அசுரன் 52
சிங்க குரலை கேட்டு திடுக்கிட்டு , கண்ணை திறந்து திரும்பி பார்க்க…
அவள் பின்னே கையை கட்டியபடி நின்று இருந்தான் உங்கள்
தேவாதித்யன். 🤩
இன்னும் எவ்வளவு நேரம் மேடம் இங்கேயே உட்கார்ந்து இருக்க
போறீங்க.. என்று இலகுவாக பேசிக்கொண்டே தனது கால் சட்டையை
மேலே ஏற்றியபடி சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான் ஆதி.
என்ன சொல்வது என்று தெரியாமல்… நீங்க என்ன சார் இந்த பக்கம்…
என்றாள். எதுவும் நடவாதது போல்.
இது… நான் எப்பயும் வர கோவில் தான்… என்றான் சுற்றம் பார்த்துக்
கொண்டே…
பையை எடுத்துட்டு வா… உங்க அம்மா வீட்ல ட்ராப் பண்றேன் என்றான்.
அம்மா வீடு எனும் போதே அவளுக்கு தெரிந்து விட்டது… அருண் வீட்டில்
நடந்த அனைத்தும் இவனுக்கு தெரிந்து விட்டது என…
உங்களுக்கு எப்படி தெரியும்…
தெரியும்… விக்ரம் சொன்னான்…
இல்ல சார் இப்ப அம்மா வீட்டுக்கு போக விரும்பல…
சரி… என தலையசைத்தவன். அப்ப வேற என்ன பண்ணலாம்…
அவள் கஷ்டத்தில் அவனையும் இணைத்துக் கொண்டான்.
இங்கதான் தங்கி வேலை பார்க்கிறதா முடிவு பண்ணி இருக்கேன்…
எங்க தங்கி… ஏதாவது பிரண்ட்ஸ் வீடு இல்ல சொந்தக்காரங்க வீடு
ஏதாவது இருக்கா…
இல்லை என தலையசைத்தாள்… கல்லூரி நண்பர்கள் விலாசம் பற்றி
யோசிக்கும் மனநிலையில் இப்போது அவள் இல்லை…
பின்ன எங்க தங்குறது…
ஏதாவது ஹாஸ்டல்ல…
சரி வா போலாம்…
எங்க… என்பது போல் அவள் பார்க்க….
ஹாஸ்டலுக்கு… இப்ப தேட ஆரம்பிச்சா தானே நல்ல ஹாஸ்டல்லா
கண்டுபிடிக்க முடியும்… ம்…சீக்கிரம்… என்று அவசரப்படுத்த…
இல்ல சார் நானே தேடிக்கிறேன்…
எப்படி… எதுல போய் தேடுவ… பேசாம கிளம்பி வா… என்று கூறிவிட்டு
அவளது பையை எடுத்துக் கொண்டு கோவிலை விட்டு வெளியேறினான்
ஆதி.
அவனை வினோதமாய் பார்த்துக் கொண்டே… அவனைப்
பின்தொடர்ந்தாள் மலர்.
காரில் ஏறியவள்… அமைதியாக அதன் கதவில் சாய்ந்து.. வாழ்க்கையைப்
பற்றி சிந்தனையில் மூழ்கி இருந்தாள்… ஒரு கண் பார்வையை தவணை
முறையில் அவள் மேல் வைத்து விட்டு… காரை இயக்கி கொண்டு
இருந்தான் ஆதி.
ஒரு இடத்தில் கார் நிற்க…
என்ன என்பது போல் பார்த்தாள் மலர்…
இங்க ஒரு ஹாஸ்டல் இருக்கு…
கீழ இறங்க சென்றவளை தடுத்து, முதல்ல நான் போய் பாத்துட்டு வரேன்
ஓகே னா நீ இறங்கி வா.. எனக் கூறிவிட்டு காரை விட்டு இறங்கி சென்றான்
ஆதி.
உள்ளே போய் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் காரில் வந்து ஏறினான்.
அட்மாஸ்பியர் நல்லா இல்ல… வேற ஹாஸ்டல் பாக்கலாம்.
ம்ம்… என்றாள்.
இதுபோல் மூன்று ஹாஸ்டல்கள் கடந்த பின்பு… நாலாவது ஹாஸ்டலை
பரிசோதித்து விட்டு வந்து… அவள் இருந்த பக்கம் காரின் கதவில்
கையுன்றி இந்த ஹாஸ்டல் பார்க்க ஓகேவா இருக்கு… நீ வந்து பாரு
உனக்கு ஓகேனா அட்மிஷன் போடலாம் என்றான்.
இறங்கி வந்தவள் ஹாஸ்டலை பார்த்துவிட்டு எனக்கு ஓகே என்று கூற…
விண்ணப்பத்தில் கார்டியன் என்னும் இடத்தில் கையெழுத்திட்டு
அட்வான்ஸ் தொகை செலுத்தப் போக…
இல்ல என்கிட்ட பணம் இருக்கு ராஜேஷ் கொடுத்து இருக்கான் என்றாள்.
அதுல அட்வான்ஸ் கொடுத்துட்டா இந்த மாசம் முழுக்க செலவுக்கு என்ன
பண்ணுவ… என்று ஆதி கேட்க…
யோசனையில் தலை தாழ்த்தி நின்று இருந்தாள்…
ஒன்னும் பிரச்சனை இல்ல நான் கொடுக்கிற பணத்தை எல்லாம் நோட்
பண்ணி வை திரும்ப வாங்கிக்கிறேன்… என்று கூற
சரி என சுறுசுறுப்பாய் தலையசைத்தாள் மலர்.
அனைத்து ஃபார்மாலிட்டீஸும் முடித்து அவளுக்கென்று ஒரு
அறை ஒதுக்கப்பட்டது…
கிளம்ப நினைத்தவன்… யோசனையில் சோர்ந்து போய் இருக்கும்
அவளின் முகத்தை பார்த்து.. ரொம்ப பசிக்குது சாப்பிட போலாமா?
என்றான்.
இல்ல நீங்க போய் சாப்பிடுங்க என்று அவள் கூற…
தனியா சாப்பிட்டு பழக்கம் இல்ல.. சரி பரவால்ல விடு பட்னியா
இருந்துக்குறேன்.. என்று கூறிவிட்டு காரை நோக்கி நகர…
இல்ல, இல்ல…சாப்பிட போகலாம்… வேகமாக கூறினாள்.
சிறிது தூரத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
தன் முன்னாள் வைத்த ரவா தோசையை சிறிது எடுத்து சாம்பாரில்
கோலம் போட்டுக் கொண்டு இருந்தாள். தனக்கு பிடித்த உணவு, ஆனால்
இப்பொழுது உணவை ரசித்து உண்ணும் மனநிலையில் இல்லை…
சரி நாளைக்கு காலைல சார்ப் 10ஓகிளாக் ஆபிஸ் வந்துடு.. என்றான் ஆதி.
எதுக்கு… என்பது போல் பார்த்தாள்.
வேலைக்கு போகாம ஹாஸ்டல் பீஸ் எப்படி கட்டுவ…
என்ன வேலை தருவீங்க…
CEO போஸ்ட்.. சிரிக்காமல் கூறினான்.
சற்றென்று அவளுக்கு புரைப்போக…
நாளைக்கு வந்து இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு உன்கிட்ட இருக்கிற
டேலன்டுக்கு ஏத்த மாதிரி வேலை தருவாங்க…
நான் என்னோட டிகிரி இன்னும் கம்ப்ளீட் பண்ணல…
அது ஒன்னும் பிரச்சனை இல்ல விடு பாத்துக்கலாம்…
இது என்னோட கார்டு… என்று தனது விசிட்டிங் கார்டை அவள் முன்
நீட்டினான்.
தேவன் கன்ஸ்ட்ரக்ஷன்.. என்று இருந்தது.
அதை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள்…
மேலும் அவள் யோசனையில் இருக்க… இன்னும் என்ன யோசனை… என்று
ஆதி வாய் விட்டே கேட்டு விட்டான்…
இல்ல ரித்து குட்டிய அப்படியே விட்டுட்டு வந்துட்டேன் என்ன பண்றானோ
தெரியல… நைட் வேற தூங்காம அடம் பிடிப்பான்… என்று அவள் கூற..
தாத்தா பாட்டி அத்தை மாமா அம்மா அப்பா எல்லாரும் அவனை சுத்தி
இருக்காங்க… அவன அழவிடாம பாத்துப்பாங்க.. என்று கூற…
குழந்தையை பெத்தவங்களுக்கு வளர்க்கவும் தெரியும்…. தெரியணும்…
உன்னைய நம்பி இங்க யாரும் குழந்தை பெத்துக்கல… என்று அழுத்தி
கூறினான்.
அவளும் ஒரு பெருமூச்சுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
சாப்பிட்டு முடித்து ஹாஸ்டல் வாசலில் இறக்கி விட்டான். பின் அவனும்
இறங்கி காரில் சாய்ந்து நின்றபடி… அவளைப் பார்த்து…
நாளைக்கு காலைல உன்னோட ஹாஸ்டல் வாசலில் நம்ம ஆபீஸோட கேப்
வந்து நிக்கும்… அதுல ஆபீஸ் வந்து சேரு… என்று கூறிவிட்டு…
தனது போனை எடுத்து அவளுடைய நம்பருக்கு ஒரு மிஸ்டு கால்
விட்டான்…
அது என்னோட நம்பர் சேவ் பண்ணிக்கோ ஏதாவது தேவைனா உடனே
கூப்பிடு…
(என்னுடைய நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவளும்
கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை…)
அவளும் சரி என தலையசைத்தாள்…
உன்னோட சொந்த ஊரு தஞ்சாவூரா?… என்று அவன் கேட்க…
இல்லை என தலையசைத்தாள்…
தலையாட்டி பொம்மை தஞ்சாவூர்ல தான் கிடைக்கும் என்று
சொன்னாங்க… என்று அவன் யோசிப்பது போல் பாவனை செய்ய..
இப்பொழுதுதான் அவன் கேலி செய்வது புரிய.. ஒரு சிறு முறைப்புடன்
நிறைய குழப்பத்துல இருக்கேன் சார்… மே பி தூங்கி எழுந்தா சரி
ஆகிடுவேன்னு நினைக்கிறேன்..
நாளைக்கு இண்டர்வியூல கேள்வி கேப்பாங்க அங்கேயும் இது மாதிரி
தலையசைக்காமல் வாயை திறந்து பதில் சொல்லணும்… அப்பதான்
வேலை கிடைக்கும் என்று ஆதி கூற…
ஆழ்ந்த மூச்சேடுத்தவள் முதல்ல நான் தெளிவாகிக்கிறேன் அப்புறம்
பேசுறேன் சார் அப்புறம் நீங்களே ப்ளீஸ் உன்னோட பேச்ச கொஞ்சம்
ஸ்டாப் பண்ணு அப்படின்னு சொல்லுவீங்க… என்று அவள் மென்
புன்னகையுடன் கூற..
அவளைப் பார்த்தபடி ஒரு கணம் அமைதியாக இருந்தவன்… என்ன
மனதிற்குள் நினைத்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.
சார்… என்ன நீங்க இப்போ சைலன்ட் ஆயிட்டீங்க…
ஓகே… குட் நைட்… மார்னிங் ஆபிஸ் வந்துடு.. என்று காரில் ஏறி
புறப்பட்டான் ஆதி….
அப்பொழுதுதான் அவளுக்கு ஒன்று நினைவு வந்தது இவ்வளவு உதவி
பண்ணவருக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலையே… என்று நினைத்தவள்
சரி நாளைக்கு ஆபீஸ் போறோம் நேரடியாவே சொல்லிடுவோம் என்று
நினைத்துக் கொண்டு விடுதியின் தன் அறைக்கு சென்றாள் மலர்.
தன் காரில் மிக சந்தோசமாக பாடலை ஓடிவிட்டபடி இணைந்து அவனும்
பாடலை பாடிக் கொண்டே காரை இயக்கிக் கொண்டிருந்தான் ஆதி.
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
ஓ என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்…
என்ன ஆச்சரியம்…. இத்தனை நாள் இந்தப் பாடல் காரில் ஒலிக்கும் போது
சோகப்பாடல் ஆக தெரிந்தது ஏனோ என்று காதல் பாடலாக தெரிகிறது.
***********
இரவு வீடு திரும்பினர் விக்ரம் மற்றும் அகல்யா… வீட்டிற்குள் நுழைந்த
விக்ரம் அழுது கொண்டிருக்கும் ரித்துக்குட்டியை கண்டதும் கண்கள்
தேடியது மலரை
தான்…
மலர் எங்கு என்று சுதாவிடம் விசாரிக்கவும் வீட்டில் நடந்தவற்றை
கூறினார் சுதா.
உடனே வீட்டில் வந்து நடுக்கூடத்தில் நின்று கத்தி கொண்டு இருந்தான்…
ஏன் இப்படி எல்லாரும் பண்றீங்க ஒரு பொண்ணுக்கு இப்படி துரோகம்
பண்ண நம்ம எப்படி நல்லா இருப்போம்.. வீட்ல யாரும் இல்லாதப்ப அந்த
பொண்ணு எப்படி அனுப்பி வச்சீங்க.. என்று கத்த அவன் குரலைக் கேட்டு
அருகில் வந்த அகல்யா…. என்ன?…என்று விசாரிக்க மலர வீட்டை விட்டு
அனுப்பிட்டாங்களாம் என்று கூற ஓ அப்படியா.. ஒரு வழியா வீட்டை
விட்டு போய்ட்டாளா… என்று சாதாரணமாக கூறிவிட்டு தனது அறையை
நோக்கி நகர்ந்தாள் அகல்யா.
அகல்யாவின் நடவடிக்கை விக்ரமின் கோபத்தை மேலும் தூண்டியது…
அவள் பின்னால் சென்று வேகமாக தங்களது அறையை சாத்தியவன்…
என்ன அகல்யா கொஞ்சம் கூட ஒரு ஃபீலிங்ஸ் இல்லாம பேசுற… வீட்ல
இருந்த பொண்ண யாரும் இல்லாதப்ப அவங்க பாட்டுக்கு வெளியில்
அனுப்பி இருக்காங்க… அந்த பொண்ணு என்ன பண்ணும் எங்க போகும்…
வரவர உன்னோட குணம் அப்படியே உங்க அம்மா குணம் மாதிரி
ஆயிட்டே போகுது… எப்படித்தான் உங்களால இப்படி சுயநலமா யோசிக்க
முடியுதோ என்றான் விக்ரம் எரிச்சலாக..
அவன் திட்டுவதை படுக்கையில் உட்கார்ந்து இரண்டு கைகளையும் பின்
ஊன்றி சாவகாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள்…
எது நீ, எங்க அப்பா, எல்லாம் பொது நலமா யோசிக்கிறவங்க நான்
சுயநலமா யோசிக்கிறனா…. சூப்பர்… என சொல்லி சிரித்தாள் அகல்யா.
பைத்தியம் புடிச்சிருச்சா இவளுக்கு ? என்னும்படி பார்த்தான் விக்ரம்.
இன்னும் அவளை எத்தனை நாளைக்கு இந்த வீட்ல வாழ விடாமல்
அப்படியே வேலைக்காரியாவே வச்சு பாத்துட்டு இருக்க போறீங்க… நீயும்
எங்க அப்பாவும்…
திடுக்கிட்டு முழித்தான் விக்ரம்.
நான் அவளை இதுவரைக்கும் எந்த வேலையும் வாங்கினது கிடையாது…
அவள நீ தான் எங்க அண்ணி இந்த வீட்டோட மருமக அப்படின்னு
பொய்யான ஆசையை வளர்த்தது கிடையாது… பாசம் காட்டி அவள
இங்கேயே வச்சுக்க நினைக்கல…
இதெல்லாம் பண்ணது நீங்க தான்…
இந்த வீட்டை விட்டு அவளை வெளியில அனுப்புனதுக்கு தாம்
தும் குதிக்கிறியே…
இந்த வீட்டை விட்டு என்னைக்கு வெளியில போறாளோ அன்னைக்கு
தான் அவளோட வாழ்க்கையை வாழ முடியும்… தாலிய வாங்கிட்டு
அனுப்பி இருந்தா இன்னும் சந்தோஷப்பட்டுக்கணும்… ஏன்னா
இனிமேல்தான் அவ ஒரு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை வாழ
ஆரம்பிக்க போறா… இந்த வீட்ல படாத கஷ்டத்தை ஒன்னும் அவ
வெளியில போய் பட போறது இல்ல… அவளுக்கு ஏதாவது நல்லது
பண்ணனும்னு நீ நெனச்சேன்னா அவளை இனிமேல் இந்த வீட்டுக்கு
கூட்டிட்டு வராத முடிஞ்சா அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி குடு…
அவள பாத்துக்க அவளுக்கு தெரியும்…
இவ்வளவு தெளிவாய் பேசும் அகல்யாவை பார்த்து… பூரித்துப் போனான்
விக்ரம்…
உனக்கு மலர் மேல கோவம் எல்லாம் எதுவும் இல்லையா?… அப்புறம் ஏன்
அவளை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக்கொண்டே இருந்த….
அது எனக்கும் அவளுக்கும் உள்ள முன் கதை…
அதைக் கேட்டு அதிர்ந்தவன்…
எது…. உனக்கு முன்னாடியே மலர தெரியுமா என்று கேட்க…
தெரியும் எனும் விதமாய் தலையசைத்தாள் அகல்யா…. அவ என்னோட
காலேஜ் ஜூனியர்…
வாயைப் பிளந்தான் விக்ரம்… என்ன உங்க காலேஜ் ஜூனியரா?…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️