அசுரன் 104

அசுரன் 104

 

அன்றைய இரவு இருவருக்கும் தூக்கம் வரவில்லை… ஒரு வார காலம் எனினும்..  இருவரும் அணைத்து தூங்கி பழகி விட்டனர்.. 

ஆதி தான் கொஞ்சம் நொந்து கொண்டான்..

கோபித்துக் கொண்டு அந்த அறையில் போய் படுத்திருந்தால் கூட.. அவளைப் பார்த்துக் கொண்டாவது இருந்திருக்கலாம்… இங்கு வந்து படுத்து… இதோ இரவு முழுவதும் வெறுமை சூழ்ந்து விட்டத்தை பார்த்து புலம்பி கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை… 

 

அடுத்த நாள் காலையில் அவள் எந்திரிக்கும் முன்னே எழுந்து கிளம்பி அலுவலகம் சென்று விட்டான் ஆதி…

 

மலர் எழுந்து பார்த்தவள்… வீட்டின் அமைதியை பார்த்து அவனின் பொருட்களை ஆராய்ந்து அவன் வீட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டாள்..  

 

ஓஹோ… என்ன பாக்க கூட புடிக்கலையா அவ்வளவு கோவமா… இருக்கட்டும்… அப்படியே இருக்கட்டும்… எனக்கென்ன… கோவமாக புலம்பி விட்டு அவனுக்கும் சேர்த்து மதிய உணவு எடுத்துக் கொண்டு அலுவலகத்திற்கு ஸ்கூட்டியில் கிளம்பி விட்டாள்…

 

மலருக்கு திருமணம் ஆனது தெரியும் ஆனால் ஆதியுடன் திருமணம் ஆனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது ரவியை தவிர…

 

எப்பொழுதும் போல் தோழிகள் கூட்டத்தில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்..

 

சைட் விசிட் முடிந்து… காரில் வந்து இறங்க சென்றவன்… ஏதோ ஞாபகம் வந்து போனில் மலர் இருக்கும் இடத்தை பார்க்க..  ஆஷா, ரூபாவுக்கு அருகில் நின்றிருந்தாள்… 

 

என்ன நினைத்தானோ..  ஒரு விஷம சிரிப்புடன்… பூட்டி இருந்த தனது சட்டை பட்டன்களை திறந்து விட்டான்… சட்டைகளின் இடைவெளியை அதிகப்படுத்தி தன் கட்டுடலை காட்டியபடி இறங்கினான்… 

 

அவன் நடந்து வரும் கோலத்தைப் பார்த்து ஒருத்தி தீயாய் முறைத்துக் கொண்டு இருந்தாள்… அதுதானே அவன் எதிர்பார்த்தது..

 

எப்பொழுதும் போல் ஸ்டைலாய் தலையை கோதியபடியே நடந்து வந்தவனை…  ஆஷாவும் ரூபாவும்… செம டி… ரொம்ப நாளைக்கு அப்புறம்… சார் ரொம்ப ஹாட்டா இருக்காரு இல்ல..  என்று புகழ்ந்து தள்ள… இங்கு ஒருத்திக்கோ வயிறு பத்திக் கொண்டு எரிந்தது…

 

ஏய்..  ச்சீ… வழியாதிங்க டி.. முன்ன பின்ன பசங்களே பார்த்ததில்லையா… போ போய் வேலையை பாருங்க என்று எரிந்து விழுந்து விட்டு.. 

 

ஆதியின் அறைக்குள் செல்லப் போனவள்… வாசலிலேயே நின்று…

மவனே!.. என்னையா வெறுப்பேத்தற…

இப்ப பாரு உன்ன என்ன பன்றேன்னு… 

இடுப்பை மறைத்து குத்திருந்த சேலையின் பின்னை அவிழ்த்து… சேலையை லோ-கிப் இறக்கி விட்டாள்.. சேலையின் முந்தியை உதறி சுருட்டி இடுப்பில் சொருகி கொண்டாள்… 

 

அனுமதி கேட்டு அறையில் உள்ளே நுழைந்தவள்… அவன் பெயர் பலகையை ஒருமுறை பார்த்துவிட்டு அமைதியாய் அவளிடத்தில் போய் அமர்ந்தாள்…

 

அவன் கண்டு கொள்வதாய் தெரியவில்லை… வேகமாய் எழுந்தவள் அவள் டேபிளில் இருந்த பென் ஸ்டாண்டை தட்டி விட்டாள்.. அவன் டேபிள் முன்னால் போய் விழுந்தது..  பொறுமையாய் இடையை வளைத்து நடந்து வந்து அவன் முன்னே குனிந்து ஒவ்வொரு பேனாவாக எடுத்து அதில் அடுக்கி விட்டு நிமிர்ந்தாள்.. 

 

அவன் பார்த்தது போல் தெரியவில்லை…

 

ஓஹோ..  சார் அவ்வளவு கண்ட்ரோல்… இருக்கட்டும் இருக்கட்டும்… பாத்துக்குறேன்.. 

 

சில்வண்டு சிக்கும்…. சிங்கம் சிக்குமா?

 

அவள் உள்ளே நுழையும் போதே பார்த்தான்…

என்ன இப்படி சேலை கட்டிக்கிட்டு வந்து இருக்கா… ஃபுல்லா கவர் பண்ணிட்டு வருவாளே.. இன்னைக்கு என்ன கவர்ச்சி ஓவர் டோஸ்ஆ இருக்கு… என்று நினைத்தான்…

 

அவ்வளவு நேரமும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்…

அவள் பார்க்கும் போது மட்டும் பார்வையை திரும்பிக் கொண்டான்.. 

 

அவள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் அழகை கண்டவன்… விக்கித்து போனான்… “சோதிக்கிறாளே”

 

சிறிது நேரம் தான் அவள் இடத்தில் போய் அமர்ந்திருப்பாள்..  கையில் லெட்டர் பேட் உடன் அவன் பக்கத்தில் தான் வந்து நின்றாள்..  

 

இப்ப என்ன… என்பது போல் நிமிர்ந்து பார்த்தான்…

 

கிளைண்டுக்கு அப்ரூவல் மெயில் அனுப்பனும்னு சொல்லி இருந்தீங்க சார்..  கன்டென்ட் சொல்லுங்க சார்..  என்று பேனாவுடன் பக்கத்தில் நிற்க…

 

அவன் உட்கார்ந்து இருந்த உயரத்திற்கு..  அவளது இடை பளிச்சென்று தரிசனம் தந்தது… தங்க நிறத்தில்… வழு வழு என்று..  செதுக்கிய வளைவுகள்…

அதைப் பார்த்துக் கொண்டே.. யோசித்தவன்… 

 

Subject: Approval Required for Project: “The Golden Curve”

என்றான்.. 

 

என்ன சார்…

 

ப்ராஜெக்ட் நேம் மலர்…

 

Oh… Ok.. Ok..

 

​Dear Client,

​I have reviewed the new site layout.. you presented just now.

 

Ok சார்…

 

I must say, the design curves are extremely… Sharp… and veryyyy impressive. என்று நுனி பல்லை கடித்துக் கொண்டு சொல்லும் போது.. வளைந்து நெளிந்து சென்ற பஞ்சு போன்ற இடையை அவன் கண்கள் கவ்வி கொண்டன…

 

என்ன சார் சொன்னீங்க… 

 

ஒரு தடவ தான் சொல்லுவேன் சீக்கிரம் நோட் பண்ணு… மேற்சொன்ன வாக்கியங்களை மீண்டும் சொன்னான்… அப்பொழுதும் கண்கள் அவள் முகத்தை பார்க்கவில்லை…

 

சேலை மறைவில் இருந்து எட்டி என்னை பார் என்று கண் சிமிட்டிய..  அவளுடைய வயிற்று சுழியைப் பார்த்து, தனது இதழை ஈரப்படுத்திக் கொண்டவன்… ஒரு பெருமூச்சுடன் சேர்த்து, இது சிங்கக் குரலா என்று சந்தேகப்படும்படியான ஒரு குரல் இப்போது வெளிவந்தது… 

 

The central deeeep-cut and the smooooth skin-finish of the structure have completely changed my thoughts.

 

அஹ்… என மிரண்டவள்..  இது நிஜமாகவே அப்ரூவல் லெட்டரா?

 

சொல்றத மட்டும் எழுதுங்க மலர் மேடம்… என்றான் கடுமையாய்…

 

வேகமாய் தலையை ஆட்டிவிட்டு வாயை மூடி எழுதினாள்…

 

I was upset with the previous delays, but looking at this perfectly exposed architecture, I am now very eager to start the work.  என்று கூறியபடி உடலை முறுக்கினான்…

கண்கள் தாறுமாறாய் அத்துமீறியதில் அவனுடைய உணர்வுகள் வேலையை காட்ட ஆரம்பித்தது…

கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து… தனது இளமை துடிப்பை மறைத்துக் கொண்டான்…

 

​My tools are ready, and the pressure is building up to execute the project. I am waiting for your immediate approval to enter the site and handle the fleshy landscape personally.

இந்த வரிகளை கேட்க கேட்க காது மடல் மூக்கு எல்லாம் சிவந்தது மலருக்கு…

 

க்ளைண்டுக்கு எழுதின லெட்டர் போல தோணல..  கேடி பய… என்கிட்ட சொல்ல வேண்டியது எல்லாம் லெட்டர்ல சொல்லிட்டு இருக்கான் என்று முணுமுணுத்துக் கொண்டாள் .. 

 

அவள் வெட்க சிவப்பை பார்த்தவன் 

எச்சில் விழுங்கிக் கொண்டான்… சீக்கிரம் லெட்டருக்கு பதில் சொன்னா வேலையை உடனே ஆரம்பிச்சிடுவேன் என்றான். முறுக்கேரும் உடலை இரண்டு கைகளை கோர்த்தபடி பின்னால் வளைத்து சொடக்கு எடுத்தபடி… இப்பொழுது… அவளை மையலாக பார்த்தபடி…

​Please grant me access quickly. I am starving to finish this job tonight.

 

​Best Regards,

​தேவா

 

என்று  சொல்லி முடிக்க..  மெல்லிய சிரிப்புடனே.. Letter la Tonight னே… போட்டுரட்டுமா?…  

 

ம்ம்… Night தானே போடணும்..  உங்களுக்கு வேற ஏதும் idea இருக்க… 

 

இல்லை என்று தலையசைத்தவள்…

 

நீங்க எப்பயும் ஆபீஸியலா… தேவாதித்யன் தானே சைன் பண்ணுவீங்க… அது என்ன இப்போ தேவா.. 

 

இந்த கிளைண்டுக்கு தேவானு போட்டா தான் மேடம் பிடிக்கும் நீங்க போய் லெட்டர் டைப் பண்ணுங்க… என்று கடுப்பாக சொல்லி அனுப்பி வைத்தான்….

 

ஓகே சார் என்று கூறிவிட்டு திரும்பி நகர்ந்து சென்றவளிடம்.. ஆபீசுக்கு இப்படித்தான் சேலை கட்டிட்டு வருவீங்களா? மலர்.. என்றான்.

 

ஏன் இந்த சேலைக்கு என்ன என்றாள்..  ஒன்னும் தெரியாதது போல்…

 

எதுக்கு பிசக்காய் காட்சியளித்த இடுப்பை கண்ணால் காண்பித்தான் தேவன்.. 

 

பாதி உடம்பு வெளியில் தெரியிற மாதிரி சட்டை பட்டனை திறந்து போட்டுட்டு நடந்து வராங்க… அவனது மார்பை கண்ணால் காண்பித்தாள்.. அவங்களையெல்லாம் கேள்வி கேட்காம நான் எவ்வளவு நல்ல புள்ளையா சேலை கட்டிட்டு வந்து இருக்கேன் என்ன போய் கேள்வி கேட்கிறீர்களே சார்… என்றாள் அப்பாவியாய்…

 

அது மட்டும் இல்ல சார்… இன்னைக்கு இப்படியேதான் இந்த ஆபீஸ் புல்லா நான் சுத்துவேன்… Free show..  என்றாள் இரண்டு கைகளை தளர்வாக விரித்தபடி.. 

 

அப்போ இப்படி போறதுல, மத்தவங்க பாக்குறதுல  உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?… என்று பல்லை கடித்தபடி ஆதி கேட்க…

 

எனக்கு என்ன பிரச்சனை… பிராப்பர்ட்டிக்கு சொந்தக்காரவங்க தான் அதை பத்தி கவலைப்படணும்.. அடுத்தவங்க பொருளை பத்தி நமக்கு என்ன சார் கவலை…

 

என்னோட ப்ராப்பர்ட்டிய நீங்க திறந்து போட்டு நடந்து வரும் போது தான் ஊரே பார்த்துச்சே. இதுக்கு மேல பாக்குறதுக்கு என்ன இருக்கு… 

 

அவள் பிடிவாதத்தை பற்றி அவனுக்கு தெரியுமே… அவன் சட்டை பட்டன் போடும் வரை… அவள் சேலையை இழுத்து விட்டு செல்லப் போவதில்லை…

 

அவள் பேசிக் கொண்டு இருக்கையிலே இருக்கையை விட்டு எழுந்து வந்தவன்…  அதிரடியாய் அவளை சுவரோரம் சாய்த்து… மிரண்டு முழித்த அவளது விழிகளை பார்த்துக்கொண்டே… கைகளை சேலையின் உள்நுழைத்து… எதையோ தேடுகிறேன் என்ற பெயரில் மொத்த அங்கத்தையும் தடவி…. பின் இரண்டு விரல்கள் அவள் ஜாக்கெட்டினுள் நண்டு போல் ஊர்ந்து சென்று..  உள்ளே பதுங்கி இருந்த தாலி கொடியை வெளியே எடுத்துப் போட்டது… அதிலிருந்து ஒரு ஊக்கை ( safety pin) கழட்டினான்…  அந்த ஹூக்கையும் வாய்களால் கழட்டுகிறேன் என்று இதழ்களால் ஊர்ந்து .. அவளை கண் சொருக இம்சித்து.. அந்த ஊக்கை கழட்டுவதற்குள், அவன் செய்த சேட்டையில் உயிர் போய் உயிர் வந்தது… பெண்ணவளுக்கு… அவன் கண்கள் அவள் கண்களையும் இதழையும் மாறி மாறி படையெடுத்தது.. ஆனால் முகத்தின் பாவனையை மட்டும் இறுக்கமாக வைத்துக் கொண்டான்…

 

பின் குனிந்து இடுப்பை சுற்றி இருந்த சேலையை ஏற்றி இடுப்பை மறைத்து பின் குத்தி விட்டான்…  

 

அந்தப் பின்னை குத்துவதற்குள்… அவன் கைகள் அவள் வெற்று இடையை சுற்றி இரண்டு முறை வலம் வந்து விட்டது… 

 

அங்கிருந்த மத்திய சுழி வேறு ஒருமுறை வந்து என்னை முத்தமிட்டு விடு என்று அவனை அழைக்க..  கோவக்காரன் மறுத்து விட்டான்..  ஒற்றை முத்தத்தில் மொத்த கோபமும் அடங்கிவிடும் என்று…

 

அவன் செய்த வேலையில் இனம் புரியா உணர்வில் வெந்து நூடுல்ஸ் ஆனாள் பெண்… குட்டி குட்டி பூனை முடிகள் கூட சிலிர்த்து கொண்டு நின்றது.

 

பின் சேலையின் மடிப்பை சரியாய் எடுத்து விட்டு… விலக முற்பட்டவனை… சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தியவள்… அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே… சட்டை பட்டன்களை போட துவங்கினாள்… ஆளில்லாதப்போ திறந்து போட்டு அடுத்தவங்களுக்கு காமிக்கலாம்னு நினைக்காதீங்க “கொன்றுவேன்” என்று விரல் நீட்டி மிரட்டினாள்… 

 

தாலியைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் உலா வந்தாலும்… அது கொடுக்கும் உரிமையும் நம்பிக்கையும்..  

பெண்களுக்கு வேற எதுவும் தருவதில்லை…  இதோ இங்க சிங்கத்தை மிரட்டும் மான்குட்டிக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது… எல்லாம் கழுத்தில் இருக்கும் தாலி கொடுத்தது தான்…

 

அவள் வார்த்தையை கேட்டவன் பார்வையில் சுவாரஸ்யம் கூடியிருந்தது. அவனின் கண்கள் இவ்வளவு நெருக்கத்தில் அவளின் இதழை தான் தொட்டு மீண்டது…

 

இருவருக்கும் ஒருத்தர் மேல் ஒருத்தர் ஆசையும், அளவு கடந்த காதலும் இருந்தாலும் கோபத்தை விட்டு வெளியே வர முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தார்கள்,. 

 

இந்த கோபத்தினால் தண்டனை அனுபவிப்பது இருவருமே… ஏக்க மூச்சுகளும் தாபம் மூச்சுகளும் அறையை நிறைக்கின்றன… ஏசி அறையிலும் தேகவெப்பம் கூடுகிறது…

அங்கங்களை அடக்கிக் கொண்டு உறங்குவதற்குள் பெரும் பாடாக ஆகி போகிறது… 

 

தேவையில்லாத கேள்வியை கேட்டு சண்டையை உருவாக்கியது அவள் தானே என்று அவனும்…

 

கேள்வி கேட்டால், எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ள போகிறேன்,மூஞ்சியில் அடித்தால் போல் கோபப்பட்டு எழுந்து சென்றது அவர்தானே என்று அவளும்…

தங்கள் நிலையை விட்டு இறங்கி வர மறுத்தனர்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top