அசுரன் 63
ஆதி சொன்னதை குழப்பிக் கொண்டே கட்டிலில் படுத்தவள் தூக்கம் எட்டா கனியாகி போனது… இப்ப என்ன சொல்ல வராரு பொண்ணுங்களே பிடிக்காது ஆனா அது உண்மை மாதிரி தான்…. ஆனா எனக்கு அது பொருந்தாது அப்படின்னா நான் பொண்ணே இல்லைன்னு சொல்ல வாரா?… என்று அவளுடைய மூளை சகட்டுமேனிக்கு யோசித்தது தள்ளியது…. பெரிய கட்டில் புதிய இடம் புரண்டு புரண்டு படுத்தவள்…. விடியும் வேளையில் தூங்கியவள் அதிகாலையிலேயே எழுந்து விட்டாள்… எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்ட பின், என்ன செய்வது என்று தெரியாமல்… நேராக அவள் நுழைந்த இடம் கிச்சன்…. பிரிட்ஜை திறந்து பார்க்க… அவள் தேடி வந்த பால் இருந்தது….
அவளுக்கு காபி தயாரிக்கலானாள்.
தயாரித்து வந்து சோபாவில் அமர போக அப்பொழுதுதான் கவனித்தாள்… ஆதி சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்….
என்ன இங்க படுத்து தூங்குறாரு…. என எண்ணிக்கொண்டே அருகில் இருந்த ஒற்றை சோபாவில் காபி கப்புடன் அமர…
குட் மார்னிங் என்றான் ஆதி..
சிங்க குரலைக் கேட்டு திடுக்கிட்டவள்…. ஒரு கணம் நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, குட் மார்னிங் சார்… நீங்க தூங்கலையா? என்ன இங்க படுத்து இருக்கீங்க? என்று கேட்டாள் ..
ரூம்ல தான் படுத்து இருந்தேன் மலர் இயர்லி மார்னிங் ஒரு ஃபாரின் கிளைன்ட் கிட்ட இருந்து போன் வந்தது… இங்க வந்து உக்காந்து பேசிகிட்டு இருந்தேன்… பேசி முடிச்சுட்டு அப்படியே கொஞ்ச நேரத்துல தூங்கிட்டேன்… என்ற படி உடலை வளைத்து சோம்பல் முறித்தான் ஆதி.
ஓகே சார்…. உங்களுக்கு காபி கொண்டு வரேன்… ஒன் மினிட் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டு… அவனுக்காக தனியே பிளாஸ்கில் எடுத்து வைத்திருந்த காப்பியை ஊற்றி எடுத்து வந்தாள்.
அவள் எழுந்து போகும் பொழுது அவள் காலை தான் கவனித்தான் ஆதி…. அவள் அறை கதவை திறந்து எழுந்து வரும் பொழுதே அவன் முழித்து விட்டான்… இவ்வளவு நேரமும் அவளுடைய கொலுசொலியை தான் ரசித்துக் கொண்டு இருந்தான்…. மனதில் ஏதேதோ ஞாபகம் சிறுவயதில் பள்ளி சிறுவனாய் அம்மாவை ஏமாற்ற போர்வைக்குள் தூங்குவதைப் போல் நடித்துக் கொண்டிருந்தவனை அம்மாவின் கொலுசொலி சுற்றி சுற்றி வந்த ஞாபகங்கள்…. இதோ இத்தனை வருடமாக இந்த வீட்டில் இருந்த மயான அமைதியை…. தன்னவளின் கொலுசொலி ஒரு நொடியில் தகர்த்து விட்டதாய் உணர்ந்தான்…. ஐந்து முத்துக்கள் வைத்த மெல்லிய வெள்ளி கொலுசு தான் அணிந்திருந்தாள்… நிசப்தமாய் இருந்த வீட்டில் அந்த ஓசையே பிரம்மாண்டமாய் கேட்டது…. எந்தப் பேரமைதியை அவன் வெறுத்தானோ அதை விரட்டும் மந்திரக்கோல்… அவள் கொலுசு ஒலி.
இதோ உனக்காக ஒருத்தி இந்த வீட்டிற்குள் இயங்கி கொண்டு இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது அந்த ஓசை… முதல் தடவை காதில் கேட்கும் பொழுது சிலிர்த்து அடங்கியது ஆடவனின் ஆறடி ஆஜெனபகுவான தேகம்…
ஒரு சாதாரண கொலுசின் ஓசைக்கு இவ்வளவு வலிமையா?… என்று கேட்டால் இல்லை…. என்னவளின் கொலுசு ஓசைக்கு மட்டும் என்னை வீழ்த்தும் வலிமையை கொடுத்துள்ளான் ஆண்டவன்…. என்பான் ஆதி. மெல்லிய சாரல் போல் மனதில் ஒரு இதம்… அதைத்தான் கேட்டுக் கொண்டே படுத்திருந்தான்…
ஆதிக்கும் காபியை கொடுத்துவிட்டு அடுத்த சோபாவில் ஒரு காலை மடக்கி ஒரு காலை மட்டும் தொங்கவிட்டு அமர்ந்தாள் மலர். தொங்கும் அந்த கால் ஆடிக்கொண்டே தான் இருந்தது.. ஜல்… ஜல்… சீரான இடைவெளியில் ஒரு கால் கொலுசு மட்டும் சிணுங்கியது…
அந்த ஆடும் பாதங்களை பார்த்துக்கொண்டே…
காபியை குடிக்க சென்றவனை… பார்த்து…
சார் என்ன எடுத்த உடனே காபியை குடிக்க ஆரம்பிச்சிட்டீங்க…
பின்ன என்ன பண்ணனும் என்பதைப் போல் ஆதி பார்க்க…
காபி குடிக்கிறதுக்கு ஒரு சில வழிமுறைகள் இருக்கு…
முதலாவது…. காபியை கண்ணால பார்த்து பீல் பண்ணனும்… பீல் தி கலர்…
இரண்டாவது… காப்பிய ஸ்மெல் பண்ணி ஃபீல் பண்ணனும் ஆள மூச்சு இழுத்து விட்டு ஆ… என உணர்ந்து காண்பித்தாள்…. பீல் தி ஸ்மெல்….
மூணாவது தான் காபியை குடிக்கணும்…. அதுவும் காஃபி அவசர அவசரமா நேரடியா நம்ம தொண்டைக்கு போகக்கூடாது பொறுமையா நம்ம நாக்குல பட்டு மெதுவா காபியோட டேஸ்ட்ட உணர்ந்து அதுக்கப்புறம் அதை முழுங்கணும்… பீல் தி டேஸ்ட்…. என்று அவள் காபியை விழுங்கி காண்பிக்க… காபி மெதுவாக அவள் தொண்டை குழியில் இறங்குவது கண்ணாடி போல் வெளியே தெரிய… அதையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி….
அதை பார்த்து ஏக்கத்துடன் எச்சில் கூட்டி விழுங்கினான்… சிங்க குரலோனின் குரல்வளை ஏறி இறங்கியது பெருமூச்சுடன்….
ம்ம் ம்… என்று தலையை ஆட்டி, இதழின் மேல் நாவை சுழற்றி அதன் ருசியை மலர் சிலாகித்துக் கூற…..
காலையிலேயே டெம்ப் பண்றாளே…. அடுத்து என்ன உணர்ந்தானோ… “இவன் வேற” என முனுமுனுத்து கொண்டே… தன் பக்கத்தில் இருந்த பில்லோவை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்….
இப்படி குடிக்கணும் சார்…. எங்க குடிங்க பார்க்கலாம்…. என்று மலர் சொல்ல…
நீ எல்லா பொருளையும் இப்படித்தான் ரசிச்சு ருசித்து சாப்பிடுவியா மலர்… என்று ஆதி விஷமமாக கேட்க….
ஆமா சார்…. ஆசைப்பட்டு சாப்பிடுறோம் அதை ருசிச்சு சாப்பிட வேணாமா… என்று அவள் அப்பாவியாய் பதில் அளிக்க….
அது சரி…. அப்ப நான் கொடுத்து வச்சவன் தான்… என்று முணுமுணுத்துக் கொண்டான்…
என்ன சார் சொன்னீங்க…
ஒன்னும் இல்ல… மலர் இது கூட தெரியாம இத்தனை நாள் நான் காபி குடிச்சிருக்கேன் பாரேன்… இவ்வளவு அழகா காபி குடிக்க முடியும்னு, இன்னைக்கு தான் கத்துக்கிட்டேன்… காலையிலேயே என்ன “எழுப்ப் ப் பி” காபி குடிக்க கத்து கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ்… என்று ஆதி கூற…
இட்ஸ் ஓகே சார்… இது மாதிரி நான் நிறைய பழக்கம் வச்சிருக்கேன் எல்லாமே உங்களுக்கு போக போக கத்து தரேன் என்று அவள் கூற….
தலையை இரு பக்கமும் தளர்வாய் அசைத்தவன்…. ஐ அம் வெயிட்டிங்…. என்றான் ஆதி…. மீ டூ என்றான் இன்னொருவன்… அவனை அடக்க இன்னொரு பில்லோவையும் எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டான்… ஓகே மலர் நீ போய் கிளம்பு…. என்று மலரை அவளது அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பில்லோவை தூக்கி எரித்து விட்டு குடுகுடு என்று தனது குளியலறை புகுந்து கொண்டான்.
ஆதி குளித்துவிட்டு கிளம்பி வர… உணவு மேஜையில் டிபன் தயாராக இருந்தது… அதைப் பார்த்து அதிருப்தி அடைந்தவன்… “என்ன சொன்னாலும் கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருப்பா போல” என நினைத்துக் கொண்டே…
“மலர்” என்று கத்தி அழைத்தான்…
கரும்பச்சை நிற சுடிதாரில், காதில் கம்மலை மாற்றிய படியே… இதோ வரேன் சார் என்று குரல் கொடுத்துக் கொண்டே நடந்து வந்தாள் மலர்.
நான்தான் உன்னை கிச்சன் குள்ள போக வேணாம்னு சொன்னேனே… நான் வந்து ஏதாவது சாண்ட்விச் ரெடி பண்ணி கொடுத்து இருப்பேன்…
சாரி சார்… எனக்கு அதெல்லாம் சாப்பிட்டா சாப்பிட்ட மாதிரியே இருக்காது… சொல்லப்போனால் அதெல்லாம் நான் சாப்பிடுற ஸ்னாக்ஸ் மாதிரி இருக்கும்… அதனாலதான் எனக்கு தேவையானதை நானே பண்ணிக்கிட்டேன்… என்று அவள் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற…
ஓஹோ… என யோசித்தவன்… அப்போ உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அத எப்படி பண்ணலாம்னு பார்த்து நாளைக்கு நான் பண்ணி கொடுக்கிறேன் என்றான் ஆதி…
ஐயோ சார் நான் மார்னிங் டிபன் பண்ணிடுறேன்… நீங்க வேணா நைட் டின்னெர் எனக்கு பண்ணி கொடுங்களேன்… ஒரு நேரம் கூட சமைக்கலனா மனசு நிம்மதியா இருக்காது சார்… ப்ளீஸ் என மூக்கை சுருக்கி அவள் கேட்க…
அதற்கு மேலும் மறுப்பான அவன்…
சரி எனும் விதமாக தலையசைத்து விட்டு … உனக்கு வேணும்னா என்ன வேணா சமைச்சு சாப்பிடு ஆனா ஹெல்ப் பண்றேன், நன்றி கடனுக்காக பண்றேன், பரிதாபப்பட்டு பண்றேன். இந்த மாதிரி எந்த காரணத்துக்காகவும் கிச்சன்குள்ள தயவு செஞ்சு போயிடாத… This makes me very angry… என்று அவன் அழுத்தமாய்க் கூற…
சரி என்னும் விதமாக தலையாட்டினாள் மலர்.
இருவரும் டேபிளில் அமர்ந்து உணவை உண்ண தயாரானார்கள்.
உணவை தட்டில் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தான்… சப்பாத்தியும் தக்காளி தொக்கும் செய்திருந்தாள்… மணமே பசியை தூண்டியது… எடுத்து ஒரு வாய் சாப்பிட… ஆதியின் கண்களில் மின்னல் வெட்டியது…. இப்பொழுது அவனின் உணர்வை…. அவனால் எடுத்துச் சொல்லவே முடியாது… தொண்டை அடைக்கும் ஒரு உணர்வு… உருவாகி உணவை விழுங்க சிரமப்பட்டான்…. கண்கள் கலங்கி…. கைகள் நடுங்கி… “என் வீட்டு சாப்பாடு” எனும் ஒரு உரிமை உணர்வு… தனது உணர்வுகளை மலருக்கு தெரியாமல் மறைத்து கொண்டு வேகமாக தண்ணீரை எடுத்து குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான் ஆடவன்…
ஆதியை பார்த்துக் கொண்டிருந்தவள் தனது உணவு தட்டை கையில் எடுத்து, சார் நான் உங்களுக்கு எப்படி சப்பாத்தி சாப்பிடணும்னு சொல்லி தரவா…. என்று கண்ணை விரித்து தலையாட்டி ஆர்வமாய் கேட்க…
தண்ணீர் குடித்து கொண்டிருந்தவனுக்கு பட் என்று பொறை ஏறியது… பின் தன் தலையை தானே தட்டிக் கொண்டு, பின்ன அவனுக்கு தானே தெரியும் காலையில் அவள் செய்த செயலால்… அவனை அடக்க அவன் எவ்வளவு சிரமப்பட்டான் என்று… அவளின் ஆர்வமான முகத்தை பார்த்தவன்… தன் கேலி குரலில்… இதுக்கு மேல நீ சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சா நான் ஆபீஸ் போக முடியாது மலர்… பொறுமையா ஒன்னு ஒன்னா கத்துக்கலாம்… நைட் வந்து சாவகாசமா சொல்லிக் கொடு… என ஆதி கூற…
அதுவும் சரிதான் சார்… உங்களுக்கு லேட் ஆயிடும்… நீங்க போங்க… நைட்டு வந்து பாத்துக்கலாம்… என்றாள் பெருந்தன்மையாய்…
உணவு உண்டு பின் தட்டுகளை கழுவி வைத்தவன், மலரிடம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தணிக்க பின் ஏதோ ஞாபகம் வந்தவனாய் மலரின் அருகில் வந்து… சாப்பாடு ரொம்ப அருமையா இருந்தது… என அவள் கண்களை பார்த்து சொல்ல…
பொய் சொல்லாதீங்க சார் அன்னைக்கு நான் செஞ்ச என்னோட பூரி கிழங்கையும் நீங்க எப்படி குறை சொன்னீங்க… என்று கடந்த காலத்தை மனதில் வைத்துக்கொண்டு மலர் கூற…
நெஜமாவே அந்த சாப்பாடு கொஞ்சம் சுமாரா தான் இருந்தது…
இரு கைகளையும் இடுப்பில் வைத்து படி புஸ்… புஸ்… என்று மலர் மூக்கை விடைத்து காத்தடித்தாள் பொய் கோபத்தில்…
அவளின் செய்கைகளை சுவாரசியமாக பார்த்தான் ஆதி….
அது ஒன்னும் நீ எனக்காக சமைக்கலையே… நான் ருசிச்சு சாப்பிட… ஆனா இது அப்படி இல்ல… நீ எனக்காக சமைச்சது… சோ ரொம்ப டேஸ்டா இருந்தது… தேங்க் யூ… என்றான் அவள் கண்களை பார்த்தபடி…
அவளும் அவன் கண்களைத் தான் பார்த்தாள்…
ஒவ்வொரு முறையும் அவன் கண்களை பார்க்கும் பொழுதும் அந்த கண்கள் அவளுக்கு ஏதோ ஒரு செய்தியை கடத்த முனைகின்றது…. அதைக் கண்டு கட்டுண்டு இருக்கிறாளே தவிர அது என்னவென்று அவள் ஆராயவில்லை…..
ஓகே மீட்டிங்கு டைம் ஆயிடுச்சு… நான் பஸ்ட் ஆபீஸ் போறேன் பின்னாடி நீ ஸ்கூட்டில பத்த்திரமா வா என அழுத்தி கூறிவிட்டு சென்றான் ஆதி.
மலரின் பார்வையும் அவன் பின்னாலையே சென்றது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️