அசுரன் 53
இங்கு ஒருவன் வீட்டையே ஒரு வழி ஆக்கிக் கொண்டு இருந்தான்… அருணா? என்று கேட்டால் இல்லை அவனது மகன்… ரித்துக்குட்டி…
புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் இரண்டு பேபி சிட்டர்களையும் கதற விட்டுக் கொண்டிருந்தான்.
வீட்டில் இருக்கும் அனைவரும் தூக்கி வைத்து சமாதானப் படுத்தி ஆயிற்று.. யாருக்கும் அடங்கவில்லை… மூக்கில் நீர் வடிந்து… முகம் எல்லாம் சிவந்து தொண்டை தண்ணி வற்ற கத்தி கொண்டு இருந்தான்..
காலையில் அருண் வீடு திரும்பும் போதே ராஜேஷும் அவனின் அம்மாவும் வீட்டில் இல்லை அவர்கள் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.
இறுதியாக அருண் வந்து குழந்தையை தூக்கி தோளில் போட்டு சமாதானம் செய்ய… அவனின் கழுத்தில் மூக்கினால் உரசி விட்டு.. பின்பு அருணின் முகத்தை பார்த்து உதட்டைப் பிதுக்கி அழுவதற்கு தயாரானான் ரித்துக்குட்டி…
குட்டியின் செய்கைகளிலேயே அவன் தேவையை புரிந்து கொண்ட அருண்…
ஏண்டா நீ வேற என்ன படுத்துற… அவ நீயும் வேணாம் நானும் வேணாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டு போய்ட்டாடா… என்று மகனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தான்.
நான் சும்மா இருந்திருந்தா கூட இந்த வீட்ல உன்ன பாத்துகிட்டு அவ பேசாம இருந்து இருப்பாடா… நான் தான் தேவையில்லாம அவ கைய பிடிக்க போய் மொத்தமா விட்டுட்டு போயிட்டா… நீ அழுகாம இருந்தா கூட சரக்கு போட்டு மட்டையா இருப்பேன் டா… இப்ப நான் இதை யார்கிட்ட டா போய் சொல்லுவேன்… என்று தனது மனக்குமுளறை மகனிடம் மட்டுமே தற்போதைக்கு அவனால் பகிர முடியும்…
தன்னிடம் பேசும் தந்தையின் முகத்தை பார்த்து அழுகையை நிறுத்திய ரித்து…
டேய் தகப்பா.. நீ.. என்ன சமாதானம் படுத்துவன்னு பார்த்தா நீ என்னடா… என்னைய விட குமுறி குமுறி அழுதுகிட்டு இருக்க என்று ரித்துவால் மனதுக்குள் மட்டுமே நினைக்க முடிந்தது… 😆… தன் திராட்சை விழிகளை உருட்டி அருணின் முகத்தை குறுகுறு என்று பார்த்தவன்… என்ன நினைத்தானோ தனது கையை எடுத்து அவன் மூக்கின் மேலே “தொப்” என்று ஒரு அடியை வைத்தான்.
” அவ்ச் ” தனது மூக்கை பலமாக தேய்த்துக் கொண்டான் அருண்.
அறைக்குள் நுழைந்தாள் ரதி…
என்ன அருண் ரொம்ப சோகமா இருக்கீங்க போல…. என்றாள் கண்ணாடி முன் நின்று தன் அணிகலன்களை கழட்டி கொண்டே….
பாத்தா உனக்கு எப்படி தெரியுது என்றான் கடுப்பாய்…
பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பி வச்ச சோகத்துல இருக்க மாதிரி தெரியுது…
மச்… ரதி ப்ளீஸ் ஸ்டாப் இட்….
உண்மைய சொன்னா இவ்வளவு கோவம் வருது…
இங்க பாரு குழந்தை காலையில் இருந்து அழுதுட்டு இருக்கான்…. இப்ப இவனை எப்படி சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறது… என்று அருண் சலிப்பாய் சொல்ல…
ஒன் மினிட்… என்று கூறிவிட்டு இரண்டு பேபி சிட்டர்களையும் அறைக்கு அழைத்தாள்…
குழந்தை அழுதுகிட்டே இருக்கான்… கண்டுக்காம இருக்கீங்க…. டாக்டர்ஸ் வர சொல்லி தூங்குறதுக்கு என்ன பண்ணனுமோ பண்ணுங்க…. எங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க… என்று கடுமையாய் கூறினாள்.
குழந்தையை அருண் கையில் இருந்து வாங்க போக… தர மறுத்தவனிடமிருந்து ரதி குழந்தையை பிடுங்கி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினாள்.
தட்ஸ் ஆல் பேபி… ப்ராப்ளம் சால்வ்ட்…. இதுக்காக எல்லாம் உன்னை இன்னொருத்தி கூட என்னால ஷேர் பண்ணிக்க முடியாது….
வேலைக்காரி சின்சியரா வேலை பார்த்தா சம்பளம், இன்கிரிமென்ட் வேணா கொடுக்கலாம்… இப்படி வாழ்க்கையில் பொண்டாட்டியை ஆக்கிக்கணும்னு நினைக்க கூடாது… என்று பேசிக்கொண்டே தனது உடை கலைந்து இரவு உடைக்கு மாறினாள் ரதி.
குழந்தை சென்றதும் ஒரு கையால் கண்களை மூடி படுக்கையில் சாய்ந்தான் அருண்.
அவன் நினைவலைகள் முழுவதும் மலர் மட்டுமே நிரம்பி வழிந்தாள்.
அவளைத் திருமணம் செய்த நாள் முதல் தான் எப்படி நடந்து கொண்டோம் என்பதை ஒவ்வொன்றாக மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தான் அருண்.
அவனுக்காக சிரத்தை எடுத்து செய்யப்படும் உணவு…
இரவு எவ்வளவு தாமதமானாலும் அவனுக்காக காத்திருந்து பரிமாறப்படும் அன்பு…
முக்கியமாக அவனிடம் அவளுக்கு எந்த ஈகோ இருக்காது… அவனுடைய அனைத்து வேலைகளையும் அவளே செய்வாள்…. ஷூ முதற்கொண்டு பாலிஷ் போட்டு பளபளப்பாக இருக்கும். ஜிம்மில் இருக்கும்போது அவனுக்கான சத்துபானம் தேடி வரும்… அவனுடைய படுக்கையறை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும்…
அவன் உடல்நிலை சரியில்லாத போது அவள் கவனித்துக் கொண்ட விதம்… மலரின் செய்கை ஒவ்வொன்றிலும் அருணுக்கான மெனக்கெடல் ஒன்று இருக்கும்… மலர் அவனுக்காக இவ்வளவு செய்தும் ஒரு நாள் கூட அவளை மனைவியாக நடத்தவில்லையே… மனைவி என்ற உரிமையோடு அவளை ஒரு நாளும் இந்த அறைக்குள் அவன் அனுமதிக்கவில்லை…. என்ற குற்ற உணர்வு அவனைத் தொற்றிக் கொண்டது. மன உளைச்சலில் தூக்கமின்மையால்… வேகமாய் எழுந்தவன் தனது கபோர்டு திறந்து… ஒரு முழு மது போத்தலை எடுத்து வாயில் சரித்து மட்டையானான்…
*************
காலையில் 9:00 மணிக்கு கிளம்பி, என்ன எடுத்து செல்வது என்று தெரியவில்லை அதனால் சிறிது பணத்துடன் கூடிய பர்ஸ் ஆதியின் விசிட்டிங் கார்டு போன் இவற்றை எடுத்துக் கொண்டு கேப்பிற்காக காத்திருந்தாள் மலர். அலுவலக கார் வந்ததும் அதில் ஏறி ஆதியின் அலுவலகத்தை அடைந்தவள், வரவேற்பில் சென்று ஆதியின் விசிட்டிங்கார்டை நீட்ட அங்கிருந்த பெண் ஊழியர் அவளையும் அவள் உடையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு… அருகில் இருந்த சக ஊழியர் ஒருவரை அழைத்து,
இவங்க விஐபி கெஸ்ட்… ஆதிசார பார்க்க வந்திருக்காங்க… ஸ்ட்ரைட்டா ரவி சார் கிட்ட கூட்டு போங்க… என்று கூறிய மலரை அனுப்பி வைத்தாள்.
உடையை வைத்து அந்த ஊழியர் மரியாதை குறைவாக நடத்த முடியாது ஏனென்றால் மலர் கொண்டு வந்திருந்தது ஆதியின் தனிப்பட்ட விசிட்டிங் கார்டு… அது பெரும்பாலும் யார் கையிலும் இருக்காது… அதுவே அவளுக்கான மரியாதையை பெற்று தந்திருந்தது.
மலரை பார்த்த ரவி, டூ மினிட்ஸ் மேம் சார் ஒரு மீட்டிங்ல இருக்காரு என்று கூறி காத்திருப்பு அறையில் அமர வைத்தான்.
மீட்டிங் முடிந்ததும் மலர் உள்ளே சென்றாள்.. தயங்கி.. தயங்கி…
எதிரே வந்து நின்றவளை… கவனிக்காமல், இருக்கையில் அரைவட்டமாய் சுழன்று கொண்டே ஃபைல் ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.
பின் போனை எடுத்து நந்தினிக்கு அழைத்தான்…
கேபினுக்குள் நுழைந்த நந்தினி குட் மார்னிங் ஆதி சார் என்றாள் சிரித்த முகமாய்..
குட் மார்னிங் நந்தினி… எனக்கு ஒரு உதவி பண்ணனும்.. இவங்க மிஸ் தேன்மலர்… என்று அறிமுகப்படுத்தினான்.
அந்த மிஸ் என்பதில் அழுத்தம் கூடியிருந்தது… இரு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
இவங்க என்னோட ஃப்ரெண்ட், இனிமேல் உங்களுக்கும் …. என்று நந்தினியிடம் கூற அவளும் புன்னகை முகமாய் தலையசைத்தாள். அது நம்ம ஸ்டாப்ஸ் யாருக்கும் தெரிய வேண்டாம்…
(ஏன் தெரியக்கூடாது ஒரு வேல நம்மல பிரண்டுன்னு சொல்றதுக்கு சங்கடப்படுறாரோ… இருக்கும் எல்லா பணக்காரங்களும் ஒரே மாதிரி தான்… என்று நினைத்தால் மலர் )
மலரின் முகத்தை ஒரு கணம் பார்த்து மீண்டவன்…. ஸ்டாப்ஸ்க்கு என்னோட பிரண்டுன்னு தெரிஞ்சா அவங்க கூட சரியா மிங்கிள் ஆக மாட்டாங்க… அது வேலை செய்யற இடத்துல கம்பர்ட்டபிளா இருக்காது… என்று கூற…
(அய்யய்யோ மனசுல நினைச்சதை கண்டுபிடித்துவிட்டார் போல )
இவங்களுக்கு கொஞ்சம் டிரெயின் பண்ணனும்… 2 டேஸ் லீவ் எடுத்துக்கோங்க… ஃபர்ஸ்ட் இவங்கள லுக்வைஸ் சேஞ்ச் பண்ணுங்க.. ஸ்பா அண்ட் பார்லர் கூட்டிட்டு போங்க… அவங்களுக்கு தேவையான டிரஸ் வாங்கி கொடுங்க.. ஹேண்ட் பேக், வாட்சஸ், செப்பல், சூ, அக்சஸரீஸ் எல்லாமே… மேக் இட் பிராண்ட் அண்ட் ட்ரெண்ட்… என்று கூறி மலர்! இவங்க கூட போங்க… என்று மலரை அனுப்பி வைக்க…
அறையை விட்டு வெளியே சென்றவள் “ஒரு நிமிஷம் நந்தினி மேம் “, இதோ வந்துடறேன் என்று கூறிவிட்டு திரும்பவும் அறைக்குள் நுழைந்து..
ஏன் சார் உங்க ஆபீஸ்ல அழகா இருக்குற மாடல் மட்டும் தான் வேலை தருவீங்களா? என்று கேட்டாள்… (ஏனோ அருண் போல் ஆதியும் அழகிகளை மட்டுமே தேர்வு செய்வான் என்று நினைத்துவிட்டாள்)
நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன்… அழகா இருக்கிறதை விட முதல்ல ஆரோக்கியமா இருக்கணும் மலர். அப்பதான் நீங்க கான்ஃபிடென்ட்டா வேலை செய்ய முடியும்… பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்… உங்க காலேஜ்ல ஃபர்ஸ்ட் செமஸ்டர் சொல்லி கொடுத்து இருப்பாங்களே.. என்று கேட்க…
ஆம் என தலையசைத்தாள் மலர்.
நீங்களே பார்க்க கவலைக்கிடமா இருந்தா ஆபீஸ்ல கிளையன்ட் கிட்ட எப்படி பேசுவீங்க…
நான் நல்லா தான் சார் இருக்கேன்…
இப்படி கண்ணெல்லாம் சோர்ந்து போயி… உடம்பு மெலிஞ்சு, முகம் கருத்து, உதட்டெல்லாம் உலர்ந்து போயி, முடி எல்லாம் ஸ்ப்ளிட்டேன்ஸ் வந்திருக்கு கை,கால் நகம் எல்லாம் சத்து இல்லாம உடைஞ்சு போயிருக்கு….. தென்…. என்று அவள் கண்ணை பார்த்துக்கொண்டே அடுக்கிக் கொண்டே போக ஆஆ… என… வாயைப் பிளந்தாள் மலர்..
வந்ததுல இருந்து நம்மள பாக்கவே இல்லையே எப்படி இவ்ளோ கரெக்டா சொல்றாரு… என்று தன் கை கால் விரல்கள் நகங்களை சரிபார்த்துக் கொண்டே நினைத்தாள்..
திரும்பவும் குனிந்து பைல்களை பார்க்க ஆரம்பித்தவன் என்ன மலர் நான் சொன்னதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டீங்களா இப்ப போங்க… என்று வாயிலை நோக்கி கையை நீட்டி கூறினான்…
சார் இதுக்கெல்லாம் பணம்… என தயங்கி நின்றவளை பார்த்து…
நந்தினி கொடுத்துடுவாங்க… நான் அவங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி இருக்கேன்.. எல்லாம் சரியா நோட் பண்ணி வைங்க நான் கடைசியா வாங்கிக்கிறேன்…
ஆனா இதெல்லாம் எதுக்காக நீங்க செய்யணும் சார்.. என் மேல பரிதாபப்படுறீங்களா…
(அடுத்தவர் பரிதாபப்பட்டு உதவி செய்யும் நிலைக்கு வந்து விட்டோமே என்ற ஒரு குறுகுறுப்பு அவள் மனதினுள் இருந்தது)
நான் பரிதாபப்படுற நிலைமையில் நீங்க இல்ல மலர்… தெரிஞ்ச பொண்ணு எதார்த்தமா பார்த்தேன் ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன் அவ்வளவுதான்… நாளைக்கு உங்க அண்ணன் விக்ரம் ஏன்டா என் தங்கச்சிய பாத்துட்டு அப்படியே விட்டுட்டு வந்த அப்படின்னு என்கிட்ட சண்டைக்கு வருவான்… அவ்வளவுதான்… இதுல உள்நோக்கம்னு ஒன்னும் இல்ல… நான் உங்களை என் பிரண்டா ஏத்துக்கிட்டேன் நீங்களும் என்னை உங்க பிரண்டா நினைச்சுக்கோங்க… என்று ஆதி கூற…
யோசனையில் மூழ்கி இருந்தாள் மலர்..
இவ்வளவு யோசிக்கிறீங்க ஏன் என்னை உங்க பிரண்டா ஏத்துக்க மாட்டீங்களா?…
இல்ல சார்…. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க என் பிரண்டு தான்… என்றாள் அமைதியாய்…
ம்…. சவுண்ட்ஸ் குட்…
அப்புறம் மலர் நான் அருணோட பிரண்டா இருக்கறதுனால அருண் மாதிரியே இருக்கணும் அப்படின்னு அவசியம் இல்லை… மனசுக்குள்ள எதையாவது நெனச்சு குழம்பிக்கிட்டு இருக்காதீங்க….
வேகமாக சரி என தலையசைத்தவள் ( இவர் முன்னால மனசுக்குள்ள கூட எதையும் நினைக்க முடியாது போலையே என நினைத்துக் கொண்டே) வெளியே கிளம்பி சென்றாள்.
தஞ்சாவூர் பொம்மை தோத்து போயிடும்.. என்று இரு பக்கமும் தலையை அசைத்தவன் தன் வேலையை தொடர்ந்தான்.
வெளியில் வந்த மலரை பார்த்து, ஷாப்பிங் போலாமா மலர்… என்று கேட்க…
போலாம் மேம்…. என்றாள்…
மலரை நேராய் பார்த்த நந்தினி, மேம் சொல்ல வேணாம்… நீங்க என்ன நந்தினி என்றே கூப்பிடலாம்… சார் தான் உங்கள பிரண்டா அக்செப்ட் பண்ணிக்க சொல்லி இருக்காங்களே… சோ நம்ம வெளியில போகும்போது நீங்க மேம்னு கூப்டா ஒரு பாண்டிங் கிடைக்காது.. சோ ஜஸ்ட் நந்தினி என்று கூறி… அவளை சினேகமாய் அணைத்து விடுவித்தாள் நந்தினி.
உண்மையில் மலர் இப்பொழுது இருக்கும் மனநிலையில் நந்தினியின் நட்பு அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️