அசுரன்  114

அசுரன் 114

 

ஹாஹாஹா… என்ன பாத்தா உனக்கு முட்டாள் **  மாதிரி தெரியுதா?…  உன் பொண்டாட்டி கிட்ட நானே போன்ல பேசி உன் கையில நானே வாலண்டியரா மாட்டிக்க நான் என்ன முட்டாளாடா..  என்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி எங்க அப்பா தான் இந்த மாதிரி போலி ரெடி பண்ணி இங்க சுத்த விட்டிருந்தார்… அது எனக்கு வசதியா போச்சு… அவ என்ன மாதிரி face சர்ஜரி பண்ண ஆளுடா..  இது மாதிரி எங்க கிட்ட நிறைய அடிமைங்க இருக்காங்க.. எங்களுக்காக சாகறதுக்கு…

 

இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், 

தைரியமா தனி ஆளா உள்ள நடந்து வர… உன்னோட ஹீரோயிசத்தை காட்டுவதற்கு இந்த இடம் தான் கிடைச்சதா? … ரத்தம் வரும் ஆதியின் காயத்தின் மேல் துப்பாக்கியை வைத்து அழுத்த மேலும் ரத்தம் பீச்சியது… அந்தத் துடிப்பைக் கண்டு மலர் அலறினாள். “தேவா…” – அந்த ஒற்றைச் சொல்லில் ஆயிரம் வலிகள் கலந்திருந்தன.

 

இதுக்கு மேல உன்னோட அழுகை சத்தம் கேட்டா அடுத்த புல்லட் உன் தேவா தலையில  இறங்கும் வசதி எப்படி?… என்றான் மலரை நோக்கி…

 

இவனையும் அந்த தூணில் கட்டி போடுங்கடா… என்று 

சொன்னதும் செய்யப்பட்டது…

 

உன் கூட வந்த உன்னோட இன்னொரு நண்பன பின்னாடி கட்டி போட்டு வச்சிருக்கான்… போகும்போது மறக்காம அவனையும் கூட்டிட்டு போ.. 

 

நண்பனையும் பொண்டாட்டியையும் காப்பாத்திட்டு போக தானே வந்த… இப்போ உனக்கு நான் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்… 

 

உன் நண்பனை ஷூட் பண்ணிட்டு உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய்டு… அவனுக்காக தானே என்ன அடிச்ச…  என் மூஞ்சிய ஒடச்ச..  உன் கையால அவனை கொன்னுட்டா எனக்கு அது போதும் வேற ஏதுவு…ம் வேணாம்…

 

உனக்கு இன்னொரு ஆப்ஷன் கூட கொடுக்கிறேன்… உன் நண்பன ஷூட் பண்ண மனசு வரலைன்னா உன் பொண்டாட்டிய சூட்…. ச்சே… ச்சே… என்று தலையை மறுப்பாய் அசைத்தவன் கடவுளோட படைப்பை வீணடிக்க கூடாது… உன் பொண்டாட்டிய எங்ககிட்ட விட்டுட்டு உன் பிரண்டை கூட்டிட்டு திரும்பி பாக்காம நீ போய்கிட்டே இருக்கலாம்… நான் அவ்வளவு கெட்டவன் எல்லாம் கிடையாது… உன் பொண்டாட்டி கொல்ல எல்லாம் மாட்டேன்..  எனக்கு போர் அடிச்சா உடனே உன்கிட்ட அனுப்பி வச்சுடுறேன்…  உனக்கு எப்படி வசதி… என்று இரு புருவங்களையும் உயர்த்தி அவன் வில்லத்தனமாய் கேட்க…

 

அவன் சொன்னது காதிலேயே விழுகாதது போல், பற்களை கடித்துக் கொண்டு கைகளை இருக்க மூடி நரம்புகள் புடைக்க கண்கள் சிவந்து  நின்று இருந்தான் ஆதி…

 

கோபத்தை அடக்கி அமைதியாய் நிற்கும் ஆதியை பார்த்தவன்… நான் சொன்னதுக்கு நீ எந்த பதிலும் சொல்ல மாட்ட அப்படித்தானே… எனக்கு அவ்வளவு பொறுமை இல்ல ஆதி… என்று ஒரு இரும்பு கம்பியை எடுத்து… ஆதியின் அருகில் நடந்து வந்தவன்… எங்க அடிக்கலாம்…

 

ம்ம்… என்று யோசித்தவன்… இந்தக் கால் தான என் சொல் பேச்சை கேளாமல் நடக்குது… அப்ப அதுக்கு பனிஷ்மென்ட் தர வேணாம்… கூறியவன்… இரும்பு கம்பியால் ஆதியின் காலில் ஓங்கி அடித்தான்…

 

தைரியமான ஆம்பளையா இருந்தா அவன அவுத்து விட்டு அடிடா… என்று அருண் கத்த…  

 

அப்படியா டேய் வந்து கட்ட அவுத்து விடுங்கடா… அப்படின்னு சொல்லுவேன்னு பாத்தியா… லூசு பயலே..  கட்ட அவுத்து விட்டா அவன் என்ன பண்ணுவான் என்று எனக்கும் தெரியும்… இன்னும் என் மூஞ்சில இருக்க மார்க் போகல… இந்த மாதிரி சில்லி டெக்னிக்கெல்லாம் என்கிட்ட யூஸ் பண்ணாதீங்க டா முட்டாள்களா…

 

அவன் அடி வாங்குவதை பார்க்க முடியாமல், கண்ணை இறுக மூடிக்கொண்டாள் மலர்… கண்ணில் இருந்து தண்ணீர் ஆறாய் வழிந்தது… சந்தோஷத்தில் அழுக வைத்தவன்… இதோ என்ற துக்கத்திலும் கண்ணில் இருந்து நீர் வழிய வைத்து விட்டான்..  

 

ப்ளீஸ்…ப் ப் ப்ளீஸ்… அவர விட்டுருங்க… என்று பெண் அவள் கதற…

 

ஆதியின் பார்வை அவளை தான் தழுவியது… அவளின் அழுகும் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை… அவளும் அவனை தான் பார்த்தாள்… சட்டை முழுவதும் ரத்தமாய்… காலில் விழுந்த அடியில் நிற்க முடியாமல் அவன் கால்கள் வலுவிழந்தது… ஆனாலும் சீறும் முகமாய் தான் நின்று இருந்தான்.. 

 

நீ ஒரு முடிவு எடுக்கிற வரைக்கும்… என்கிட்ட அடி வாங்கிய சாவுடா… கூறியபடி மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்தான்… இதற்கு மேல் நிற்பதற்கு பலன் இல்லாமல் துவண்டு விழுந்தான்… ஆதி…

 

ஆதி என்ன ஷூட் பண்ணிட்டு… அவளை கூட்டிட்டு போஓ…  என்னோட ஒரு உயிரை எடுத்து உங்க ரெண்டு பேர் உயிரை காப்பாத்திக்கோங்க… காயத்தினால் ஏற்பட்ட வலியின் உடனே அழுத்தி சொன்னான்… அருண்…

 

இதோ உன் நண்பனே சொல்லிவிட்டான்… என்ன அவன போட்டுறலாமா… என்று ராகேஷ் கேட்க…

 

எந்த பதிலும் இல்லை ஆதியிடம்…  

 

அவன் அமைதியை பார்த்து மேலும் கடுப்பாகியவன்… என்கிட்ட அடி வாங்கியே சாகணும்னு தான் உன்னோட விதி இருக்கும் போலடா ஆதி… என்று கூறியபடி வீரியமாய் அடுத்த அடி அடிக்க இரும்பு கம்பியை அவன் ஓங்க…

 

அவன் அடிப்பதற்குள் ஒரு முடிவெடுத்தவள்.. “நான் உங்க கூட வரேன்… அவரை விட்ருங்க… நீங்க சொல்றத செய்றேன்…” என்று கண்ணை மூடியபடி ஓங்கி கத்தினாள் மலர்…

அவளுக்குத்தான் தெரியுமே… ஆதி இதில் முடிவு எடுக்க மாட்டான் என்று…

 

அவள் சொன்னதைக் கேட்டு ஆதி தான் வேகமாய் நிமிர்ந்து பார்த்தான்…

இதுக்கு மேல வாய திறந்தேனா நானே உன்ன சாவடிச்சிடுவேன் டி.. நான் செத்த்..தாலும் நீ அந்த இடத்தை விட்டு நகரக்கூடாதுடி என்று கர்ஜித்தான்… 

 

கேக்க மாட்டேன் என்னும் விதமாய் தலையசைத்தவள் ..சாரி…தேவா… எனக்கு வேற வழி தெரியல… நீங்க அடி வாங்குறத என்னால பாக்க முடியல… என்றாள் கண்கள் மூடி விம்மிய படி…

 

ப்ளீஸ்… ராகேஷ்… என்னை எடுத்துட்டு… அவர விடுங்க… என்றாள் மலர் தரையைப் பார்த்தபடி.

 

வாவ்… என்று வானத்தைப் பார்த்து கைதட்டியவன்…  கற்ப கொடுத்து புருஷனை காப்பாத்தலான்னு முடிவு பண்ணிட்டா உன்னோட தர்ம பத்தினி.. அருண் எடுத்த முடிவு விட உன் பொண்டாட்டி எடுத்த முடிவுல எப்படியோ எனக்கு லாபம் தான்… அதனால அதையே நம்ம புரசீட் பண்ணலாம்…

 

மலரின் கைகட்டு கால் கட்டுகளை அவிழ்த்து ஆதியின் அருகில் அழைத்து வந்தவன்…

 

உன் புருஷனுக்கு “பாய்” சொல்லிட்டு வா நாம போகலாம் என்றான்… ராகேஷ்.

 

போகாதடி… என்றான் பல்லை கடித்த படி… சீறி கொண்டு… ஆனால் கலங்கிய கண்களுடன்…

 

அவன் கன்னத்தைப் பிடித்து நெற்றி முட்டியவள்… நான் எப்படி திரும்ப வந்தாலும் நீங்க ஏத்துப்பீங்கன்னு எனக்கு தெரியும்… ஆனா அதுக்கு  முதல்ல நீங்க உயிரோட இருக்கணும்… நீங்க செத்த பிறகு… இந்த உயிரை, உடம்பை வைத்து நான் என்ன தேவா பண்ண போறேன்…  என்று கூறி மௌனமாய் கண்ணீர் வடித்தவள்… லவ் யூ தேவா என்று கூறி அவன் இதழில் முத்தமிட்டாள்…

 

கண்ணை மூடி இருந்தவன் ப்ளீஸ் டி போகாத… என்று கூறியவனை…

இயலாமையுடன் பார்த்தாள் மலர்…

அப்படி மட்டும் பாக்காத டி…

“அவன கொன்னுட்டு என்னால நிம்மதியா உன்னோட வாழ முடியாது…” கண்ணில் தேங்கி இருந்த கண்ணீர் துளியை அழுத்தி மூடி வெளியே தள்ளியவன்… “நீ இல்லாம என்னால வாழவே முடியாது டி..” என்று அழுத்தி ஆதி கூறிக்கொண்டு இருக்க.. 

 

Yes, i know, but​ “You have choices. I only have Deva” சாரி… உங்கள நான் இழக்க விரும்பல…  இதை சொல்லும்போது மலரின் முகத்தை ஆதியால் பார்க்க முடியவில்லை… தன் இயலாமையை எண்ணி நொந்தான்…

 

அவர்கள் இருவரின் காதலையும் பார்த்து… என்ன சொல்வதென்றே தெரியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டான் அருண்… அவனுக்குமே கண்கள் கலங்கியது…  “நீ என்னோட அழகுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் ஒன்னும் உடம்புக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ” இன்று ரதி கூறிய வார்த்தைகள் இப்போது ஒலித்து சென்றது… “இன்னும் உனக்கு எத்தனை பேர் வேணும் என்று மலரை பார்த்து கேட்டது ஞாபகம் வர…” உலகில் இருக்கும் ஒட்டுமொத்த அற்ப பிறவி தான் என்று உணர்ந்தான்…

 

மலரின் பின் மண்டையில் இருந்த கூந்தலை கொத்தாக பிடித்து..   என்னடி ரொம்ப ஓவரா உருகுற… அவன கொஞ்சுனது  போதும் வா… என்று தன் பக்கம் இழுத்தவன்… எலவம் பஞ்சு மாதிரி இருக்கியேடி… எங்கள தாங்குவியா… என்று கேட்டபடி அவளை இடையோடு கைவிட்டு இழுத்தான்…

 

மலரின் மேலிருந்த ராகேஷின் வலது கையை தான் ஆதி அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்… கழுத்து நரம்புகள் புடைத்து கொண்டு நின்றன…

 

மேல கை வச்சதுக்கே இவ்ளோ கோவம் வருதா.. 

உன் கண் முன்னாடியே இவளை முடிக்கணும்னு தான் நினைக்கிறேன்.. ஆனா என்ன செய்ய… எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்… அதனால ரூமுக்கு கூட்டிட்டு போறேன்… கவலைப்படாத… உன் பொண்டாட்டி மிச்சம் இருந்தா… கண்டிப்பா உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்..  வச்சு வாழ்ந்துக்கோ.. 

 

என்று கூறிவிட்டு… மலரை இழுத்து சென்றான்…

 

ஆதியை, திரும்பி, திரும்பி பார்த்த படி, கண்ணில் வழியும் கண்ணீரை தொடைத்த படி… ராகேஷ் உடன் சென்றாள் மலர்…

 

ஆனால் ஆதி அவளை நிமிர்ந்து  பார்க்கவில்லை…

 

குருட்டு தைரியத்தில் அவனுடன் கிளம்பி வந்து விட்டாள் மலர்… ஆனால் ஒரு நிமிடம் கூட… தனது தேவாவை தவிர யாரையும் நெருங்க விட முடியாது என்று அவளுக்கு தெரியும்…. மனதிற்குள் நடுக்கம் இருந்தாலும் ஒட்டுமொத்த தைரியம் வரவழைத்துக் கொண்டு… அங்கிருந்த படுக்கை அறைக்குள் நுழைந்தாள்… உள்ளே சென்றதும் கண்கள் சரசரவென அங்கிருந்து அனைத்து பொருட்களையும் ஆராய்ந்தது…. கட்டிலின் அருகில் இருந்த கண்ணாடி பியர்  பாட்டிலை கண்டுகொண்டாள்…

 

அறையின் கதவை அடைப்பதற்காக பிடித்திருந்த அவளின் கையை சாதாரணமாக இழுத்து உள்ளே தள்ள..  மலர் அதை பயன்படுத்தி… 100 மடங்கு நடிப்பை போட்டு.. ரோலிங் கில் போய் அந்த பாட்டிலின் அருகில் விழுந்தாள்.. அந்த பாட்டில் அவளின் முதுகின் பின்னே மறைந்து இருந்தது.. 

 

அவளின் ஓவர் டோஸ் நடிப்பை பார்த்து ராகேஷ் crazy girl என சிரித்துவிட்டு கதவை அடைத்து திரும்ப…  

 

பீர் பாட்டிலைக் கொண்டு ஓங்கி..  கண்ணும் காதும் இணையும் இடத்தில் ஒரு அடி அடிக்க… சிதறிய கண்ணாடிச் சில்கள் கண்ணிலும் காதிலும் கிழித்தது… அடுத்த நிமிடம் தடுமாறியவனின் கையில் இருந்த துப்பாக்கியை தட்டி விட்டவள்… அடுத்து என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு இருக்கையில்… 

கண்ணாடி ஜன்னலை துளைத்து கொண்டு ராகேஷின் கழுத்தை வந்து அடைந்தது ஒரு புல்லட்…

 

முட்டை கண் அதிர விழி விரித்து பார்த்தாள் மலர்…

 

ஒரு நிமிடத்திற்கு முன்னால்…

 

அருகில் இருந்த ராகேஷ் தூரத்தள்ளி சென்றதும்… 

 

ராஜேஷ்… நான் பேசுறது கேக்குதா… என்று தன் காதில் இருந்த கருப்பு நிற சிறிய அளவிலான ear bud டில் பேசினான் ஆதி…

 

எஸ் ப்ரோ… நான் ஸ்பாட் ரீச் ஆயிட்டேன்.. ரெடியா இருக்கேன்… நம்ம பாய்ஸ் ரெடி அஹ் இருக்காங்க… 

 

குட்… இங்கிருந்து மூவ் ஆகிட்டான்… கூட மலர் இருக்கா பாத்து பத்திரம்…  அப்புறம் இன்னொரு விஷயம்… பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச்…

அவன நீ எங்க வேணா சுட்டுக்கோ..  ஆனா எனக்கு அவன் உயிரோட வேணும்… 

என்று ஆதி ஆணை பிறப்பித்தான்…

 

வேணாம் ப்ரோ ரிஸ்க் வேணாம் அவன ஸ்பாட் அவுட் பண்ணிடலாம்..  என்று ராஜேஷ் கூற…

 

நோ ஆர்கியுமென்ட்ஸ்… அவனோட வலது கையை வெட்டி எடுத்ததுக்கு அப்புறம்தான் உயிர் போகணும்… என்று முகத்தில் ரௌத்திரம் பொங்க கூறினான் ஆதி.. 

 

மலர் அடித்ததில் கதி கலங்கி நின்றவனை..  தூரத்தில் இருந்து சனைப்பர் ஷாட் மூலம்… சரியாய் கழுத்தில் புல்லட்டை இறக்கினான்… சீக்ரெட் இன்வேஸ்டிகேஷன் ஆபிசர்

மிஸ்டர். ராஜேஷ்.

 

அவனைத் தொடர்ந்து, “ஷட்”  “ஷட்” என்றது சத்தம் அந்த இடத்தில் எதிரொலித்தது… முன் வாயிலில் பின் வாயிலில் இருந்த அடியாட்கள் சுடப்பட்டார்கள்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top