அரக்கன் 2

காலை பொழுது மெதுவாக விடிய தொடங்கியது. மெதுவாக கண் விழித்து பார்த்தான்,வர்மன்.மணி 4 என காட்டவும் எழுந்து குளியலறை நுழைந்து “ஃப்ரெஷ் ஆகி வெளியே வந்தவன் ”நேராக அவனது ஜிம்மிற்குள் நுழைந்து கொண்டான்.

தனது அனைத்து உடற்பயிற்சிகளையும் முடித்து வெளியே வந்தவன், குளித்து முடித்து ரெடி ஆகி கீழே வந்தவன்,கலை உணவை முடித்து விட்டு வாசலை நோக்கி நடந்தான்.

அவன் பின்னே நடந்து வந்த அவனது ஆட்களை  வர வேண்டாம், என  தலை அசைத்து விட்டு நேராக தன் அலுவலகம் நோக்கி காரில் புறப்பட்டான்.

கார் நேராக அலுவலகம் வந்தது அடைந்ததும், காரை நேராக பார்க்கிங் செய்து விட்டு அவன் திரும்பி  அந்த பத்து மாடிக் கட்டிடத்தின் உள்ளே நுழைந்து நேராக மின் தூக்கி‌ வழியாக அவன் தளத்திற்குள் நுழைந்தான்.

அவனை பார்த்ததும் அனைத்து ஊழியர்களுக்கும் வணக்கம் சொல்ல முக இறுக்கத்துடன் தனது அறைக்குள் சென்றான்.  எஸ் வி குரூப் எனும் பெயரில் பல தொழில் நடத்தி வருகிறான்…

“எஸ் வி” என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது, அனைத்து ஊழியர்களும் அவனது முகத்தில் உள்ள கோவத்தை பார்த்து நடுங்கி கொண்டு இருக்க அறையின் உள்ளே இருந்து ராம் என்ற கர்ஜனையில், ராம் என்பவனே கதிகலங்க கையில் ஃபைல் உடன் கதவருகே சென்றவன் .

எஸ்யூஸ்மி சார் என்று பவ்யமாக கேக்க எஸ் என்ற சத்தம் வரவும்  மெதுவாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று வர்மன் முன் நிற்க  அவனோ ராம் இடம் நேத்து கேட்ட ஃபைல் எங்க என்று கேட்டேன்.

அதனை கேட்டதும் அவன் கை, கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. பாஸ் அது, அது, வந்து என திக்கி தினறி அழைக்க வாட் என்ற சத்தத்தில் விவிதா கிட்ட இருக்கு அவங்க இன்னும் வரல என்ற சொல்லி முடிக்க,

மேசை மீது இருந்த ஃபயிலை தூக்கி அவன் மீது எறிந்தவன் கேட் அவுட் இடியட் என்று கத்த ராம் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

வெளியே வந்து மூச்சு வாங்கியவன் நிமிர்ந்து பார்க்க அங்கே ஓடி வந்து கொண்டு இருந்தால் பெண் ஒருத்தி வைட் சர்ட் ரெட் ஸ்கர்ட் முட்டிக்க கீழ் வரை இருந்தது.

பால் வண்ண நிறத்தில் பார்க அனைவரையும் கவரும் அழகிழ் உதட்டில் அடர் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு ஓடிவந்தாள் …

அவள் வருவதை பார்த்த ராம் அவளை தீயக முறைக அவனை கண்டு கொள்ளாமல் எம் டி அறை கதவை நோக்கி சென்றவள், 

ஆழ்த மூச்சு விட்டு கொண்டு மே ஐ கம் இன் சார் என்று அவள் கேட்க  எஸ் என்றான்.

அவள் கதவை திறந்து உள்ளே நுழையவும், ஏசி காற்று அவள் முகத்தில் படவும் அதை கண் மூடி ரசித்தாள், அங்கே ஒருவன் பார்வையாலேயே அவளை எரித்து கொண்டு எழுந்து நின்றான்….

கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தாள் தன் எதிரில் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவள் வந்ததில் இருந்து அவள் செய்த அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்தான் ….

அவள் பேச வரும் முன் அவளை மேல் இருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன், அருகில் இருந்த டேபிள் மீது இருந்த டீ கப் பை எடுத்து அவள் முகத்தில் சுதாகரிக்கும், முன் ஊதினான்…..

அவள் அவனை பயந்து பார்க்க கெட் அவுட் இடியட் என்று கத்தி இருந்தான் …..

அவள் வெளியே சென்றாவளை அனைவரையும் பார்த்தாள், அனைவரும் அவளை பார்த்து விட்டு தனது வேலையை பார்க்க தொடங்கினர்…

 அவர்கள் பார்வயோ இது என்றைக்கும் நடக்கும் ஒரு விசயம் போல் இருந்தது….

அவளும் வழக்கமாக நடப்பது போல் அங்கு இருந்த ரூமில் நுழைந்து முகத்தை நீரில் கழுவி விட்டு தனது ஆடையை மாற்றிவிட்டு வெளியே வந்தவள், மீண்டும் எம் டி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவன் இல்லை ….

நீண்ட மூச்சு விட்டு கொண்டு தனது வேலையை செய்ய ஆரம்பித்தாள்…….

அந்த குகையில் கண்விழித்து பார்த்தாவள்,கண்களை விரித்து நன்றாக பார்த்தாள்,பார்த்தவளுக்கு   ஆட்சரியம்.அந்த குகை  அப் படியே ஒரு வீடு போன்று இருந்தது.

அவள் தடுமாறி எழுந்தவள், அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியலறை எங்கு இருக்கிறது என்று பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாவள் தன் தேவைகள் முடித்து விட்டு அங்கு இருந்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்…

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top