அசுரன் 71

அசுரன் 71

 

ரதி சொன்ன பதிலை கேட்டு அருவருப்பின்  உச்சத்திற்கு சென்ற அருண்… கோபத்தில்… 

கிடைச்ச இடத்தில எல்லாம் வாய் வைக்கிறதுக்கு ஆர் யூ பி*? என்றான்.. 

If there was a male version, it’d be u அவனுக்கு சளைக்காமல் பதிலளித்தாள் ரதி… இருவருக்கும் சுற்றத்தை பற்றி கவலை இல்லை…

 

அவள் பதிலில் கோபத்தின் எல்லை கடந்தவன்… தனது பின் தலையை இருமுறை தட்டிக் கொண்டவன்… உன்ன மாதிரி கெடச்ச இடத்துல எல்லாம் நக்குற ஆள் இல்ல நானு… ஐ ஹேவ் ஸ்டேட்டஸ்… அதனாலதான் நீ என் வைஃபா  இந்த இடத்தில நிக்கிற… என்று நெஞ்சை நிமிர்த்தி ரதியை பார்த்து அழுத்தமாக அருண்கூற… 

 

நீ சொல்றபடி பார்த்தா தகுதி இல்லாத இடத்தில வாய் வச்சதனாலதான் நீயும் ஹஸ்பண்டா என் பக்கத்துல வந்து நிக்கிற… என்று நக்கல் தோணியில் ரதி கூற… 

 

இருவரும் சராமாறியாக ஒருவரை ஒருவர் கேவலப்படுத்திக் கொண்டிருப்பதை… என்னடா நடக்குது இங்க… என்னடா பேசுறீங்க எனும் விதமாக திகில் அடித்தபடி பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்… 

இவர்கள் இருவரையும் எப்படி தடுப்பது என்றே அவன் மண்டைக்கு உரைக்கவில்லை.. 

 

இதற்கிடையில் போதை ஆசாமி மண்டையில் ரத்தத்துடன் எழுந்து… கிஸ்ஸே கொடுக்கல… ஆனா அதுக்குள்ள மண்டையில சும்மா சுருனு ஏறுது… அப்ப கிஸ் குடுத்தா எப்படி இருக்கும் என்று அவன் கேட்க…

 

செத்துருவடா நாயே…  என்றான் விக்ரம்… பின் அவன் அழைத்திருந்த ஆம்புலன்ஸ் வர அடிபட்டவனை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான்.

 

அடுத்த தடவையும் இதே மாதிரி ஒரு ஆஃபர் வந்தால் என்னையவே கூப்பிட சொல்லுங்க என்று கூறிவிட்டு… தனது போன் நம்பரை அவன் உளர ஆரம்பிக்க… ஆம்புலன்ஸ் அந்த இடத்தை விட்டு கிளம்பி சென்றது…

 

ஐயோ.. என தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம். திரும்பி பார்-குள் வந்து பார்க்க இரண்டு பேரும் இன்னும் போதையில் கத்திக் கொண்டிருந்தனர்.

 

நான் உன்ன கல்யாணம் பண்ணலனா கடைசி வரைக்கும் வேலைக்காரிக்கு புருஷனா தான்டா இருந்திருப்பே…

 

உன்ன மாதிரி ஒரு தெரு நாய்க்கு புருஷனா இருக்குறத விட அவளுக்கு புருஷனா இருந்திருந்தா சந்தோசமா இருந்து இருப்பேன்…

 

மைண்ட் யுவர் வேர்ட்ஸ் அருண்… நீ தான் தெரு நாய் அதனாலதான் ஹாஸ்டல் வாசல்ல நின்னு பிச்சை எடுத்துட்டு இருந்த…. எனக்கு வாழ்க்கை கொடு அப்படினு… என்று ரதி ஏளனமாய் சொல்ல…

 

உன்ன கட்டின நான் வாழ்கை பிச்சை தான் எடுக்கணும்… என்று ஏகிரியபடி  ஒரு அடி முன்னே சென்றவனை… கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் விக்ரம்…

 

ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் ஒய்ப் சண்டை போடுற மாதிரியா போடுறீங்க…  ஒருத்தர ஒருத்தர் இவ்வளவு இழிவா பேசிக்கிறீங்க… அதுவும் பப்ளிக் பிளேஸ்ன்னு கூட பாக்க மாட்டேங்கறீங்க… என்று கூறியபடி அருளின் கையை பிடித்து தரதரவென்று இழுத்து வந்தான் விக்ரம்..  

 

போதையில் இருக்கும் இருவரையும் காரில் ஏற்றி, ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வந்தான் விக்ரம். கணவன் மனைவி இரண்டு பேரும் காரிலும் கூட வாயை மூடவில்லை… ஒருத்தரை ஒருத்தர் வசைப்பாடி கொண்டு தான் இருந்தார்கள்… வண்டியை பாதியிலேயே நிறுத்தி இருவரையும் குளத்தில் தள்ளி விடலாமா என்ற அளவுக்கு யோசித்தான் விக்ரம்…

 

இருவர் வந்த நிலையை சக்கரவர்த்தியும் கவனித்தார்…

இருவரிடமும் எதுவும் கேட்க வேண்டாம் என்று சைகை காண்பித்தான் விக்ரம்… 

இருவரும் தங்களது படுக்கை அறையில் பொத்து என்று விழுந்தவர்கள்… போதையில் நன்றாக உறங்கி விட்டனர். வீட்டிற்கு வந்த இருவரும் பிள்ளையும் செய்வார்கள் என்று விக்ரம் நினைத்திருக்க போதை தலைக்கேறி மட்டையாகிவிட்டனர் இருவரும்.. 

உண்மையில், “அப்பாடா” என்று இருந்தது விக்ரமிற்கு.

 

உண்மையில் இப்பொழுது அருணின் வாழ்க்கையை நினைத்து விக்ரமுக்கு கவலை வந்தது… இன்று ரதி நடந்து கொண்ட முறை.. அவனுக்கே அருவருப்பை தோற்றுவித்தது… ஒரு நொடி தாமதித்திருந்தாலும் அடுத்த ஆடவனை முத்தமிட்டிருப்பாள்… அதுவும் தன் காதல் கணவன் முன்னால்…  எப்படி அவளால் முடிந்தது தனது ஈகோவிற்கு தீனி போட எந்த எல்லை வரையும் செல்லுவாள் என்று புரிந்தது. இவர்கள் இருவரின் சண்டையில் ரித்துவின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயம் வேறு மனதை அழுத்தியது… விடிந்ததும் இதைப்பற்றி அருளிடமும் ரதியிடமும் பேச வேண்டும் என எண்ணி இருந்தான் விக்ரம்…

 

என் கடமையை செய்ய என்னை மிஞ்ச ஆளில்லை எனும் விதமாய் தனது கதர்களை பூமியில் பரப்பி உலகை உயிர்பித்தான் கதிரவன்..

 

தனது அலுவலகத்திற்கு கிளம்பிய விக்ரம்..  நேராய் சென்றது என்னமோ அருணின் அறைக்கு தான்… அரை வாசலில் நின்று அருணிற்கு போன் செய்தான்..  போனை பார்த்தபடியே கதவை திறந்தான் அருண்… அவனும் குளித்து கிளம்பி இருந்தான் அலுவலகத்திற்கு…

 

வாடா மச்சான்… என்னடா என்கிட்ட ஏதாவது சொல்லனுமா என கேட்க…

 

அவன் முகத்தைப் பார்த்த விக்ரம்… தெளிவாய் இருப்பவனை காலையிலேயே குழப்ப வேண்டாம் என்று எண்ணி ஒன்னும் இல்ல… ஆபீஸ் போகலாம்..  கூப்பிட வந்தேன்… என்றான்… அலுவலகத்தில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தான்.

 

அவர்கள் பேசிக் கொண்டு இருக்க இடையே அவர்களை கடந்து வெளியே வந்தாள் ரதி.. அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை… 

 

வேகமாய் படி இறங்க சென்றவள்.. தலைசுற்றி கிறுகிறு என வர அப்படியே மயங்கி சரிந்தாள்…

 

அவளைக் கண்ட அருணும் விக்ரமும் பார்த்து..  பார்த்து… என கத்திக் கொண்டே அவள் அருகில் வர… வர…

 

மயங்கியபடியே  படிகளில் உருண்டு கடைசி படியில் தேங்கி கிடந்தாள்… 

 

அதன்பின் தான் அருணால் அவளை நெருங்க முடிந்தது வேகமாய் கன்னத்தை தட்டி எழுப்ப விக்ரம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்ப…

 

கண்விழிக்கவில்லை ரதி…

 

உண்மையில் இரு ஆடவன்களும் அரண்டு விட்டனர்…

 

இருவரும் வேகமாய் ரதியை தூக்கிக்கொண்டு காரில் கிடத்தி மருத்துவமனையை நோக்கி புயல் வேகத்தில் புறப்பட்டனர்… அருண் மடியில் ரதியை படுக்க வைத்திருந்தான் விக்ரம் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்…

 

என்னடா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா என்ன ஆகி இருக்கும் என்று அருண் பதட்டமாய் கேட்க…

 

தெரியல டா மச்சான்… ஹேங்க் ஓவரா இருக்கும்… என்றான் விக்ரம்…

 

எதையோ ஆழமாய் யோசித்த அருண்…

 

ஒருவேளை அப்படி இருக்குமோ என்றான்..  மொட்டையாய் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்.. 

 

எப்படிடா…

 

ஒருவேளை பிரக்னண்டா இருப்பாளோ… என்று அருண் சந்தேகமாய் கேட்க…

 

சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான் விக்ரம்…

 

என்னடா சொல்ற உண்மையா தான் சொல்றியா எனும் விதமாய் விக்ரம் கேட்க…

 

ஒருவேளை அந்த மாதிரி இருந்தா படியில் உருண்டு வந்ததுல ஏதாவது ஆயிருக்குமோ என்று அருண் அடுத்த சந்தேகத்தை கேட்க…

 

காரை ஸ்டார்ட் செய்து அருகில் இருக்கும் மருத்துவமனையில் நிறுத்தினான் விக்ரம்.

 

ரதியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்ற அருண்… பெண் மருத்துவரிடம்.. காலையில மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அவங்க பிரக்னண்டா இருக்க வாய்ப்பு இருக்கு கொஞ்சம் சேஃப்டியா ஹேண்டில் பண்ணுங்க.. என்று கூறிவிட்டு வெளியே வந்து காத்திருந்தான்…

 

அவன் அருகில் வந்த விக்ரம்… நாடியை தேய்த்தபடி அருணை தான் ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டே நின்றான்.

 

என்னடா ஏன் அப்படி பாக்குற…

 

இல்ல மலர் போனத நெனச்சு குடிச்சுட்டு குப்புற விழுந்து கிடந்த… உன் பையன் கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டு இருந்த… நீயும் ரதியும் சண்டை போடாத நாலே இல்ல… 

 

ஆமா அதுக்கு என்ன இப்போ?….

 

பச்சையா என்ன கேக்க வைக்காதடா மச்சான்…

 

அப்ப குழந்தை மட்டும் எப்படின்னு கேட்க வரியா… அது வேற டிபார்ட்மெண்ட் இது வேற டிபார்ட்மென்ட் டா…. என்று அருண் விளக்கம் அளிக்க…

 

நான் மலர நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சுக்கணும்னு நெனச்சேனே தவிர ரதிய டைவர்ஸ் பண்ணனும்னு நான் நினைக்கல… ஸ்டில் நொவ் ஐ லவ் ஹேர்… என்றான். என்ன அப்பப்போ என்ன ரொம்ப டென்ஷன் படுத்தி பார்க்கிறா..  அப்போதான் செவுள சேந்து ஒரு அறை அரையலாம் போல இருக்கு… மத்தபடி நல்லவ தான்… என்று பொண்டாட்டிக்கு வரிந்து கட்டிக் கொண்டு வர… பாவம் போதையில் நேத்து பொண்டாட்டி செய்த அருவருப்பான செயலை மறந்து விட்டான் போலும்… ரித்துக்கு ஒரு தங்கச்சி பாப்பா வருமாடா… ஒரு த்ரீ இயர்ஸ் கேப் வரட்டும்னு சேப்டியா தான் இருந்தேன்… எங்கேயோ மிஸ் ஆயிடுச்சு போல… என்று யோசித்தவனை…

 

நீங்க எல்லாம் என்ன மாதிரியான ஜென்மங்கடா என்று முகத்தை கோணிய படி பார்த்து வைத்தான் விக்ரம்…

 

சில பரிசோதனைகளை முடித்துவிட்டு… சிறிது நேரத்தில் மருத்துவர் அவர் அறைக்கு வந்தார்… அருண், விக்ரமும் அறையுள் நுழைந்தனர்.  

யோசனையில் இருந்த மருத்துவர்…

பேஷன்ட்க்கு நீங்க யாரு? என்று கேட்டார்… 

 

நான் அவளோட ஹஸ்பண்ட் அருண்… இவன் என்னோட ஃப்ரெண்ட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்…

 

ஓஹோ என்று யோசனை யுடன் கூறியவர்… அவங்களுக்கு ஒரு பிரச்சனை இல்ல நேத்து ட்ரிங்க்ஸ் பண்ணாங்களா?… 

 

ஆமாம் எனும் விதமாய் அருண் தலையசைக்க…

 

நேத்து நைட்டும் எதுவும் சாப்பிடாம இருந்திருக்காங்க ட்ரிங்க்ஸ் பண்ணி இருக்காங்க இன்னைக்கு காலையிலயும் எதுவும் சாப்பிடல அதனால குளுக்கோஸ் லெவல் ரொம்ப லோ ஆகி மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க இப்போ அவங்களுக்கு குளுக்கோஸ் ஏறிக்கிட்டு இருக்கு… இன்னும் கொஞ்ச நேரத்துல சரி ஆயிடுவாங்க என்று கூறியவர்… அருள் முகத்தை குழப்பத்துடனே பார்த்துக் கொண்டிருந்தார்…

 

ஏன் டாக்டர் அப்படி பாக்குறீங்க என்று அருண் கேட்க…

 

நீங்க நெஜமாவே அவங்களோட ஹஸ்பண்டா என்று சந்தேகத்துடன் மருத்துவர் வினவ…

 

ஆமா டாக்டர் என்று கூறியவன் ஆதாரத்திற்காக தனது செல்போனில் இருந்த தங்களது திருமண புகைப்படத்தை அவரிடம் காட்டினான்…

 

உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது…

 

எனக்கு ஒன்ற வயசுல ஒரு குழந்தை இருக்கான் டாக்டர்…

 

ஓகே… என்று எதையோ சொல்ல வந்து யோசித்து கொண்டிருந்தார் மருத்துவர் பேனாவை டேபிளில் தட்டியபடியே…

 

அவர் தயக்கத்தை கண்டவன்… என்ன டாக்டர் அவளுக்கு எதுவும் பிரச்சனையா எதுனாலும் மறைக்காம உண்மைய சொல்லுங்க… என்று அருண் வேண்டுகோள் விடுக்க…

 

அது வந்து சார்… அவங்க பிரக்னண்டா இருக்காங்களான்னு செக் பண்ணுங்கன்னு நீங்க சொன்னதுனால நான் சொல்றேன்.. 

 

இனிமேல் அவங்க பிரகனண்ட் ஆக மாட்டாங்க… என்று மருத்துவர் சொல்ல…

 

ஏன் டாக்டர்… ரொம்ப வீக்கா இருக்காளா… இல்ல உடம்புக்கு வேற ஏதாவது பிரச்சனையா ? எவ்வளவு செலவானாலும் ட்ரீட்மென்ட் பண்ணலாம்… எந்த நாட்டுக்கு வேணா போய் பண்ணலாம்… என்ற அருண் உணர்ச்சி வேகத்தில் சொல்ல…

 

கொஞ்சம் பொறுமையா இருடா டென்ஷனாகாத அவங்க முழுசா சொல்லட்டும் என்று விக்ரம் அவனை அமைதி படுத்தினான்….

 

அவங்களை எந்த நாட்டுக்கு கூட்டிட்டு போனாலும் எதுவும் பண்ண முடியாது சார், நீங்க அவங்களோட ஹஸ்பன்ட் சொல்றீங்க ஆனா உங்களுக்கு இது எப்படி தெரியாம இருந்துச்சுன்னு எனக்கு தெரியல என்று கூறி ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவர்…

 

அருண் விக்ரமும் கலவரமாய் அவர் முகத்தை பார்த்திருக்க…

 

அவங்களுக்கு கர்ப்பப்பையே இல்ல சார்.. சமீபமா அதை ஆப்ரேட் பண்ணி ரிமூவ் பண்ணி இருக்காங்க… சோ இனி யார் நினைச்சாலும் அவங்களால குழந்தை பெத்துக்க முடியாது என்று கூறி முடித்தார் மருத்துவர்.

 

புதிதாய் கேட்ட செய்தியில் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் அருண்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top