ராவணா 24

நாட்கள் நகர்ந்து வாரங்கள் ஆகியிருக்க, உடலளவில் நன்றாகத் தேர்ச்சியடைந்திருந்த ராவணனின் முகம் வழமையை விட அதிகமாக இறுகியிருந்தது. 

அஜூதியா உதவவில்லை என்றால் இந்நேரம் செத்திருப்பான், இருந்தாலும் போனால் போகட்டும் என்று அவன் விஸ்வநாதனை விட்டிருக்க, ஆனால் அவனோ நேற்று வெளியே சென்றிருந்த ராவணனின் ஆட்கள் மீது தாக்குதல் நடத்த, ராவணனின் பொறுமை எல்லையைக் கடந்திருந்தது. 

“இனி ஒருத்தனுக்கும் தயவு காட்ட கூடாது. சீக்கிரம் நான் யாருன்னு காட்டுறேன், வாங்கியதை பல மடங்கா திருப்பித் தரேன் விஸ்வநாத்” எனத் தீவிரமாகக் கூறிய ராவணன் அதற்கான திட்டத்தையும் தீட்டி அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கியிருந்தான்.

மிருதங்கம் மெலிதாகத் தாளகதியுடன் ஒலிக்க, மக்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக இருளில் கரைய துவங்கியிருக்க, கண்ணதாசனின் கவிப்பேசும் கரம்போலக், கவி பேசும் அஜூதியாவின் விழிகளில் ஆயிரம் அபிநயங்கள் அலைமோத, வீசும் காற்றுக்கு வளைந்து அசையும் மரம்போலப் பெண்ணவளின் தேகம், சிரிக்கும் சலங்கை ஒலிக்கு வளைந்து, சிதறும் பரல் இசையோடு சேர்ந்து, அசைந்தாடும் அதிசயம், சிதம்பர தில்லை நடராஜர் கோயிலில் அரங்கேறிக்கொண்டிருக்க, அனைவரும் மகிழ்ச்சியுடன் அவளது நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த இன்பமான வேளையை கெடுக்கும் விதமாக அங்கே கேட்ட “டுமீல்” என்னும் துப்பாக்கி சுடும் சத்தம் மக்கள் கூட்டத்தினரை பயமுறுத்தியது.

திடீர் என்று கேட்ட துப்பாக்கி சத்தில் பதறிய மக்கள் அங்கும் இங்கும் பயத்தில் கோயிலை விட்டு வெளியே ஓடப் பார்க்க, உடலில் காயத்துடன் கூட்ட நெரிசலுக்கு இடையே சிக்கிக்கொண்ட விஸ்வநாதன், தடுமாறி கீழே விழுந்து, எழுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்க, இதைக் கவனித்த அஜூதியாவோ மனம் கேளாமல் விஸ்வநாதனை நோக்கிச் செல்ல, அப்பொழுது,

“ஏய் அஜூ எங்க போற வா?” என்று தன்னை அழைத்த இந்துவிடம், “இந்து அந்த ஆளு பாவம் டி, எழுந்துக்க முடியாம இருக்காரு” என்றவள், வேகமாக அவன் அருகில் சென்று அவனை எழுப்பி விட்ட மறுநொடி அஜூதியா பனியில் உறைந்த சிலைபோலக் கண்கள் விரிய நின்றாள்.

கரங்களில் துப்பாக்கியுடன், முகமூடி அணிந்து சிவந்த விழிகள் இடுங்க, துஷ்ட பார்வை பார்த்தபடி தன் எதிரே வில்லனைப் போல நின்ற ராவணனை பார்த்து அஜூதியாவின் உடல் நடுங்கி விட, அவளையும் அவளது கண்களில் தெரிந்த பயத்தையும் ஒருகணம் இறுக்கமாகப் பார்த்தவன் தன் கையில் முளைத்த துப்பாக்கியை விஸ்வநாதனை நோக்கி நீட்ட, அடுத்த கணமே கேட்ட துப்பாக்கி சத்தத்தில் காதை மூடிகொண்டவள் தரையில் மடிந்தமர்ந்து பயத்தில் அழுது விட்டாள்.

“யாருக்கும் நான் செகண்ட் சான்ஸ் கொடுத்தது இல்லை ஆனா உனக்குக் கொடுக்குறேன், இனிமே என் லைன்ல நீ வரக் கூடாது போ” என்று ராவணன் விஸ்வநாதனை பார்த்துக் கூற, அவனை நோக்கி “மன்னிச்சுடு” என்று கரம் கூப்பிய விஸ்வநாதன் நடக்க முடியாது நடந்து செல்ல, இதை உடல் வெடவெடக்க பார்த்துக் கொண்டிருந்த அஜூதியாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், அவளை அழைத்துச் செல்ல வந்த இந்துவைப் பார்த்து, அழைத்துக்கொண்டு போகும்படி செய்கை செய்ய, சிலையென உறைந்திருந்த அஜூதியாவின் கரத்தைப் பிடித்த இந்து அவளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடினாள்.

அப்பொழுது அஜூதியாவின் ஒற்றை காலில் உள்ள சலங்கை மட்டும் கழன்று கீழே விழ, செல்லும் அவளையே பார்த்தபடி சலங்கையைத் தன் கரத்தில் எடுத்தவன் அதை மென்மையாக வருட அவன் இதயத்தில் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.

“ஏன் ராவண் பாய் அவனை விட்டீங்க” என்ற அவனது சகாக்களிடம் எந்த பதிலும் கூறாதவன் அவர்களை அடுத்த வேலையை பார்க்கும் படி சொல்லிவிட்டு, தனிமையில் மிகவும் தவித்தான்.

அஜூதியாவை சந்தித்ததில் இருந்து அவனிடம் முகிழ்த்த ஒவ்வொரு மாற்றமும் அவனை புயலென சுழற்றியெடுத்து, அவனது உறுதியை அசைத்தது. 

விஸ்வநாதனை கொலை செய்ய வேண்டும் என்கின்ற முடிவுடன் களம் இறங்கியவன் அஜூதியாவின் கண்களில் இருந்த பயத்திற்காக மட்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டு விஸ்வநாதனை விட்டுவிட்டான். 

அந்த நிமிடம் ஒன்றுமே தோன்றவில்லை, ஆனால் கொஞ்ச நேரம் கழித்து சிந்திக்கும் பொழுது அவனது இந்த மாற்றம் அவன் மீதே அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த, வேண்டும் வேண்டாம் என்பதற்கு இடையே சிக்கி கொண்டு தவித்தவன், அன்று போல இதோ இன்றும் தவிக்கின்றான். 

என்ன அன்று அவன் மட்டும் விரும்பினான் அது ஒரு கை ஓசை சத்தமின்றி அடங்கியிருந்தது. 

ஆனால் இன்று அவளும் அவனை நேசிக்கிறாள். அவளது காதலின் ஆழத்தையும், அதன் அழகையும் அறிந்த பிறகு அவள் மீது காதல் இன்னும் பெருகுகிறது, அதுவும் தன்னை பற்றி அனைத்தும் தெரிந்தே அவள் தன்னை காதலிப்பது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

அதுவும் தன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் தன்னை காண இவ்வளவு தூரம் வந்திருப்பாள், அவளது காதலை அவளை தன் மீது கொண்ட நம்பிக்கை ஆணவனை வியக்க வைக்கின்றது.

ஆனால் அவள் காதலை அனுபவிக்க அவனுக்குள் ஒருவித தயக்கம்.

அவள் முகத்தையே பார்த்தபடி மேலும் சில நொடிகள் நின்றிருந்தவன் கண்களில், லேசாக சிவந்திருந்த அவளது பெருவிரல் பட, தான் ஆவேசத்தில் வேகமாக தன் கரத்தை அவள் மீது தவறுதலாக வீசியதில் அவள் கீழே விழ போனது, பின்பு விழாமல் அவளது பெருவிரலில் மட்டும் லேசாக அடிபட்டது என இன்று நடந்த சம்பவத்தை அவனது மூளை அவனுக்கு நினைவுபடுத்தி காயத்திற்கான காரணத்தை சொல்லாமல் சொல்ல, அவள் கால் பக்கம் வந்தமர்ந்தான். 

பின்பு மிருதுவான அவளின் விரலை இன்னும் மென்மையாக வருடினான். தனக்குள் இவ்வளவு மென்மை எங்கிருந்து வந்தது என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது, பின்பு என்ன நினைத்தானோ சட்டென்று குனிந்து அவளது காயம் பட்டிருந்த பெருவிரலில் பட்டும் படாமல் இதழ் பதித்துவிட, அவளது உடலில் மெல்லிய அசைவுகள். 

அவனுக்கு ஒன்றுமே ஓட வில்லை ஒருவித படபடப்புடன் அவளது முகத்தை பார்த்தான். 

இதழோரம் புன்னகை தளும்ப ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். 

‘நல்லவேளை முழிக்கல’ என தன் துடிக்கும் இதயத்தில் கரம் வைத்து ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன், ‘ச்ச என்னடா பண்ணிட்டு இருக்க’ என்று தன்னை தானே கடிந்து கொண்ட பொழுது, அவளின் மேல் உதட்டில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை கண்டு அவனுக்குள் எழுந்த தவிர்க்க வேண்டிய ஆனால் தவிர்க்க முடியா ஆசைகளை எண்ணி அவனது இதயம் அதி வேகமாக துடிக்க, மிகுந்த தயக்கத்துடன் அவள் இதழை நெருங்கியவனின் இதயம் அவன் நெருங்க நெருங்க அதிகமாக துடிக்க, தன் விரல் கொண்டு அவளது இதழ் மேல் இருந்த வியர்வை துளிகளை துடைக்க போனவன் பின் என்ன நினைத்தானோ சட்டென்று அவளது இதழ் நோக்கி குனிந்தான்.

அவன் குனிந்த சில நொடிகளில், “ஹ்ம்” என்று சிறு செருமலுடன் கண்விழித்தவள், ‘கனவா ச்ச’ என்று தன் கரங்களை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறிக்க, அப்பொழுது எதையோ யோசித்தவளாய் தன் இதழை லேசாக தொட்டு பார்த்தவள், 

“கனவுல கிஸ் பண்ணினா கூட லிப்ஸ் வெட் ஆகுமா என்ன?” என்று தனக்குள் கூறுவதாக நினைத்து வாய்விட்டே கூறியவள், 

“ஹெலோ நல்லா தூங்கி முடிச்சாச்சா” என்ற ராவணனின் கணீர் குரலில் பதறி குரல் வந்த திசை நோக்கி பார்க்க, ஃபிரிட்ஜ் அருகே தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு அவளை தான் அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தான் ராவணன். 

இப்பொழுது அவனது கேள்வியையும் அதுக்கு தான் சொல்ல வேண்டிய பதிலையும் மறந்தவள் வேறு எங்கோ மிதந்து கொண்டிருந்தாள்.

ஈரமாக இருந்த அவன் சிகையில் ஆங்காங்கே இருந்து நீர் சொட்டி கொண்டிருக்க, வெறும் ட்ராக் பேண்ட் மட்டும் அணைந்திருந்தவனின் வெற்று மார்பும் பரந்த தோளும் அவளை அறியாமலே அவனை ரசிக்க வைக்க, அவனது விழிகளின் கூர்மை வேறு அவளை காந்தமாக அவனை நோக்கி இழுக்க, அவனிடம் இருந்து விழிகளை பிரிக்க முடியாமல் சிலையாக எத்தனை நொடிகள் அமர்ந்திருந்தாளோ

“நல்லா பார்த்து முடிச்சாச்சுன்னா எதுக்கு வந்தீங்கன்னு சொல்றீங்களா?” என்ற அவனின் கேலி குரலில் சுயம் பெற்ற அஜூதியா, 

“ஹான் அது” என்று என்ன சொல்வதென்று புரியாமல் தவிக்கவும், அஜூதியாவை அழுத்தமாக பார்த்தபடி அவளை நோக்கி ராவணன் நடந்து வர, பெண்ணவளின் இதயமோ இப்பொழுது வெளியே வந்துவிடும் அளவிற்கு வழக்கத்தை விட அதிகமாக துடித்தது.

‘ஐயோ கொல்றானே! டேய் இப்படி எல்லாம் என் முன்னாடி வந்து என்னை படுத்தாத டா’ என்று உள்ளுக்குள் புலம்பியவள் அவன் தனக்கு மிக அருகில் வரவும்,

“அது வந்து நான்” என்று தடுமாற, “ஹான்” என்று தன் வலிய கரங்களால் அவள் அமர்ந்திருந்த சோஃபாவின் இரு விளிம்புகளையும் பற்றியவன் அவளது முகத்திற்கு வெகுநெருக்கமாக தன் முகத்தைக் கொண்டு சென்றபடி வினவ, தன் நாசியை தீண்டிய தன்னவனின் பிரத்யேக மணம் அவளை எங்கோ கடத்தி செல்லப் பெண்ணவளின் இதயத்திற்குள் இன்ப படபடப்பு. 

தன் அருகாமை பாதிப்பதால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவளின் பரிதவிப்பும், விழிகளுக்குள் இருந்து கொண்டு நடனமாடிய அவளின் கருவிழிகளும், துடித்துக்கொண்டிருந்த அவளது இதழ்களும், அவனை ஏதோ செய்ய சுயம் தொலைத்தவன் அவளது இதழ் நெருங்கிய தருணம். 

அவனது விழிகளை பார்த்தபடி,

“தேங்க் யு” என்றாள் அஜூதியா. 

ஒரு அறைவினாடி தாமதித்திருந்தாலும் இதழும் இதழும் நெருங்கியிருக்கும் என்ற தருணத்தில் அவன் செவியில் கேட்ட அவளது குரல் அவனை சுயம் பெற செய்ய, தான் நிற்கும் நிலையை உணர்ந்தவன். 

அவளுக்காக உருகிக்கொண்டிருக்கும் தன் மனதை அவளிடம் காட்டாது, 

“ஓ அப்போ இதுக்காக தான் வந்த?” என்று அழுத்தமாக கேட்டுக்கொண்டே அவளை விட்டு தள்ளி நிற்க,

“ம்ம்” என்றபடி தலையசைத்தாள் அஜூதியா.

அவனோ, “தென்” வந்த வேலை முடிந்தது என்றால் கிளம்பலாம் என்பது போல அவன் தன் அறையின் வாயிலை காட்டவும், பெண்ணவளின் முகம் நிஜமாகவே அனிச்சமாய் வாடி விட்டது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top