ராவணா 2

இருட்டறையில், ஆடவன் ஒருவனின் அவனது குருதி வழியும் கரங்கள் இரண்டும், ஒன்றாக இணைத்து உயிர்த்தியபடி மேலே இருந்த இரும்பு ராடில் பிணைக்க பட்டு, உடலில் பாதி உயிர் மட்டுமே மீதி இருக்க, இமைகளை கூட பிரித்து  பார்க்க வலுவில்லாது தலை தொங்க கிடந்தான் மத்யுவ். 

நேற்று காலை வரை சென்னை சிட்டி காங்ஸ்டர்களில் முதன்மையானவனாக இருந்தவன் இன்று இங்கு பிணைக்கைதியாக, போட்டிருந்த உள்ளாடையை தவிர வேற எதுவும் தேகத்தில் இல்லாது,  உடலில் காய்ந்த ரத்த கறைகள் பாதி, வழியும் செங்குருதி மீதி என்று குத்துயிரும் கொலையுயிருமாக கிடக்கிறான். நொடிகள் நொடிகள் கடக்க கடக்க உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையை மொத்தமாக இழந்திருந்தவன், தன் குடும்பத்தை எண்ணி பார்த்தபடி கண்களை மூடி கொண்டு கிடந்தான்.

அப்பொழுது அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட, கருப்பு நிற ஜாக்கெட்டில் ஆறடி உயரத்தில் மலை போன்ற முரட்டு தோற்றத்தில் வரிசையாக ஒரு மூன்று பேர் அவன் அருகில் வந்தனர்.

“சரக்கு எங்க?” என்று அந்த மூவரில் ஒருவன் மத்யூவிடம் கேட்க, அந்த நிலைமையிலும் மத்யூவ்,

“தெரியாது” என தன் தலையை அசைக்க, 

“டேய் செத்துருவ டா உண்மைய சொல்லு” என மற்றொருவன் அவனது கன்னத்தை வலிக்க பிடித்து கொண்டு கேட்டான்.

ஆனால் அப்பொழுதும் அவன் உண்மையை சொல்லாமல் இருக்கவும், பொறுமையை இழந்த மூன்றாவது முரடன் மத்யூவின் மொத்த முடியையும் கொத்தாக பிடித்திழுத்து அவனது முகத்தில் தன் விரலைகளை மடித்து குத்த, வலியில் அலறியவனின் நாசியில் இருந்து ரத்தம் வடிந்தது. 

“சொல்ல போறியா? இல்லை அடிவாங்கிய சாக போறியா டா?” மீண்டும் அவன் மத்யூவின் தலை முடியை வலிக்க பற்றிக்கொண்டு கேட்கவும், “அவனை விடு” என தன் அலைபேசியை அணைத்தபடி கூரிய முதலாமவன்,

“பாய் வாராரு, அதுவரையாவது அவன் உயிரோட இருக்கட்டும்” என்று கூறி இகழ்ச்சியாக சிரிக்க, அவனை தொடர்ந்து மற்ற இருவரும் சிரித்தனர்.

அந்நேரம், காதுக்கு நெருக்கமாக கேட்ட உறுதி நிறைந்த, வேகம் கூடிய அழுத்தமான காலடியின் சத்தம் அங்கே சூழ்ந்திருந்த அமைதியை கிழித்தெறிய, அறையின் கதவு திறக்கப்பட உள்ளே வந்தான், அந்திரன் ராவண ஈஷ்வரன்.

நிஜ உலக தொழில் வட்டாரத்துக்கு அந்திரன். நிழல் உலகத்திற்கு ராவண ஈஷ்வரன்.

இவன் அதிசயித்து பார்க்கும் அளவிற்கு அசாத்திய உயரம் இல்லை தான், ஆனால் இவனது கூரிய விழிகளை சந்தித்து பேசவேண்டும் என்றால் இவனை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும். 

அடர் நீல நிற ஜீன், கருப்பு நிற வி நெக் மடக்கிவிடப்பட்ட முழுக்கை டி ஷர்ட். அதில் அடங்காமல் முறுக்கி திமிறி நிற்கும் அவனது புஜங்கள். ஜெல் தடவி அடக்கப்பட்ட சிகை, சிவந்த நிறம், ஆரோக்கியமான  உடற்கட்டு. ரோமங்கள் அற்ற இறுக்கமான முகம். அதில் அழுத்தமான தேவைக்கு சிரிக்கும் சிவந்த இதழ்கள்.  

ராவணன் பணத்திற்காக  கடத்தல், பொருள் மீட்டல் மற்றும் கொலைகள்  செய்யும் காண்ட்ராக்ட் கில்லர் கம் வளர்ந்து வரும் லோக்கல் காங்ஸ்டர். 

பொதுவாக ராவணனுக்கும் அவனால் கொலையோ இல்லை கடத்தலோ செய்யப்படும் எதிராளிகளுக்கும் நடுவே  எந்த தனிப்பட்ட பகையும் இருக்காது.

வரத பெருமாள் என்னும் சென்னை சிட்டியின் புகழ் பெற்ற பைனான்ஷியரும் நிழல் உலக தாதாவுமான அவர் தனக்கு  தரும் அசைன்மெண்டுக்கு கூலியை முடிவு செய்துவிட்டு, வேலையை சரியாக முடிப்பவன் அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பான். ராவணனின் டீலிங் எல்லாம் வரதனுடன் மட்டும் தான்.

பல தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பினாமியாக இருக்கும் வரத பெருமாளின் முக்கிய வேலையே ராவணனை போன்ற திறமையானவர்களை தன்னோடு வைத்து கொண்டு, அவர்களை வைத்து அந்த அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வேண்டிய சட்டவிரோதமான காரியங்களை கனகச்சிதமாக அவர்கள் பெயர் வேலையே வராது செய்து கொடுப்பது தான்.

வரத பெருமாளின் கீழ் ராவணனை போல பலர் இயங்குகின்றனர். ஆனால் ராவணன் அளவுக்கு திறமைசாலி இது வரை யாரும் இருந்ததில்லை. அந்த அளவுக்கு திறமையானவன். ஒருவேலையை ஏற்றுக்கொண்டால் என்ன ஆனாலும் சொன்ன தேதியில் முடித்து கொடுப்பான். அதிகம் பேச மாட்டான். எதற்கும் பயப்பட மாட்டான். தேவையில்லாமல் எதிலும் தலையிட மாட்டான். என்ன மற்றவர்களை விட அதிக பணம் கேட்பான், ஆனால் வேலை எவ்வளவு ரிஸ்க்காக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான். 

அசராமல் வேலையை முடித்து, அலட்டிக்கொள்ளாமல் சம்பாதிக்கும் பணத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாரி வழங்கவும் தயங்கமாட்டான். 

அவனோடு சேர்த்து அவனுடன் இருப்பது மொத்தம் பத்து பேர். ராவணனின் வாழ்க்கை பயணத்தில் எதோ ஒரு தருணத்தில் அவனுடன் இணைந்தவர்கள். இலங்கை வேந்தனுக்கு பத்து தலை உண்டாமே  கேள்விப்பட்டிருக்கிறேன், அது போல தான் இவர்களும் இவனுக்கு. ‘பையா பையா’ என்று அவனுக்காக உயிரையே விடுவார்கள். ஆனால் ராவணனை பொறுத்த வரை அவர்கள் அவனுடன் இருப்பவர்கள் அவ்வளவு தான், அவர்கள் யாருடனும் நெருக்கமாகவெல்லாம் உறவாட மாட்டான். ஆனால் அதே நேரம் அவர்களுக்கு எந்த குறையும் வைத்தது இல்லை. 

அதே போல், ‘எட்டி நில்’ என எச்சரிக்கும் அவனது முகத்தில் இருக்கும் இறுக்கம் கண்டு அவர்களும் அவன் மீது தாங்கள் கொண்ட பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த மாட்டார்கள்.

அவனின் பொழுது போக்கு, தொழில் அனைத்துமே அவன் பார்க்கும் நிழல் உலக வேலை மற்றும் அவன் வைத்திருக்கும் கார் ஷோரூமும் மட்டும் தான். அதை தாண்டி மது, மாது, சூது என வேறு எது மீதும் அவனுக்கு நாட்டம் கிடையாது. அவனை கட்டுப்படுத்தும் எதுவும் அவனுக்கு பிடிக்காது, அவன் உயிரை பணயம் வைத்து சம்பாதிக்கிறானே பணம்! அதையும் சேர்த்து தான். திகட்ட திகட்ட சம்பாதிப்பான்  ஆனால் யோசிக்காமல் செலவும் செய்வான். 

உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் கட்டுப்படாமல் வாழும் தனி மனிதன் தான் அந்திரன் ராவண ஈஷ்வரன்!!!

 

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top