்புறம் விளைவுகள் வேற
மாதிரி இருக்கும் என்றார் ருத்ரா… அவள் அருகில் அவளுக்கு
மட்டும் கேட்கும் படி.
(பின் அவர்களுக்கு தெரிந்து ஊர் மக்களை திரட்டி வந்து
வீட்டில் பிரச்சனை செய்து விட்டால், அவர்களின் குடும்பம்
மானம் காற்றில் பறக்கும் என்ற எண்ணம்)
தலையை மட்டும் திருப்பி அவரை ஒரு முறை பார்த்து விட்டு
“சரிங்க மேடம்” என்று கூறிவிட்டு தனது அறைக்குள்
நுழைந்து கொண்டாள் மலர்.
****************
அப்புறம் என்னங்க அவளே சொல்லிட்டா… கல்யாணம்
பண்றதுல எந்த பிரச்சனையும் இல்ல அப்படின்னு… இப்போ
உங்களுக்கு சம்மதம் தானே என்றார் ருத்ரா..
சட்டப்படின்னு எல்லாமே பேசுறியே…
ருத்ரா!.. நியாயப்படின்னு ஒன்னு இருக்கே… அது உனக்கு
தெரியவே தெரியாதா… என்றார் சக்கரவர்த்தி.
என்னோட மகனுக்கு நான் நியாயப்படி தான்
நடந்துக்கிறேன்!… என்றார் ருத்ரா.
சுயநலமா இருக்காத ருத்ரா!.. என்றார் சக்கரவர்த்தி.
யாரு நான் சுயநலமா நடந்துக்கறனா… நீங்க தான் சுயநலமா
நடந்துக்குறீங்க…. அந்த பொண்ணோட வாழ்க்கையை பத்தி
மட்டும் யோசிச்சிங்களே…. நம்ம பையனோட வாழ்க்கையை
யோசிச்சீங்களா?…. இல்ல… ரதியோட வாழ்க்கையை பத்தி
யோசிச்சீங்களா? வயித்துல வளர குழந்தையோட
வாழ்க்கையை பத்தி யோசிச்சீங்களா?…. நீங்கதான் ஒரு
தலை பட்சமா யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கூறிவிட்டு
ரதியின் அருகில் வந்த ருத்ரா ரதியின் கையைப் பிடித்து
சந்தோஷமா.. போயிட்டு வாம்மா… சீக்கிரம் கல்யாணம் பேச
வீட்டுக்கு வரோம்.. என்று கூறி அணைத்து விடுவித்து,
நெற்றியில் முத்தம் வைத்து வழி அனுப்பி வைத்தார்.
தேங்க்ஸ் ஆன்ட்டி! பாய்…அங்கிள்!… என்று கூறிவிட்டு,
அருணை பார்த்து போனில் பேசிக் கொள்ளலாம் என்பது
போல் சைகை காண்பித்து விட்டு, நினைத்ததை சாதித்த
மகிழ்ச்சியில் கிளம்பினாள் ரதி.
*****************
அறைக்குள் சென்றவளின் மனம் குமுறியது… கத்தி அழ
வேண்டும் போல் இருந்தது நெஞ்செல்லாம் அடைத்தது….
தொண்டைக்குள் எச்சில் முழுங்கவே சிரமமாக இருந்தது..
எல்லாம் முடிந்து விட்டது ஏமாற்றப்பட்டு விட்டேன்…
ஏமாற்றப்பட்டேனா!… இல்லையே அவன் என்னை
கடைசிவரை மனுசியாக கூட மதிக்கவில்லையே என்ன
நம்பிக்கை கொடுத்தான்… என்னை ஏமாற்றுவதற்கு நானே
நம்பிக்கொண்டு நானே ஏமாந்து கொண்டேன் என்று
நினைத்தாள் மலர்.
அவன் ஒவ்வொரு தடவையும் அற்பபுழுவை போல் பார்த்து
விலக்கி வைக்கும் பொழுதெல்லாம் மனதில் ஏதோ ஒரு
மூலையில் என்றாவது ஒருநாள் நம்மை ஏற்றுக்கொள்வான்
என்ற எண்ணம் இருந்தது…
காதல் இருந்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான்..
சொல்வாள். காதல் எப்படி வரும்… தன்னை காணும்
போதெல்லாம் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துபவன் மீது
எப்படி காதல் வரும்…
ஆனால் தாலி கட்டிய கணவன் என்பதால் ஒரு நம்பிக்கை
இருந்தது என்றாயினும் சேர்ந்து வாழ்வோம் என்ற
நம்பிக்கை… இன்று அந்த நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து
விட்டது..
வாழட்டுமே வாழட்டும்… அவனாவது வாழட்டும்
நான்தான் வாழ வில்லை அவனுக்கு பிடித்த
வாழ்க்கையாவது அவன் வாழட்டும்… இருவரும் சந்தோஷம்
இல்லாமல் நொந்து சாவதற்கு அவன் ஒருவனாவது
நிம்மதியாக வாழட்டும் என்று முழுவதுமாக அவனையே
விட்டுக் கொடுத்து விட்டாள் மலர்.
இல்லை… விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும். அவள்
சூழ்நிலை அப்படி..
அப்படியும் ஏதாவது பிரச்சனை செய்து இந்த கல்யாணத்தை
நிப்பாட்டினால், அந்த வயிற்றில் இருக்கும் கரு என்ன பாவம்
செய்தது என்னால் அது அழிய வேண்டுமா…
என்று பலவாறு சிந்தனைகள் நடுவே அவள் படுக்கையில்
விட்டத்தை பார்த்து படுத்திருந்தாள் மலர்.
******************
அருண் தன் அறைக்குள் நுழைந்தான் அவனைத் தொடர்ந்து
விக்ரமும் அருணின் அறைக்குள் நுழைந்தான்….
நீ எங்கடா வர்ற… என்று கேட்டான் அருண்.
உன்கிட்ட கொஞ்சம் பேசணும் டா மச்சான்.. என்றான்
விக்ரம்.
வா வந்து உட்காரு… என்று சோபாவை காட்ட இருவரும்
அமர்ந்தனர்.
ஏண்டா அருண் இப்படி பண்ண…. என்று கேட்டான் விக்ரம்..
என்ன பண்ணேன்…
உன்னை நம்பி தான்டா அந்த பொண்ணு கல்யாணம்
பண்ணி வந்திருக்கு…. அதுக்கு ஏன்டா துரோகம் பண்ண
என்று கேட்டான்..
நான் இதுவரைக்கும் நம்பிக்கை கொடுத்திருந்தா தாண்டா
இப்ப பண்றது பேரு துரோகம்… நான் ஆரம்பத்தில் இருந்தே
அவகிட்ட உன்னை புடிக்கல அப்படின்னு உண்மையை
மட்டும் தான் சொல்லி இருக்கேன். எனக்கு புடிச்ச மாதிரி
நான் வாழ்வேன்னு அவகிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்
அவளும் இப்ப அதை ஏத்துக்கிட்டா… நீங்க ஏண்டா எல்லாரும்
இப்படி கடந்து தவிக்கிறீங்க… என்று கேட்டான் அருண்.
ஒரு பொண்ணோட வாழ்க்கை வீணா போயிடக்கூடாதுன்னு
தாண்டா நாங்க இந்த பாடு படுகிறோம்… என்றான் விக்ரம்.
என்னடா… வீணா போகுது இந்த வீட்ல அவ நல்லா தானே
இருக்கா… உங்க கூட எல்லாம் ஜாலியா பேசிக்கிட்டு..
சிரிச்சுக்கிட்டு.. நேரத்துக்கு வித விதமா சாப்பாடு.. என அவ
என்னமோ சந்தோசமா தான் இருக்கா… நீங்கதான்
என்னமோ அவ கஷ்டப்படுறான்னு புலம்பிகிட்டு இருக்கீங்க..
“அவ அழுதுகிட்டு வந்து உங்க கிட்ட சொன்னாளா நான்
கஷ்டப்படுறேன் அப்படின்னு” என்றான் அருண்.
சொல்லல தான்…. அவ முகத்தை பார்த்தா தெரியாதாடா…
ஒரு பொண்ணு சந்தோஷமா இருக்க அது மட்டும்
போதுமாடா.. என்றான் விக்ரம்.
பின்ன நீ எதை பத்தி சொல்ற உடல் தேவையை பத்தி
சொல்றியா… அதுக்காக என்னோட தகுதிக்கு, அவ கூட
இருந்து குழந்தையா… பெத்துக்க முடியும்… என்றான் அருண்.
டேய் அதையும் தாண்டி அன்பு, பாசம், காதல் ஒரு குடும்ப
வாழ்க்கை ஒரு நிறைவா வாழ வேணாமா டா… அந்த
பொண்ணுக்குன்னு எத்தனையோ கனவுகள், கற்பனைகள்
இருந்திருக்கும் உனக்காக காலம் முழுக்க அந்த பெண்ணு
இப்படியே இருக்க முடியுமா? என்று கேட்டான் விக்ரம்…
நான் எங்கடா அவளை எனக்காக இங்க இருக்க
சொன்னேன்.. நான்தான் அவங்க வீட்டுக்கு போக
சொல்லிட்டேனே… அவதான் போக மாட்டேங்குற அதுக்கு
நான் என்னடா பண்ண முடியும்…
எல்லாரும் அந்தப் பொண்ண ஏதோ ஒரு வகையில கார்னர்
பண்ணிட்டு, போ… போ…னா எப்படிடா போகும். அந்த
பொண்ணு உங்க அம்மாவுக்கு பயப்படுது உங்க அம்மா
சொல்லாம இந்த வீட்டை விட்டு போகாது.. என்றான் விக்ரம்.
டேய்… இப்போ நான் என்ன பண்ண முடியும்… உண்மை
என்னன்னா.. எனக்கும் இப்போ கல்யாணம் கமிட்மெண்ட்ல
இன்ட்ரஸ்ட் இல்ல… நான் ரதி கிட்ட அப்படித்தான் சொல்லி
இருந்தேன்… இவளை இந்த வீட்டை விட்டு அனுப்பின
பின்னாடி தான் நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு பிளான்
பண்ணி இருந்தேன்..
ஆனா அதுக்குள்ள ஆக்சிடென்ட்டா பேபி ஃபாம் ஆயிடுச்சு..
இப்ப வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி
இருக்கு… வேற என்ன பண்ண முடியும் நீயே சொல்லு
என்றான் அருண்.
என்னடா சொல்ற… நீங்க சந்திச்சு ரெண்டு மாசம் தான்
ஆகுதுன்னு நீ கீழ சொன்ன… ஆனா பேபிக்கு மூணு மாசம்
அப்படின்னு டாக்டர் சொல்லி இருக்காங்க… என்னடா
நடந்தது? என்று விக்ரம் கேட்க.
தனக்கு திருமணமான அன்று நடந்த அனைத்தையும்
சொல்லி முடித்தான் அருண்.
அடப்பாவி!…. காலைல ஒரு பொண்ணு கழுத்துல தாலிய
கட்டிட்டு நைட்டு இன்னொரு பொண்ணு கூட ஃபர்ஸ்ட் நைட்
முடிச்சிட்டு வந்து இருக்க… ரொம்ப நல்லவன்டா நீ… என்றான்
விக்ரம் வாயை கை வைத்து மறைத்தபடி,
அன்னைக்கு ஃபுல் போதையில் இருந்ததுனால எனக்கு இந்த
விஷயமே ஞாபகம் இல்லடா இன்னைக்கு தான் ரதி என்கிட்ட
சொன்னா… என்றான் அருண்.
சூப்பர்… கைய கொடு மச்சி… நீயும் ரதியும் காதலிக்கிறதா
சொன்னியே அது எப்போ இருந்து ? அவனுக்கே உண்டான
நக்கல் தோணியில் வினவ….
இப்பதான்… ஒரு டூ மந்த்ஸா… என்று பதில் கூறினான்
அருண்…
இதுவும் சூப்பர்டா… என கையை உயர்த்தி மெச்சி
கொண்டான் விக்ரம்.
என்னடா.. கலாய்க்கிறீயா…. என்றான் அருண்.
இவனிடம் என்ன சொல்லியும் புரிய வைக்க முடியாது என்று
புரிந்து கொண்டான் விக்ரம்.
ஒரு நீண்ட பெருமூச்சுடன்…
உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லனும் டா இல்லனா
என்னோட மனசு ஆறாது…
நான் மலர் கூட பழகிப் பார்த்த வரைக்கும் சொல்றேண்டா…
என்ன பொறுத்த வரைக்கும், நீ தாண்டா “அன்லக்கியஸ்ட்
பர்சன் இன் தி வேர்ல்ட்… கையில கிடைச்ச பொக்கிஷத்தை
தவற விட்டுட்ட… நீ திரும்ப தேடும்போது அது கிடைக்காது…
அது உனக்கு பின்னாடி தான் புரியும்” என்று சொல்லிவிட்டு
கதவை அரைந்து சாத்திவிட்டு கிளம்பினான் விக்ரம்.
வேலைக்காரிய போய் பொக்கிஷம்னு சொல்லிட்டு
போறான்… மூளை குழம்பிடுச்சு போல… நல்ல டாக்டரா
கூட்டிட்டு போய் காமிக்கணும்… இல்லனா அகல்யாவோட
பாடு ரொம்ப கஷ்டம் தான் என்று தலையில் அடித்துக்
கொண்டான் அருண்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!