அசுரன் 48
குழந்தையை தூக்கி வர மலரின் அறைக்கு சென்றான் அருண்.
அறையில் உள்ளே ராஜேஷின் குரல் கேட்டது…
இவன் மேல அதிகமா பாசம் வைக்காத மலர் பின்னாடி நீ தான்
கஷ்டப்படுவ என்றான் ராஜேஷ் குழந்தையை குறிப்பிட்டு….
அது எப்படி பாசத்த அளவா கொடுக்கிறது. கொடுக்கிறதுன்னு
முடிவாகிருச்சு… அதுல என்ன கஞ்சத்தனம் முழுசா குடுத்துற
வேண்டியதுதான்… என்றாள் மலர் சிரித்துக் கொண்டே..
நீ சிரிச்சா அழகா இருக்க மலர் என்றான் ராஜேஷ் ரசனையாய்…
இதையே எத்தனை தடவை தான் சொல்லுவ…
நீ சிரிக்கும் போதெல்லாம்…
பட்டுக்குட்டிய கொஞ்சம் புடி இன்னைக்கு பாக்குறவங்க எல்லாம் அழகா
இருக்கு அழகா இருக்குன்னு சொல்லி கண்ணு வச்சுட்டாங்க திருஷ்டி
பட்டு போய்டும் திருஷ்டி சுத்துறேன் என்று கூறி குழந்தையை ராஜேஷ்
கையில் கொடுக்க…
வாடா எங்க அண்ணன் மவனே… என்று கூற அந்த பட்டு குட்டி அவனை
முறைத்தது…
ஏய் இங்க பாரு பிளவர்… எங்க அண்ணன் மாதிரியே முறைக்கிறான்
என்னை… என்று ராஜேஷ் கூற…
அந்த குட்டிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை “ங்கா” என்று அழுக
ஆரம்பித்தது…
அந்த நேரத்தில் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அருண்.
குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு அருண் நிற்க… வேறு வழி
இல்லாமல் திருஷ்டி சுத்த ஆரம்பித்தாள் மலர்.
கண்கள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை கைகள் சுற்றியது வாய்
முணுமுணுத்தது… பின் மூடிய கையை அருணின் முகத்திற்கு நேரே நீட்ட…
என்ன என்பது போல் பார்த்தான் அருண்.
ப்ரோ த்ரீ டைம்ஸ் துப்புற மாதிரி பண்ணுங்க ப்ரோ… என்று ராஜேஷ் சொல்ல…
து… து… து… என்றான்.
அருணின் கண்கள் அவள் முகத்தை தான் அளவெடுத்துக்
கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்கு முன் இந்த முகத்தில் புன்னகை
இருந்தது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் முகத்தில்
அவ்வளவு இறுக்கம்.
மலர் வெளியே நகர்ந்து விட்டாள்.
ஆனாலும் ப்ரோ நீங்க என்ன வச்சுக்கிட்டே என் ஆள இப்டி சைட் அடிக்க
கூடாது.. வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ… என்றான் ராஜேஷ்.
அறையில் உள்ளே நுழைந்த மலர்.. குழந்தையை வாங்க முயல..
இல்ல… வேணாம் இன்னைக்கு இவன் என் கூட தூங்கட்டும்.. என்று அருண்
கூறினான்..
நைட்டு அவ்வளவு சீக்கிரம் தூங்க மாட்டான் சார்… என்றாள் மலர்.
அவன் அழுதா… நான் பாத்துக்குறேன் என்றான் அருண்.
ப்ரோ… ஹிஸ் வெரி டேஞ்சரஸ் கைய்… முக்கியமான நேரத்துல அழுக
போறான் பாருங்க… என்று ராஜேஷ் கூற…
இந்த நேரத்துல நீ என்ன இங்க பண்ணிட்டு இருக்க… என்று ராஜேஷின்
கழுத்தில் தனது முழங்கையை போட்டு மடக்கி பிடித்து இழுத்துச்
சென்றான் அருண்.
தனது அறையில் தோளில் குழந்தை போட்டு தட்டிக் கொடுத்த படி அங்கும்
இங்கும் நடந்து கொண்டிருந்தான் அருண்.
பேபி இவன எதுக்கு இங்க தூக்கிட்டு வந்த…போ… போய் மய்ட் கிட்ட
விட்டுட்டு வா…
இனி இவன்… நம்ம கூட தான் தூங்குவான்… என்றான் அருண்.
நேரம் ஆக.. ஆக… ரதிக்கு எரிச்சலாகியது…
பே.. பி… ஸ்டில்…ஐ அம் வெயிட்டிங்… என்றாள் ரதி.
நீ தூங்கு ரதி நான் குழந்தைய தூங்க வச்சுட்டு வரேன் என்றான் அருண்.
இல்ல எனக்கு தூக்கம் வரல… நீ சீக்கிரம் வா… பேபி என்றாள்…
கிட்டத்தட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கண்ணயர்ந்தான்
பட்டுக்குட்டி.
பூ போல அவனை தொட்டிலில் கிடத்திவிட்டு… பூனை நடையிட்டு
கட்டிலில் வந்து அமர்ந்தான் அருண்.
அவனுக்காகவே கவர்ச்சியாய் சிங்கிள் பீஸ் சாட்டின்
உடையுடன் கட்டிலில் காத்துக் கொண்டு இருந்தாள் ரதி.
அருகில் அமர்ந்தவனின் முதுகை வருடியவள்… மெல்ல நகர்ந்து அவன்
அருகில் வந்து காதை கடித்தாள்.
அருணின் உடல் சிலிர்த்தது…
அதை உணர்ந்தவள் சிரித்துக் கொண்டே…
அவன் மார்பில் தன் முன் பற்களால் மென்மையாய் கடித்து
முத்தமொன்றை வைக்க… வேண்டாம் என அவனால் தடுக்க தான்
இயலுமோ?…
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகின்றன அருணும் ரதியும் சேர்ந்து..
அருணின் உடல் முறுக்கேறியது…
அவனும் சிறிது காலம் ரதியின் மேல் கோபத்தை காட்டலாம் என்று தான்
நினைக்கிறான்…
ஆனால் அவனின் உடல் வேறு மாதிரி அல்லவா பதில் அளித்தது…
ரதி ஒவ்வொரு அடியாய் முன்னேற.. அருணின் முகம் முழுவதும்
மோகத்தில் சிவந்தது..
அருணின் இதழ் முழுவதும் இப்பொழுது அவள் வசத்தில்… ஒருவரின்
முத்தமாய் தொடங்கியது பின் இருவரின் முத்தமாய் ஆகியது…
அருணின் கைகள் ஆட்டோமேட்டிக்காக ரதியின் இடையை சுற்றி
வளைத்து பிடித்தது…
இதற்கு மேலும் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று ரதியை
படுக்கையில் கிடத்தி மெல்ல முன்னேறினான் அருண்…
ரதியின் உடையை உருவி… பின்னிப்பிணைந்து… முக்குளிக்க போகும்
நேரம்… அவனின் ஆருயிர் மகன் “வீல்” என்று அழுகத் தொடங்கினான்..
வேகமாய் ரதியின் மேலிருந்து எழுந்தவன் கண்களில் இருந்து மோகம்
ஒரு சொட்டு மிச்சம் இல்லாமல் வடிந்தது.
வேகமாய் தனது ட்ராக் பேண்ட்டை அணிந்து கொண்டு…குழந்தையை
வந்து தூக்கியவன்… தோளில் போட்டு தட்டி கொடுக்க… அழுகை
அடங்கிய பாடில்லை… அவனும் 10 நிமிடங்கள் போராடி பார்த்தான்…
டயபரை மாற்றிப் பார்த்தான்… ஏசி அறையிலும் அவனுக்கு வியர்த்து
ஊற்றியது… இன்னும் குழந்தையின் அழுகை மட்டுப்படாமல் இருக்க
மலரிடம் சென்று கொடுத்து விடலாம் என்று கதவின் அருகே
சென்றவனுக்கு இந்த நேரம் எப்படி அவளின் அறை கதவை தட்டுவது
என்ற தயக்கம் வேறு… தன் மகனின் தேம்பலைப் பார்த்தவன்… வேகமாய்
தன் அறை கதவை திறக்க… அவன் அறை வாசலில் தான் கையை
பிசைந்து கொண்டு நின்று இருந்தாள் மலர்.
குழந்தையின் அழுகையை கேட்டு மேலே வந்தவள்… இந்த நேரம் எப்படி
அறைக்கதவை தட்டுவது என்று தயக்கத்தில் அங்கேயே நின்று இருந்தாள்.
குழந்தையை என்னன்னு பாரு ரொம்ப நேரமா அழுகிறான் என்று
அவளிடத்தில் நீட்ட… தலையை குனிந்தபடியே குழந்தையை வாங்கிக்
கொண்டு ஓடிவிட்டாள் மலர்.
அப்பாடா…. என்று நிம்மதி பெருமூச்சு விட…
நான் தான் அப்பவே சொன்னேனே ப்ரோ . அவன் ரொம்ப டேஞ்சரஸ்
கைய்… முக்கியமான நேரத்துல அழுவான் அப்படின்னு…. சொன்னத
கேட்டீங்களா?… என்று ஒரு குரல் கேட்க… குரல் வந்த திசையான
பக்கவாட்டு சுவரை அருண் எட்டிப் பார்க்க… தலையில் போர்வையால்
முக்காடு போட்டுக்கொண்டு நின்று இருந்தான் ராஜேஷ்.
டேய் நீ எப்படா வந்த… என்றான் அருண் கடுப்பாய்…
நான் வர்றது இருக்கட்டும் ப்ரோ…. நீங்க என்ன ப்ரோ இவ்ளோ கிளாமரா
என் ஆளு முன்னாடி வந்து நிக்கிறீங்க… அங்க பாருங்க உங்க நெஞ்சு
வெடிச்சு ரத்தம் வருது போய் என்னன்னு கண்ணாடில பாருங்க என்று
கூறிவிட்டு…
உங்க மகன் கத்தின கத்துக்கு ஊரே இந்நேரம் எந்திரிச்சு இருக்கும் நான்
எந்திரிச்சது பெரிய விஷயமே இல்லை என்று முனங்கி கொண்டே அவன்
அறையை நோக்கி நகர்ந்தான்…. ராஜேஷ்.
வேகமாய் உள்ளே சென்று கண்ணாடியில் தன்னை பார்க்க… ரதியின்
சிவப்பு நிற லிப்ஸ்டிக் அவனின் கழுத்து மற்றும் நெஞ்சு ஆகியவற்றில்
ஒட்டி இருந்தது..
அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன்… இப்படியேவாடா
அவ முன்னாடி போய் நிற்ப….
பின்னால் திரும்பி ரதியை பார்க்க அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு
சென்றிருந்தாள்.
***************
காலையில் மலரின் அறையில் குழந்தை அழுது கொண்டு இருந்தது
மலரை எங்கு தேடியும் காணவில்லை…
ராஜேஷ் குழந்தையை தூக்கி சமாதானம் செய்து கொண்டிருக்க
அப்பொழுதும் அவன் வாய் மூடாமல் கத்திக் கொண்டிருந்ததால் மேலே
இருந்து இறங்கி அருண் வந்து… குழந்தையை மடியில் வைத்து
சமாதானம் செய்து கொண்டு இருந்தான்…
அப்பொழுதுதான் அவசரமாக வீட்டின் உள்ளே நுழைந்தாள் மலர்…
ஈர தலையை விரித்துவிட்டு சிறிது முடிஎடுத்து கிளிப்புக்குள் அடக்கி
இருந்தாள்…
சிகப்பு நிற காட்டன் சேலை… காதில் சிறியதாய் ஜிமிக்கி… தலையில் ஒரு
கீற்று மல்லிகைப்பூ…
நெற்றியில் இருந்த சிறிய சிவப்பு பொட்டு… போதும் அவளது அழகைக்
கூட்ட… அதற்கு மேல் சிறு குங்குமம் அதற்கு மேல் சந்தனம் கொஞ்சம்
பெரியதாய் திருநீறு பூசி இருந்தாள்… அவள் முகமும் அவள் கையில்
இருந்த பொருள்களும் கூறியது அவள் கோவிலுக்கு சென்று
வந்திருக்கிறாள் என்று…
மலரை பார்த்ததும், எங்க போன இவன் வேற காலையிலேயே எழுந்து
அழுக ஆரம்பிச்சுட்டான்… என்றான் ராஜேஷ்..
இல்ல பட்டுகுட்டி பிறந்ததிலிருந்து கோவிலுக்கு
போகலையே, அதனாலதான் போய் அவனுக்கு அர்ச்சனை பண்ணிட்டு
வந்தேன்… சீக்கிரம் வந்துவிடலாம் என்று பார்த்தேன்… கோவில்ல
கொஞ்சம் கூட்டம் அதனால மாட்டிக்கிட்டேன்… சாரி… ரொம்ப நேரம்
அழுதுட்டானா…
விடிய காலைல தான் தூங்கினான். அதுக்குள்ள எழுந்துட்டானா… என்று
கூறிக்கொண்டே…
வேகமாய் அருணின் மடியில் படுத்திருந்த குழந்தையின் அருகில்
வந்தவள் பூஜை கூடையில் இருந்த திருநீரை எடுத்து குழந்தையின்
கண்ணை கை வைத்து மூடி நெற்றியில் பூசி விட்டு
ஊதிவிட்டாள்… அவளைப் பார்த்ததும் பொக்கை வாயை திறந்து
காண்பித்து சிரித்தது அந்த பட்டுக்குட்டி. அந்த சிரிப்புக்கு ஒரு
கண்சிமிட்டல் பரிசாக கிடைத்தது அவளிடம் இருந்து…
அவள் அருணின் அருகே நிற்கும் போது ஏதோ ஒரு தெய்வீக மணம்…
கூடவே அவளின் சுகந்த மணம்… அருண் மனம் லயித்து ஆழ்ந்து நுகர்ந்து
பார்த்தான். மனதினுள் ஒரு புத்துணர்ச்சி. சிறிது நேரம் இங்கேயே நில்
என்று சொல்லும் எண்ணம் பிறந்தது. ஆனால் சொல்ல முடியுமா என்ன?…
பின் அருகில் பேப்பர் படித்துக் கொண்டு இருந்த ராஜேஷின் பக்கம்
வந்தவள்… அவன் நெற்றியிலும் திருநீரை பூசி விட்டு பின் ஒரு கை கீழே
கொடுத்து ஊதிவிட்டாள்… கண்கள் மூடி அவளது அன்பினை உள்வாங்கிக்
கொண்டவன்…
என்ன… இன்னைக்கி…. மலர் வாசம் ஆள தூக்குது… என்று ராஜேஷ் கூற…
அடி வாங்க போற நீ… என்று மெல்லமாய் அவன் தோளில் தட்டினாள்
மலர்…
பிரஷ் பண்ணிட்டியா?..
ம்ம்… காபிக்காக வெயிட்டிங்…
சுமதி அம்மா கிட்ட சொல்லி இருந்தா போட்டு கொடுத்து
இருப்பாங்களே…
இல்ல…. காலைல உன் கையால குடிச்சா தான் சேட்டிஸ்ஃபைடா
இருக்கும்….
கூடையில் இருந்த பிரசாதத்தில் சிறிது எடுத்து அவன் வாயில்
திணித்தாள்…
பிரசாதத்தை முழுங்கிக் கொண்டே… அவள் கண்ணைப் பார்த்த படி…
கண்ணுக்கு மை போட்டியா? அழகா இருக்கு… என்று கூறிக் கொண்டே…
அவள் சேலை முந்தியின் நுனியை எடுத்து தன் வாயை துடைத்தான்.
இதையே எத்தனை தடவை தான் சொல்லுவ…
உன் கண்ண பார்க்கும்போதெல்லாம்…
அவனைச் செல்லமாய் முறைத்து பார்த்துவிட்டு, சமையலறையை
நோக்கி நடந்தாள்..
அம்மா தாயே!…. இரண்டு அடி கூட என்ன அடிச்சுரு… ஆனா உன்னோட
முட்ட கண்ண உருட்டி மட்டும் இப்படி பாக்காத… அப்புறம் இன்னைக்கு
நாள் முழுக்க இதே ஞாபகமா தான் இருக்கும் ஒரு வேலையும் ஓடாது…
என்றான் தன் பின்னந்தலையை அழகாய் கோதிக் கொண்டே இதழ்
நிறைய புன்னகையுடன்….
அருகில் இவர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்த ஒரு
ஜீவனை பற்றி இருவரும் கவலை கொள்ளவில்லை… சொல்லப்போனால்
அப்படி ஒருவன் அங்கு இருப்பதே அவர்களுக்கு ஞாபகம் இல்லை…
என்னடா… எனக்கு நடக்க வேண்டியது எல்லாம் உனக்கு நடந்துகிட்டு
இருக்கு…. ரொம்ப ஜாலியா இருக்க போல…. நாளைக்கு இருக்குடா
உனக்கு… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் அருண்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️