இங்கு வர்மன், தனது உடைகளை பேக் செய்தவன் அறையில் இருந்து வெளியே வந்தான், அங்கு இருந்த தாராவிடம் ஏதுவும் சொல்லாமல், கிளம்பி விட்டான்…..
அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்த வீட்டின் முன்பு இரண்டு காவலர்களும், மற்றோரு, பெண்ணும், வந்தனர்….
அவர்கள் இருவரும் வெளியே இருக்க அந்த பெண்மணி உள்ளே வந்து அவரை அறிமுக படுத்தினார்…..
“நா செல்வி, உங்கள சார் வர வரைக்கு வாட்ச் பண்ண சொல்லி இருக்கார்” என்று அந்த பெண் சொல்ல ஒரு பெரு மூச்சு விட்டவள் வேற ஏதும் கேட்காமல் ஒரு அறைக்குள் நுழைந்தாள் கால்,இடுப்பு, எல்லாம் வலிக்க தொடங்கியது அனைத்து வேலைகளையும் தனியாக செய்து இருந்தாள்……
அவன் எங்கோ கிளம்பி செல்கிறான், என்று அவள் சந்தோச பட அவனோ, கண்காணிக்க ஆட்களை அல்லவா வைத்து செல்கிறான் …
அதற்கு மேலும் ஏதுவும் யோசிக்காமல் தரையில் அப்படியே தூங்க ஆரம்பித்தாள்….
வர்மன் காரில் ஊட்டி நோக்கி பயணத்தை துவங்கினான்..
நள்ளிரவு வேலையில் கார் ஒரு பெரிய வீட்டின் முன் வந்து நின்றது….
காரில் இருந்து இறங்கியவன் நேராக அந்த வீட்டின் முன் நின்று காலிங் பெல்லை விடாமல் அடிக்க அறைக்குள் தன் மனைவியே தன்னுடன் அனைத்த படி தூங்கியவன்
அவளை விட்டு பிரிந்து எழுந்தவன் சாட்ஸ் அணிந்து அறை கதவை அடைத்து விட்டு வெளியே வந்தான்… அது வரை வெளியில் காலிங் பெல் விடாமல் அடித்து கொண்டு இருக்க பொருமையாக வந்து “கதவை” திறந்தான், அவன் “ஆர்யன்,”…..
அவன் கதவை திறந்ததும் அவன் நின்ற கோலத்தை கண்டு பல்லை கடித்தான் வர்மன், …
“You idiot” “இப்படிதா வருவியா வெளிய என்று கேட்க” தன்னை குனிந்து பார்த்தான்….
ஆர்யன், அவனது படிக்கட்டு தேகத்தில் அங்கும் இங்கும் குங்குமம் ஓட்டி இருக்க அதை பார்த்தவன் தன் தோள்களை குலுக்கி கொண்டு உள்ளே செல்ல அவனுடன் வர்மனும், சென்றான்…..
“ என்ன சமைக்க என்று ஆர்யன், கேட்க” “frist போய் குளிச்சு தொல” என்று வர்மன் சொல்ல, “இப்போ நா இந்த ஊட்டி குளிர்ல குளிக்கவ என்னால முடியாது”…..
“நீயே சமையல் பண்ணி சாப்டு” என்று கூரியவன் “good night’ என்று சொல்லி தன் அறைக்கு சென்று விட்டான் …..
வர்மன், அவனை வாயால் அர்ச்சனை செய்தபடி அவனது பேக்கை “சோஃபாவில்”போட்டவன் சமையல் அறையில் இருந்த பாலை சூடு பண்ணி எடுத்து வெளியே இரண்டு கப்புடன் வந்து அமர, குளித்து முடித்து ஆர்யனும், வந்து அவனுடன் அமர்ந்து ஒரு கப்பை எடுத்து குடிக்க தொடங்கினான் …
“என்ன எதுக்கு வர சொன்ன” என்று வர்மன், கேட்க அவன் அருகே குனிந்த ஆர்யன், “ஒன்ன கிஸ் பண்ண” என்று சொல்லியவன் அவன் சுதாகரிக்கும் முன் அவன் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தவன் “தாடி ரெம்ப குத்துது ரொமான்ஸ் வரமாட்டுது ”என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தான்…
வர்மன், அவனை தீயாக முறைக்க ஆரம்பிக்க.” ரெம்ப கோவப்படாத, “ஏன்னா! எனக்கு பயந்த மாதிரி நடிக்க கூட தெரியாது” என்றான்….
அவனை பார்த்து நக்கலாக சிரித்த வர்மன், “நீ எப்படிலா நடிப்பனு எனக்கு தெரியும்”, “இப்ப கூட வேற ஏதோ ஒரு பிளான் வச்சிருக்க அது என்னனு என்கிட்ட சொல்ரியா! இல்லையா?….
என்று அவன் கேட்க ” முகம் இறுக இல்லை என தலையை அசைக்க” அவனை நம்பாத பார்வை பார்த்தவன் வேறு ஏதும் அவனிடம் கேட்க வில்லை……
இருவரும் அமைதியாக அமர்ந்து இருக்க மௌனதை களைத்த ஆர்யன், “சரி சொல்லு அவ எப்படி இருக்கா”! “அவளுக்கு என்ன fine” என்றான் வர்மன்….
“நா சென்னை வரலாம்னு இருக்கே” என்று ஆர்யன், கூற “அப்போ “விழி” என்று அவன் ,கேட்க ”அவ இல்லாம நா எப்படி வருவே அவளுந்தா, “இது ரெம்பவே ரிஸ்க்,” ” i know” எனக்கு இதுக்கு மேல வேற வழி தெரியல” எல்லாதையும் எப்போ இருந்தாலும் பாத்து தான் ஆகணும்” என்று ஆர்யன் கூறினான்…..
“சோ என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்” சரி என்று சொல்லிய வர்மன், எப்போ போகலாம் என்று கேட்க 2 டேஸ்லா போகலாம்…. உன்னோட ஆபீஸ்ல விழி வொர்க் பன்னாட்டும்,…
அதுதா அவளுக்கு பாதுகாப்பு ஓகே என்று வர்மன், சொல்ல இருவரும் வேறு கதை பேச தொடங்கினர்….
விடிந்தது தெரியாமல், இருவரும் பேசிக்கொண்டு இருக்க, அறையில் எழுந்த “விழி “கணவனை காணாமல் தேடினாள்…
அப்போது தான் இன்று வர இருந்த நபர் ஞாபகம் வர வேகமாக குளியலறை நுழைந்து குளித்து முடித்து ஒரு குர்த்தி அணிந்து வெளியே வந்தவள் கண்ணாடியில் முகத்தை பார்த்து நெற்றியில் பொட்டு, வகுட்டில் குங்குமம் வைத்தவள் முடியை கிளிபில் அடக்கி வெளியே வந்தாள் ….
மேல இருந்து கீழ் எட்டி பார்க்க வர்மன், ஆர்யன் இருவரும் பேசிக்கொண்டு இருக்க படிகளில் இறங்கி வந்தவள் “அண்ணா” என்று அவனை அழைக்க அவள் சத்தம் கேட்டு இருவரும் அவள் புறம் திரும்பினார்கள்….
ஒருவன் கண்ணில் காதலுடன் பார்க்க மற்றொருவன் ,அவளை கனிவாக பார்த்தான் அவர்கள் அருகில் வந்தவள், என்ன “நைட்” எழுப்பி இருக்கலாம்ல என்று அவள் கணவனிடம் சண்டைக்கு சென்றாள்…
மீண்டும் வருவான்…