அத்தியாயம் 4
சுபாவை மாலுக்கு அழைத்துச் சென்று அவளுடன் நேரம் செலவிட்டான் அஷ்வின்..
அவளை சமாதானம் செய்து அவள் மனநிலையை மாற்றினான் அஷ்வின்..
இருவருமே தங்கள் பிரச்சினைகளை மறந்து ஷாப்பிங், மூவி , கேம்ஸ் என்று நேரத்தை கழித்தனர்..
இரவானதும் தான் வீட்டுக்கு வந்தனர்..
வந்ததும், குளித்து உடை மாற்றி உறங்க வந்தனர்..
ஆழ்ந்த அமைதியான உறக்கம் சுபாவிடம்…
அவளின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே அவனும் தூங்கினான்…
அடுத்த நாளும் விடிந்தது..
சுபாவை எழுப்ப மனமில்லை அவனுக்கு..
ஃப்ரெஷ் ஆகிவிட்டு, அவனுக்கு காஃபியை கலந்து எடுத்து வந்து, நீயூஸ் பேப்பரை படித்துக் கொண்டே, காஃபியைக் குடித்தான்..
இன்று என்னவோ அவனுக்கு வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை..
வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிக் கொண்டான்..
சுபா இன்னுமே உறங்கிக் கொண்டிருந்தாள்..
அவன் கிச்சடி சமைக்கலாம் என்று காய்களை நறுக்கிக் கொண்டு இருந்தான்..
அப்போது வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ச்சியாக ஒலித்தது.
வந்திருப்பது யார்? என்று அஷ்வினுக்குத் தெரியும்.
கதவைத் திறந்தான்.
உள்ளே அஷ்வினின் தந்தை சுந்தரமும், தாய் பார்வதியும் கோபத்தோடு நுழைந்தார்கள்.
பார்வதியின் முகம் ஆத்திரத்தால் சிவந்திருந்தது…
வாங்க , உட்காருங்க என்று அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தான்..
டீ போடவா என்றான் அஷ்வின்..
பார்வதி சமையலறையை எட்டிப் பார்த்துவிட்டு, எங்க அந்த மகாராணி ஆஹ் காணோம், நீ வந்து தண்ணி கொடுக்கற என்று கேட்டார்…
அவ தூங்கிட்டு இருக்கா!. நான் தான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு விட்டுட்டேன் என்றான்…
அப்ப நீ இன்னைக்கு ஆபிஸ் போகல , அப்படித்தானே! என்று கேட்டார் சுந்தரம்..
ஆமாங்க ப்பா! கொஞ்சம் டயர்ட் அதனால தான் என்றான்…
பார்வதியும் , சுந்தரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
போய் எழுப்பு அவளை என்றார் பார்வதி..
இல்லம்மா வேண்டாம், நேத்து எல்லாம் ரொம்ப நேரம் அழுது கஷ்டப்பட்டுட்டா.. அதனால தூங்கட்டும் என்றான் அஷ்வின்..
நானே டீ போடறேன் என்று கிச்சன் உள்ளே போனவனை தடுத்து நிறுத்தி,
“பெரிய இவளா அவ?” உன்னை வேலை செய்ய விட்டு அவ சொகுசா தூங்கிட்டு இருக்கா..
நீ வீட்டு வேலை செஞ்சு கொடுத்துட்டு இருக்க என்று மீண்டும் மீண்டும் அதையே பேசினார் பார்வதி..
இப்ப உங்களுக்கு என்ன தான் மா பிரச்சினை என்றான் அஷ்வின்..
“எனக்கு என்ன பிரச்சினையா?” என்று பார்வதி கத்தத் தொடங்கினார்.
சலிப்பாக அவரைப் பார்த்தான்..
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் உங்க மனசுல?
ஒரு விசேஷ இடம், ஊரே கூடியிருக்கு…
அங்க வெச்சு எல்லாரு முன்னாடியும் அவ கையைப் பிடிச்சு இழுத்துட்டு போயிட்ட தானே நீ !..
அங்க எனக்கும் ,உன் அப்பாவுக்கும் எவ்வளவு அவமானமா போச்சு தெரியுமா?” என்று சத்தம் போட்டார் பார்வதி..
“அம்மா, சத்தம் போடாதீங்க.
சுபா உள்ள தூங்குறா,” என்றான் அஷ்வின், தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி.
“தூங்குறாளா? பெரிய இவளா அவ? அவளுக்கு ரொம்பத்தான் சப்போர்ட் பண்ற டா நீ!” ..
“அவளால தான் நேத்து அங்க அவ்வளவு பெரிய அசிங்கம் நடந்துச்சு!” என்று பார்வதி மிகவும் கோபமாக பேசினார்…
“என்ன அசிங்கம் நடந்துச்சு அம்மா? அங்க அவளை என்ன வார்த்தை சொன்னாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?
ஒரு குழந்தையைத் தொடக்கூட தகுதி இல்லாதவன்னு எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்தியிருக்காங்க!” என்றான் அஷ்வின்.
பார்வதி சற்றும் குறையாமல் சலித்துக் கொண்டார்.
“அட இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்கா இவ்வளோ பெரிய பிரச்சினை பண்ணிட்டு வந்தீங்க?
அங்க என்ன தப்பா நடந்துச்சு இப்போ? அவங்க சொன்னதுல என்ன தப்பு இருக்கு?
பெரியவங்க, நம்ம சொந்தக்காரங்க… நம்ம நல்லதுக்குத் தானே நாலு வார்த்தை சொல்லுவாங்க? அவங்க ஒன்னும் சுபாவை வேணும்னே குத்திக் காட்டல. ஒரு எதார்த்தத்தை தான் சொன்னாங்க. அதுக்குப்போய் அங்க எல்லாரும் முன்னாடியும் அழுது சீன் கிரியேட் பண்ணிட்டு வந்து உன் முன்னாடி நிக்கிறா!..
நீயும் என்ன ஏது ன்னு விசாரிக்காம அவள கூட்டிட்டு கிளம்பிட்ட என்று விடாமல் பேசினார் பார்வதி…
“அம்மா!” என்று அஷ்வினின் குரல் ஹாலில் கோபமாக எதிரொலித்தது.
ஆனாலும் பார்வதி விடவில்லை. “என்னடா அம்மான்னு சத்தம் போடுற? பெத்த தாயை விட அவ உனக்கு உசந்து போயிட்டாளா?
மூணு வாட்டி லட்ச லட்சமா செலவு பண்ணியும் அவளால ஒரு புழு பூச்சியை பெத்துத் தர முடியல.
அந்த ஏக்கம் அவ கண்ணுல இருக்குறது நிஜம் தானே? அதை மீனாட்சி சொன்னா அதுல என்ன தப்பு இருக்கு?
அதுக்குப்போய் இப்படி நாடகம் ஆடி, உன்னையும் கூட்டிட்டு வந்துட்டாளே!
அவளுக்குத் தான் அறிவு இல்லைன்னா, உனக்கு எங்கேடா போச்சு புத்தி?” என்று சுபாவை மேலும் மேலும் திட்டினார்..
ஏதோ பேச்சு சத்தம் கேட்கவும் சுபா எழுந்து அமர்ந்தாள்.. அவளுடைய மாமியார் வந்திருக்கிறார்கள் என்று கதவைத் திறக்கப் போக ,
அனைவரின் பேச்சு சத்தமும் கேட்டது..
கதவு லேசாகத் திறந்ததால் , அவர்கள் பேசுவது உள்ளே நன்றாகவே கேட்டது…
அதை கேட்டுக்கொண்டிருந்த சுபாவுக்கு பார்வதியின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையால் அடிப்பது போல இருந்தது.
தன் கணவனுக்கும் அவன் தாய்க்கும் தன்னால் தான் சண்டை நடப்பதை எண்ணி அவளுக்கு மேலும் கஷ்டமாக இருந்தது..
இவளும் போனால் இன்னும் பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று நினைத்து வெளியே அவர்கள் முன் போகாமல் அங்கேயே இருந்தாள்..
வெளியே ஹாலில், அஷ்வினின் கண்கள் சிவந்து, முகம் இறுகியது.
தன் தாயை இப்படி ஒரு கோபத்தோடு அவன் அதுவரை பார்த்ததே இல்லை.
“நிறுத்துங்க அம்மா! போதும்!” என்று கத்தினான் அஷ்வின்.
“அஷ்வின்! அம்மாவிடம் எப்படிப் பேசுறதுன்னு உனக்கு விவஸ்தை இல்லையா?” என்று அப்பா சுந்தரம் இடையில் வர முயன்றார்.
அஷ்வினும் ஆவேசமாக
“நீங்க பேசாதீங்கப்பா!” என்று அவரின் பேச்சை தடுத்தான் அஷ்வின், நேராகத் பார்வதியின் முன்னால் வந்து நின்றான்.
“சொந்தக்காரங்க நல்லதுக்குச் சொன்னாங்களா ம்மா?
ஒரு பொண்ணோட வலியை வச்சு விளையாடுறதுக்கு பேர்தான் உங்க சொந்தமா?
அந்த மீனாட்சி பெரியம்மாவுக்கு என்ன தகுதி இருக்கு சுபாவை வார்த்தையால இப்படிச் சொல்ல?
அவளுக்குக் குழந்தை இல்லைங்கிறது அவளோட தனிப்பட்ட வலி.
அதை ஒரு விசேஷ வீட்டுல வச்சு, அவ முகத்துக்கு நேரா குத்திக் காட்டுறப்போ அவளுக்கு எப்படி இருக்கும்ன்னு உங்க சொந்த பந்தத்துக்கு தெரியலையா?
நீங்க ஏன் அவங்களுக்கு புத்தி சொல்லல?”..
அவ உங்க மருமக தானே..
வேற யாரோவா அவ உங்களுக்கு?.
என் பொண்டாட்டி மா!.. அவளை பேசுனா அது எனக்கும் தான் அவமானம் ன்னு உங்களுக்கு ஏன் புரியலை என்று கத்தினான்…
“அஷ்வின், அவங்க பெரியவங்க…” என்று பார்வதி மழுப்ப முயன்றார்.
“பெரியவங்களா இருந்தா என்ன வேணா பேசலாமா அம்மா? ‘ஏங்குற கண்ணு’, ‘பாவம் பண்ணவள்’னு சொன்னா அதைக் கேட்டுட்டு அவ அமைதியா நிக்கணுமா?
அவ ஒன்னும் அங்க சீன் கிரியேட் பண்ணல அம்மா…
உங்களோட அந்த நாகரீகம் இல்லாத சொந்தக்காரங்க பேசுனத கேட்டுத்தான் அழுதுட்டு வந்தா!
அவ அழுதுட்டு வந்தப்போ அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்க, இங்க வந்து
அவளை பழி சொல்லிட்டு நிக்கிறீங்க!”
அஷ்வினுக்கும் கோபமாக பேசியதால் மூச்சு வாங்கியது…
அவன் தன் தாயின் கண்களை நேராகப் பார்த்து “இங்க பாருங்கம்மா… இதுக்கு அப்புறம் சுபாவை யாராவது ஒரு வார்த்தை ‘மலடி’ன்னோ இல்ல ‘விசேஷம் இல்லாதவள்’ன்னோ சொன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன். அது சொந்தக்காரங்களா இருந்தாலும் சரி! இல்ல நீங்களா இருந்தாலும் சரி!
எனக்கு என் மனைவியோட நிம்மதி தான் முக்கியம்.
இந்த உலகத்துல எல்லாரும் அவளைக் கைவிட்டாலும், நான் அவளுக்குத் துணையா இருப்பேன் என்றான்..
பார்வதியும் சுந்தரமும் அஷ்வின் இப்படி பேசுவதைப் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்..
எப்போதும் அமைதியாக இருக்கும் தங்கள் மகன், இன்று அவன் மனைவிக்காக இப்படிப் பேசுவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
“இனிமே இந்த வீட்டுல மட்டுமில்ல எங்கயாவது சுபாவை காயப்படுத்துற மாதிரி ஒரு வார்த்தை கூட வரக்கூடாது.
இப்ப நீங்க கிளம்பலாம்,” என்று அஷ்வின் கூறிவிட்டு கதவைத் திறந்துவெளியே போங்க என்று சொல்வது போல் கையைக் காட்டி நின்றான்.
பார்வதி முகத்தைத் திருப்பிக் கொண்டு விறுவிறுவென வெளியேற, சுந்தரமோ அஷ்வினை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு மௌனமாக வெளியே நடந்தார்…
அவர்கள் சென்ற பிறகு,கதவை இறுக்கமாகச் சாத்தினான் அஷ்வின்…