அசுரன் 94
ஆதியின் திருமணத்திற்கு முதல் நாள்… மாடி படியின் மேலே நின்று அருணும் ரதியும் சண்டை போட்டுக் கொண்டிருக்க… தாய் தந்தையை பார்த்த ரித்து குட்டி ஆர்வமாய் படியில் ஏறினான்… தத்தி தத்தி சில படிகள் ஏறிய பின் கால் தடுமாறி குழந்தை தலைக்குப்புற விழுக பார்க்க… விக்ரம் ஓடி வந்து கீழே விழுகாமல் பிடித்து விட்டான்… ரித்து பயத்தில் வீறிட்டு அழத் தொடங்கினான். விக்ரமின் நெஞ்சு படபடத்தது; ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். ஆனால், மேலே நின்றிருந்த அருணும் ரதியும் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பின்பும் தங்கள் சண்டையை நிறுத்தவில்லை.
“அருண்! நிறுத்துங்கடா உங்க சண்டையை! உங்களைப் பார்த்துட்டு குழந்தை மேலே ஏறி வந்தவன் கீழே விழப்போயிட்டான். இதைக் கூட கவனிக்காம என்னடா சண்டை வேண்டி கிடக்கு? குழந்தை விழுந்திருந்தா தலையில அடிபட்டு என்ன ஆகியிருக்கும்னு கொஞ்சமாவது அறிவு இருக்கா உங்களுக்கு?” என்று கத்தினான்.
அருண் ஏதோ சொல்ல வர, விக்ரம் அவனைத் தடுத்து, “குழந்தையை ஒழுங்கா பார்த்துக்க முடியலன்னா எதுக்குடா பெத்துக்குறீங்க? எப்பப் பாரு இப்படி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா, அவன் எப்படிடா நல்ல மனநிலையில வளருவான்? கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கோங்கடா!” என்று ஆதங்கத்தில் பொரிந்து தள்ளினான்.
இதைக் கேட்டதும் ரதியின் முகம் எள்ளும் கொள்ளும் எனச் சிவந்தது.
சாரிடா மச்சான்.. டென்ஷன்ல கவனிக்கல… என்று கூறிய படி கீழிறங்கி வந்து ரித்துவை வாங்கி சமாதானப்படுத்தினான் அருண்…
மாடியின் மேலே இருந்தே படியே…
குழந்தை வளர்க்கறத பத்தி, ஒரு குழந்தை பெத்துக்க தகுதி இல்லாதவன் சொல்லக்கூடாது… போயி அவங்க அவங்க லைஃப்ல இருக்க குறைய பாருங்க அடுத்தவங்களுக்கு அதுக்கப்புறம் வந்து அட்வைஸ் பண்ணலாம்… ஏதோ பத்து பிள்ளை பெத்தவன் மாதிரி அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண வந்தாச்சு.. என்று மூஞ்சியில் அடித்தால் போல் ரதி கூறிவிட்டாள்.
இவர்கள் சத்தத்தை கேட்டு என்னவோ ஏதோ என்று வேலைக்காரர்கள் கூடினர்…
இந்த வார்த்தைகளை கேட்டு உண்மையில் உடைந்து போனான் விக்ரம்…. தலையை குனிந்தபடி விறு விறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்..
ரதி !… என்று கோபமாய் கத்தியவன்… என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா… மைண்ட் யுவர் வோர்ட்ஸ்… நீ என்னோட மச்சான் கிட்ட பேசிகிட்டு இருக்கின்றத மறந்திராத… மரியாதையா அவன் கிட்ட சாரி கேளு…
அவர் என்னோட பிரச்சனை இல்ல தலையிடாத வரைக்கும் நான் அவரோட பிரச்சனையில் தலையிட மாட்டேன்…
உங்க மச்சான் ங்கறதுக்காக எல்லாம் என்னால மரியாதை கொடுக்க முடியாது… தென் நான் சொன்னதுல எந்த தப்பும் இல்லை அதுதான் உண்மை கூட… என்று கூறிவிட்டு ரதி அறைக்கு சென்று விட்டாள்…
அருண் அவள் பின்னாடியே சென்று மேலும் கோபமாய் கத்த…அவன ஹாட் பண்ணி இருக்கேன்னு கூட உனக்கு புரியலையா… நீ எல்லாம் என்ன ஜென்மம்…
அதை எல்லாம் அவள் சட்டையே செய்யவில்லை… தனி அறைக்கும் சென்று கதவடைத்துக்கொண்டாள்.
விக்ரம் எதுவும் பேசாமல் மெதுவாக அவனது அறைக்கு சென்று குப்புற படுத்துக் கொண்டான்.. வீட்டில் வேலைக்காரர்கள் முன் தன் வீட்டு ஆட்களே தன்னை இழிவாக பேசியதில் பெரும் வருத்தம் அவனுக்கு… இத்தனை நாள் தொழில் வட்டாரத்திலும் சுற்று வட்டாரத்திலும் சொந்தங்களும் பேசும் போது வராத வலி இப்பொழுது வந்தது…
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய அகல்யா விக்ரமின் சோர்ந்த முகத்தை பார்த்து என்னவென்று விசாரிக்க அவன் எதுவும் கூறவில்லை அதன் பின் வேலைக்காரர்களிடம் கேட்க சமையலறையில் வைத்து சுதா நடந்த அனைத்தையும் கூறினார்..
நடந்ததைக் கேட்டு வெகுண்டு எழுந்தாள்.. ரதி அப்பொழுது வீட்டில் இல்லை… அவள் நேராக சென்று நின்றது ருத்ராவின் முன் தான்…
சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தவர் என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தார்…
அம்மா!… வீட்ல என்ன நடந்திருக்குன்னு பார்த்தியா… விக்கிய ரதி இன்சல்ட் பண்ணி இருக்காங்க… இது என்னனு நீ கேக்க மாட்டியா…
அகல்யா கத்தும் சத்தத்தை கேட்டு அருண் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான்…
இப்ப என்ன நடந்துச்சுனு இப்படி கத்துற அகல்யா… நம்ம எதுக்கு அவ குழந்தை வளர்க்கறத பத்தி பேசணும் அவ கிட்ட திட்டு வாங்கணும்…
என்னமா நீ இப்படி பேசுற…
ரதி இந்த வீட்ல பண்றது எல்லாம் நீ பாத்துட்டு தானே இருக்க…
ஒரு நாள் ஆவது கண்டிக்கிறயா… அப்ப இந்த வீட்ல பெரியவங்க நீ எதுக்கு தான் அம்மா இருக்க…
அவ டெய்லி குடிச்சிட்டுவாரா.. குழந்தையை கையில தூக்குறது கூட இல்லை.. இன்னும் அருண் அண்ணாவுக்கும் அவளுக்கும் நிறைய பிரச்சனை போய்கிட்டு இருக்கு… அருண் அண்ணா நிம்மதியே போச்சு… அது அவங்க ரெண்டு பேரும் லைப் நம்ம தலையிட வேணாம் அப்படின்னு நினைச்சு நாங்க எதுவும் பேசாம இருக்கோம்.
குழந்தை கீழே விழுந்து போகுதே அப்படிங்கிற ஆதங்கத்தில் அவர் பேசியிருக்கிறார்… இத சொல்றது கூட எங்களுக்கு இந்த வீட்ல உரிமை இல்லையா… அப்ப எதுக்கு நாங்க இந்த வீட்ல இருக்கணும்…
எதுக்கு அகி இப்படி கோபப்படுற… அழகு அறிவு அந்தஸ்து எல்லாமே இருக்க பொண்ணுங்க இந்த மாதிரியெல்லாம் இருக்கிறது இந்த காலத்தில் சகஜம்… அதை ஏன் நீ தப்பா பாக்குற… உன்னோட பார்வையே தப்பா இருக்கு… கிழவி மாதிரி நடந்துக்கிற…
அது சரி.. இந்த வீட்ல முதல்ல திருத்த வேண்டியது உன்ன தான்… ஆரம்பத்திலேயே உன்ன அப்பா திருத்தி இருந்தார்னா… நாங்க இன்னுமே மனுஷங்களோட அருமை தெரிஞ்சு வளர்ந்திருப்போம்…
ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோமா…
அருண் அண்ணாவோட வாழ்க்கை இன்னைக்கு இந்த நிலைமையில நிம்மதி இல்லாம இருக்குது அப்படின்னா.. அதுக்கு ஒரே காரணம் நீ மட்டும் தான் மா…
அவன சின்ன வயசுல இருந்தே அந்தஸ்து முக்கியம் தகுதி முக்கியம் என்று சொல்லி வளர்த்து அவனை கெடுத்ததும் நீ தான்…
ஜாதகம் ஜோசியம்னு சொல்லி வலுக்கட்டாயமா ஒரு புடிக்காத பொண்ண அவன் தலையில் கட்டி வச்சதும் நீதான்…
கட்டிட்டு வந்த பொண்ணு வீட்ல இருக்கும் பொழுதே அவ கண்ணு முன்னாடியே அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சு அவன் தலையில பாவத்த அள்ளி கொட்டுனதும் நீதான்…
ஒருவேளை நீ அருண் கிட்ட மலர பத்தி எடுத்துச் சொல்லி, அவனுக்கு வாழ்க்கையை புரிய வைத்திருந்தேனா இந்நேரம் அவனோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருந்திருக்கும்.. நீ பண்ண காரியம்… எப்படி தெரியுமா இருந்தது…
பசியோட ஒருத்தனை எதிர்ல உட்கார வச்சுட்டு… அவன் கண்ணு முன்னாடி தலைவாழை இலை போட்டு உட்காந்து விருந்து சாப்பிடற மாதிரி மா… அது ஒரு நாளும் செரிக்காது.
உனக்கு ஒன்னு தெரியுமா மா… எங்களுக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க…
ஆனா இதுவரைக்கும் ஏன்னு தெரியல எங்களுக்கு குழந்தை இல்லை…
ஆனா ஒன்னு மட்டும் எனக்கு புரியுது… நீ பண்ற புண்ணியம் எங்களுக்கு வருதோ இல்லையோ ஆனா நீ பண்ற பாவம் எங்க தலையில தான் வந்து விழுகுது… உன் வயித்துல பிறந்த நாங்க ரெண்டு பேருமே நிம்மதியா இல்லமா…
அருண் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் நிம்மதி இல்லாம அலையுறான். நான் குழந்தையே இல்லாம நிம்மதி இல்லாம அலையுறேன்… ஏனோ இதை சொல்லும்போது கண்கள் கலங்கியது அவளுக்கு.. யாருக்கு என்ன நடந்தா நமக்கு என்ன அப்படின்னு தான் இருந்தேன்… இப்ப எனக்கு நடக்கும் போது தான் அம்மா புரியுது… வலியும் கஷ்டமும் அவமானமும்… வாழ்க்கையில சில விஷயங்கள் பட்டா தான் புரியுது…
உன்னோட மருமகளோட ஸ்டேட்டஸ் பாத்துட்டு நீ எல்லாத்தையும் பொறுத்து போலாம், ஆனா நான் அவங்கள பொறுத்து போகணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…
இனிமேலும் நானும் விக்கியும் இங்க இருக்க போறது இல்ல.. என்னோட புருஷனுக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிஷம் நான் இருக்க மாட்டேன்… நான் விக்கி வீட்டுக்கு போறேன்.. கஷ்டமோ நஷ்டமோ எங்க வாழ்க்கையை நான் பாத்துக்குறேன்…
அகி.. ஏன் இவ்ளோ கோவப்படுற… இத்தனை நாள் உன்னை நம்ம ரிலேட்டிவ் பேசாததைய.. இன்னைக்கு ரதி விக்கியை பேசிட்டா… இப்போ ஒரு வார்த்தை சொன்னதுல என்ன ஆயிருச்சு அவன் குறைஞ்சு போயிட்டானா…
இந்த வீட்ல.. என்ன்ன, என்ன வேணா பேசுங்க.. நான் பொறுத்துப்பேன்… ஆனா என் விக்கிய யாரும் ஒன்னும் சொல்ல கூடாது… அந்த அதிகாரத்தை நான் யாருக்கும் தர்றது இல்ல… He is only my man.. ஒரு வார்த்த நாளும் அது பொறுத்துட்டு போற வார்த்தை இல்லம்மா… நாங்க கிளம்புறோம் அப்பா வந்தா சொல்லிடுங்க…
ஏய் அகி நில்லு…
நீ இங்கிருந்து போனா உனக்கு சொத்துல பங்கு தரத பத்தி நாங்க யோசிக்க வேண்டியது வரும் என்று ருத்ரா மிரட்டினார்…
தலைக்கு மேல் கை எடுத்து கும்பிட்டவள்… நீங்களும் வேணா உங்க சொத்தும் வேணாம்… என் விக்கி மட்டும் எனக்கு போதும்… எப்போ உன்னோட மருமகளுக்கு ஏத்துக்கிட்டு பேசி என்னோட புருஷனை நீ மதிக்கலையோ… இனிமேல் நான் பிச்சை எடுக்கிற நிலைமையே வந்தாலும் உன் வீட்டுக்கு நான் வரமாட்டேன்.. ஆனா பெத்தவங்க அப்படிங்கற உரிமையோட நீ எப்ப வேணா என்னோட வீட்டுக்கு வரலாம்…
ஆனா ஒரு நாள் நீ தனி மரமா நிப்ப அப்ப புரிஞ்சுப்ப… நீ இதுவரைக்கும் தகுதி பார்த்து சேர்த்த ஆட்கள் யாரும்.. உனக்கு அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனப்பட மாட்டாங்க… என்ன பத்தி கவலைப்பட வேண்டாம், ஆனா அருண் அண்ணாவை பத்தி கவலைப்படு… அவங்க வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு உன் மருமகளை திருத்துவதற்கு வழிய பாரு…
என்று அழுத்தமாய் கூறிவிட்டு விறுவிறுவன நகர்ந்தாள் அகல்யா.
அகல்யாவை தடுக்க அருண் நினைக்கவில்லை.. யார் சொல்லியும் அகல்யா தனது முடிவை மாற்றிக் கொள்பவள் அல்ல என்று அவனுக்கு தெரியும்..
ஆனால் இப்பொழுது அவனுக்கு வந்த ஒரே சந்தேகம்… விக்ரம் மற்றும் அகல்யாவின் அந்த ஆழமான பிணைப்பு அருணின் மனசாட்சியை ஓங்கி அறைந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய அந்தப் பாதுகாப்பும், உலகமே எதிர்த்தாலும் பிரிய மறுக்கும் அந்த உறுதியும் அருணுக்குப் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தன. விக்ரம் எந்த சூழ்நிலையையும் அகல்யாவிற்காக பொறுத்துக் கொண்டதும்… அகல்யாவிற்காக நின்றதும், அகல்யா தன் அந்தஸ்து, சொத்து என அனைத்தையும் ஒரு நொடியில் உதறிவிட்டு விக்ரமுடன் சென்றதும் அருணின் கண்களுக்கு முன்னால் ஒரு நிழற்படம் போல ஓடியது.
”இதுதான் காதலா?” — அருணின் மனம் முதன்முறையாகத் தத்தளித்தது.
அவன் சுற்றிப் பார்த்தான். அந்தப் பிரம்மாண்டமான மாளிகை, விலை உயர்ந்த பொருட்கள், கையில் இருந்த அதிகாரம் என அனைத்தும் இப்போது அவனுக்கு வெறும் சக்கையாகத் தெரிந்தன. ரதியுடனான அவனது வாழ்க்கை ஒரு போர்க்களமாகவே இருந்தது. அங்கே ஆக்ரோஷமும், அதிகாரமும், உடலால் ஒருவரை ஒருவர் தேடும் காமமும் மட்டுமே நிறைந்திருந்தன. அந்த உறவில் ஈரம் இல்லை, அரவணைப்பு இல்லை, முக்கியமாக… உண்மையான அக்கறை இல்லை.
பல பெண்களுடன் பழகி இருந்தாலும், எவளுமே அவனது ஆன்மாவைத் தொட்டதில்லை. இன்று விக்ரமுக்காக அகல்யா அனைத்தையும் துறந்ததைப் பார்த்த பிறகுதான், தன் வாழ்வில் ஒரு மிகப்பெரிய ‘வெறுமை’ இருப்பதை அவன் உணர்ந்தான். அந்தப் பெரிய கூட்டத்திலும் தான் அனாதையாக நிற்பது போன்ற ஒரு உணர்வு அவனை அச்சுறுத்தியது. இது எல்லாமே தான் அவனை விவாகரத்து என்ற முடிவிற்கு தள்ளியது…
பப்பா.. பப்பா… என்று அழைத்து ரித்து அழுக… இந்த ஒரு உயிராவது தனக்காக இந்த உலகத்தில் இருக்கிறதே என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டான்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️