அசுரன் 79

 அசுரன் 79 

 

வெளிநாட்டிற்கு சென்றவன்… இரண்டு நாட்கள் மது போதையில் தான் செலவழித்தான்… மூன்றாம் நாள் தெளிவாய் முடிவெடுத்தான்… இப்படியே போனால்… போதை தன்னை முழுதாய் ஆக்கிரமித்து விடும் என்று எண்ணி… மருத்துவரின் ஆலோசனையின் பேரில்… தனது சிந்தனையை உடற்பயிற்சியிலும் தொழிலிலும் காட்டத் தொடங்கினான்… உடலும் உரம் ஏறியது… தொழிலும் வலுப்பெற்றது…  ஆனால் மனதுக்குள் ரீங்காரமிடும் அந்த தேவா என்று குரல் ஓயவில்லை… அவனை தூங்க விடவில்லை… கனவில் வந்தவளிடமே “ப்ளீஸ் என்னை விட்டுப் போயேண்டி” என்று கெஞ்சிப் பார்த்தான்… அவள் நினைவை வலுக்கட்டாயமாய் தள்ளி வைக்கும் பொழுதெல்லாம்..  வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்ந்தான்…

 

இந்த கஷ்டத்திற்கு பதிலாக அன்று நடந்த ஆக்சிடென்டில் செத்திருக்கலாமோ… என்று தோன்றியது… 

 

தன் வாழ்வில் வேறொரு பெண் வந்தால், அவளுடைய நினைவை தவிர்க்கலாம் என்று முடிவு செய்து… சைத்ராவின் ஒரு இரவு ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டான்…

அடங்க மறுத்த தனது மனதை தட்டி கொடுத்து… டுடே யூ நீட் இட்.. என்று தன்னை தயார்படுத்தி விட்டு…

 

ஹோட்டல் அறை வரை சென்றவனின் மனம்… இது இத்தனை நாள் நீ கட்டிக் காப்பாத்தினா ஒழுக்கத்துக்கு இது நல்லதே இல்ல என்று அவனிடமே தர்க்கம் செய்தது… சோர்ந்து படுக்கையில் கண்ணை மூடி உட்கார்ந்தான்…

 

எனக்கு அவளை மறக்க வேற வழி தெரியல… என்று தனது மனதிற்கு விளக்கம் சொல்லி கொண்டு இருந்தவனின் உடம்பில்… சைத்ராவின் கைகள் ஊர… அருவருப்பின் உச்சியில் அதற்கு மேல் நகர விடாமல் அவளது கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டான்…

 

ஃபர்ஸ்ட் அப்படித்தான் இருக்கும் போகப் போக சரியாயிடும்… என்று மனதுக்குள் சமாதானம் உரைத்துக் கொண்டே…  சண்டையிட செல்லும் மல்யுத்த வீரன் போல்…   யு கேன் டூ இட்… யு கேன் டூ இட்… என்று தன்னைத் தானே ஊக்குவித்துக் கொண்டவன்… 

வேகமாய் படுக்கையை விட்டு எழுந்தவன்… இரு கைகளாலும் சைத்ராவின் முகத்தை தாங்கி… அவன் முத்தத்திற்காக விழி மூடி எதிர்பார்த்து நிற்கும் பெண்ணவளின் உதட்டை பார்த்த நொடியில்… காதில் ரீங்காரம் இட்டது அவளின் தேன் குரல்… “தேவா ப்ளீஸ் வேணாம்”

 

அவளின் இதழ் வரிகள் தான் நினைவு வந்தது… மென்மையாய் பஞ்சுமிட்டாய் போல்… அதை எல்லாம் கடந்து எப்படியோ கண்ணை மூடி இழுத்து பிடித்து… அவள் இதழை தனது இதழ் வரை நெருக்கி கொண்டு வந்தவனை..  நாசியில் ஏறிய தன்னவள் அல்லாது வேறு பெண் வாசம் தனித்து தெரிய… குமட்டி கொண்டுவர…  சைத்ராவை வேகமாய் தள்ளி நிறுத்தி… சாரி… ஐ காண்ட் டு ஈட் என்று கூறிவிட்டு நிமிடமும் அந்த இடத்தில் நிற்காமல் காரை நோக்கி ஓடி வந்து விட்டான்…

 

ஒரு பெண்ணை இந்த நிலையில் பார்த்தும் எதுவும் செய்யாமல் ஓடி வந்தவனை ஆண்மை இல்லாதவன் என்றே தீர்மானித்து விட்டாள் சைத்ரா… 

 

அதைப் பற்றி எல்லாம் அவனுக்கு கவலை இல்லை… 

தன்னிலையை சரி செய்ய ஒரு பெண்ணை பயன்படுத்த நினைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு தான் மனதில் தலை தூக்கியது… 

 

நாட்கள் செல்ல செல்ல ஆதியின் நிலையில் பெரிதாய் மாற்றம் இல்லை என்றாலும்… தனியாய் இருப்பதை தவிர்த்தான் ஏதோ ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருந்தான்…. தூக்கம் முற்றிலும் தொலைந்து போனது… 

பகல் நேரத்தில் வெளிநாட்டில் அலுவலகத்தில் இருப்பவன் இரவு நேரத்தில் ஆன்லைனில் இந்தியாவில் உள்ள தொழிலை கவனித்துக் கொண்டான்… நேரத்தை கடத்துவது மிக எளிதாகவே இருந்தது அவனுக்கு.. லாபமும் பெருகியது… அவளை மறந்து விட்டானா என்று கேட்டால்… அவள் நினைவு வருவதை தவிர்த்துக் கொண்டே இருந்தான்…

 

ஆனால் அவன் கடந்த காலத்தில் சுற்றி போட்டு வைத்திருந்த அனைத்து வேலையாட்களிலும் இருந்தும் மலரை பற்றிய அனைத்து தகவல்களும் வந்து சேர்ந்தது… எது புடிக்கும்.. பிடிக்காது.. என்ன படித்தால்… என்ன படிக்க வேண்டும் என்று நினைத்தாள்… அவளின் தந்தை,தாய்,தங்கை  என்று மொத்த தகவலும் அவன் கையில் கிடைத்தது காலதாமதமாய்…

 

அருண் வீட்டில் நடப்பவைகள் விக்ரமின் மூலம் ஆதிக்கு தெரிய வரும்…

 

ஒருவேளை அருணும் மலரும் மனம் ஒத்து வாழ ஆரம்பித்து இருந்தால்… அவன் மனது கொஞ்சம் சமன்பட்டு இருக்கும்…

 

அவள் படும் துன்பங்களைக் கேட்டு… ஆத்திரம், இயலாமை, கண்ணில் வைத்து காக்க வேண்டிய என் கண்மணியை இப்படி தொலைத்து விட்டேனே… என்று மனதிற்குள்ளே புழுங்கி போவான்…

 

அருண் ரதியை பற்றி தெரியும் பொழுது கூட இந்த துரோகத்தை அவளால் எப்படி தாங்கிக்கொள்ள முடிந்ததோ… எப்படி துடித்தாளோ என்று அவளை எண்ணி அவன் துடித்தான். 

 

அருண் ரதியை திருமணம் செய்ய ஆதிக்கு விருப்பம் இல்லை தான் அவன் கேள்விப்பட்டவரை ரதியின் செயல்பாடுகள் சரியில்லை… ஆனால் அருணின் குழந்தை வயிற்றில் இருப்பதால் இந்த கல்யாணத்தை நிறுத்த அவன் முன் வரவில்லை…

 

அவன் வரவேற்பை முன்னிட்டு தான் ஆதி வரவழைக்கப்பட்டான்.. ஆனால் அவன் வந்ததோ அவளுக்காக… 

 

சிட்டு யாரு?

 

இந்த கேள்வியை மலர் போனில் கேட்டதும்… நேர்ல வந்து சொல்றேன் என கூறிவிட்டு போனை வைத்தவன் தனது இருக்கையில் அமர்ந்தபடி தலையை மேலே தூக்கி ஒரு கையால் கண்ணை மறைத்தபடி… தன் வாழ்வில் சிட்டு யார் என நினைத்துப் பார்த்தான்..

இது அனைத்தையும் அவளுக்கு புரிய வைக்க முடியுமா என்று தெரியவில்லை என்று ஒரு ஆழ்ந்த மூச்சுடன் இருக்கை விட்டு எழுந்தவன் வீட்டை நோக்கி புறப்பட்டான்…

 

வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் சென்று அமர்ந்தான்… அவன் வந்தது தெரிந்ததும்… அதுவரையில் அமைதியாய் கிச்சனில் வேலை செய்து கொண்டிருந்தவள் பாத்திரங்களை டம்… டும்.. என்று உருட்டினாள்…

 

சோபாவில் ராஜதோரானையில் உட்கார்ந்து இருந்தவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்… அவள் முகத்தில் டன் கணக்காய் கோபம் தாண்டவம் ஆடியது… அதுவே அவனுக்கு சுவாரசியத்தை கூட்டியது… பெரிதாய் அவள் கோபப்பட்டு அவன் பார்த்ததே இல்லை… இன்று தான் பார்க்கிறான்…

 

என்ன கேட்கணுமோ அதை என்கிட்ட நேரடியா கேளு… என்றான் சத்தமாய்.

 

சிவந்த கண்களுடன் அவனை முறைத்தவள்… தனது அறைக்கு சென்று பரிசு பெட்டியை எடுத்து வந்து அவன் முன் வைத்தாள்… என்ன இது என்பது போல்…

 

பாத்தா தெரியலையா கிஃப்ட் என்றான்…

 

யாருக்கு? என்றாள் கடுகடுப்பாய்… 

 

வேற யாருக்கு சிட்டுக்கு தான்…

 

சிட்டு யாரு?

 

அதுலையே எழுதி இருக்கேனே.. ஷி இஸ் மை லவ்.. 

 

ஓஹோ… அவன் பதிலைக் கேட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவள்…  கண்ணில் முறைப்புடன்… இத கார்ல நேத்து கேட்கும் போது ஏன் சொல்லல என்றாள். அடக்கப்பட்ட கோபத்துடன்…

 

பேர் தெரியாத ஒரு பொண்ண பத்தி சொல்லி நமக்குள்ள இருந்த அந்த பிளசன்ட் மூட கெடுத்துக்க சொல்றியா… 

 

அதுவும் சரிதான்… நான்தான்… நமக்குள்ள…. அதற்கு மேல் வார்த்தை வரவில்லை… தொண்டை அடைக்க…

என்னென்னமோ தப்பா புரிஞ்சுகிட்டேன்… என்று திக்கி திக்கி  விரக்தியில் பேசியவளின்… 

பெருமூச்சு அடங்குவேனா என்றது மார்புக்கூடு ஏறி ஏறி இறங்கியது… அவன் கூறிய பதிலை விட அவன் பதில் கூறிய அலட்சிய தோரணை தான் அவளை மேலும் காயப்படுத்தியது.. அவனை ஏமாற்றமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வேகமாய் தனது அறைக்குள் நுழைய போனவளை…

 

எழுந்து வந்து ஒரே இழுவையில் இழுத்து தனது பிடிக்குள் கொண்டு வந்தவன்…  அவளை பத்தி சொல்றேன் பொறுமையா கேளு என்று நிதானமாய் அவள் சிவந்த முகத்தை தன் கையால் நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து, தனது அருகில் அமர வைத்து… பொறுமையாய் சில விஷயங்களை சொன்னான்…

 

தன்னை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி முதலுதவி செய்த ஒரு பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்ததாகவும்… அவள் பெயர் கூட தெரியாமல்… வருடங்களாக அவளை தேடி அலைந்ததாகவும் மட்டும் சொன்னான்…

 

ஏனோ அவளின் எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆசை…

 

பேர் கூட தெரியாத ஒரு பொண்ண நெஜமா இவ்ளோ லவ் பண்ணீங்களா? என்று ஆச்சரியமாக விழி விரித்து கேட்டாள் மலர்… 

 

மென் சிரிப்புடன் ஆமாம் என்று தலையசைத்தவன்… நான் உன்கிட்ட சொன்னது வெறும் 10% தான்..  என்றான்.

 

இப்ப வரைக்கும் அவங்க கிடைக்கலையா? என்றாள் உள்ளே போன குரலில்…

 

அவளைப் பார்த்துக் கொண்டே.. அவளுக்கு கல்யாணம் ஆனதை பார்த்ததும் தேடுறது நிப்பாட்டிட்டேன்… என்றான்..

 

ஏனோ அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் ஒரு நிம்மதி பெரும் மூச்சு வந்தது மலருக்கு…

 

அவங்கள நினைச்சு தான் இத்தனை வருஷமா சிங்கிளா இருக்கீங்களா…

 

ஆம் என தலையசைத்தவன்… ஆனா… கனவுல அவளோட வாழ்ந்து அஞ்சு குழந்தைங்களுக்கு அப்பா நானு… என்று கண்ணை சிமிட்டி பெருமிதமாய் ஆதி கூற…

 

அஞ்சா..  என்று வாயின் மேல் கை வைத்தாள் மலர்… இருந்தாலும் தன்னவன் காதலை எடுத்துக் கொண்ட அந்த பெண்ணின் மீது சிறு பொறாமையும் வந்தது உண்மைதான்.

 

ஏண்டி… பெத்து கொடுக்க மாட்டியா என்றான்… பட்டென்று… இரு புருவத்தையும் உயர்த்தியபடி அவன்…

 

அவன் அப்படி கேட்பான் என்று எதிர்பாராதவள்…. திடுக்கிட்டு கோலிகுண்டு கண்களை உருட்டி முறைத்தவள்… அத உங்க சிட்டு கிட்ட போய் கேளுங்க… என்று கூறியபடியே எழுந்து சென்றவளிடம்…

 

அவ என்னோட கடந்த காலம்… நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் நீ தானே வாழ போற… அப்போ உன் கிட்ட தானே கேட்க முடியும்… பெத்து கொடுப்பியா மாட்டியா… என்று சத்தமாய் அதேசமயம் அழுத்தமாய் கேட்டான் …

 

இனி வாழ்க்கை முழுவதும் நீதான் என்னுடன் வாழ போகிறாய் என்று தன் காதலை சொல்லாமல் சொன்னான்..

 

முதுகு காட்டியபடி அவன் கூறியதை கேட்டு, மனதிற்குள் வெட்கப்பட்டு சிரித்தவள், 

ஒரு முத்தத்துக்கே வழி இல்லையாம்… இதுல அஞ்சு பிள்ளைக்கு நா எங்க போறதாம்… என்று அவனுக்கு கேட்கும் படியே  முணுமுணுத்து  கொண்டே சென்றாள்.

 

அதைக் கேட்டு வெட்கப்பட்டு…  வெற்றிக் களிப்பில் இருக்கைகளையும் உயர்த்தி தோலுக்கு பின்னே கட்டி நெட்டி முறித்து… தன் பின்னந்தலையை கோதிவிட்டு சிரித்துக் கொண்டான்…

 

எந்த இடத்தில் இருந்து எண்ணங்கள் எல்லை மீறியது என்று இருவருக்கும் தெரியவில்லை… இருவரும் காதலிக்கிறேன். என்று சொல்லிக் கொள்ளவில்லை… ஆனால் இருவருக்கும் உள்ளே இருந்த காதலை மற்றொருவர் உணர்ந்திருந்தனர். உணர்வுகளால் பகிர்ந்து கொண்டனர்..  அவன் காதலை உணராமல் போனால் தான் ஆச்சர்யம்.. அது எப்போதும் அவளை தானே சுற்றி கொண்டு இருக்கிறது… 

 

முதலில் அந்த பரிசு பெட்டியை பார்த்து கொந்தளித்த மலரின் மனம்… உடைகளை தொட்டுப் பார்க்கையில் அவை அனைத்தும் புதிது.. கடந்த காலத்தில் யாருக்கோ வாங்கி வைத்திருக்கிறான் என்று புரிந்தது…   சிட்டுக்காக காத்திருக்கிறேன் என்று எழுதி இருந்ததே..  அப்படியானால் அந்தப் பெண் இன்னும் இவரை வந்து சேரவில்லை என புரிந்து கொண்டாள்..  அதன் பின்னே அவளின் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது… அனைவரின் வாழ்க்கையிலும் கடந்த காலம் என்பது ஒரு பகுதி, அதை கடந்து மறந்து வாழப் பழகியவர்களே வாழ்க்கையின் அடுத்த நிலையை அடைய முடியும் என்பதை மலரும் அறிவாள். சிட்டு இனி அவன் வாழ்வில் இல்லை என அவன் வாய் மொழியில் கேட்ட பின்பு முழு நிம்மதி அடைந்தாள்…

 

ஆதி நினைத்தால் நீ தான் சிட்டு என்று ஒரே வார்த்தையில் சொல்லி அவனது கடந்த காலத்தை விவரித்து இருக்க முடியும்… ஆனால் 

தன் மேல் இப்பொழுது அவளின் மனதுக்குள் துளிர் விட்டிருக்கும் அந்த புத்தம் புது காதலை முழுமையாக அனுபவிக்க நினைத்தான்… 

தன்னுடைய அதீத காதலைப் பற்றி சொல்லி அவளை அவன் பயமுறுத்த நினைக்கவில்லை… அவள் மீது இருந்த காதலால், மருத்துவ ஆலோசனை வரை சென்றதை சொல்லி… அவளை குற்ற உணர்வுக்கு ஆளாக்க விரும்பவில்லை… 10% சொன்னதற்கே அவ்வளவு லவ்வா என்று விழி விரித்தவள்… 100% பற்றி சொன்னால் என்ன ஆவாளோ?..  தன்னுடைய முன்னாள் காதலை நினைத்து தன்னுடைய இந்நாள் காதலி காட்டும் பொறாமை  பிடித்திருந்தது.. 

 

காதலிப்பது இன்பம் என்றால்… 

காதலிக்கப்படுவது பேரின்பமாய் தெரிகிறது…

 

அந்தப் பேரின்பத்தை அனுபவிக்க தயாரானான் ஆதி.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
8 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top