அசுரன் 51
பின்னால் கேட்ட குரலின் சொந்தக்காரியை அறிந்த அருண் ஒரு நிமிடம்
கண்ணை மூடி திறந்து. இப்பொழுதுதான் மலரின் கையை விட்டான்.
அதைப் பார்த்த ராஜேஷ்… ஒரு மென் சிரிப்புடன்… அந்த பயம்
இருக்கணும் என்று மனதில் நினைத்துக் கொண்டான்..
தாலி கட்டுனதுனால அவ மொத பொண்டாட்டியா? இல்ல சட்டப்படி
ரிஜிஸ்டர் பண்ண நான் உன்னோட முதல் பொண்டாட்டியா? என்று
நக்கலாய் கேட்டுக் கொண்டே நடந்து வந்து அருணின் முன்னே கைகட்டி
நின்றாள் ரதி.
என்ன சொல்லப் போகிறாய்? என்று புருவத்தை உயர்த்தி கேட்டாள்
நக்கலாய்….
ரதி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு… நீதான் என்னுடைய
அபிஷியல் பொண்டாட்டி… ஆனா அவளும் என்னோட பொண்டாட்டியா
இந்த வீட்ல ஒரு ரூம்ல இருந்துட்டு போகட்டும்… இதனால உனக்கு என்ன
பிரச்சனை… என்று கேட்க…
எனக்கு ஓகே அருண்… அவ இங்கயே இருந்துட்டு போட்டும் உன்னோட
பொண்டாட்டியா…. (பேச்சில் ஒரு சிறு இடைவெளி விட…)
ஒரு நிமிடம் அருணே அதிர்ந்து விட்டான் இதைக் கேட்டு… என்ன உடனே
ஒத்துக்கிட்டா…
ம்…. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… ஆனால் நானும் என்னுடைய
எக்ஸ் அ கூட்டிகிட்டு வந்து இந்த பக்கம் ரூம்ல தங்க வச்சுக்கிறேன்….
அதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே…
மே… பி…என்னைக்காவது நீ அவளோட ரூம்ல தங்கற மாதிரி இருந்தா…
அன்னைக்கு மட்டும் என்னுடைய எக்ஸ நம்ம ரூமுக்கு கூப்பிட்டு வந்து
நான் தங்க வச்சுக்கிறேன்… என்ன.. உனக்கு இதுல எந்த பிரச்சினையும்
இல்லையே… என்றாள் ரதி அருணை சட்டமாய் பார்த்துக் கொண்டே…
அருணுக்கு தூக்கி வாரி போட்டது…
அசிங்கமா பேசாத ரதி…
அசிங்கமா இருக்கா… நீ சொல்றதும் எனக்கு அசிங்கமா தான் இருக்கு…..
என்றாள் ரதி.
(அப்படி போடு… ஏன்டா இப்படி ஒரு பொண்டாட்டிய வச்சுக்கிட்டு…
தைரியமா நடு வீட்டுல என் மலரோட கைய புடிச்சிட்டு நிக்கிற நீ..
ராஜேஷின் மைண்ட் வாய்ஸ்)
எப்போ நீ அவளை உன் வாயால பொண்டாட்டின்னு சொன்னியோ
அதுக்கப்புறம் இனிமேல் அவ இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்கக்
கூடாது… உடனே அவளை அவங்க வீட்டுக்கு அனுப்பி வை…
எப்படி அவளை அனுப்ப முடியும் ரித்துவ அவ தான் பாத்துட்டு இருக்கா
அவ போய்ட்டா குழந்தையை யார் பார்த்துக்குறது என்றான் அருண்.
அவனை நக்கலாய் பார்த்த ரதி… நீ பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டது
போதும் அருண்… குழந்தைய பாத்துக்க கேர் டேக்கர் தானே வேணும்..
உடனே இரண்டு பேர நான் அப்பாயிண்ட் பண்றேன்… இப்ப இவ இந்த
வீட்டை விட்டு போகணும்… ரைட் நவ்… என்றாள் அழுத்தமாய்…
அப்படியெல்லாம் உன் இஷ்டத்திற்கு உடனே அனுப்ப முடியாது என்று
அருணும்… இங்க இருந்து போறது என்னோட கையில இல்ல… என்று
மலரும்… எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க…
ருத்ராவிற்கு ஃபோன் செய்து அறைக்கு அழைத்தாள் ரதி…
அருணின் அறைக்கு வந்த ருத்ராவிடம்…
ஆன்ட்டி இனிமேல் ஒரு நிமிஷம் இவ இந்த வீட்ல இருந்தாலும்… உங்க
பேமிலி மேல நான் என்னை ஏமாத்தி கல்யாணம்
பண்ணிட்டீங்கன்னு கேஸ் பைல் பண்ணுவேன்… அது மட்டும் இல்லாம…
இப்ப புதுசா ஸ்டார்ட் பண்ண பிசினஸ்ல என்னோட ஷேர் 50%… அத
டோட்டலா க்ளோஸ் பண்ணிடுவேன்… அதோட லாஸ் என்ன ஆகும்னு
நீங்களே கால்குலேட் பண்ணிக்கோங்க… இந்த வேலைக்காரிக்காக நீங்க
இதெல்லாம் இழக்க ரெடியா இருந்தா எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல…
இப்பவே நான் இந்த வீட்டை விட்டு போயிடறேன்… அண்ட் ஒன் மோர்
திங்… போகும்போது என்னோட குழந்தையையும் சேர்த்து கூட்டிட்டு தான்
போவேன்… இந்த வார்த்தையை அருணை பார்த்து மிரட்டும் தோணியில்
கூறினாள் ரதி.
அவள் கூறியதை கேட்டு அதிர்ந்த அருணுக்கு ரதியின் உண்மை முகம்
தெரியுமே அவள் நினைத்ததை முடிப்பவள் என்று.
ருத்ரா… மலரை பார்க்க அவள் தலையை குனிந்த படி நின்று இருந்தாள்…
அவளின் கையைப் பிடித்து தனது அறைக்கு இழுத்துச் சென்றவர்…
இங்க பாரு மலர்… ஏதோ ஒரு வருஷம் என் பையனுக்கு உயிருக்கு
ஆபத்துன்னு சொல்லி தான் உன்னையே கல்யாணம் பண்ணி
வச்சோம்… இப்ப அவனுக்கு அந்த கண்டம் முடிஞ்சிருச்சு இனிமேல் நீ
இங்க இருக்கணும்னு அவசியம் இல்ல…. ஏதோ வீட்ல கொஞ்சம் உதவியா
இருந்தியே அப்படின்னு சொல்லி தான் நானே இருக்க விட்டேன்.. இப்ப
உன்னால என் பையனுக்கு மருமகளுக்கும் பிரச்சனை
வருது… இனிமேலும் நீ இங்க இருக்கிறது சரியா வராது… அதனால
உன்னோட டாக்குமெண்ட் எல்லாத்தையும் உன்னிடம் கொடுத்துடறேன்…
உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படின்னு
கையெழுத்து போட்டு கொடுத்துட்டு எந்தப் பிரச்சனையும் பண்ணாம நீ
கிளம்பிரு… என்று அவர் கூற…
சரி என தலையசைத்தாள் மலர்…
தனக்கு சொந்தமான டாக்குமெண்ட்களை சரி பார்த்து ருத்ராவிடமிருந்து
பெற்றுக் கொண்டு, அவர் கையெழுத்து இட சொன்ன பத்திரத்தை நன்கு
படித்து பார்த்து பின் கையெழுத்து விட்டுக் கொடுத்துவிட்டு,
சுதாவிடம் விடைபெற்று,, “உன்னோட குணத்துக்கு எங்க இருந்தாலும்
நல்லா இருப்ப மலர்” என்று கூறி விடை கொடுத்தார் சுதா. தனது
பொருட்களை எடுத்து க்கொண்டு வெளியேற தயாரானாள் மலர்.
அருண் இப்பொழுது ஏதாவது செய்து பிரச்சினையை பெரிதாக்க
விரும்பவில்லை… முதலில் மலர் செல்லட்டும் பின் சமாதானப்படுத்திக்
அழைத்து கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான்.
தன் பையுடன் வெளியில் கிளம்ப சென்ற மலரை… தடுத்து நிறுத்திய
ரதி… அருணின் காரை எடுத்து வர சொன்னாள்… பின் ருத்ரவையும்
காரில் ஏற்றுக்கொண்டு நால்வரும் காரில் கிளம்பினர்…
எங்க போகணும் ரதி… என்று அருண் கேட்க…
சொல்றேன் அருண் ஸ்ட்ரெயிட்டா போங்க… என்று கட்டளையிட்டு
அமைதியாக இருக்க…
நம்மள எங்க கூட்டிட்டு போறாங்க என்று மனதிற்குள்ளேயே யோசித்துக்
கொண்டு இருந்தாள் மலர்…
சிறிது நேரத்தில்… ஊருக்கு ஒதுக்குப்புறமாய் ஒரு ஆள் அரவமற்ற
கோவிலின் முன் காரை நிறுத்த சொன்னாள் ரதி.
பின் நால்வரும் உள்ளே செல்ல… சாமி சன்னதி முன் மலரை நிறுத்திய
ரதி… நீங்க கட்டின தாலிய நீங்களே கழட்டி எடுத்துடுங்க அருண் என்று
கூறினாள்.. இனிமேல் அந்த தாலி அவளுக்கும் தேவையில்லை
உங்களுக்கும் தேவையில்லை…
உண்மையில் இதைக் கேட்ட அதிர்ந்த அருணுக்கு மனது பிசைந்தது.
அன்று தாலி கட்டிய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிட்டுப் பார்த்தான்
அருண்… அவள் மாறவில்லை அப்படியே தான் இருந்தாள்…. ஆனால்
அவன் மாறி இருந்தான்.
இந்த தாலியை மட்டும் கழட்டி விட்டால் அவளுக்கும் அவனுக்குமான
உறவு முறிகிறது.. ஏதோ தனக்காக படைக்கப்பட்ட பொருள் ஒன்று தன்
கையை விட்டு போவது போல் ஒரு உணர்வு…
அருண் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துகிட்டே இருக்க
போறீங்க… சீக்கிரம் கழட்டுங்க… என்று ஆணையிட…
அவனது கை மெல்ல நடுங்கியது… மலரின் கழுத்தருகில் கையை
கொண்டு சென்றான்.
அவன் கை தன்னை நோக்கி வருவதை பார்த்து கண்ணை மூடி இருந்த
மலர்… தாலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு… ப்ளீஸ் ஒரு நிமிஷம்
நிறுத்துங்க… என்றாள் சத்தமாக.
அப்பொழுதுதான் அவனுக்கு சிறு நிம்மதி பிறந்தது.. தாலியை கொடுக்க
மாட்டாள் என்று…
கண்ணை திறந்து கடவுளை ஒரு நிமிடம் வேண்டியவள்… மீண்டும்
தாலியில் கை வைத்து… அதை ஒரு இழு இழுக்க… ஒரு வருடத்திற்கு முன்
அவன் கட்டிய தாலிகயிறு நொந்து போய் இருந்ததால்… பட்டென்று
அறுந்து அவள் கையுடன் வந்தது…
உண்மையில் அருணின் நெஞ்சத்தில் ஒரு கூர்மையான ஊசி குத்தியது
போல் வலி கண்டான். உண்மையில் அவனாய் கழட்டி இருந்தால் கூட
இவ்வளவு வலி இருக்காது… என்னை வேண்டாம் என்று உதறிவிட்டாலே…
என்ற வலி…
அறுந்த தாலியை அருண் கையில் கொடுக்க வந்தவள் பின் அருகில்
இருந்த ரதியின் கையை பிடித்து அதில் கொடுத்து விட்டு…
தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங் மேம் என்றாள் ருத்ராவை பார்த்து…
மனம் உடைந்து போனவன்… பின்
மலரை நோக்கி திரும்பி என்கிட்ட ஏதாவது கடைசியா சொல்லணும்னு
நினைக்கிறியா மலர்… என்று கேட்டான் கண்களில் தவிப்புடன்…
ஏதோ ஒன்று… “உன்னை விட்டு போக விருப்பமில்லை”, “என்னை
அனுப்பிடாதீங்க”, “கடைசி வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்”…
இப்படி ஏதாவது சொல்லேன்… என்று அவன் மனம் அடித்துக் கொண்டது..
உரிமையாய் ஒரு அடி அடித்தால் கூட பெற்றுக் கொள்ளும் மனநிலையில்
தான் இப்போது இருந்தான்.
ஒரு கணம் கண்ணை இறுக மூடி திறந்தவள்…
இறுதியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் மலர்.. அந்தக் கண்களில்
அப்படி ஒரு தீட்சன்யம்… இனிமேல் உன்னை நிமிர்ந்து பார்ப்பதில்
எனக்கு எந்த சங்கடமும் இல்லை என்ற ஒரு தெளிவு.
ரித்துகுட்டிய நல்லா பாத்துக்கோங்க சார்… என்று அவன் கண்ணை
பார்த்து கூறி முடித்தாள் மலர்.
இதோ அவனுக்கு அவள் சொந்தம் இல்லாத போது இறுதியாக பார்த்து
விட்டான் அவளது கண்ணை… பார்த்தவரை உள்ளே இழுக்கும் தேன்
கிண்ணம் தான்.. அந்தக் கண்ணை விட்டு அவனால் விழியை அகற்ற
முடியவில்லை… இத்தனை நாள் எப்படி பார்க்காமல் போனேன்… என்று
மனதிற்குள் நொந்து கொண்டான்..
ஓகே… வாங்க நம்ம கிளம்பலாம் என்று அருணையும் ருத்ராவையும்
அழைத்துக் கொண்டு ரதி அங்கிருந்து கிளம்பினாள்…
மலரை திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான் அருண்…
அன்று இதேபோன்று கோவிலில் அவளை அழைத்துச் செல்ல மனம்
வரவில்லை… இன்று விட்டு செல்ல மனம் வரவில்லை…
அவர்கள் சென்ற பின்…
என்ன செய்வது என்று தெரியாமல் சாமி சன்னதியில் அமைதியாய்
அமர்ந்திருந்தாள் மலர்.
மனதில் 1008 குழப்பங்கள் சூழ்ந்தது… போன தடவை கணவன் இல்லாமல்
தாலியுடன் சென்றதற்கே… உறவுக்காரர்களுக்கு மத்தியில் பதில் சொல்ல
முடியவில்லை.. இப்பொழுது தாலியும் இல்லாமல் எப்படி செல்வது…
இத்தனை நாள் காரணம் இல்லாமல் சுமந்து கொண்டு இருந்த தாலியை
கழட்டி கொடுத்தது ஒருவகையில் அவளுக்கு நிம்மதி தான்
என்றாலும்… இப்பொழுது கேட்பவருக்கு என்ன பதில் கூறுவது என்ற
குழப்பத்துடனே தனது தாய்க்கு அழைத்தாள்…
அம்மா… நான் சொல்றத கொஞ்சம் நிதானமா பொறுமையா கேளுங்க…
என்று ஆரம்பித்து… தன் மண வாழ்க்கையில் நடந்தவற்றை கூறி
முடித்தாள் மலர்.
அதிர்ச்சியில் வாயடைத்துப் போன வாசுகி… நான் அப்பவே சொன்னேன்
கேட்டியா ஒரு குழந்தையை மட்டும் பெத்துக்கோடின்னு… இப்போ உனக்கு
முன்னாடி ஒருத்தி குழந்தையை பெத்து உன் புருஷனை சொந்தம்
கொண்டாடிட்டு போயிட்டா… ஏண்டி இப்படி பிழைக்க தெரியாம இருக்க…
மச்… என்ற சலிப்பு மட்டுமே அவளிடம்…
எல்லாமே முடிஞ்ச பின்னாடி இறுதி கட்டத்துல வந்து சொல்ற இவ்வளவு
நடந்து இருக்கு என்கிட்ட எதுவுமே சொல்லல… உன்னோட புருஷன்
கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே சொல்லி இருந்தா ஏதாவது
பிரச்சனை பண்ணி தடுத்து இருக்கலாமே… இப்பயும் ஒன்னும் கெட்டுப்
போகல…
நீ அங்கேயே இரு மலரு நான் நம்ம சொந்த பந்தத்தை கூட்டிட்டு கிளம்பி
வரேன்… உன்னோட மாமனார் கிட்ட நியாயம் கேப்போம்.. உன் புருஷன்
கூட உன்னை சேர்த்து வைக்கிறேன்… என்று அவர் அழுது கொண்டே
கூற…
அம்மா, சக்கரவர்த்தி சார் இப்ப ஊர்ல இல்ல… அவர் இருந்தாலும்
அவரால் ஒன்னும் பண்ண முடியாது… எனக்கும் அருண் கூட வாழ
விருப்பம் இல்லம்மா…
என்னடி மலரு சொல்ற… இந்த வயசுல இப்படி புருஷனை விட்டுட்டு வந்து
என்னடி பண்ண போற… ஊர்க்காரங்களுக்கு நான் என்னடி பதில்
சொல்லுவேன்… பொம்பள பார்த்து கட்டி வைத்து அனுப்புனது… இப்படி
தரம் கெட்டு போச்சு அப்படின்னு சொல்லுவாங்களே… என்று அவர் புலம்ப
ஆரம்பிக்க..
நமக்கு ஆறுதல் சொல்லுவாங்கன்னு பார்த்தா நம்ம தான் ஆறுதல்
சொல்லனும் போல… என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவள்.
அம்மா நான் இப்போதைக்கு நம்ம ஊருக்கு வரல.. நீயும் யார்கிட்டயும் இத
பத்தி சொல்லாத.. கொஞ்ச நாள் இங்கயே தங்கி நான் வேலை
பார்க்கிறேன்… இப்ப நான் இருக்கிற மனநிலையில் ஊருக்கு வந்தா
எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்… கொஞ்ச நாள்ல என்ன நான் சரி
பண்ணிக்கிட்டு தைரியமா ஊருக்கு வரேன்.. என்ன பத்தி கவலைப்
படாதீங்க… என்ன பாத்துக்க எனக்கு தெரியும். என்று கூறி போனை
வைத்தவள்…
என்ன செய்வது, எங்கு செல்வது,… மீதம் இருக்கும் வாழ்க்கையை
எவ்வாறு எதிர்கொள்வது… என்ற யோசனையில் அங்கிருந்த தூணில்
சாய்ந்து கண்ணை மூடி அமர்ந்திருந்தாள்…மலர்.
“இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே உட்கார்ந்து இருக்க போற” என்று
ஒரு சிங்கக்குரல் கேட்டது அவளின் அமைதியை குலைத்தபடி …🤩
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️