அசுரன் 17
ஆதியிடம், அருணின் வீட்டில் நடந்ததை விவரித்துக் கொண்டு இருந்தான்
விக்ரம்.
அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை அவன் வாழ்ந்துட்டு போறாண்டா…
விடு.. என்றான் ஆதி.
என்னடா நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற அப்ப அந்த பொண்ணு
மலரோட வாழ்க்கை என்று விக்ரம் கேட்க.
அந்த பொண்ணு எல்லாத்தையும் பத்தி தெரிஞ்சுகிட்டு தானே அவனோட
கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கு அப்புறம்… ஏன் நீ
கவலைப்படுற….என்றான் ஆதி. அருணோட கல்யாணத்து அன்னைக்கே
நான் இந்த கல்யாண உனக்கு வேணாம்… அப்படின்னு அந்த பொண்ணு
கிட்ட சொல்லிப் பார்த்தேன் டா.. ஆனா அந்த பொண்ணு கேக்கல…
இப்போ நல்லா அனுபவிக்கட்டும்… என்றான்.
நம்மளால… யாருடைய வாழ்க்கையும் போயி சீரமைக்க முடியாது…
விக்ரம். அவங்க அவங்களோட வாழ்க்கைக்கு அவர்கள் தான் பொறுப்பு
என்றான்… ஆதி.
ம்ம்.. அதுவும் சரிதான்.. நானும், அங்கிளும் அவன் கிட்ட எவ்வளவோ…
பேசி பார்த்தோம் டா ஆனா அவன் எதுக்குமே ஒத்து வரல மலரும்…ருத்ரா
ஆன்ட்டி சொன்னா உடனே கேட்டுக்குது… எங்களால வேற ஒன்னும்
பண்ண முடியல, இந்த ஒன் மந்த் குள்ள கண்டிப்பா அருணுக்கு ரிசப்ஷன்
கிராண்டா பண்ணுவாங்க.. கண்டிப்பா நி வருவ இல்ல என்றான் விக்ரம்.
பாப்போம் டா.. டைட் ஒர்க் ஷெட்யூல்…. போயிட்டு இருக்கு… வரதுக்கு ட்ரை
பண்றேன்… என்றான் ஆதி…
உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் டா நீ ஊருக்கு வந்தா நம்ம மூணு பேரும்
சேர்ந்து பீச் ஹவுஸ் போறோம் செலிப்ரேட்.. பண்றோம் என்றான் விக்ரம்.
கண்டிப்பா போலாம் டா நீ அகல்யா கிட்ட பர்மிஷன் வாங்கி வை
என்றான் ஆதி.
அவங்க அண்ணங்க கூட தான் சொன்னா உடனே அனுப்பிருவா…
அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்லை… என்றான் விக்ரம்.
அப்புறம் சார்….. வெளிநாடு போயி டேட்டிங்… எல்லாம் போறதா
கேள்விப்பட்டேன்… என்றான் விக்ரம் நக்கலாக..
அதுக்குள்ள உனக்கு நியூஸ் வந்துடுச்சா… என்றான் ஆதி.
நீ செவ்வா கிரகத்துக்கே போனாலும் எனக்கு நியூஸ் வருண்டா… என்றான்
விக்ரம். சொல்லு!… சைத்ரா வீட்ல பேசி மேரேஜ் பிக்ஸ் பண்ணிடலாமா
என்றான்.
இல்லடா எங்க ரெண்டு பேருக்குள்ள செட் ஆகல.. என்றான் ஆதி.
என்னடா சொல்ற அந்த பொண்ணுக்கு என்ன குறை… பத்து பேர்ல
ரெண்டு பேரு தான் உன்கிட்ட லவ்வ சொல்லவே வராங்க… அதையும் நீ
வேணாம்னு சொல்லிட்டு இருக்க இப்படியே இருந்தா என்னதான்டா
பண்ண போற… எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு அருணுக்கு ரெண்டு
தடவை கல்யாணம் ஆகி குழந்தை வேற பெத்துக்க போறான்… நீ
எப்பதான் பண்ணிக்க போற… உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா
தான்டா நான் நிம்மதியா இருப்பேன்…. என்றான் விக்ரம்.
எனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு உன்கிட்ட நேர்ல வந்து
சொல்றேன் நீயே தேடி கொடு…
சீக்கிரமே பண்ணிக்கிறேன் டா… முதல்ல வேலைய முடிச்சுட்டு ஊருக்கு
வரேன் அப்புறமா அதை பத்தி பேசிக்கலாம் என்றான் ஆதி. எனக்கு
கல்யாணம் பண்ணி வைக்கிறது இல்ல நீ ரொம்ப ஆர்வமா இருக்க
போலையே…
நீ மட்டும் சிங்கிளா நிம்மதியா சுத்திட்டு இருக்க பாத்தியா… அது
கொஞ்சம் காண்டா இருக்குடா… அதான் என்றான் விக்ரம் சிரித்தபடியே.
ஹா..ஹா… ரொம்ப நல்லவன் டா நீ என்றான் ஆதி. நீ கல்யாணம் பண்ணி
நிம்மதி இல்லாம அலையுறேன்னு சொல்லி அகல்யா கிட்ட சொல்லவா
என்றான்.
ஐயோ வேணாண்டா சாமி வேற வினையே வேணாம் சாமி ஆடிடுவா…
நான் உன்ன மிங்கிள் ஆக்கலான்னு பார்த்தா… நீ என்ன சிங்கிளாக்க
பாக்குறியா…
ரிசப்ஷன் இன்விடேஷன் அனுப்பி வைக்கிறேன்… சீக்கிரம் ஊருக்கு வந்து
சேரு முடிஞ்சா எல்லா ப்ராப்ளத்தையும் சால்வ் பண்ணிட்டு, இங்கேயே
இருக்கிற மாதிரி வந்துரு திரும்ப போற வேலை எல்லாம் வச்சுக்காத நீ
இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா… உன்ன நான் ரொம்ப
மிஸ் பண்றேன் டா ஆதி.. லவ் யூ டா மச்சான் என்றான் விக்ரம்
உருக்கமாக.
நா அகல்யாவோட அண்ணன் பேசுறேன் டா… நீ அகல்யா கிட்ட
பேசுறேன்னு நினைச்சுகிட்டு இருக்க போல, ஒரு மார்க்கமா பேசிக்கிட்டு
இருக்க என்று அவனை இயல்பு நிலைக்கு திருப்ப முயற்சித்தான் ஆதி.
போன்ல வெறும் ஐ லவ் யூ… ஓட நிப்பாட்டுறேண்டா நீ நேர்ல வா
என்னோட லவ்வ உனக்கு எப்படி காமிக்கிறேன் மட்டும் பாரு, என்றான்
விக்ரம் சிரித்தபடியே….
ஹா…. ஹா… வரேன் டா… வரேன் வை… எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு
என்று போனை கட் செய்தான் ஆதி.
இருவரின் நட்புக்காகவும் தான் என்ன வேணாலும் செய்யலாம் என
மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஆதி.
***************
அருணின் அறையில், அருண் முன் நின்றிருந்தாள் மலர். அவன் சில
டாக்குமெண்ட்களை காண்பித்து இதில் எல்லாம் சைன் பண்ணிடு
என்றான் மலரிடம்…
அவளும் அதை வாசித்து பார்க்காமல் வேகமாக கையெழுத்து போடப்
போக…
கையெழுத்து போடுவியா இல்ல கைநாட்டு வைப்பியா என்று கேட்டான்…
அவனை அமைதியான முகத்துடன் ஒரு கணம் பார்த்துவிட்டு
“கையெழுத்து போடுவேன் சார்” என்று சொல்லி பேனாவை வாங்கி
கையெழுத்து போட்டு அவனிடம் நீட்டினால்…
என்ன படிக்காமலேயே கையெழுத்து போட்ட என்று கேட்டான்.
நீங்க என்கிட்ட ஏமாத்தி எழுதி வாங்குவதற்கு ஒன்னும் இல்ல சார்… என்று
கூறிவிட்டு.. வேகமாக அறையை விட்டு வெளியேறினால் மலர்.
*************
அடுத்த சில நாட்களில் சக்கரவர்த்தி- ருத்ரா தம்பதியினர், ஜோஸ்
குடும்பத்தினரிடம் சென்று திருமண விழாவை பற்றி பேசி முடித்தனர்.
ஜோசுக்கு மலர் இருப்பது ஒரு உறுத்தல் என்றாலும் ரதியின் விருப்பத்தை
முன்னிட்டு அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
சக்கரவர்த்திக்கு இந்தத் திருமண நிகழ்வுகளில் விருப்பமில்லை
என்றாலும் கட்டாயம் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை..
அருண் மற்றும் ரதி விடலைப் பருவ காதலர்கள் போல் ஆயினர்…
இந்த இடைப்பட்ட நாட்களில் மலர் நன்றாக யோசித்து சில முடிவுகளை
மனதுக்குள் எடுத்து வைத்திருந்தாள் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள
முடியவில்லை…
மலரின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை… அவள் யார் மீதும்
கோபப்படவும் இல்லை, யாருக்கு செய்யும் பணிகளிலும் குறை
வைக்கவும் இல்லை அருண் உட்பட…
அவனை நிமிர்ந்து பார்ப்பதும் இல்லை..
அருனும் மலரை கண்டு கொள்வது இல்லை.. முன் போல் பெரிதாக
அவமானப்படுத்துவது இல்லை.. சும்மா இருக்கிறவளை தான் ஏதாவது
சொல்லி சீண்டி விட்டு அவள் ஏதாவது பிரச்சனை செய்து விடுவாள்
என்கிற எண்ணத்தினால் இருக்கலாம்.
தான் நினைத்த தகுதிகளுடன் தனக்கு மனைவி அமையப்போகும்
சந்தோஷத்தில் ரதியுடன் சுற்றிக் கொண்டிருந்தான் அருண்.
அருணின் அலுவலக வேலைகளையும் விக்ரமே பார்க்க வேண்டியதாய்
இருந்தது.
ரதியின் வீட்டில் அருண் ரதி நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது.
அடுத்து சில நாட்களிலேயே திருமணம் முடிவு செய்யப்பட்டது அதற்கான
வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
மலர் தன் அறையிலேயே முடங்கி கொள்வாள். சுதாவும் அவருக்கு
துணையாக மலருடனே இருந்து விடுவார்..
சமையலறையில் ஏதோ யோசனையில் வேலை செய்து கொண்டு
இருப்பவளை பாவமாக பார்த்து வைப்பார் சுதா..
சுதாம்மா… ஏன் அப்படி பாக்குறீங்க…
உனக்கு கஷ்டமா இல்லையா மலர்…
கஷ்டப்பட்டு… கஷ்டப்பட்டு.. அதுவே பழகிடுச்சு சுதாமா என்பாள்…
கண்டிப்பா உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும் மலரு நம்பு என்பார்
சுதா…
அவரைப் பார்த்து மெல்லிய புன்னகை ஒன்றை வீசுவாள் மலர்.
இவ்வளவு கஷ்டத்திலும் உன்னால மட்டும் தான் சிரிக்க முடியும் மலர்
என்பார் சுதா.
இத தவிர என் வாழ்க்கையில நான் வேற எதுவும் செய்ய முடியாது
சுதாம்மா!.. அதனால அத சிரிச்சுகிட்டே கடந்து போக பழகிக்கிட்டேன்..
என்பாள் மலர்.
உன்ன போல பொண்ண எப்படி இவங்களால வேணாம்னு சொல்ல
முடியுது மலரு.. என சுதா கேட்க…
அவங்க அவங்களுக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும், நான் அந்த
எதிர்பார்ப்பை பூர்த்தி பண்ணல அவ்வளவுதான்..! என்றாள் மலர்.
உன் கூட வாழ்ந்து, பார்க்காமலே எதிர்பார்ப்ப பூர்த்தி பண்ணலன்னு
சொன்னா எப்படி மலரு ஏத்துக்க முடியும் என்றார் சுதா…
அவங்க எதிர்பார்க்கிற தகுதியே “பணம்” மட்டும்தான். அது என்கிட்ட
சுத்தமா இல்ல.. அதனால என்ன ஏத்துக்கல!… வலி மிகுந்த குரலில்
கண்களைச் சிமிட்டி கூறினாள் மலர்.
அடுத்த சில நாட்கள் அவர்களின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டு
இருந்தது திருமண சம்பந்தமாக நிறைய ஆட்கள் வந்து போக
இருந்தனர்… மலருக்கும் வீட்டு வேலை நெட்டி முறித்தது..
ருத்ரா, ரதி, அருண் மூவருமே ஆடம்பர விரும்பிகள். அதனால் திருமண
வேலைகள் அவர்கள் விருப்பம் போல் ஆடம்பரமாக நடந்து
கொண்டிருந்தது.
அன்றும் இதுபோல் திருமண உடைகளை எடுக்க சென்றிருந்தனர்
குடும்பத்தினர். சக்கரவர்த்தியும் விக்ரமும் தங்கள் வேலை நிமித்தம்
இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி தவிர்த்து
விட்டனர்…
உடைகளை எடுத்து வந்து ஹாலில் அமர்ந்த ருத்ரா, அதை பிரித்து
வைத்து தனது தோழிகளிடம் பெருமையாக பேசிக் கொண்டு இருந்தார்.
புடவையின் விலை அதன் தரம் ஆகியவற்றை பற்றி, மேலும் ரதியின்
வீட்டில் அருணுக்கு என்ன என்ன வரதட்சணை எல்லாம் கொடுக்கிறார்கள்
என்று பெருமை பேசிக்கொண்டு இருந்தார் ருத்ரா ஓர கண்ணால் மலரை
பார்த்துக்கொண்டே. அந்த பார்வையின் அர்த்தம் என் மகனின் தகுதியை
பார் அவனுக்கு இப்படிப்பட்ட பெண் தான் தேவை நீயல்ல… என்பது போல்
இருந்தது.
மலர் இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை… யார் வீட்டிலோ
விருந்து… நமக்கு என்ன.. என்பது போல் நடந்து கொண்டாள் அதைக்
கண்டு ருத்ராவிற்கு மேலும் ஆத்திரமானது..
அவ்வப்போது வீட்டுக்கு வரும் ரதி, மலரை வேலையெவி அதிகார திமிர்
உடனே நடந்து கொள்வாள். வேண்டுமென்றே மலரின் முன்னால்
அருனிடம் நெருக்கமாக நடந்து கொள்வாள்.. அவனின் எண்ணமும்
அதுதான். எங்கள் நெருக்கத்தை பார்த்து நொந்து சாவு என்பது போல்
அவர்கள் எண்ணம்.
அதனால் சங்கடமாக உணர்ந்த மலர், ரதி வரும் நேரங்களில்
பெரும்பாலும் அறைக்குள்ளையே இருந்து கொள்வாள்.
தன் கணவன் என்பதால் அல்ல, யாரோ இருவராய் இருந்தாலும்
கன்னியவளுக்கு இந்த சங்கடம் ஏற்பட்டு தான் இருக்கும். இரண்டு நாய்
ரோட்டில் கொஞ்சிக் கொண்டிருந்தால் தலையை திருப்பிக் கொண்டு
செல்வது போல்,
இந்த நாட்களில் சக்ரவர்த்தியும், மலரின் இந்த நிலைக்கு தான்தான்
காரணம் என்ற குற்ற உணர்வில் மலரிடம் பேசுவதற்கு சங்கடமாக
இருந்ததால் அவளை பேசுவதை தவிர்த்து வந்தார். அவள் முகத்தை
அவரால் ஏறிட்டு பார்க்க முடியவில்லை.
முகூர்த்தக்கால் ஊன்றி மெஹந்தி, ஹால்டி, சங்கீத் என அனைத்து
விழாக்களும் நடந்தேறி..
முதல் நாள் மோதிரம் மாற்றி சட்டப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு
திருமணம் நடந்தேறியது.
அடுத்த நாள் ரிசப்ஷன் கோலாகலமாக பிரம்மாண்ட மண்டபத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. பெரிய தொழிலதிபர்கள் அனைவரும்
கலந்து கொண்டனர். ஆதியும் வெளிநாட்டில் இருந்து வந்து கலந்து
கொண்டிருந்தான். மலர் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை தன்
அறைக்குள்ளையே அடைக்கலாம் ஆனாள்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!