அரக்கன் 1

அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் ,விலங்குகள் சத்தமும், மனித ஓலங்கள், கேட்டு கொண்டு இருந்த நேரத்தில் ஒரு பெண் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டு இருந்தாள். 

அவள் கால்களில் குருதி வடிய‌ ,தலை தெரிக்க ஓடியவள் ஒரு” இடத்தில் அப்படியே மூச்சு விடவும் மறந்து சிலை என நின்று விட்டாள்”…

அவள் எதிரில் “சிங்கம்” ஒன்று அவளை நோக்கி பாயக் காத்துக் கொண்டு இருந்தது. அவளை நோக்கி பாய இருந்த நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு உருவம் அவளை தன்னுடன் சேர்ந்து வேறு பக்கம் பாய்ந்தது…

 

“பயந்து போன பெண் அவளோ ”தனகு எதும் ஆகவில்லை என்று  கண்களை திறந்து பார்த்தாள்…

பார்த்தவளது “விழிகள் இன்னும் அகல விரித்தது”. ஏன் என்றால் யாரிடம் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் , என்று நினைத்து ஓடி வந்தாளோ,அவனிடமே மீண்டும் மாட்டிக் கொண்டாள். ..

அவன் ஆறு அடி உயரத்தில் தோல் வரை நீண்ட கேசம் அடர்ந்த தாடியும் கண்கள் ரத்த நிறத்தில் சிவந்து பார்க்க அஞ்சி நடுங்க வைக்கும் தோற்றத்தில் இருந்தான்…

அவளை நோக்கி அருகில் வந்தவன் குனிந்து அவள் காதில் அவ்வளவு சீக்கிரம் சாக விட மாட்டேன்.என்று கூறி மேலும் அந்த சிங்கத்திடம் இருந்து காப்பாத்திட்டே ஆன இந்த சிங்க கிட்ட இருந்து யாரும் ஒன்ன காப்பாத்த முடியாது…

என்று  கூறி அவள் கைகளை பிடித்து தரதரவென்று இழுத்து சென்றான். அவன் சிங்க வர்மன். அவளோ தான் என்ன செய்தோம்…

என்று தெரியாமல் “தன் நிலையை எண்ணி கண்களில் கண்ணீர் வடிந்தது”…

அவன் பிடியிலிருந்து விடுபட போரடியவள் அவனை “தாக்க முற்பட அவன் விட்ட அறையில் அப்படியே மயங்கி விழவும்” அவளை தோளில் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்…

அந்த அடர்ந்த காட்டில் ஒரு குகையில் அவளை அப்படியே தொப் என கீழே போட்டான். அவள் விழுந்த வேகத்தில் அவள் தலை அடிபட்டு ரத்தம் வர தொடங்கியது…

அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் அவளை அப்படியே விட்டு  குகை வாயில் வெளியே வந்தவன் அங்கு இருந்த பாறையை நகட்டி அந்த குகையை மறைத்து நடக்க தொடங்கினான்…

நடந்து சென்றவன் காட்டின் நடுப்பகுதியில் இருந்த அந்த பெரிய மரத்தின் கீழ் ஒருவன் உடல் உயிர் இல்லாமல் இருபதை பார்த்து ஒரு “வெடி சிரிப்பை சிரித்து விட்டு”, அங்கு இருந்து நடக்க தொடங்கினான்…

 அவன் பின்னே அவன் ஆட்கள் நடந்தனர். காட்டை விட்டு வெளியே வந்தவன் அங்கு நின்று கொண்டு இருந்த‌ தனது “ ஃபெராரி”காரில் ஏறி அமர்ந்து தன் வீட்டை நோக்கி பயணம் செய்தான்…

கார் ஒரு “பெரிய வீட்டின் முன் வந்து நின்றது”. காரில் இருந்து இறங்கியவன்…

எங்கும் நிற்காமல் தனது அறைக்கு வந்தவன், குளியலறை நுழைந்து அங்கு இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தான்…

அவன் இதழ்களில் இத்தனை வருடம் இல்லாத அந்த  அழகிய சிரிப்பு  தன்னை தானே ரசித்து பார்த்தவன் விழிகள்  உக்கிரம் கொண்டு “இனிமே ஒனக்கு நரகத்த காட்டுவன்டி” என்று சொன்னவன் குளித்து முடித்து விட்டு வெளியே வந்து பெட்டில படுத்து இத்தனை நாள் இல்லாத நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

இங்கே அந்த அடர்ந்த காட்டில் அந்த குகையின் நடுவில் கிடந்தவள் மெதுவாக கண் திறந்து பார்த்தாள். தலை வலிக்க ஆரம்பித்தது. கண்கள் திறக்க முடியாமல் கண்களை திறந்து பார்த்தவளுக்கு இருட்டாக தெரிந்தது…

பசி வேறு எடுக்க ஆரம்பித்தது. அப்பொழுது தான் என்ன நடந்தது என்று அவளுக்கு நினைவு வந்தது…

அவள் பறவை ,விலங்குகள்    ஆகியவற்றை தன் கேமர மூலம் படம் எடுக்க வந்தாள்.ஆர்வத்தில் மிகவும் காட்டின் நடுபகுதிக்கு வந்ததை உணர்ந்து… 

திரும்ப நடக்க தொடங்கிய நேரம் அவள் காதில் மனித அலறல் சத்தம் கேட்கவும்.        பயத்துடன் சத்தம் வந்த திசை நோக்கி நடந்தாள்…

ஒருவனது உயிரை சிங்க வர்மன் தன கைகளால் “ஒருவனது உயிரை எடுத்து”  கொண்டு இருந்தன்.    

  அதை பார்த்த பெண்ணவள்  கத்திய‌” சத்தம் கேட்டு திரும்பியவன்” அவளை ஆழ்ந்து பார்த்தவன், அவன் பார்வை தன் புறம் திரும்பவும் தலை தெரிக்க ஓடினாள்.

தன் கையில் இருந்த கத்தியை  கீழே போட்டவன், அவளின் பின்னால் துரத்தி சென்று அவளை அவன் பிடித்து வந்து அடைத்தது வைத்து இருப்பதை உணர்ந்து கண்ணீர் விட்டு அழுதாள்… 

ஆனால் இங்கு இவள் கண்ணீரை துடைக்க யாரும் வரபோவது இல்லை, என்று அவளுக்கு தெரியாமல் போனது… 

அவளை இன்னும் இன்னும் வதைக்கவே, அவளை அவன் அங்கு  அடைத்தது வைத்து  இருக்கிறான்,என்பது அவளுக்கு புரியவில்லை…

அழுது அழுது அப்படியே உறங்கியும் போனால். நாளை அவளுக்கு என்ன காத்துக் கொண்டு இருக்கிறது, என்று தெரியாமல்…

காலை பொழுது  மெதுவாக விடிய தொடங்கியது…. 

மீண்டும் வருவான். . .

 

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top