அசுரன் 49

அசுரன் 49

அடுத்த நாள் காலையில் வாசலில் கார் வந்து நிற்க்க… காபியை குடித்த 
படி திரும்பிப் பார்த்தான் ராஜேஷ்.. 

ருத்ரா தேவியின் ஒன்றுவிட்ட தங்கை வந்து இருந்தார்… அதாவது 
ராஜேஷின் அம்மா… 

அம்மாவை பார்த்த ராஜேஷிற்கு புறை ஏறியது… 

வேகமாக வாசலை நோக்கி வந்தவன்… அம்மா…. நீங்க என்ன இங்க வந்து 
இருக்கீங்க… 

என்னடா… வந்தவங்கள வாங்க என்று கேட்காமல் ஏன் வந்தீங்க? ன்னு 
கேக்குற… 

ஐயோ இல்லம்மா…. என்ன சொல்லாம கொள்ளாம வந்து இருக்கீங்க… 

எங்க அக்கா வீட்டுக்கு வர்றதுக்கு உன்கிட்ட நான் சொல்லிட்டு தான் 
வரணுமா?… 

நீங்க எப்ப வேணா இங்க வரலாம் சித்தி…. இது உங்களோட வீடு… என்று 
ஒரு குரல் கேட்டது ராஜேஷின் பின்னால்… 

பின்னால் திரும்பிப் பார்த்தான் ராஜேஷ்… 
ஆக்சுவலி ப்ரோ, நீ எனக்கு தேங்க் பண்ணனும்… என்று ஒரு விரலை 
நாடியில் வைத்து மேலே பார்த்தபடி அருண் சைகை செய்ய… 

ராஜேஷிற்கு புரிந்து விட்டது… 

நீ சித்தியை ரொம்ப மிஸ் பண்றனு எனக்கு தெரியும் ப்ரோ.. அதனால.. 
நான் தான் நேத்து நைட்டு  எங்க அம்மாவை எழுப்பி… அவங்க கிட்ட 
பேசி… சித்திய உடனடியா வர சொன்னோம்… என்றான் அருண். 

அவன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தான் ராஜேஷ்.. 

இப்ப பாரு நீயும் ஹாப்பி.. நானும் ஹாப்பி… 
எங்க… அண்ணனுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லு பார்ப்போம்..  என்று அவன் 
ஸ்டைலாய் நிற்க.. 

ரொம்ப தேங்க்ஸ் அண்ணா…  என்றான் பல்லை கடித்த படி கடுப்பாய்… 

அவன் சட்டை காலரை சரி செய்தபடியே எப்படியும் நீ இங்கிருந்து கிளம்ப 
மாட்ட..  அதனாலதான் உன்னை கவனிக்க ஒரு ஸ்பெஷல் ஆள் 
வந்துட்டாங்க… இனி நான் நிம்மதியா இருப்பேன் என்று ராஜேஷின் 
கன்னத்தை தட்டி விட்டு… ” மலரே நின்னை காணாதிருநாள்” என்று பாட்டு 
பாடிக்கொண்டே  உள்ளே சென்றான் அருண். 

அன்று இரவு அருண், அலுவலகம் முடிந்து வீடு திரும்ப நேரம் 
ஆகிவிட்டது… 

குழந்தையை பார்க்கலாம் என்று மலரின் அறை பக்கம் சென்று கதவை 
மெல்ல தட்டினான்… எந்த பதிலும் வராமல் இருக்கவே, அதன் 
கைப்பிடியை அழுத்த கதவு திறந்து கொண்டது..  சிறிது யோசனைக்கு 
பின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் மகனை காணும் 
ஆர்வத்தில்… 

மலரும் பட்டுக்குட்டியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்… மலர் 
ஒருக்களித்துப் படுத்து அவளது புறங்கையால் அவள் முகத்தை மூடி 
இருந்ததாள்… மற்றொரு கை அருகில் அவளை அணைத்து படுத்திருந்த 
குட்டியின் மேல் இருந்தது… தனது சேலையின் முந்தியை எடுத்து 
குழந்தைக்கு போர்த்தி விட்டு இருந்தாள்… அவளுள் ஒன்றி பால் குடிக்கும் 
ஞாபகத்தில் வாயை மட்டும் சுவைத்துக் கொண்டே உறங்கிக் கொண்டு 
இருந்தது பட்டுக்குட்டி… இருவருக்குள்ளும் அப்படி ஒரு பிணைப்பு… 
அதைப் பார்த்தவனுக்கு.. தானும் இவர்களுக்கு அருகில் 
படுத்துக்கொள்ளலாமா?.. என்ற எண்ணம் தலை தூக்கியது.. ஏக்க 
பெருமூச்சுடன்… சிறிது நேரம் குழந்தையை கண்ணிமைக்காமல் 
பார்த்தவன்… மலரை ஒரு கணம் பார்த்தான்.. அவளுடைய முகம் 
தெரியவில்லை… தூக்கத்துல கூட முகத்தை காட்ட மாட்டா போல… என்று 
மனதில் நினைத்துக் கொண்டு.. குழந்தையின் காலை எடுத்து மென் 
முத்தம் ஒன்று வைத்து விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான் 
அருண். 

மேலே அறைக்கு சென்றவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு… 
கட்டிலில் வந்து அமர… ரதி போனை பார்த்து கொண்டு இருந்தாள்… 

இனிமேல் ரித்து குட்டிய நம்ம கூட கொண்டுவந்து படுக்க 
வச்சுக்கலாமா?… என்று அருண் கேட்டான். 

வேணாம் அருண்… இட்ஸ் வெரி டிஸ்டர்பிங் டு மீ… என்றாள் ரதி. 

நம்ம ரெண்டு பேரும் மார்னிங் ஆபீஸ் போயிறோம்… நைட் மட்டும் தான் 
வீட்ல இருக்கோம்… அப்போ எப்ப தான் குழந்தையை கொஞ்சறது… நைட் 
மட்டுமாவது குழந்தையை நம்ம கூட வச்சுக்கலாம்… அழுதா ரெண்டு 
பேரும் சேர்ந்து பாத்துக்கலாம்… என்றான் அருண். 

தப்பு தப்பா யோசிக்கிற அருண்… காலைல இருந்து வேலைக்கு போயிட்டு 
டயர்டா வீட்டுக்கு வரோம்… வீட்ல நம்ம ரெண்டு பேரும் தனியா டைம் 
ஸ்பென்ட் பண்ண வேண்டாமா… நிம்மதியா தூங்க வேணாமா…. நைட்டு 
முழுக்க அவன் அழுதுகிட்டே இருந்தா… காலையில எப்படி போய் வேலை 
பார்க்கிறது… இட்ஸ் வெரி இரிடேடிங்… என்றாள் ரதி. 

ரதி…. அந்தப் பக்கம் நீ…. நடுவுல நம்மளோட ரித்து குட்டி…. இந்த பக்கம் 
நான்… அப்படி தூங்கணும்… இட்ஸ் மை ட்ரீம்… என்று தன் மனதில் உள்ள 
எண்ணத்தை கூற… 

என்ன நீ இவ்ளோ சில்லியா ஆசைப்படுற… பட் இட் நெவர் ஹப்பேன்… 
பட்டென்று சொல்லி அந்த பேச்சை நிறுத்தினாள் ரதி. 

************** 

இரு மாதத்திற்கு பின்… வீட்டில் அனைவரையும் அழைத்து குழந்தைக்கு 
பெயர் வைக்கும் விழா நடத்தி முடித்தார்கள்… 

ரித்துன்… ரித்துன்… ரித்துன்… என்று வாய் நிறைய புன்னகையுடன் 
மகனுக்கு பெயர் வைத்தான் அருண். 

குழந்தையை தூக்கி விதவிதமாய் போட்டோவிற்கு போஸ் கொடுத்தாள் 
ரதி. அவள் அதிக நேரம் குழந்தையை தூக்கி வைத்திருந்தது 
இப்பொழுதுதான்… குழந்தை குஷியில் ரதியின் முகத்தை கவ்வி எச்சில் 
செய்ய… பட்றென்று… ரித்து வின் வாயில் ஒரு அடி வைத்தாள் ரதி… 
எதுக்கு குழந்தையை அடிக்கிற…  என்று அருண் காட்டமாய் கேட்டான்… 
முகத்தை எச்சில் பண்றான்… மேக்கப் போய்டும்..  என்றாள் ரதி. 

அழுவதற்கு தயாராய் உதடை பித்துக்கிய குழந்தையை 
அடித்த இடத்தில் முத்தம் வைத்து, சமாதானம் செய்து அழுகையை 
நிறுத்தினான் அருண். 

ஏய் ரதி!…. உன்ன பாத்தா ஒரு குழந்தைக்கு அம்மானு சொல்ல முடியாது… 
சொல்லப்போனா இப்பதான் நீ ரொம்ப யெங்கா இருக்க… என்று ரதியின் 
வட்டார நண்பர்கள் புகழ்ந்து தள்ளினார்கள்… அவளும் அதற்காக தானே 
மெனக்கெட்டாள். 

வண்ண தோரணங்கள்… வண்ண விளக்குகளை பார்த்து ரித்து குட்டிக்கு 
ஒரே குஷி… தன் கையையும் காலையும் டக்கு டக்கு என்று ஆட்டி பொக்கை 
வாயை திறந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியது…. 

அனைவரின் கையிலும் இளவரசனை போல் வலம் வந்தான் ரித்து. 

இதோ பல புது ஆடைகளை போட்டு… பல போட்டோகளுக்கு சமத்து 
பையனாக பொக்கைவாயுடன் சிரித்து போஸ் குடுத்து விட்டு வந்து… 
இப்போழுது மலரின் மடியில் படுத்து கியா மியா… என்று உதடை பிதுக்கி 
அழுது கொண்டு இருக்கிறான் ரித்து… அவளும் சமாதானம் படுத்தி 
ஓய்ந்து விட்டாள். 

பட்டுக்குட்டி உனக்கு என்னடா பண்ணுது ஏண்டா இப்படி அழுகுற… என்று 
தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டே… போன் வரவும் எடுத்து 
காதில் வைத்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தாள். அவளைத் 
தொடர்ந்து ராஜேஷ் வந்தான். 

********** 
விழா முடிந்த கையுடன்… தனது அறைக்குள் நுழைந்தவள், அழுது 
கொண்டு படுத்திருந்தாள் அகல்யா… 

இந்த முறை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று விக்ரமிற்கு 
தெரியவில்லை… 

அகி… ஏன்ன்டி இப்படி அழுகிற… என்னால தாங்க முடியல டி 
புரிஞ்சுக்கோடி… 

என்னாலையும் தாங்க முடியல விக்கி, நீ புரிஞ்சுகிட்டியா… இன்னைக்கு 
எல்லாரும் என்னை எப்படி பார்த்தாங்கன்னு தெரியுமா… நான் வாழவே 
தகுதி இல்லாதவ மாதிரி பாக்குறாங்க…  நீ என்ன பண்ணுவியோ ஏது 
பண்ணுவியோ எனக்கு தெரியாது எனக்கு இப்ப குழந்தை வேணும்… 
என்று ஐஸ்கிரீம் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தை போல் அவள் அழுக… 
என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம் என்று தெரியாமல் புலம்ப 
தொடங்கி விட்டாள்… 

தன்னம்பிக்கையாய் தைரியமாய் இருப்பவளை, ஒரு பார்வையினால் 
உடைக்க முடியுமா இதோ உடைத்து வைத்திருக்கிறார்கள்…. வந்து 
போனவர்களை பொறுத்தவரை அன்று பேசுவதற்கு கிடைத்த 
சுவாரசியமான டாபிக் அகல்யா… ஆனால் அது அகல்யாவின் மனதை 
சுக்கு சுக்காக உடைப்பதை  அவர்கள் அறிய மாட்டார்கள்… 

அகல்யாவை பார்த்து விக்ரமே மனம் நொறுங்கி போனான்…  தொழில் 
சம்பந்தமாக சில நேரம் நிலையான முடிவெடுக்க முடியாமல் விக்ரம் 
தடுமாறும் போது தெள்ளத்தெளிவாய் முடிவெடுப்பவள் அகல்யா… 
ஆனால் இன்று அவள் உடைந்து அழுவதை தாங்க முடியாதவன்… ப்ளீஸ் 
டி… அழாதடி… ப்ளீஸ் டி… என்னால பாக்க முடியல… என்று கெஞ்ச அவன் 
கண் கலங்குவதை பார்த்தவள்..  அவனை தள்ளி விட்டு எழுந்து… என் 
பின்னாடி வராத….  என்று மிரட்டி விட்டு தோட்டத்திற்கு ஓடினாள்… 

தோட்டத்தில் மர பேஞ்சில் அமர்ந்து ஒரு பக்கமாய் முகத்தை மூடி 
தேம்பித் தேம்பி..  அழுது கொண்டு இருந்தாள் அகல்யா… 

அப்பொழுது அவளின் தோளின் மீது ஒரு கை பட்டது..  ப்ளீஸ் நான் யார் 
கூடயும் பேசுற மைண்ட் செட்ல இப்பொ இல்லை… அட்வைஸ் பண்றேன் 
வந்து கொல்லாதீங்க… லீவ் மீ அலோன் என்று அவள் கத்த…  அவள் 
கூறியதை மதிக்காமல் மீண்டும் அந்த கை அவள் தோளின் மீது பட்டது… 

யாரது என்று எரிச்சலுடன் திரும்பி பார்க்க… அகல்யாவின் அருகில் மலர 
அமர்ந்திருக்க அவள் தோளில் இருந்து ரித்து குட்டி தான் “ப்பு .. ப்பு… என்று 
வாயில் வண்டி ஓட்டிக்கொண்டே… அவன் அத்தையின் தோளை 
தட்டியது… பின் அவள் முகம் பார்க்க வாய் திறந்து சிரித்தது…. ரித்துவை 
வாங்கி முகம் எங்கும் முத்தமிட்டவள்.. தன் மடியில் போட்டு தட்டிக் 
கொடுக்க… 

மலர் எதுவும் பேசவில்லை, அதற்கு பதிலாக தன் தேன் குரலில் பாடத் 
தொடங்கினாள்…. 

அதுவே படைக்கும் அதுவே உடைக்கும் 
மனம் தான் ஒரு குழந்தையே 
அதுவாய் மலரும் அதுவாய் உதிரும் 
அது போல் இந்த கவலையே 

நாள் தோரும் ஏதோ மாறுதல் 
வானும் மண்ணும் வாழும் ஆறுதல் 
பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம் 

மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன 
அது ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன 

சுடரி சுடரி உடைந்து போகாதே 
உடனே வலிகள் மறைந்து போகாதே 
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே 
அதுவாய் மறக்கும் பின் தொடராதே 

இதுவும் கடந்து போகும் … 
போகும் ….கடந்து போகும் …. 

இந்த வரிகளை பாடி முடிக்க… குரலின் இனிமையோ, இல்லை தோட்டத்து 
காற்றோ..  எதன் பலன் என்று தெரியவில்லை. ஆனால்   மூன்று 
ஜீவன்களும் உறங்கி இருந்தது… அகல்யா மலரின் தோள் மீது உறங்கி 
இருக்க.. அகல்யாவின் மடிமீது ரித்துக்குட்டி உறங்கி இருக்க… இந்தப் 
பக்கம் மலரின் தோளில் தலை வைத்து, அவள் சேலையின் முந்தியை 
எடுத்து முகத்தை மூடியபடி ராஜேஷ் உறங்கி இருந்தான்.. 
போனை எடுத்து காதில் வைத்தவள் அண்ணா!… வாங்க தூங்கிட்டாங்க… 
என்று விக்ரமை அழைக்க… 

விக்ரம் வந்து மடியில் இருந்த குழந்தையை தூக்கி மலரிடம் 
கொடுத்துவிட்டு அகல்யாவை கையில் தூக்கிக் கொண்டான்… 
அகல்யாவின் நெற்றியில் மென் முத்தம் வைத்தவன் கண் கலங்கி ஒரு 
நிமிடம் அவள் முகத்தை பார்க்க… அண்ணா ப்ளீஸ் அழாதீங்க… நான் 
இப்பயும் சொல்றேன் என்னோட நாக்கு கருநாக்கு நான் சொன்னா 
பலிக்கும்… எங்க அண்ணா நிறைய குழந்தைங்க பெத்துக்க போறாரு… 
அந்த குழந்தைங்க எல்லாத்தையும் நான் தான் வளர்க்க போறேன் என்று 
அவளும் மனம்கலங்கி கூற… 
தேங்க்ஸ் டா.. என்று குரல் தழுதழுக்க கூறிவிட்டு, அகல்யாவின் 
உச்சந்தலையில் முத்தமிட்டபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் 
விக்ரம். 

விக்ரம் செல்லும் பாதையை கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் 
பின் மெதுவாக ராஜேஷின் தோளில் தட்டி… 

டேய் ராஜு… எந்திரி உள்ள போகலாம்… என்று எழுப்ப… 

பாதி தூக்கத்தில் எழுந்தவன்… ம்ம்… போலாம்… என்றான். 

மலர் உன்கிட்ட ஒன்னு சொல்லணும். 

ம்… சொல்லு… 

உன் குரல் அழகா இருக்கு… 

இதையே…. என்று மலர் ஏதோ கூற வர அவளது வாயை தன் கையால் 
மூடியவன்… 

சிரித்துக் கொண்டே  “உன் குரல கேட்கும் போதெல்லாம்”… என்று கூறி… 
இரண்டு கண்ணையும் சிமிட்டி.. நெற்றியில் முட்டிவிட்டு… வா உள்ள 
போலாம் பனி விழுகுது… என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே 
சென்றான் ராஜேஷ். 

தோட்டத்தில் நடந்த அனைத்தையும் அவன் அறையின் பால்கனியில் 
இருந்து பார்த்துக் கொண்டு இருந்தான் அருண். தூரத்தில் இருந்து 
பார்த்தவனுக்கு மலரும் ராஜேஷ்ம் ரொமான்ஸ் செய்வது போல் 
தோன்ற…  அவ்வளவு சீக்கிரம் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க 
மாட்டேன் டி… என்று மனதிற்குள் கருவிகொண்டான்  அருண். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top