அசுரன் 115
அறுவை சிகிச்சை செய்து உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு எடுக்கப்பட்டது… மயக்கத்தில் இருந்தான் ஆதி…
ஆதியின் நிலைமையை பார்த்து பதட்டத்துடன் வெளியில் என்ன செய்வது என்று தெரியாமல்… வெறுமையான முகத்துடன் அமர்ந்திருந்தாள் மலர்…
அறையின் உள்ளே காயங்களுக்கு மருந்து இட்டு, கட்டு போட்டுவிட்டு… சோர்ந்த முகமாய் களைப்புடன் வெளியே வந்தான் அருண்…
விக்ரமும் ராஜேஷும் மலரின் இரு பக்கமும் அமர்ந்திருந்தனர்…
என்னடா இப்ப பெயின் எப்படி இருக்கு என்று கேட்டான் விக்ரம்…
பைன் டா… பதில் என்னமோ விக்ரமிற்கு தான்…
ஆனால் அருணின் பார்வை என்னமோ மலரின் மேல் தான் இருந்தது…
தயங்கியப்படியே மலரின் அருகே வந்தவன்… மலரின் எதிரே முழங்காலிட்டான்… எதிரே அருண் வந்ததும் என்ன என்பது போல் அவன் முகத்தை பார்க்க… மெல்ல அவளுடைய இரு கைகளையும் தன் கரங்களால் பிடித்தான். மெல்ல இழுக்க முயற்சித்தாள் முடியவில்லை…
இதை எப்படி சொல்றதுன்னு தெரியல மலர்…
நீ என் கூட இருந்த வரைக்கும் உன் கிட்ட நான் நிறைய தடவை சொல்லி இருக்கேன்… என் கூட வாழறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு அப்படின்னு கேட்டு இருக்கேன்… உன்ன ஒரு அற்ப சந்து மாதிரி நான் நடத்தி இருக்கேன்.. அவமானப்படுத்தியிருக்கேன்…
ஆனா இன்னைக்கு நான் ஒன்னு புரிஞ்சுகிட்டேன்… ஒரு கணம் அமைதியாகி எச்சில் விழுங்கியவன்… உண்மையிலேயே உன்னோட இந்த காதலை வாங்கறதுக்கு எனக்கு தான் தகுதி இல்லை… ஏன் உன்னோட காதல் கிட்ட நிக்கிறதுக்கு கூட எனக்கு தகுதி இல்லைனு தோணுது… அதனாலதான் அது எனக்கு கிடைக்கலைன்னு நினைக்கிறேன்..
என்ன நீ பிரிஞ்சு போனது நெனச்சு இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசப்படுறேன்… உன்னோட காதலை அதுக்கு தகுதியான ஒருத்தன் கையில நீ சேர்த்திருக்க…
விக்ரம் அடிக்கடி ஒன்னு சொல்லுவான்… “நீ ஒரு பொக்கிஷத்தை தொலைச்சுட்ட அப்படின்னு..”. ஒருவேளை என்ன சகிச்சுக்கிட்டு கடைசிவரை நீ என்கூட இருந்திருந்தா நீ ஒரு பொக்கிஷம் அப்டினு எனக்கு தெரியாமலே போய் இருந்திருக்கும்… என்ன விட்டு விலகி உனக்கான ஒரு வாழ்க்கையை நீ தேடிக்கிட்டதுதான் நீ செஞ்சதிலேயே தலைசிறந்த செயல்… நவ் ஐ அம் ஹாப்பி… என்று சொல்லி அவளது உள்ளங்கையில் தனது முகத்தை புதைத்துக் கொண்டான்…
இப்பொழுது அவளும் தன் கையை விலக்கிக் கொள்ள முயலவில்லை… அவளது உள்ளங்கை ஈரமானது… ஐ அம் சாரி ஃபார் எவ்ரிதிங்… என்று உடைந்த ஒரு குரல் கேட்டது அவனிடமிருந்து… உன்னோட முகத்தை பார்த்து சாரி கேட்க ரொம்ப கில்டியா இருக்கு… என்று அவன் இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த மொத்த ஆணவமும் உடைந்து கண்ணீர் ஆகி அவனது உடல் குலுங்கியது.. என்று ஒரு ஆண் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கேட்டு விட்டானோ அன்றிலிருந்து அவன் வாழ்க்கையில் உள்ள பாவங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.. ஏனென்றால் இந்த பாவ மன்னிப்பு… 100 கோடி ஆண்களில் ஒருவர் கூட கேட்பதில்லை.. வரிசை இல்லாத இடத்தில் கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்படுகின்றன… இதோ அருணின் பாவமன்னிப்பும் உடனே ஏற்றுக் கொள்ளப்பட்டது….
குலுங்கி அழுகும் நண்பனின் தோளை தொட்டு ஆசுவாசப்படுத்த போன விக்ரமை… கையைப் பிடித்து தடுத்தான் ராஜேஷ்…
பாதிக்கப்பட்டவங்க கிட்ட மனம் திருந்தி மன்னிப்பு கேட்டால் மனபாரம் குறையும் ப்ரோ… அவரை விடுங்க பேசட்டும்… என்று கூறி விலக்கினான்…
அருண் சார் ப்ளீஸ் எந்திரிங்க.. ஒருவேளை நீங்க என்ன ஏத்துக்கிட்டு வாழ்ந்து இருந்தா… கடைசி வரைக்கும் எனக்கான ஒரு ஜீவன் துடிச்சுக்கிட்டு இருக்குன்னு தெரியாமலே போயிருக்கும்…. நானே உங்களுக்கு நன்றி தான் சொல்லுவேன்.. என்னோட தேவாவை எனக்கு கொடுத்ததற்கு… எல்லாம் நன்மைக்கே என கடந்து வந்துருங்க… ப்ளீஸ் சார் நீங்க இப்படி உடையிறத என்னால பாக்க முடியல… என்று அவள் ஆறுதல் கூற… சிறிது நேரம் அமைதிக்கு பின்… அவள் கையிலிருந்த முகத்தை விலக்கி… தனது இரு தோள்பட்டையிலும் மாறி மாறி முகத்தை துடைத்துக் கொண்டான் அருண்…
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில்…
டாக்டர் சார் உங்கள பாக்கணும்னு கூப்பிடுறாங்க வாங்க என்று செவிலியர் சொல்லிவிட்டு சென்றார்…
புல்லட் எடுத்தாச்சு ஆனா அது கொஞ்சம் ஆழமான காயமா இருக்கு… எலும்பு கூட கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கு… கால் எலும்புல இன்னும் ஒரு அடி விழுந்திருந்தாலும் அது இரண்டா முறிய வாய்ப்பு அதிகம். ஆனாலும் கால் எலும்புல கீறல் விட்டு இருக்கு… இது எல்லாத்துக்கும் இப்ப நம்ம ட்ரீட்மென்ட் பண்ணி இருக்கோம்.. ஆனா அவரு கண்டிப்பா ஒரு மாசத்துக்கு பெட் ரெஸ்ட் எடுத்தே ஆகணும்… ரொம்ப கவனமா பாத்துக்கோங்க… மூணு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டு அதுக்கப்புறம் நீங்க வீட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்… வேற எந்த பிராப்ளமும் இல்லை நல்ல சத்தான சாப்பாடா குடுங்க… நல்ல ஓய்வு எடுக்க சொல்லுங்க… கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சிருவார் போய் பாருங்க… என்று தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கி அனுப்பினார் மருத்துவர்…
பெரிய அளவில் எந்த தொந்தரவும் இல்லை என்பதே போதுமானதாக இருந்தது இப்போது…
ஆதியின் மயக்கம் தெளிந்ததும்… நால்வருமே உள்ளே நுழைந்தனர்…
உனக்கு எப்படி டா இருக்கு என்று அருணை பார்த்தும் விசாரித்தான் ஆதி.
உயிர் போகும் நிலையிலும் தன் நண்பன் தன் மேல் வைத்திருந்த பாசத்தை கண்கூட கண்டு உருகிப் போனான் அருண்… மனதிற்குள்ளே மருகி கொண்டு இருந்தான்… ஆதியின் முகத்தை கண்டதும்…
லவ் யூ டா ஆதி என்று கூறி கழுத்தை கட்டிக்கொண்டான்..
ஆசுவாசமாய் அவனது முதுகை தட்டிக் கொடுத்தவன்… உடம்பெல்லாம் காயமா இருக்கு வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாடா… என்று கூறினான்…
ஒவ்வொருத்தரும் பலவிதமான கேள்விகளை கேட்க வலியுடன் திக்கி திணறி பதிலை கூறினான் ஆதி…
இப்போ வலி இல்லடா நல்லா இருக்கேன்… நீங்க எல்லாம் ஏன்டா மூஞ்சி இப்படி வச்சிருக்கீங்க…
ஆனால் மலர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலே வரவில்லை… உள்ளே வந்ததிலிருந்து அவள் முகத்தை நிமிர்த்தும் பார்க்கவில்லை…
நைட் இருந்து எல்லாரும் முழிச்சிட்டு இருக்கீங்க வீட்டுக்கு போங்கடா போய் பிரஷ் ஆயிட்டு சாப்பிட்டு தூங்குங்க நாளைக்கு வாங்க என்று கூறினான் ஆதி…
ஆண்கள் மூவரும் கிளம்ப… மலர் ஆதியுடன் இருந்து பார்த்துக் கொள்வதாக இருந்தது…
விக்ரம்!… யாரும் இங்க இருக்க வேணாம் எல்லாருமே கிளம்புங்க… இங்க நர்ஸ் இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க… என்று மலரை பாராமுகமாய் சொல்ல…
அண்ணா இப்ப எதுக்கு என் மேல இவ்வளவு கோவமா இருக்காரு… நான் என்ன பண்ணேன்…
மரியாதையா இங்க இருந்து அவளை போக சொல்லுடா… வாய தொறந்தா பல்ல ஒடச்சிடுவேன் சொல்லி வை… முடிஞ்சா உன் தங்கச்சிய உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிரு… இல்லனா போய் கிராமத்தில் கொண்டு போய் விட்டுட்டு வந்துரு.. நான் நிம்மதியா இருப்பேன்…
எதற்கு இந்த கோபம் என்று புரியாமல் கண்கள் கலங்க நின்று இருந்தாள் மலர்…
வாமா மலர்… நம்ம வீட்டுக்கு போகலாம்…
இல்லன்னா நான் வரல நீங்க போங்க… நீங்க அட்டெண்டர் ரூம் இருக்கு நாங்க ரெஸ்ட் எடுத்துக்கிறேன்… என்று வலுக்கட்டாயமாக மறுத்துவிட்டாள்….
மற்றவர்களுக்கு ஒன்று என்றாலே இடத்தை விட்டு நகர மாட்டாள்.. அவளின் தேவாவிற்கு ஒன்று என்றால் வந்து விடுவாளா?… தான் இங்கு நிற்பது வீண் என்பது விக்ரமுக்கு தெரியும்… அதனால் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்…
ஆதியின் எதிரே தான் அமர்ந்து இருந்தாள்… அவனைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள். கண்ணை மூடி அமைதியாய் ஒரு கையை தலையின் மேல் வைத்து படுத்திருந்தவன்…
வெளிய போடி… என்று கர்ஜித்தான்.
இப்போ எதுக்கு இவ்ளோ கோவப்படுறீங்க… காரணமாவது சொல்லுங்க… நான் போறேன்… இல்லனா இங்கேயேதான் உட்கார்ந்து இருப்பேன்… என்றாள் அழுத்தமாய்..
செந்தனல் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டவன்… நீயா எழுந்து வெளியே போயிடு… இல்லன்னா நான் எழுந்து வெளியே போயிடுவேன்… என்ன பண்ணலாம்… என்றான்
இ..ல்ல.. நானே போயிடுறேன்… ஏன் இப்படி பண்றீங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு.. வெளியே சென்று அமர்ந்து கொண்டாள் மலர்..
மலரின் எந்த உதவியையும்… ஆதி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை…
சாப்பாடு ஊட்டி விட வந்தவளை…
எடுத்துட்டு ஓடிடு… கிட்ட வந்த கொன்றுவேன்… என்று மிரட்டினான்…
இப்போ எப்படி சாப்பிடுவீங்க…
பட்டினி கிடந்து சாவேண்டி… உன் வேலை மயிரை மட்டும் பாரு..
பாத்ரூம் அழைத்துச் செல்ல வந்தாள். ஒற்றை கை நீட்டி அங்கே நில் எனும் விதமாக எச்சரிக்கை செய்தான்….
தேவா… ப்ளீஸ்… என்று அவள் வாயிலிருந்து வார்த்தை வர…
கட்டில் கம்பியை பிடிமானமாக பிடித்து நின்றிருந்தவன்… ஒற்றை கையால் பக்கத்தில் இருந்து ஆப்பிளை எடுத்து கோபமாக அவள் மேல் வீசினான்…
அந்த பேர சொல்லிட்டு கிட்ட வராத… உன்னோட தேவா அங்கேயே செத்துட்டான்… செத்த இடத்தில்தான் இன்னும் கிடப்பான் தேடி எடுத்து பொறுக்கி அடக்கம் பண்ணிட்டு போயி உன் வேலையை பாரு…
வேகமாய் ஓடி வந்து… அவனது வெற்று உடலை கட்டி அணைத்தவள்… ஏன் தேவா இப்படி எல்லாம் பேசுறீங்க… நான் என்ன தப்பு பண்ணேன்னு கூட எனக்கு தெரியல… இரண்டு அடி கூட அடிச்சிருங்க… ஆனா இப்படி பேசாம இருக்காதீங்க… சொல்லப்போனால் நான் தானே உங்க கூட சண்டை போடணும்… ஆனா நீங்க எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கீங்க… அப்படி என் தேவா சாகுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்… என்று அவன் மார்பில் சாய்ந்த படி அழுக…
நீ அவன் கூட அழுதுகிட்டே திரும்பி திரும்பி பார்த்துட்டு போனயே… அப்பவே உன் தேவா செத்துட்டான்… செத்தவனை திரும்ப கொண்டு வரணும்னு நினைக்காத…
நான் அப்படி போகலனா அவன் உங்கள அடிச்சே கொன்னு இருப்பான்…
செத்துப் போறேண்டி… இதுக்கு மேல வாழ்ந்து மயிரை புடுங்கவா போறேன்.. வார்த்தைகள் விரத்தியின் உச்ச கட்டத்தில் வெளிவந்தது…
ப்ளீஸ்… தேவா… இப்படி எல்லாம் பேசாதீங்க… என் தேவா உயிருக்கு முன்னாடி இந்த உடம்பு பெருசில்ல அப்படின்னு நினைச்சேன் அது தப்பா என்றாள் ஆதங்கமாய்… உங்க உயிரை விட என்னோட கற்பு தான் முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்களா?… என்று அவள் அவன் முகத்தைப் பார்த்து ஆவேசமாய் கேட்க…
அவளின் முகத்தை கோவக்கனலாய் பார்த்தவன்…
ஒரு கேள்வி கேட்கிறேன்.. என் மேல சத்தியமா உண்மையான பதில் சொல்லு… என்றான்.
அவன் முகத்தை நிமிர்ந்து ஆழ்ந்து பார்த்தாள்..
எனக்கு இந்த உடம்பு பெருசில்லடி.. ஆனா அவன் உன்னை ஏதாவது… என்று சொல்ல வந்து ஒரு நிமிடம் அமைதியானவன் ஏதாவது என்ன ஏதாவது… ஓப்பனா கேட்கிறேன்… உன்ன ரேப் பண்ணிட்டு… ஒரு கட்டத்துல என்கிட்ட கொண்டு வந்து விட்டா… நீ என் கூட சேர்ந்து வாழ்ந்து இருப்பியா… என்று அவன் அவளது முகத்தை அழுத்தமாய் பார்த்துக் கொண்டே கேட்க…
இதைக் காதால் கேட்கும் பொழுதே… இதயம் படபடத்து… உடல் நடுக்கம் காண ஆரம்பித்தது… அதை அவனும் உணர்ந்தான்…
தலையை குனிந்த படி இருந்தவள் என்ன சொல்வாள்… என்ன சொல்லிவிட முடியும்… அருவருப்பின் உச்சியிலே செத்து விடுவாளே… தனது தேவாவிற்கு சொந்தமானதை அடுத்தவன் திருடிவிட்டானே… என்ற மனம் புழுக்கத்திலேயே மாண்டு விடுவாளே… அப்புறம் எங்கு திரும்பி வந்து அவனுடன் சேர்ந்து வாழ்வது…
சொல்லுடி… அமைதியாய் இருந்தவளை மிரட்டினான் ஆதி.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️