அசுரன் 43
பிரசவ அறையின் உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்டதும் தான்
அருணுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது…..
குழந்தையைப் பார்த்து அகல்யாவின் மனம் எப்படி மாறுமோ? அவளை
எவ்வாறு சமாதானம் செய்வது என்று விக்ரம் யோசித்துக்
கொண்டிருந்தான்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை பார்த்து ஏதோ ஒன்றை யோசித்துக்
கொண்டிருந்த அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பிரசவ அறையின்
கதவை நிமிர்ந்து நோக்கினர். குழந்தையின் வரவிற்காக…
பிரசவ அறையில் இருந்து வெளிவந்த டாக்டரை குடும்பமே சூழ்ந்தது.
அவங்களுக்கு குறை பிரசவத்திலேயே ஆண் குழந்தை பிறக்கிற மாதிரி
ஆயிடுச்சு… இப்ப அவங்க மயக்கத்துல இருக்காங்க கொஞ்ச நேரத்துல
நார்மல் வார்டுக்கு கொண்டு வந்துருவாங்க அப்ப போய் நீங்க எல்லாரும்
பார்க்கலாம் என்று சொல்ல…
டாக்டர் குழந்தை எப்படி இருக்கான் என்று அருண் கேட்டான்.
குழந்தை ரொம்ப வீக்கா இருக்கான். இப்போ உங்க கைல கொடுக்க
மாட்டாங்க…இன்குபேட்டர்ல தான் வச்சிருப்பாங்க. பால்
கொடுப்பதற்காக மட்டும் அம்மா கிட்ட குடுப்பாங்க திரும்ப
இன்குபேட்டர்லையே வச்சிடுவாங்க.. குழந்தை உடல் நலம் தேறி உங்க
கைக்கு வரதுக்கு இன்னும் எப்படியும் ஒரு ரெண்டு மாசம் ஆகும்.. எனக்
கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டார் மருத்துவர்.
சில மணி நேரங்கள் கழித்து ரதிக்கு மயக்கம் தெளிந்த பின் ரதியை
காண சென்றான் அருண்.
அவள் தலையை தடவி கொடுத்து இதமாய் நெற்றியில் முத்தமிட்டு என்ன
“பேபி” இப்போ எப்படி இருக்கு என்று மென்மையாய் கேட்டான் அருண்.
நவ் ஃபீல் பெட்டர்… குழந்தைய பாத்தியா குழந்தை அழகா இருக்கா?
யாரை மாதிரி இருக்கு? என்ன மாதிரி இருக்கா? இல்ல உன்ன மாதிரி
இருக்கா?… என்று கேள்விக்கணைகளை தொடுத்தாள் ரதி.
ரிலாக்ஸ் பேபி குழந்தைய இன்னும் யார்கிட்டயும் காமிக்கல…
இன்குபேட்டர்ல தான் வச்சிருக்காங்க… உன்கிட்ட மட்டும்தான் பால்
கொடுக்குறப்ப கொண்டு வந்து கொடுப்பதாக சொன்னாங்க… என்று
சொல்லிக் கொண்டு இருக்கும்போதே… பக்கவாட்டு அறையின் கதவை
தட்டி விட்டு செவிலியர் ஒருவர் குழந்தையுடன் உள்ளே நுழைந்தார்…
அருண் ஆர்வமாய் குழந்தையின் முகத்தை எட்டிப் பார்க்க குழந்தை
முதன்முதலில் ரதியின் கையில் கொடுக்கப்பட்டது. குழந்தையை பார்த்த
ரதி அதிர்ச்சியானாள்…
ச்சீ… குழந்தை என்ன பாக்குறதுக்கு பல்லி மாதிரி இருக்கு.. இது நிஜமாவே
என்னோட குழந்தை தானா.. இல்லை எல்லாரும் சேர்ந்து ஏமாத்த
பாக்குறீங்களா… என்று முகத்தை சுளித்தபடி கேட்டாள் ரதி.
அப்பொழுதுதான் அருண் குழந்தையை எட்டிப் பார்த்தான்.
மிகவும் குட்டியான கை கால்கள்… உடல் எல்லாம் மெலிந்து எலும்பும்
தோலுமாய்… ரோஸ் நிறத்தில்… சுருங்கிய தோல்களுடன்.. தலையில்
கொஞ்சம் பிரவுன் நிற முடியுடன்.. கண்ணை மூடி கை கால்களை குறுக்கி
உதட்டை மட்டும் அசைத்தபடி.. இருந்தது அந்த குறை மாத குழந்தை.
ரதி கத்திய சத்தத்தில் மிரண்டு குழந்தை “ங்கய” என்று வாயை திறந்து
அழுதது…
தயவு செஞ்சு இதை தூக்கிட்டு போயிருங்க… இனிமேல் இதை என்னோட
குழந்தைனு என்கிட்ட கொண்டு வராதீங்க என்று செவிலியரிடம் திரும்ப
குழந்தையை நீட்ட… அருண் குழந்தையை பவ்வியமாக வாங்கிக்
கொண்டான்… “மை சாம்ப் ” என்று கூற, அழுது கொண்டிருந்த குட்டி
அப்பா தூக்கியதும் “கப்சிப்” என்று வாயை மூடிக் கொண்டது.
ஒரு விரலால் மென்மையாக குழந்தையை தொட்டுப் பார்த்தான் அருண்.
குழந்தையின் ஸ்பரிசமும் வாசனையும்… அவனுக்கு மெல்ல கண்கள்
கலங்கின.
குழந்தை ஏன் இப்படி இருக்கான் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையா
என்று கேட்டான் அருண் செவிலியரிடம்…
சார் கடைசி ரெண்டு மாசம் தான் குழந்தை வயித்துக்குள்ள ஊறும்…
இவன் அதுக்குள்ள பிறந்துட்டதனால வெயிட் ரொம்ப கம்மியா
இருக்கான் கொஞ்சம் பலவீனமா இருக்கான் வளர்ச்சி கம்மியா
இருக்கான். தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கிறது மூலமா… நம்ம
இங்குபேட்டர்ல வச்சு அவன கவனமா பார்த்துகிட்டா கொஞ்ச நாள்ல
சரியாகிவிடுவான் மத்தபடி அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
என்று விளக்கம் அளித்தார் செவிலியர்.
அப்பொழுதுதான் நிம்மதி பெருமூச்சு வந்தது அருணுக்கு.
ரதி, குழந்தைக்கு பால் கொடு… அதுதான் நர்ஸ் சொல்றாங்களே
குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லனு…. அவன் உடல் தேறி
வந்துருவான் அப்படின்னு…
என்ன அருண் சொல்ற… அந்த குழந்தையை பாருங்க… பாக்கவே ஒரு
மாதிரி இருக்கு… இந்த குழந்தையை போட்டோ எடுத்து என்னால்
ஸ்டேட்டஸ் வைக்க முடியுமா?… என்று எரிச்சலாய் அவள் கேட்க…
என்ன ரதி யாரோ குழந்தை மாதிரி சொல்ற? இது நம்ம குழந்தை…
நம்மளே ஒதுக்கி வச்சா வேற யாரு கவனிப்பா இவன… முதல்ல இவன
தூக்கு… பால் கொடு… பசிக்க போகுது… என்று கூற…
உனக்கு எப்பவுமே என்ன பத்தி கவலையே இல்லைல அருண்… என்னோட
ஒப்பினியன நீ மதிக்கிறதே கிடையாது… எனக்கு இந்த குழந்தையே
புடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேன் ஆனா நீ தூக்கு தூக்குனு
சொன்னதையே சொல்லிட்டு இருக்க… ஐ ஹேட் திஸ்… இன்று முகத்தை
திருப்பிக் கொண்டு படுத்து விட்டாள் ரதி.
இப்ப என்ன செய்றது சிஸ்டர்… என்று செவிலியரிடம் கேட்க.. இந்த
ஹாஸ்பிடல்ல நாங்களே தாய்ப்பால் ரெடி பண்ணி கொடுத்திடுவோம்
சார்..
குழந்தைக்கு கேர் டேக்கர் ரெடி பண்ணிட்டீங்களா அப்படின்னு டாக்டர்
கேட்க சொன்னாங்க சார்… ரெடி பண்ணிட்டு உங்கள வந்து பாக்க
சொன்னாங்க சார் டாக்டர்.. என்று கூறிவிட்டு, குழந்தையை
இன்குபேட்டரில் வைப்பதற்காக வாங்கிக் கொண்டு அறையை விட்டு
வெளியேறினார் செவிலியர்.
அவர் வெளியேறுவதற்கு முன் குழந்தையுடன் சேர்ந்து சில
புகைப்படங்களை எடுத்துக் கொண்டான் அருண். தன் மகனின் முதல்
நாள் நினைவுகள் என்று அலைபேசியில் சேமித்து வைத்தான்.
குடும்பத்தினர் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சென்று
இங்குபேட்டரில் கண்ணாடி பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த
குழந்தையை பார்த்து விட்டு வந்தனர்.
அகல்யாவும் விக்ரமும் குழந்தையை உள்ளே பார்க்க சென்றனர்…
கண்ணாடி பெட்டியை மெதுவாக வருடிய அகல்யா ஒரு ஏக்கத்துடன்
விக்ரமை பார்க்க…
அவளைத் தோளுடன் தோள் சேர்த்து அணைத்துக் கொண்டான் விக்ரம்.
உன்னோட மருமகன் உன்ன மாதிரியே தூங்கிட்டு இருக்கான்டி… நீயும்
மூஞ்சிய இப்படித்தான் வச்சுக்கிட்டு தூங்குவ… என்று சைகையில் செய்து
காண்பித்தான்… அகல்யாவின் முகத்தில் மென்பன்னகை… இதை பார்த்த
பின் தான் விக்ரமின் முகத்தில் நிம்மதி பரவியது.
வெளியில் வந்த அருண், ஆதி மற்றும் விக்ரமிடம் குழந்தையின்
நிலையை பற்றி கூறிக் கொண்டிருந்தான்… மருத்துவரிடம் இருந்து
அழைப்பு வர அவர் அறைக்குள் சென்றான் அருண்.
வாங்க மிஸ்டர் அருண்… குழந்தையை பாத்தீங்களா?.. ரொம்ப வீக்கா
இருக்கான்… உங்க மனைவிக்கு புகை பிடிக்கிற, மது அருந்துற பழக்கம்
இருக்கா என்று கேட்க…
இருக்கு டாக்டர்… என்று பதில் கூறினான் அருண்.
ம்… அதனால கூட குழந்தையோட வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஒரு நல்ல ஹேர் டெக்கர் ரெடி பண்ணிக்கோங்க ரொம்ப
நம்பிக்கையானவர்களாக இருக்கணும். ஏன்னா அவங்கள நம்பி தான்
உங்களோட குழந்தைய நீங்க ஒப்படைக்க போறீங்க… குழந்தையால
வாயை திறந்து எதுவும் சொல்ல முடியாது அதனால அதோட
உணர்வுகளை புரிஞ்சு கவனமா பாத்துக்கறவங்களா இருக்கணும்.
இனிமேல் குழந்தையை பார்க்க யாரையும் நாங்க அலோ பண்ண
மாட்டோம். ஏன்னா குழந்தைக்கு சீக்கிரம் இன்பெக்சன் ஆயிடும்.
குழந்தையும் கேர்டேக்கரும் மட்டும் தான் அந்த அறையில் (NICU)
இருப்பாங்க நீங்க வேணா அப்பப்ப வந்து பார்த்துட்டு போகலாம்..
குழந்தையோட அம்மா பால் கொடுக்கிறதுக்கு அனுமதிக்கப்படுவாங்க…
கேர் டேக்கர் இங்கேயே தங்குற மாதிரி இருக்கணும் வெளில போயிட்டு
வந்தா அவங்களோட சேர்ந்து குழந்தைக்கு இன்பெக்சன் ஆகிடும்…
குழந்தையை நைட்டு கண்ணை முழிச்சு பாத்துக்குற மாதிரி சூழ்நிலை
வரும் அதுக்கு பொறுமையானவங்களா தேர்ந்தெடுங்க. பொதுவா நல்ல
கேர் டேக்கர் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு… அதனால
அந்த வேலையை நாங்க பெத்தவங்க கிட்டயே கொடுத்து விடுகிறோம்…
உங்க ஃபேமிலியில் இருந்து யாராவது கூட தங்கி பாத்துக்கலாம்…எங்க
சைடு இருந்து உங்க குழந்தைக்கு ஒரு ஸ்பெஷல் நியோனாட்டாலஜிஸ்ட்
அண்ட் வெல் ட்ரெயின் நர்ஸ் அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிடுவோம்…
சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க.. உங்க மனைவி குழந்தைக்கு பால்
கொடுக்க விரும்பல பால் சுரக்கிறத நிறுத்த சொல்றாங்க… அது அவங்க
உடம்புக்கு நல்லது இல்லன்னு அவங்க கிட்ட சொல்லி புரிய வைங்க…
தாய்ப்பால் கொடுக்கிறது தாய்க்கும் நல்லது தாய்ப்பால் குடிக்கிறது
குழந்தைக்கு நல்லது. இன்னும் ரெண்டு நாள்ல அவங்கள டிஸ்சார்ஜ்
பண்ணிடுவோம்.. அதுக்குள்ள நீங்க கேர் டேக்கர் ரெடி
பண்ணிக்கோங்க… அதுக்குள்ள உங்க மனைவியின் மனச மாத்தி
குழந்தைக்கு பால் கொடுக்க வைக்க முயற்சி பண்ணுங்க…. அவங்க
டிஸ்சார்ஜ் ஆகும் போது பால் சுரக்குறத இன்ஜெக்ஷன் போட்டு ஸ்டாப்
பண்ணிடுவோம். என்று ஒரு நீண்ட விளக்க உரை கூறி அனுப்பி வைத்தார்
அருணை…
யோசனையுடனே வெளியே வந்த அருண்… டாக்டர் கூறிய
அனைத்தையும் ஆதி மற்றும் விக்ரமிடம் கூற… குழந்தை ரொம்ப வீக்கா
இருக்கான்டா பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கிறான். ரதி கையில
இருக்கும்போது அழுதுகிட்டே இருந்தான்டா நான் தூக்கின உடனே
அழுகையை நிறுத்திட்டான். அவ குழந்தையை தூக்க கூட மாட்டேங்குற
டா… குழந்தைய பாத்து பல்லி மாதிரி இருக்குதுன்னு சொல்றா டா…
குழந்தை இப்படி பிறக்குறதுக்கு காரணமே இவதான்.. செவுள்ல ரெண்டு
விடலாம் போல இருந்துச்சு எனக்கு… கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன்.
என்னோட பொறுமையை ரொம்ப சோதிக்கிறா…
சரி விடு… குழந்தையை, உங்க அம்மாவ கூட இருந்து பாத்துக்க
சொல்லுடா…மச்சான் என்று விக்ரம் கூற…
வேணாம்டா… எங்க அம்மாவுக்கு அதெல்லாம் தெரியாது… என்னையவே
கேர்டேக்கர் தான் வளர்த்தாங்க… என்றான் அருண்.
நியூஸ் பேப்பர்ல ஏதாவது அட்வர்டைஸ்மென்ட் கொடுக்கலாமா டா?
என்று கேட்க… அதுக்கெல்லாம் நமக்கு டைம் இல்லடா இன்னும் ஒன் டேல
நம்ம கண்டுபிடிக்கணும் …
நம்பிக்கையானவர்களாக இருக்கணும் நம்ம வீட்டை சேர்ந்தவங்களா
இருக்கணும் என்று கூறிக்கொண்டே கண்களை அலைபாய விட்டான்
அருண்.
ஆதிக்கு புரிந்து விட்டது அவன் தேர்ந்தெடுக்க போகும் கேர் டேக்கர் யார்
என்று…
சற்று தள்ளி ஒரு குழந்தையை கையில் வைத்து கொஞ்சி கொண்டு
இருந்தாள் மலர். அவள் அருகே வந்த ராஜேஷ்… அண்ணிக்கு தான்
குழந்தை பிறக்கிறதா சொன்னாங்க இப்ப நீ கையில குழந்தையோட
உட்கார்ந்து இருக்க… என்று குறும்பாய் கேட்க…
உடனே குழந்தையை தூக்கி அவள் முகத்தருகில் வைத்து, பார்க்க என்ன
மாதிரி இருக்கா… என்று தலையை ஆட்டி, கேட்டாள் மலர்.
பாதி உன்ன மாதிரி தான் இருக்கு… பாதி அவங்க அப்பா மாதிரி போல
ஆமா குழந்தையோட அப்பா யாரு? என்று கேட்டான் கேலியாய்.
யாரோ?.. உனக்கு என்ன… ஆனா சத்தியமா நீ இல்ல போதுமா? என்றாள்
அவளும் குறும்பாய்…
அதுதான் தெரியுமே… ஏன்னா… என் குழந்தை இன்னும் அழகா இருக்கும்
என்ன மாதிரி… என்று தனது தலையை அருகில் இருந்த கண்ணாடி
கதவை பார்த்து அழகாய் கோதிக்கொண்டான்..
சாருக்கு…. மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பு…
குழந்தையோட அம்மா ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க கொஞ்ச நேரம்
பாத்துக்க சொன்னாங்க… என்று கூறினாள்.
யாராவது சேவை பண்ண கூப்பிட்டா உடனே கிளம்பிடறது… கூச்சமே
இல்லை… என்று கலாய்த்தான் ராஜேஷ்.
ம்ஹும்…குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும் அதை பார்த்துக்க
கசக்குமா என்ன?… என்று கூறவும்…
நமக்கு கஷ்டம் வரும் போதெல்லாம் கை கொடுக்கிற அந்த ஆட்டோக்கார
தம்பி எங்க? என்ற தோரணையில் அருண் தேட…
“தேள்பத்ரிசிங்” என்ற பின்னணி இசை உடன் கையில் குழந்தையுடன்
கண்ணில் தென்பட்டாள் மலர்.😆
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️