அதிரூபன் அவளைப் பார்த்தவாறு சிகரெட்டை பற்ற வைத்தவன் ஆழ்ந்து அப்புகையை இழுத்தவாறு பெண்ணவளை தலை சாய்த்து பார்த்து வட்ட வட்டமாக புகையை வெளியிட்டான்…
அவந்திகாவிற்கு அப்புகையினால் மூச்சு முட்டியது.. நெஞ்சில் கை வைத்து இரும்பிட.. மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து அவளை நோக்கி தனது ஒவ்வொரு அடியையும் அழுத்தமாய் எடுத்து வைத்து முன்னேறி வந்தான் அதிரூபன்…
தன்னை நோக்கி அவன் வர வர அவந்திக்காவிற்கு இதயம் ஏகத்துக்கும் துடித்தது…
அசால்டாக அவள் அருகே வந்து சுவற்றில் ஒரு கரம் ஊன்றியும் மறுகரத்தால் தன் வாயிலிருந்த சிகரெட்டை மீண்டும் ஆழ்ந்து புகையை இழுத்தவன் பின்பு சிகரெட் அடங்கிய மற்றொரு கரத்தால் அவள் மற்றொரு புறம் சுவரில் அழுந்த வைத்து விட்டு இப்போது புகையை அவளுக்கு முகத்திற்கு நேரே ஊதினான்…
தன் வாயை பொத்தியவாறு மீண்டும் இரும்பிய அவந்திகா அவனைத்தான் பயம் தொற்றிய விழிகளால் பார்த்துக் கொண்டு இருந்தாள்…
அதிரூபன் கொஞ்சமும் அசராது ,
“என்னை பத்தி எங்க அப்பா கிட்ட போட்டு கொடுக்கலாம்னு தானே நினைச்ச..??” என சரியாக கணித்து கேட்டிடவும் அவந்திகாவிற்கு உச்சியில் ஆணி அடித்தது போல கிடுகிடுக்க வைத்தது…
அவள் முகம் நோக்கி குனிந்தவன் ,
“என்னை பத்தி தெரிஞ்ச உன்னை சும்மா விடுவேன்னு நினைச்சிட்டியா..??” என அவளது பயந்த முகத்தை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்துவிட்டு அவளை விட்டு மெல்ல விலகியவன் மீண்டும் சிகரெட்டை வாயில் வைத்து புகையை இழுத்து விட்டவாரு,
” ஆமாடி நான் கே தான்.. நானும் ரேவந்தும் ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு தான் இருக்கோம் ..வெளியே எல்லாருக்கும் நான் பாஸ் அவன் எனக்கு பி ஏ..
அவ்வளவு தான் எங்க ரிலேஷன்ஷிப் மத்தவங்களேக்கு…ஆனா எங்களுக்குள்ள ஆயிரம் விஷயம் இருக்கும்…
எனக்கு எல்லாமே அவன் மட்டும் தான்.. அவனுக்கு எல்லாமே நான் ஒருத்தன் மட்டும் தான் ..
எங்களுக்கு இருக்கிற இந்த ரிலேஷன்ஷிப்பை பத்தி ஒருத்தரும் தெரிஞ்சதே கிடையாது …
ஏன் தெரியிற மாதிரி நாங்க நடந்துக்கிட்டது கூட கிடையாது.. ஆனால் நீ..?? உன் கண்ணுல மட்டும் எப்படி தான் நாங்க மாட்டனோமோ??… ஒருவேளை உன் கண்ணுல மட்டும் தான் நாங்க மாட்டனும்னு இருக்கா என்ன ..?..
சத்தியமா நான் நினைக்கவே இல்ல.. எங்களுக்குள்ள நீ வருவேன்னு…
என் அப்பா என் மேல உயிரையே வச்சு இருக்காரு.. அவருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது நான் அவ்வளவு தான்… அடுத்த நிமிஷம் என்னை செருப்பால அடிச்சு வெளியே தள்ளிடுவாரு ..
நான் இப்படித்தான் எதுக்காகவும் யாருக்காகவும் இனி என்னால மாத்திக்க முடியாது..!
எங்க விஷயம் தெரிஞ்ச உன்னை நான் எப்படி சும்மா விடுறது..?” என்றதும் தன்னை அவன் கொன்று விடுவானோ என்கிற உயிர் பயத்தில் அவனை அதிர்ந்து போய் பார்த்து வைத்தாள்.…
அவள் முகத்தில் தெரிந்த பயத்தை கண்டு விட்டு இதழ் வளைத்து சிரித்த அதிரூபன்,
” பயப்படாத உன்ன கொல்ற அளவுக்கு எல்லாம் நான் கல் நெஞ்சுக்காரன் கிடையாது… உன்னை கொன்னுட்டா அதுக்கப்புறம் நானே என்னை காட்டிக் கொடுத்த மாதிரி ஆயிடும்…
வேற யாரையாவது நான் போட்டா கூட யாரும் சந்தேகப்பட கூட மாட்டாங்க.. ஆனா உன்னை போட்டா எங்க அப்பா ஒருத்தரே போதும்… அடியில இருந்து நுனி வரைக்கும் மொத்தமா கண்டுபிடிச்சிடுவார்…
அதனால் அந்த ரிஸ்க் எடுக்க நான் விரும்பல..
அதனால நான் உனக்கு வேற பனிஷ்மென்ட் தரலாம்னு முடிவு பண்ணிட்டேன்… என்னன்னு யோசிக்கிறியா..?..
கவலைப்படாதே..! நீ நினைச்சதை விட நீ ரொம்ப வசதியா வாழற வாழ்க்கை தான் உனக்கு தரப்போறேன் அவந்திகா..!” என்றவனின் கூற்றில் புரியாது அவனைப் பார்த்து வைத்தாள்…
அவளுக்கு முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு பேசிக் கொண்டிருந்தவன் சட்டென தன் நடையை நிற்பாட்டி விட்டு மீண்டும் அவளை நெருங்கி வந்து அவளது முகம் நோக்கி குனிந்தவன்,
“உனக்கு வேணும்ங்கற எல்லா வசதியும் பண்ணி தரேன்..நீ பார்த்த எல்லாத்தையும் மறந்துட்டு…”
என அவன் கூற வருவதை முழுதாய் கூட கேட்டிடாது அவன் மார்பில் கரம் வைத்து தள்ளியவள்,
“என்ன சொல்றீங்க..??…நீங்க பண்ண தப்புக்கு எனக்கு லஞ்சம் தந்து சரி கட்ட பார்க்துறீங்களா…?? இதை விட மாட்டேன்…அதியமான் பாஸ் கிட்ட சொல்லியே தீருவேன்…” என அவளையும் மீறி அதிரூபனை பார்த்து கத்தியே கூறி விட்டிருந்தாள்…
அதில் தன் இதழ் மீது ஒற்றை விரல் வைத்து,
“ஷ்ஷ்ஷ்…. இப்ப எதுக்கு கத்துற..??
நான் உனக்கு தெளிவா புரியிற மாதிரி தானே பேசுறேன்…” என அப்போதும் அவளுக்கு புரிய வைத்திடும் நோக்கில் பேசியவனை பல்லை கடித்து கொண்டு பார்த்த அவந்திகா தனது தைரியத்தை ஒன்று திரட்டி அவனது சட்டையவே பிடித்து விட்டிருந்தாள்,
” என்னடா நெனச்சிட்டு இருக்க நீ..?? இப்படிலாம் பேசுனா நான் பயந்துருவேன்னு நினைச்சியா..??.. இந்த அவந்திகா எதுக்காகவும் யாருக்காகவும் பயப்பட மாட்டா…
உன்ன பத்தி ஒன்னும் ஒன்னும் உங்க அப்பா கிட்ட இப்பவே நான் சொல்றேன் …உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோடா..!” என எகிறியளவு கழுத்தில் ஒற்றைக் கரம் வைத்து அழுத்தி சுவற்றோடு சாய்த்தவன்,
” என்னை பார்த்தா உனக்கு கேனையன் மாதிரி தெரியுதா..?? நீ எப்படியும் என் அப்பா கிட்ட போவேன்னு எனக்கு தெரியும் ..அதான் எல்லாத்துக்கும் ஏற்பாடா நான் வந்து இருக்கேன்..!” என்றவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைப்பேசி எடுத்து அதில் எதையோ வைத்து விட்டு அவளை அழுத்தமாய் பார்த்தவன் கைப்பேசியில் இருப்பதை அவள் புறம் காட்டினான் …அதை கண்ட அவந்திகாவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது…
******************************
டெண்டர் தங்கள் கம்பெனிக்கு கிடைத்து விட்டதால் அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்தனர்…
எள் என்றால் எண்ணெயாக இருக்கும் அவந்திகாவோ தன்னுடைய தைரியம், சுறுசுறுப்பு ,நேர்மை அழுத்தம் என அனைத்தும் அவளை விட்டு ஒரேடியாக சென்றது போல தனக்கு முன்னே இருந்த லேப்டாப்பை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்…
அவள் நடந்ததையே யோசித்தவாறு அமர்ந்திருக்க.. அச்சமயம் அவளது அறை கதவை மரியாதைக்காக கூட தட்டாது தான் பாட்டிற்கு திறந்து உள்ளே வந்தான் ரேவந்த்…
அங்கு அமைதியாக களை இழந்து காணப்படும் அவந்திகாவை நக்கலாக பார்த்தவன் இருக்கையை இழுத்து போட்டு கால் மேல் கால் போட்டு அமர்த்தலாய் அமர்ந்தவன்,
” உன்னை இப்படி பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாவே இல்ல… ரொம்ப திருப்தியா இருக்கு ..!…
கொழுப்பு எடுத்து போய் என் முன்னாடி எப்படி எல்லாம் பேசினே..?? இப்ப உன்ன” மொத்தமா அடக்கி வச்சிருக்கேன் பார்த்தியு..?? இதுக்கு தான் ரொம்பவே ஆடக்கூடாதுங்கிறது..!” என தேள் போல தன் நாக்கினால் அவந்திகாவை கொட்டி தீர்த்தான் ரேவந்த் …
அவனை அருவருப்பாய் பார்த்தவாறு அமைதியாக இருந்தாள் அவந்திகா…
மேலும் தொடர்ந்த ரேவந்த்,
” நான் கூட நடந்த விஷயத்தை எல்லாம் பார்த்துட்டு துண்ட காணோம் துணியை காணோம்னு இந்த ஆபீஸ விட்டு ஓடிடுவியோனு நினைச்சேன்…
பரவால்ல நல்லா அமுக்குனி மாதிரி இங்கேயே உட்கான்ந்துகிட்டு இருக்க.. தைரியம் தாண்டி உனக்கு..!..” என அவன் பேச பேச அவனை கொலை செய்யும் அளவு வெறியை எழுந்தது பெண்ணவளுக்கு…
இரு கரங்களையும் இறுக்கமாய் கோர்த்துக் கொண்டு அவனை பல்லை கடித்துக் கொண்டு பார்த்த அவந்திகா,
” தேவையில்லாததை பேச வேணாம் ..இப்ப எதுக்கு இங்க வந்து இருக்க..?” என அவனை ஒரிமையில் பேசிடவும்.. இரு புருவங்களையும் உயர்த்தி ஆச்சரியம் போல அவளை பார்த்த ரேவந்த் ,
“என்னடி இவ்வளவு நடந்தும் என் கால்ல விழுந்து மரியாதை தருவேன்னு நினைச்சேன்… வா போனு அவ்வளவு திமிரா பேசுற..?? இன்னும் உன் திமிரை அடக்கணுமோ ..!” என்றவனை எள்ளலாக பார்த்து தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்த அவந்திகா ,
“உன்னை மாதிரி நாய்ங்க குறுக்க வழில தான்டா வர முடியும் …அவ்வளவு தைரியம் இருந்தா நேருக்கு நேர் நின்னு என்கிட்ட மோதி பாரேன்..
அதுக்கு துப்பு இல்ல வந்துட்டானுங்க ஆட்டிக்கிட்டு…!” என்றவளது பேச்சில் அதிர்ந்து போய் அவளைப் பார்த்த ரேவந்த் சட்டென மேசையை தட்டியவாறு எழுந்து நின்று,
” இன்னும் உன் திமிரு அடங்கல.. உன்னை அடக்கி காட்டுறேன்டி… பொண்ணா இது பிசாசு ..!” என்று விட்டு விருட்டென அறையில் இருந்து வெளியேறியவனது காதில் அவந்திகாவின் பேச்சு தெள்ளத்தெளிவாக கேட்டது,
“நான் பொண்ணா பிசாசானு ஒரு ஆம்பிளை சொல்லட்டும்…” என்றவளது வார்த்தையில் திகைத்து போய் அவளை தலை திருப்பி பார்த்த ரேவந்த் அடுத்த கணம் குரோதம் பொங்கும் விழிகளால் அவளை பொசுக்கி விட்டு வெளியேறி விட்டான்…
அவன் சென்றதும் அவன் பேசி சென்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவந்திகாவின் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது …
தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவளது கண்கள் கலங்கி போய்விட்டது…