அசுரன் 50

அசுரன் 50

அருண் காலையில் குளித்து முடித்து கிளம்பியவன் அலுவலகம் 
செல்லாமல், கைகளையும் கோர்த்து படி படுக்கையில் அமர்ந்து  ஆழ்ந்த 
யோசனையில் மூழ்கி இருந்தான்.. 

பின் ஒரு முடிவு எடுத்தவனாய் அறையை விட்டு வெளியே வந்து கீழே 
பார்க்க… வீட்டில் யாரும் கண்ணுக்கு தென்படவில்லை அனைவரும் 
அலுவலகம் சென்று விட்டனர் என்று நினைத்தான். 
மலர் மட்டும் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தோளில் போட்டு தட்டி 
கொடுத்துக்கொண்டு தூங்க வைத்து கொண்டு இருந்தாள்…. அவளையே 
ஒரு கணம் பார்த்துக் கொண்டிருந்தவன்… 

மலர்…   குழந்தையை தூக்கிட்டு என்னோட ரூம்ல கொண்டு வந்து படுக்க 
வை…  என்று கட்டளை இட்டு உள்ளே சென்றான். 

மலரும் சுற்றி முற்றும் பார்க்க வேலைக்காரர்கள் யாரும் கண்ணில் 
தென்படாததால் தானே குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே 
சென்றாள். 

அருண் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் எதையோ செய்து 
கொண்டிருக்க அவன் அருகில் குழந்தையை படுக்க வைக்கப் போக.. 
இல்ல… குழந்தையை என்கிட்ட கொடு… என்று கூறி அவள் கையில் 
இருந்து குழந்தையை அருண் வாங்கும் பொழுது அவனது கை அவளது 
கையின் மீது பட… சட்டென தீ சுட்டது போல் கையை விலக்கி..  கைப்பட்ட 
இடத்தின் அருவருப்பை நீக்க தனது உடம்பில் உடுத்திருந்த உடையில் 
தேய்த்தபடி அந்த இடத்தை விட்டு நகர போனாள் மலர்.  அதை கவனித்த 
அருண்… ஓ நான் தொட்டா உனக்கு அவ்வளவு அருவருப்பா இருக்கா… 
என்று நினைத்துக் கொண்டே 
பட்டென்று எழுந்து மலரின் கையை  பிடித்தான் அருண். 

அவன் செய்கையால் அதிர்ந்தவள்… அவனை நிமிர்ந்து பார்க்காமல் 
அவன் பிடித்த கையை பார்த்துக் கொண்டே… 
சார்… என்ன பண்றீங்க ப்ளீஸ் கைய விடுங்க… என்று கூறிக் கொண்டே 
கையை உருவ முயற்சித்தாள்… 

நான் சொல்றதை கேளு மலர்… குரலில் அவ்வளவு மென்மை… 

குரலின் வித்தியாசத்தை உணர்த்தவள்… 
சார் எது சொல்றதா இருந்தாலும் கைய விட்டுட்டு சொல்லுங்க… ப்ளீஸ்… 
என்று அவள் கையை இழுக்க அவன் பிடி இறுகியது… 

அவள் கையைப் பிடித்துக் கொண்டே குழந்தையை பெட்டில் படுக்க 
வைத்தவன்… அவளை நிமிர்ந்து பார்த்து.. 
மலர் நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்… எனக்கு உன்னோட பீலிங்க்ஸ் 
புரியுது… நான் உன்னை என் பொண்டாட்டியா ஏத்துக்குறேன்…  இனிமேல் 
உனக்கு என்ன தேவையோ அதை நானே தரேன்…  நம்ம சேர்ந்து 
வாழலாம்… குழந்தை பெத்துக்கலாம்… இனி அந்த ராஜேஷ் பின்னாடி நீ 
போகாத… 

அவன் பேச்சைக் கேட்டு ச்சீ… என முகத்தை சுளித்தால் மலர். 

அவள் கையை எடுத்து அவன் நெஞ்சில் அருகில் கொண்டு 
சென்றவன்…  இத்தனை நாளும் உன்ன தள்ளி வச்சிருந்தது தப்புதான்… 
இப்ப எனக்கு நீ வேணும்னு தோணுது… நீ, நான், ரித்து… ஒரு கம்ப்ளீட் 
லைஃப்… 

சார் இந்த மாதிரி அசிங்கமா பேசாதீங்க… உங்க மனைவி பார்த்தா தப்பா 
நினைப்பாங்க… தேவையில்லாத பிரச்சினை வரும்… தயவுசெஞ்சு 
என்னோட கைய விடுங்க… 

நீயும் என் பொண்டாட்டி தாண்டி… நான் கட்டின தாலி இன்னும் உன் 
கழுத்துல தானே இருக்கு…. எனக்கு இல்லாத உரிமையா? என்று அருண் 
அவளை நெருங்கி வந்து கேட்க… 

அவன் பேச்சைக் கேட்டு பொங்கி வந்த கோபத்தை… உஃப் என்று 
மூச்சுக்காத்தை வெளிவிட்டு அடக்கியவள்..  ஒரு வேலைக்காரிய 
பொண்டாட்டின்னு சொல்ற அளவுக்கு நீங்க தரம் தாழ்ந்து 
போயிட்டீங்களா சார்… உங்க தகுதிக்கு என்னோட கைய புடிக்கறதே 
அசிங்கம். அதுல நீங்க சேர்ந்து வாழ போறேன்னு வேற சொல்றீங்க அது 
கேட்க இன்னும் அசிங்கமா இருக்கு… என்று கூறி முகத்தை திருப்பி 
கொண்டாள்… 

இப்படி தேவையில்லாம பேசி உங்க வாழ்க்கைய நீங்களே 
கெடுத்துக்காதீங்க… சார்… ப்ளீஸ்… கைய.. விடுங்க… என்று அழுத்தம் 
திருத்தமாய் கூறினாள்… 

நீ அவன் கூட சேர்ந்து கொஞ்சிக்கிறத என்னால பாக்க முடியல மலர்.. 
என்றான் அருண். 

ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள்… அன்னைக்கு மூணு பேர் சேர்ந்து 
என்னை என்ன பண்ணி இருந்தாலும் நீங்க கேட்டு இருக்க மாட்டீங்க 
தானே… சொல்லப்போனா அவங்க உங்க கிட்ட கேட்டு இருந்தா கூட்டிட்டு 
போங்கடா அப்படின்னு சொல்லி இருப்பீங்க…. இப்ப மட்டும் எங்க இருந்து 
வருது இந்த கோபம்… 

ஒரு நிமிடம் கண்ணை மூடி பெருமூச்சு ஒன்றை விட்டவன்… தப்புதான்… 
நான் பண்ண எல்லாமே தப்புதான்… அன்னைக்கு நான் இருந்த மனநிலை 
வேற மலர். இப்போ என் மனசு மாறிடுச்சு… ஏன்னு தெரியல நீ எனக்கு 
மட்டும்தான் வேணும் அப்படின்னு தோணுது… உன்னோட இந்த அன்பு 
அக்கறையும் எனக்கும், ரித்துவுக்கும் எங்க வாழ்நாள் முழுக்க வேணும் 
அப்படின்னு தோணுது… உன் கண்ண பாக்க தோணுது.. உன் சிரிப்பை 
பார்க்க தோணுது… உன்னையும் ரித்துவையும் சேர்த்து அணைச்சு 
தூங்கணும்னு தோணுது… 

அவன் பேசுவதை கேட்க கேட்க அருவருப்பின் உச்சிக்கே சென்றாள் 
மலர்… 

சார் நான் உங்கள என்னோட முதலாளியா மட்டும் தான் பார்க்கிறேன்…. 
ஒரு வேலைக்காரி கிட்ட இப்படி பேசுறதே முதல்ல அசிங்கம்… உங்க மேல 
கொஞ்சம் மரியாதை வச்சிருக்கேன் தயவு செஞ்சு அதைக் 
கெடுத்துக்காதீங்க… 
அது கூட நீங்க சொல்லி கொடுத்தது தான்… நான் இந்த ஜென்மத்துல 
உங்க வீட்டு வேலைக்காரி மட்டும்தான்… இந்த வேலைக்காரிய 
பிடிக்காமதான் நீங்க இன்னொரு கல்யாணமே பண்ணிங்க 
மறந்துடாதீங்க… 

மலர் முன்ன நம்ம வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் 
மறந்துடுவோம்… புதுசா நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம்… என்று 
கூறிக்கொண்டே அவளை மேலும் நெருங்கி வர… 

பொறுமையை இழந்த மலர்… ராஜு.. எங்கடா இருக்க… ராஜு.. ராஜு.. 
என்று வாயிலை பார்த்து  கத்தினாள்… 

அவள் வாயிலிருந்து, அந்தப் பெயரை கேட்டதும்… அருணுக்கு… பற்றி 
கொண்டு வந்தது. 

அவள் கத்திய சத்தத்தை கேட்டு, எங்கிருந்து வந்தானோ புயல் வேகத்தில் 
அருண் அறையின்  உள்ளே நுழைந்தான் ராஜேஷ்… 

இருவருக்கும் இடையில் வந்து நின்றவன்… 
என்ன ப்ரோ இது… என் ஆளோட கைய புடிச்சிட்டு நிக்கிறீங்க… அதுவும் 
இவ்வளவு நெருக்கமா… கை எடுங்க ப்ரோ, ஃபர்ஸ்ட் நீங்க… தள்ளி 
நில்லுங்க… என்று கோவமாய்  அருண் நெஞ்சின் மேல் கையை வைக்க.. 

அவனை நக்கலாய் பார்த்த அருண்..  எது உன் ஆளா… அவ நா தாலி 
கட்டின பொண்டாட்டிடா.. 

என்ன ப்ரோ சொல்றீங்க நீங்க சொன்னா எதை வேணா நான் 
நம்புவேனா… என்று ராஜேஷ் கூற 

தாலியை எடுத்து வெளியே போடு மலர் என்றான் அருண். அவள் 
அமைதியாய் நிற்க.. 

வெளிய போடுடி… 
நீயா எடுத்து வெளில போடுறியா 
இல்ல நான் கைவிட்டு எடுத்து வெளில போடணுமா? என்றான் அருண் 
மிரட்டலாய்… 

உடனே தனது கழுத்தில் மறைத்து வைத்திருந்த தாலியை வெளியில் 
எடுத்துப் போட்டாள் மலர். 

சோ வாட்… இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்றீங்க.. முதல்ல அவ மேல 
இருந்து கையை எடுங்க.. என்று அவன் கோபப்பட… 

தாலிய பாத்து நீ ஷாக் ஆகலை என்றால் அப்போ உனக்கு முன்னாடியே 
இந்த விஷயம் தெரியும் அப்படித்தானே… என்று சரியாய் கணித்தான் 
அருண். 

சத்தமாக சிரித்த ராஜேஷ்… இவ உங்க பொண்டாட்டின்னு எனக்கு 
முன்னாடியே தெரியும் ப்ரோ..  ஆனா இன்னைக்கு தான் 
உங்களுக்கு  ஞாபகம் வந்திருக்கு… 
இத்தனை நாள் அவ கூடவே இருந்து இருக்கேன் கழுத்துல இருந்த 
தாலியை கூட பார்க்காம இருந்திருப்பனா?.. அவளைப் பற்றி உங்கள விட 
எனக்கு நல்லாவே தெரியும்… 

ஓ… அப்ப அண்ணன் பொண்டாட்டின்னு தெரிஞ்சுக்கிட்டு தான் அவ கூட 
சில்மிஷம் பண்ணிக்கிட்டு திரிஞ்சியா…. என்று கொச்சையாய்  அருண் 
கேட்க… 

அண்ணன் தான் அவளை பொண்டாட்டியாவே நடத்தலையே… நான் 
பழகினது என் அண்ணனோட வேலைக்காரி கிட்ட… 
எங்களோட ரிலேஷன்ஷிப் பத்தி உங்களுக்கு எக்ஸ்பிளைன் 
பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை ப்ரோ… நாங்க எவ்வளவு 
தூரம் கண்ணியமானவங்கன்னு எங்களுக்கு மட்டும் தெரிஞ்சா போதும்… 
அது எங்க ரெண்டு பேரோட பர்சனல்… அந்த விஷயத்துல நீங்க 
தலையிடாதீங்க… தள்ளியே நில்லுங்க… முதல்ல அவ கைய விடுங்க 
அவகிட்ட சாரி சொல்லி அனுப்பி வைங்க… 

இந்த வார்த்தையை கேட்ட அருணுக்கு கோபம் கொந்தளித்தது… 
அவ என் பொண்டாட்டி டா … அவ கைய புடிப்பேன்..  கட்டிப்பிடிப்பேன்… 
“என்ன” வேணா பண்ணுவேன்… என்ன என்பதை மட்டும் அழுத்தி 
கூறினான். இவளை இப்படியே விட்டு வச்சிருக்கனால தான் கண்ட நாயும் 
உள்ளே நுழைய பாக்குது….  முதல்ல நீ எங்க பெட்ரூமை விட்டு வெளியில 
போ… நான் அவகிட்ட தனியா பேசணும். என்றான் அருண் அழுத்தமாய்… 

உங்க பெட்ரூமா… இத சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்லையா 
ப்ரோ… இத்தனை நாள்… இந்த ரூமை கிளீன் பண்றதுக்கு தான அவள 
அலோவ் பண்ணி இருக்கீங்க… இந்த ரூம்ல அவளுக்கு எப்போ இருந்து 
உரிமை வந்தது… 

அத நானும் என் பொண்டாட்டியும் சேர்ந்து பேசி தீத்துக்குறோம்… வேற 
எந்த பரதேசியும் அதுக்குள்ள நுழைய வேண்டாம்… முதல்ல நீ இங்கிருந்து 
வெளியே போ… என்றான் அழுத்தமாய்….. 

அத நீங்க சொல்லாதீங்க.. மலர் சொல்லட்டும்..  என்ன மலர் நான் 
போகட்டுமா?.. என்று அருணை பார்த்து கொண்டே ராஜேஷ் அழுத்தமாய் 
கேட்க… 

ராஜேஷின் கையை இறுக்கிப் பிடித்தாள் மலர்… 

இருவரின் கையை பார்த்த அருணுக்கு ரத்தம் கொதித்து சூடாகி தலைக்கு 
ஏறியது… 

இப்ப அவ என் கைய புடிச்சதுக்கு  அர்த்தம் இங்க என்ன தனியா விட்டுட்டு 
போயிடாத தயவு செஞ்சு என்னை கூட்டிட்டு போயிரு அப்படின்னு 
அர்த்தம்… அவ என்னோட கைய புடிச்சத பாத்ததுக்கே உங்களுக்கு இப்படி 
சுர்ருன்னு  கோவம் வருதே… 

நீங்க இன்னொரு பொண்ணோட குடும்பம் நடத்தி, கொஞ்சி 
கொலாவுனதை  பார்க்கிறப்ப அவளுக்கு எப்படி இருந்திருக்கும்… 

ஏய்!.. அவ சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் தான்டா என்னோட 
கல்யாணமே நடந்துச்சு… இப்பயும் அவளை எப்படி என் கூட சேர்ந்து வாழ 
வைக்கணும்னு எனக்கு தெரியும்… நல்லா போயிட்டு இருந்த புருஷன் 
பொண்டாட்டி வாழ்க்கையில் குழப்பம் பண்றதே நீ தான்டா… நீ வரதுக்கு 
முன்னாடி வரைக்கும் பூனை மாதிரி இருந்தா… இப்ப ரொம்ப ஓவரா 
துள்ளுறா…  என்றான் அருண் மலரை பார்த்துக் கொண்டே.. 

அருணை பார்த்து கேலி புன்னகை சிந்தியவன்…. உங்க கல்யாணத்துக்கு 
அவ கிட்ட நீங்க பர்மிஷன் கேட்கல இன்ஃபர்மேஷன் சொன்னீங்க… 
இவ உங்க பொண்டாட்டினா அப்ப இத்தனை நாள் இந்த ரூம்ல 
இருந்தாங்களே அவங்களுக்கு பேர் என்ன ப்ரோ?.. நீங்க இவளோட கைய 
புடிச்சுகிட்டு நிக்கிறது உங்களோட பொண்டாட்டிக்கு தெரியுமா?… 
அப்படி தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமா?… என்று கேட்டான் 
ராஜேஷ்… 

அத பத்தி நீ கவலைப்படாத… 
அவளும் என் பொண்டாட்டி தான், இவளும் என் பொண்டாட்டி 
தான்..  ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி,  ரெண்டு பொண்டாட்டி 10 
பிள்ளைகளோட வாழ்வேன்… எனக்கு அந்த திறமை இருக்கு…  அதுல 
உனக்கு என்னடா பிரச்சனை… 

ஓகே… வாவ்…வாவ்….சூப்பர்… கைத்தட்டலுடன்… வாய் 
நிறைய  பொண்டாட்டி… பொண்டாட்டினு சொல்றீங்களே அருண்… கேக்க 
நல்லா இருக்கு…  இதுல யாரு உன்னோட முதல் 
பொண்டாட்டினு  சொல்றீங்களா, என்று அருணின் பின்னால் ஒரு குரல் 
கேட்டது… 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top