அசுரன் 105

அசுரன் 105

முதல் நாள் வீரியமாய் இருந்த கோபம்… இரண்டாம் நாள் கோவம் கொஞ்சம் மட்டுப்பட்டு இருந்தது..

 

அவதான் ஏதோ புரியாம , கேள்வி கேட்டா நானாவது அவளுக்கு சொல்லி புரிய வச்சிருக்கலாம்… என்று அவனும்…

 

அவரு கோவபடுற மாதிரி கேள்வி கேட்டதே தப்பு… எத்தனை வருஷம் கூட இருந்த பிரெண்ட்ஸ் எனக்காக விட்டு தர முடியுமா… என்று அவளும்… 

 

ஒருத்தருக்காக மற்றொருவர்… அவர்கள் மனசாட்சியிடம் வரிந்து கட்டி கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்…

 

அழகாய் சுடிதார் அணிந்து… ஆபீஸ் கிளம்பி வெளியே வந்தவளை கண்டவன்.. அவளை வம்பு இழுக்கும் நோக்கத்துடன்..  வேண்டுமென்றே பூட்டி இருந்த சட்டையின் பட்டன்களை திறந்து விட்டான்… இன்று என்ன செய்வாய் என்று.. 

 

நேத்து சேலை கட்டி இருந்ததால்..  இடுப்பை பணயம் வைக்க முடிந்தது.. இன்று என்ன பண்ண முடியும் முழுதாய் மூடி இருந்த சுடிதாரில்…

ஆனால் பெண் நினைத்தால் எதையும் செய்வாள்…

 

இப்ப என்ன செய்வ.. என்று பார்த்த ஆதியின் பார்வையை புரிந்து கொண்டவள்…

 

வேகமாய் இரண்டு பக்கம் மறைத்து பின் குத்திருந்த… துப்பட்டாவை அவனைப் பார்த்துக் கொண்டே  கலட்டி, தனது டாப்பின் முன்பக்க கழுத்தை லோ-நெக்காக இறக்கி விட்டாள்…  தனது துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டினாள்…  

 

அவள் நின்றிருந்த அழகை பார்த்தவனுக்கு..  வைரமுத்துவின் வரிகள் எல்லாம் ஞாபகம் வந்து போனது… “சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளல் அடி” 

 

இடுப்பில் கை வைத்த படிய அவனை பார்த்தவள்.. இப்படியே ஆபீஸ் போலாமா… என்றாள்… புருவத்தை உயர்த்தி நக்கலாக…

 

உதட்டை குவித்து ஊதிக்கொண்டவன்… கன்னம் குண்டாகும்னு நான் கொடுத்த ஜூஸ் எல்லாம்… இங்கதான் போயிருக்கும் போல…  என்று முணுமுணுத்த படி…

 

வேகமாய் எழுந்து சட்டையை பூட்டி கொண்டவன்… சமத்து பையனாய் அலுவலகம் கிளம்பினான்… அவனது பாவனையை பார்த்து சிரித்துக் கொண்டே..  தனது ஆடையை சரி செய்து கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்..

 

அவன் கோபமாய் இருப்பான் என்று அவளும்… அவள் கோபமாய் இருப்பாள் என்று அவனும்… பேச தயங்கி தயங்கி… ஒருவர் மாத்தி ஒருவர் முகத்தை பார்க்க… நேரமும் காலமும் தான் ஓடியது….. அலுவலக வேலையும் அன்று இழுத்துப் பிடித்தது..  

 

இதோ மூன்றாவது நாள் காலை…

 

அவ என்ன தப்பா கேட்டுட்டா… மூஞ்சில அடிச்ச மாதிரி கைய கழுவிட்டு வந்த உன் மேல தான்டா தப்பு… கோவிச்சுக்கிட்டு உங்க ரூம்க்கு தானே போயிருக்கணும்… அதென்ன அம்மா வீட்டுக்கு கோச்சிட்டு  போற மாதிரி அடுத்த ரூம்ல வந்து தனியா படுக்கிறது… இப்ப மொத்த பிரச்சனைக்கும் காரணமே அதுதான்.. என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது…  இப்பவே போய் அவளை சமாதானம் பண்ற… என்று அவன் மேலேயே பலியை போட்டு கொண்டு அறையை விட்டு கிளம்பினான்.

 

நல்ல மூடுல இருந்தாரு… அவர் கிட்ட தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டு… டென்ஷன் ஆக்கி..  சரியா சாப்பிட கூட விடாம… இடையில எந்திரிச்சு போக வெச்ச… நீ எல்லாம் ஒரு மனுஷியா டி… அவர்தான் கோவிச்சுக்கிட்டு போனா… நீ போய் உன்னோட புருஷன் ரூம்ல தூங்க வேண்டியதுதானே.. இப்பவே போயி என் தேவாவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர்ற..  என்று அவளும் அறையை விட்டு கிளம்ப நினைக்க சரியாக உள்ளே நுழைந்தான் ஆதி…

இருவரும் மோதிக்கொண்டனர்.. 

இருவரும் ஒயிட் ஷர்ட் பிளாக் பாண்ட் அணிந்திருந்தனர்… சொல்லி செய்யவில்லை தானாய் அமைந்தது..  

 

இருவர் முகத்தையும் ஒருவர் பார்த்தவர்கள்… ஒன்றும் வாய் வார்த்தைகளால் பேசிக் கொள்ளவில்லை… கண்கள் கண்டமேனி பேசிக்கொண்டன…   மெல்லமாய் அணைத்தனர்… இருவரும் ஒருவர் இதழை மற்றொருவர் பார்த்தபடி நகர்ந்து வந்து மெதுவாய் முத்தமிட்டு கொள்ள ஆரம்பித்தார்கள்…

 

அவ்வளவுதான்.. இந்த காதல். பாலாய் போன காதல் மனம் கோபத்தை இழுத்து பிடிக்க தெரியவில்லை..  தன்னவர்களிடம் வெட்கம் மானம் சூடு சொரணை பார்ப்பதில்லை… ஒருத்தருக்கு ஒருத்தர் சாரி சொல்லிக்கொள்ளவில்லை… மற்றவரிடம் அதை எதிர்பார்க்கவும் இல்லை..  விளக்கம் கொடுக்கவும் இல்லை… ஆனால் கோபம் போய்விட்டது… இரண்டு நாள் பிரிவே… இரு யுகம் போல் ஆனது… தன்னவர்களிடம் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறோம் என்பதே மனதுக்குள் பெரும் பாரமாய் இருந்தது… இதோ இன்று அனைத்தும் இறங்கி மெல்லிய இறகு போல் இரண்டும் ஒட்டிக்கொண்டன… கோபமா? அவனா?(அவளா)என்று யோசிக்கும்போது அவன் தானே கண் முன்னே வந்து நிற்கிறான். பின்ன என்ன கோபம். விட்டு ஒழி!..  இதோ ஒற்றை முத்தத்திற்கு பின் எதற்காக சண்டை போட்டோம் என்பதே ஞாபகத்தில் இல்லை..  

 

தென்றலாய் ஆரம்பித்தது புயலாய் மாறியது… இதழில் தான் முத்தமிட்டு கொள்ள துடிக்கிறார்கள்… ஆனால் இருவரின் ஆவேசத்தில் முத்தம் இதழை சேராமல்  முகமுழுவதும் துலாவி வருகிறது… கண்ணம்.. நெத்தி.. மூக்கு… கண்கள்… காது மடல்…  பெரிய மூச்சுரைப்புடன்… இச்.. இச்… என்ற சத்தத்துடன்… செங்கழுத்தில் இறங்கிய ஆதியின் முத்தம்… அடுத்த நிலையை அடைய… தரையில்  நின்றிருந்தவளை.. ஒரே இழுவில் தனது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டான்.. பற்றுக்கொடி போல தலைவனின் இடுப்பை கால்களால் சிக் என்று  பற்றி கொண்டாள்.. கைகளோ அவனின் கழுத்தை பின்னிக்கொண்டது… தலைவனுக்கு ஏதுவாக தலையை பின்னால் நகர்த்தி தனது கழுத்தில் இடம் கொடுக்க…  முத்தமிட்டபடியே நடந்து வந்து..  மெத்தையில் அவளை படுக்க வைத்து.. முழங்காலிட்டு  தன் சட்டையை கழட்டி தூக்கி எறிந்தவன்… அவளது சட்ட பட்டனை அவிழ்க்கும் பொறுமை எல்லாம் இல்லை… 

பிடுங்கி எறிய முற்பட… மூணாவது பட்டன் அறுந்து போகும் வேளையில்… தனது உடலில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தவள்… 

 

அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்து…தேவா ஒரு நிமிஷம்… என்றாள்…

 

ஒரு நிமிஷம் கூட இனி என்னால பொறுக்க முடியாது… என்று கூறி… அவளின் மொத்த சட்டையும் கிழிக்கும் வேளையில்… அவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்…

 

ப்ளீஸ் ஒரு நிமிஷம் பொறுங்க… ப்ளீஸ் என்றால் அழுத்தமாக…

 

என்னடி… என்று முகத்தைப் பார்க்க…

 

ஒன் மினிட் வெயிட் பண்ணுங்க வரேன்…  என்று கெஞ்சி கூறிவிட்டு எழுந்து குளியலறைக்குள் புகுந்தவள்…

 

சிறிது நேரத்தில் தயங்கியபடி, மேலே துண்டைப் போர்த்தியபடி வெளியே வந்து..  சாரி தேவா… இன்னைக்கு முடியாது… என்றாள்…

 

ஏண்டி… என்றான்… பல்லை கடித்த படி.. பேயாட்டம் போடும் உணர்வுகளை அடக்க முடியாமல்…

 

பீரியட்ஸ் என்றாள்…

 

ஹையோ… ஒரு பெருமூச்சுடன்… தனது உள்ளங்கையால் தனது முகத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டவன்… 

 

த்ரீ டேஸ்அ என்றான்…

 

இல்ல பைவ் டேஸ் என்றாள்…

 

நேரமும் காலமும் என்ன வச்சு செய்யுது… என்று புலம்பியவன்… தனது பிடரியை தட்டியப்படியே..  அவன் உணர்வை அடக்கி கொள்கிறான் என்று மலருக்குமே தெரிந்தது.. 

சரி நீ போய்… பிரஸ் ஆப் ஆகிட்டு வா… என்று அனுப்பி வைத்தான்…

 

சாரி… என்றாள் மூக்கை சுருக்கிய படி..

 

ஏய்.. ச்சீ… இதுக்கெல்லாம் எதுக்குடி சாரி…. உன் கண்ட்ரோல்ல இல்லாத விஷயத்துக்கு எல்லாம் நீ என்னடி பண்ணுவ… 2 டேஸ சண்டை போட்டு வீணாக்கினது என்னோட தப்பு… என் சிட்டு கூட சண்டை போட்டு மனச கஷ்டப்படுத்துனதுக்கு எனக்கு இது தேவை தான்… என்று கூறிவிட்டு… மெத்தையில்  போய் குப்புற படுத்துக் கொண்டான்…

 

குளித்து இலகுவான ஆடை அணிந்து.. தயங்கியபடி மெதுவாய் அவன் அருகே வந்து படுக்க… இழுத்து அணைத்துக் கொண்டான்… அவளின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவன்… ஸ்டொமக் பெயின் இருக்கா என்றான் வயிற்றை மெல்ல வருடியபடி..

 

இப்போ இல்ல… மே பி நாளைக்கு வரும்.. 

 

தன் கன்னத்தில் இருந்து அவள் கையை எடுத்து ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டு கொண்டே… நெக்ஸ்ட் வீக் நா ஃபாரின் போறேண்டி… நம்ம கம்பெனிக்கு போயிட்டு வந்து ஒன் இயர் ஆகுது… சைன் அத்தாரிட்டி எல்லாம் மாத்தி கொடுத்துட்டு வரணும் கொஞ்சம் லீகல் இஸ்யூஸ் இருக்கு அது சரி பண்ணனும் நான் போயிட்டு வர்றதுக்கு எப்படி 10 to 15 டேஸ் ஆகும்… என்றான்.

 

அதை கேட்டு அதிர்ந்து, நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தவள்… 15 நாளா… ம்ஹும் என்னால முடியாது… வேற யாரையாவது அனுப்பி வைங்க… என்று கூறியவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்…

 

அவனும் அணைத்துக் கொண்டவன்.. எனக்கு மட்டும் உன்னை பிரிஞ்சு போகணும்னு ஆசையா.. இந்த வேலைக்கு நான் தான் போய் ஆகணும்..  வேற யாரையும் அனுப்ப முடியாது… போயிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் வர முடியுமோ வந்துடுறேன்..  என்றான்…

 

வேணாம் தேவா ப்ளீஸ்… ரொம்ப கஷ்டம் என்று கழுத்தை கட்டிக்கொண்டு அடம் பிடித்தாள்…

 

உன்னையும் அழைச்சிட்டு போலாம் தாண்டி நெனச்சேன்… ஆனா பாஸ்போர்ட் விசா எல்லாமே இழுத்து அடிச்சுட்டானுங்க..  அங்க வந்தாலும் நீ ரூமுக்குள்ளே தனியா தான் இருக்கணும்… எனக்கு ஆபீஸ்ல ஃபுல் டைம் ஒர்க் இருக்கும்… 

 

ம்ஹும்… என் தேவா குட்டிய நான்  எங்கேயும் விட மாட்டேன்..  என்று அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

 

கன்னுகுட்டி போல் மார்பில் முண்டுபவளை பார்த்து ரசித்து, மென்மையாய்  அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டவன்… அடம்பிடிக்காத டி… 15 நாள் கண்ண மூடி திறக்கறதுக்குள்ள ஓடிடும்… நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா உன்ன கூட்டிட்டு போறேன்.. என்று கூறி அவளை இதமாய்  அணைத்துக் கொண்டு தூங்கினான்.. 

 

கடந்த ஒரு வாரத்தில்… நூறு முறையாவது கேட்டிருப்பாள்…

கண்டிப்பா நீங்க போய் தான் ஆகணுமா?… ஒரு ரெண்டு நாள்ல திரும்பி வர முடியாதா…?

அடுத்த மாசம் போக முடியாதா?

ஆன்லைன்ல ஏதாவது பண்ண முடியாதா?… நீங்களே தான் போகணுமா? விதவிதமான கேள்விகள் ஆனால் அர்த்தம் ஒன்றுதான்… என்னை விட்டுப் போகாதே!…

 

இதோ அவன் பயணம் செல்லும் நாளும் வந்தது…

ஒருத்தியின் முகத்தில் உயிர்ப்பே இல்லை…

 

அமைதியாக அவனுக்கு தேவையானதை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்… 

 

அவன் அமைதியாய் உட்கார்ந்து அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…

 

மூக்கெல்லாம் சிவந்து கண்கள் சிவந்து உதடு கடித்து அவள் நிலையை பார்த்தவன்.. அவ்வப்போது ஒரு பெருமூச்சோடு தன்னை சமாதானம் படுத்திக் கொள்கிறாள்…  அழுகிறாள் என்று புரிந்தது…

 

முகத்தை அப்படி வைக்காதடி போகவே மனசு வராது…

 

சோகமான முகத்தை திருப்பி இதழில் அழுத்தமாய் ஒரு முத்தம் வைத்தான்… 

 

இங்கு தனியா இருந்து என்ன பண்ண போற உங்க அம்மா வீட்டுக்கு போறியா? 15 நாள் கழிச்சு வா… என்றான் பின்னாலிருந்து அணைத்த படி..

 

வேணாம்பா… இங்க இருந்த ஆபீஸ் வேலை பாப்பேன் ஈவினிங் தானே வீட்டுக்கு வரேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… அங்க போனா ரொம்ப போர் அடிக்கும்..  எனக்கு நம்ம வீடுதான் கம்பர்டபிள்… வேற எங்கேயும் போக புடிக்கல…

 

இந்த பதிலுக்கு பரிசாக முதுகெங்கிலும் முத்தம்…

 

இங்க வீட்ல தனியா இருக்கணுமே டி நைட் முழுக்க சமாளித்து விடுவியா அன்னைக்கு மாதிரி பயந்து காய்ச்சல் வந்தா நான் என்ன பண்றது…என்றான்…

 

வயிற்றை இறுக அணைத்து முதுகில் சாய்ந்து கொண்டான்…

 

இப்ப பார்த்து பயப்பட ஒன்னும் இல்ல அதனால பயப்பட மாட்டேன் என்றாள் தலையை குனிந்து மென் புன்னகையுடன் …

 

அவள் சிரிப்பை பார்த்து அவளை தன் பக்கமாக திருப்பியவன்… 

கல்யாணம் பண்ணிட்டு, ஒண்ணுமே பண்ணாம பொண்டாட்டிய தனியா விட்டுட்டு போறானே அப்படின்னு சிரிக்கிறியா… என்றான் அவள் நாடியை நிமிர்த்தி..

 

ஏன் இந்த ஒரு வாரமா நீங்க ஒண்ணுமே பண்ணலையா… சரியா சொல்லணும்னா ஒன்னு மட்டும் தான் பண்ணல… என்றாள் சூசகமாக…

 

அதெல்லாம் யாருக்கு பத்தும்…  யானை பசிக்கு சோள பொறி மாதிரி…  சொல்லப்போனால் அதுக்கப்புறம் தான் பசி அதிகமாயிருக்கு… கடிச்சு திங்கனும் போல இருக்கு..  என்றான் பற்களில் கடிப்பது போல் பாவனை செய்து…

 

ம்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்ல… நான் எங்க போ போறேன் காலம் முழுக்க உங்க கூட தான் இருக்க போறேன்… நீங்க இந்த தடவை போகலை னா… நீங்க இத்தனை நாள் கஷ்டப்பட்டு உருவாக்கின கம்பெனி கெட்டுப் போகும்… வேலை தான் முக்கியம்… நிம்மதியா போயிட்டு வாங்க… நான் இங்க பத்திரமா இருந்துப்பேன்…  என்று அவனுக்கு தைரியம் ஊட்டினாள்… 

 

தட்ஸ் மை கேர்ள்… என்று கன்னம் தட்டியவன்… என் நிலைமை என்னன்னு அவ சொல்லாமலே புரிஞ்சுக்கவா… லவ் யூ சிட்டு… என்று இதமாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.. 

 

இப்படி எல்லாம் சொல்லி ஒன்னும் ஐஸ் வைக்க வேணாம்… 

என்னோட கான்வகேஷனுக்கு வந்துருவீங்க இல்ல… 

 

அதுக்கு இன்னும் 20 நாள் இருக்கு டி அதுக்குள்ள வந்துருவேன்…

 

ஆயிரம் அறிவுரைகளை சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தாள்… 

இறுர்றுக அணைத்து… ஆயிரம் முத்தங்கள் வழங்கி… சட்டையை பிடித்து இழுத்து… மார்பில் முகம் புதைத்து… இன்னும் என்னென்ன அலும்புகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து… பிரியாவிடை அளித்தாள்…

 

காலை கட்டி கொண்டு அழுகும் சிறு குழந்தையை பிரித்து அன்னையிடம் விட்டு செல்வது போல் அவன் மனநிலை….

 

ஆயிரம் பாதுகாப்பு நெறிமுறைகளை சொல்லி அவன் விட்டு சென்றான்… அவள் வாசத்தை சுவாசத்தில் நிரப்பிக் கொண்டு… அவளை கண்களில் நிரப்பி கொண்டு… அவள் இதழ்கள் அவன் வாயுடன் வராமல் இருந்தது பெரிய விஷயம்… பிரிவின் வழியில் உதட்டு காயங்களை பற்றி கவலை கொள்ளவில்லை இருவரும்… 

 

விக்ரமிடமும் ரவியிடமும் பொறுப்புகள் சிலவற்றை ஒப்படைத்து விட்டு… விமானத்தில் பறந்தான்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top