அசுரன் 116
தலை குனிந்து இருந்தவளின் தாடையை தன்னை பார்த்து நிமிர்த்தி, உன்ன பதில் சொல்ல சொன்னேன்… என்றான்.
திரும்பி வந்து, வாழ்ந்திருப்பியா என்றான் அழுத்தமாய்…
அவன் கண்ணைப் பார்த்துக் கொண்டு எங்கே பொய் சொல்வது… இல்லை எனும் விதமாய் தலையசைத்தாள்…
என்ன பண்ணி இருப்ப…
செத்துப் போயிருப்பேன்… என்றாள் தழுதழுத்த குரலில்… கண்ணில் இருந்து ஒரு துளி நீர் நிரம்பி அவன் மார்பில் விழுந்தது…
நீ செத்தா உன் தேவா என்ன ஆவான்… அதுவும் அவனோட உயிரை காப்பாத்துறதுக்கு தான் நீ செத்துப்போன அப்படின்னா அவன் நிலைமை என்ன ஆகும்…
எந்த பதிலும் அவள் சொல்லவில்லை.. பதில் தெரியும்… ஆனால் வாய் விட்டு சொல்ல தோன்ற முடியாத துயரம் தொண்டையை அடைத்தது… ஆம் நான் இல்லாத உலகில்… அவன் உயிரோடு இருப்பானா என்பதே சந்தேகம்தான்…
அப்போ உன்னோட எண்ண படி… இந்த உடம்பு தான் உனக்கும் எனக்கும் நடுவுல முக்கியமா இருக்குது அப்படித்தானே… ஒரு வெறிநாய் உன்னை கடிச்சிட்டு போனதுக்கு.. நீயும் நானும் நம்ம காதலை கொன்னுட்டு சாகணுமா… என்று கர்ஜித்தான் உச்சகட்ட கோவத்தில்…
இப்பொழுது தான் அவளுக்கு முழுமையாய் புரிந்தது அவன் சொல்ல வந்தது… ஒருவனிடம் உடலை இழந்த ஒரே காரணத்திற்காக… தன் உயிரை இழக்க நினைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவளுக்கும் புரிந்தது… அந்த அறைக்குள் செல்லும் முன்னமே அவள் ஒரு முடிவு எடுத்திருந்தாள்.. ஒன்னு அவன் சாகணும் இல்லனா அதுக்கு முன்னாடி நான் சாகணும்.. இப்பொழுதுதான் அவளுக்கு ஒன்று புரிந்தது… அவன் தான் சாகுவதற்கு தகுதியானவன்… நான் என்ன ஆனாலும் வாழ்ந்து தான் இருக்க வேண்டும்… தன் தேவாவை கதற விட்டுவிட்டு சாக நினைத்தது ஆகப்பெரும் தவறாக இப்பொழுது தெரிந்தது…
நீ அந்த ரூமுக்குள்ள போனாலும் எதுவும் நடக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்… ஏன்னா அங்கதான் ராஜேஷ் ஷூ பாயிண்ட் வச்சிருந்தான்… அங்க தான் கிளாஸ் விண்டோ இருந்தது…
ஆனா நீ என்ன திரும்பி திரும்பி பார்த்துகிட்டு அழுதுட்டே போன பாரு ஒரு பார்வை… அப்ப தெரிஞ்சுகிட்டேன் டி உன்னோட எண்ணத்தை பத்தி…
“உள்ள ஏதாவது ஆனா என்கிட்ட திரும்பி வரமாட்ட ” அப்படித்தானே நீ நினைச்ச… என்று அவன் பல் இடுக்கில் கேட்க…
அவள் எண்ணத்தை சரியாய் கண்டு கொண்டவனை அதிர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்தாள்…
உன்னோட கற்பை உன் உடம்புல வைக்காதடி… உன் மனசுலயும் உன் காதலையும் வை… என்னோட காதலுக்கு தகுதியா உன்னோட உடம்ப நினைக்காத… கையை இறுக்கி பல்லை கடித்தவன்… இந்த மாதிரி எல்லாம் நினைச்சு என்னையும் என் காதலையும் அசிங்கப்படுத்தற நீ…
உண்மையில் தேவாவின் காதலை நினைத்து அவளுக்கு மெய் சிலிர்க்கத்தான் செய்தது. அவன் காதலின் புனிதம் அவளது உடம்பை சார்ந்தது அல்ல.. அவளது உணர்வை சார்ந்தது என்பதை புரிய வைக்க முயற்சித்தான்…
என் உடம்பு போனா என் மயிறு தான் போச்சு… என் தேவாவுக்கு நான் மனசளவுல இன்னும் கற்போட தாண்டா இருக்கேன்… ஒரு வெறி நாய் கடிச்சதா நினைச்சுட்டு, தொடச்சு தூக்கி போட்டுட்டு என் தேவா கூட சந்தோஷமா வாழ்வேன்.. எங்களோட காதலுக்கு இதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல… அப்படின்னு என்னைக்கு நீ நினைக்கிறாயோ அன்னைக்கு உன் தேவாவை தேடி வா… இப்ப அப்படியே திரும்பி பாக்காம ஓடி போயிடு… என்று அவன் உறும…
சாரி.. தேவா நான் அப்படி நினைச்சது தப்புதான்… அதுக்காக மன்னிக்க மாட்டீங்களா… என்று அவள் பாவமாய் கேட்க…
ஒரு கணம் அமைதியாய் அவளைப் பார்த்தவன்… உன்ன கூட்டிட்டு அந்த ரூமுக்குள்ள போனா அவன் செத்துருவான் அப்படின்னு எனக்கு முன்னாடியே தெரியும்… அவன் என்கிட்ட ஒன்னு அருண கொல்லு… இல்லனா உன் பொண்டாட்டி கொடுத்துவிடு அப்படின்னு கேட்கும்போது… அவன்கிட்ட இருந்து அடி வாங்காமல் தப்பிக்க…
நான் பொய்யா ஒரு வார்த்தை அவ எனக்கு முக்கியம் இல்ல அவள கூட்டிட்டு போனு நான் சொல்லி இருந்தா கூட அந்த வார்த்தையில அங்கயே நீ உடைஞ்சு செத்திருக்க மாட்டியா டி.. அதுக்கப்புறம் என்னதான் வந்து நானு “நான் சும்மாதான் சொன்னேன்” என்ன மன்னிச்சிடு அப்படின்னு உன்கிட்ட கேட்டிருந்தா உன்னால அவ்வளவு ஈஸியா என்ன மன்னிக்க முடியுமா…
நீ பண்ண வேலையும் அது மாதிரி தான்… உன்னை எவனாவது மிரட்டுனா என்ன விட்டு ஓடிடலாம்னு நினைக்கிற… உன்னை எவனாவது தொட்டா என்ன விட்டுட்டு செத்துடலாம்னு நினைக்கிற… கடைசி வரைக்கும் நீ என்னோட காதலோட ஆழத்தை புரிஞ்சுக்கவே இல்ல… அது தாண்டி இங்க ரொம்ப வலிக்குது… என்று தனது இடதுபுற நெஞ்சை ஒரு விரலால் சுட்டிக்காட்டினான்… ஒற்றை கையால் அவளை விலக்கி நிறுத்தி விட்டு.. படுக்கையில் போய் படுத்துக் கொண்டான்.. இங்க இருந்து போயிடு கோபத்தை கிளராத..
தேவா… போ… போ…ன்னு சொன்னா நான் எங்க போறது…
எங்கேயாவது போ… பஸ் புடிச்சு பெங்களூர் போ.. ஆனா என் கண்ணு முன்னாடி மட்டும் நிக்காத..
நெஜமா… நான் போயிடுவேன் என்றாள்.. பாவமாய்..
கண்ணை மூடி படியே போ… டி என்று கத்தினான்.
முகத்தை தொங்க போட்டுக்கொண்டு அறையின் வெளியே வந்து உட்கார்ந்து கொண்டாள்….
நைட் வரைக்கும் இங்கேயே இருப்போம் அப்பதான் தேடுவாரு என்று மனதுக்குள் ஒரு கணக்கு போட்டுவிட்டு வெளியேவே அமர்ந்திருந்தாள் மலர்…
அறையில் உள்ளே சென்று வரும் வார்டு பாய், தாதி அவர்களிடம் என்ன பத்தி ஏதாவது கேட்டாரா?… என்று விசாரிக்க…
அப்படி ஒன்னு கேட்கலையே என்று பதில் கூறிவிட்டு சென்றனர்.
கேக்கலையா… எவ்வளவு நேரமா இங்கேயே உக்காந்து இருக்கேன் இவ்ளோ நேரமா என்ன தேடலையா… ஒருவேளை நான் கோவிச்சுக்கிட்டு எங்கேயாவது போயிருந்தா என்ன பண்ணி இருப்பாரு… என்று நகத்தை கடித்த படி புலம்பி தள்ளினாள்…
ஆனால் பாவம் அவளுக்கு தெரியாதே… ஒவ்வொரு முறை கதவு திறக்கும் போதும் கண்ணாடி கதவில் அவளுடைய உட்கார்ந்திருக்கும் பிம்பம் தெரியும் என்று… இப்பொழுது கூட அவள் தனியாய் புலம்பி கொண்டு இருக்கும் அழகைக் கூட அவன் ரசித்துக்கொண்டு தான் இருக்கிறான் என்று…
அளவு கடந்து காதலிக்க தெரிந்தவனுக்கு… அரை நெல் அளவு கூட வெறுக்க தெரியவில்லை… ஆனால் அவளை உடனடியாக மன்னிக்க தயாராக இல்லை… பேசாமல் இருந்து தண்டனை கொடுக்க நினைத்தான்.
உன் வாழ்நாள் முழுக்க இவளுக்கு போதனை பண்ணியே கிழவனாக போற… என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான் ஆதி.
உண்மையில்
வெளியே காத்திருந்த அவளின் பொறுமை காற்றில் பறந்தது..
உள்ளே வந்து பார்க்க… கைகளில் ஷோல்டர் உடன் இணைத்து கட்டு போட்டிருக்க… வெற்றுமேனியாய் இருந்தவனை ஒரு இளம் செவிலியர் தொட்டு தூக்கி அமர வைத்துக் கொண்டு இருந்தார்…
ஐயோ… அம்மா.. என்று வயிறு வாயெல்லாம் எரிந்தது…
வேகமாய் ஓடிவந்து… மெதுவாக அவள் தூக்குவது போல் செவிலியர் கைகளுக்கு கீழ் தன் கையை வைத்துக் கொண்டாள்..
மலரின் கை உடம்பில் பட்டதும்.. தீயாய் முறைதான் ஆதி.
இவ்வளவு நேரம் அவங்க தூக்கும் போது அமைதியா தானே இருந்தீங்க அதே மாதிரியே யாரோனு நினைச்சு அமைதியா இருங்க… என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்…
அவளின் செய்கையை பார்த்து செவிலியரும் புரிந்து கொண்டார் அவளது எண்ணத்தை….
இங்க எல்லாருக்குமே நாங்க சிஸ்டர் தான்.. என்று கூறிவிட்டு சிரித்து விட்டு சென்றார் அந்த செவிலியர்…
மலரும் மழுப்பலான புன்னகை ஒன்றை செய்தாள்.
அவங்க சொல்றதோட அர்த்தம் புரியுதா என்றான் ஆதி…
புரியுது புரியுது.. என்ற தலை ஆட்டியவள்.. உங்களுக்கு தான் ஒன்னு புரியல… நீங்க மட்டும் அவங்கள சிஸ்டர்னு கூப்பிடல நானும் கூட சிஸ்டர்னு தான் கூப்பிடுறேன் அப்படி பார்த்தா அவங்க உங்களுக்கு மச்சினிச்சி ஆகுறாங்க.. என்றாள் மலர் கடுப்பாய்…
அவள் கூறிய பதிலை கேட்டு ஆதிக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் கடுப்புடன்
நீ இன்னும் போகலையாடி…
அது.. வந்து… அ… கோ…பமா போயிட்டு அப்படியே மனசு மாறி திரும்பி வந்துட்டேன் என்றாள் மலர்…
நம்பிட்டேன் எனும் விதமாய் தலையசைத்தான் ஆதி…
வந்து பார்த்தா இப்படி சட்டை போடாம… எல்லாருக்கும் show காமிச்சிட்டு இருக்கீங்களா… நானே இந்த மாதிரி ரெண்டு மூணு தடவை தான் பார்த்து இருக்கேன்.. இப்போ எல்லாரும் பாக்குறாங்க… என்றாள் வயிற்றில் அடித்துக் கொள்ளாத குறையாய்…
இப்போ நீ பார்க்கல அப்படிங்கறது பிரச்சினையா?.. இல்ல எல்லாரும் பாக்குறாங்க அப்படிங்கறத பிரச்சனையா?…
ரெண்டும் தான்… நான் போய் ஸ்டோர்ல உங்களுக்கு ஒரு டி-ஷர்ட் எடுத்துட்டு வரேன்… என்று கூறிவிட்டு நகர்ந்தாள் மலர்…
கையோடு உடலை உறுத்தாத ஒரு மெல்லிய டி-ஷர்ட் ஒன்றை வாங்கி அணிவித்து விட்டாள்.
மேலாடை இல்லாமல் இருந்தது அவனுக்கும் கூச்சமாய் தான் இருந்தது… நவ் பீல் பெட்டர்… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
ஜூஸ் போட்டுக் கொடுத்தாள்… குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தான்… ஜூஸ் போட்டதை வேஸ்ட் பண்ண வேண்டாமே… ப்ளீஸ் குடிங்க… என்று அவள் கெஞ்ச…
வெளியே ஒரு நர்ஸ் இருப்பாங்க அவங்கள கூட்டிட்டு வந்து அவங்க கையால கொடுக்க சொல்லு குடிக்கிறேன்… என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டான்.
என்ன மேடம் எதுக்காக கூப்பிடுறீங்க…
அந்த ஜூஸை மட்டும் கொஞ்சம் கொடுத்துட்டு போங்களேன்…
நீங்களே கொடுக்க வேண்டியதுதானே…
நீங்க வந்து கொடுத்தா தான் குடிப்பேன்னு சொல்றாரு என்று மலர் பொதுவாய் சொல்ல… அந்த சிறு வயது செவிலியர் பூரித்துப் போனார்…
நான் கஷ்டப்பட்டு பழத்த அறுத்து, புளிஞ்சு ஜூஸ் போடுவேனா அந்த பொண்ணு கையால் தான் குடிப்பாராம்… ரொம்ப நல்லா இருக்கு… என்று வடிவேல் பணியில் நினைத்து கொண்டாள்… நானும் பாக்குறேன் இது எத்தனை நாளைக்குனு… என்று புலம்பு மட்டும் தான் முடிந்தது மலரால்…
இரவு உணவை கொடுக்க… ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டான்…
ஒரு பெருமூச்சு உடன் எப்படியோ வயிறு நிரம்பினா சரி என்று சலித்துக் கொண்டாள்…
கடைசியில் கொஞ்சம் சாப்பிடாமல்… அவள் புறம் தள்ள.. அய்யய்யோ.. கடைசி வாயில தான்… என்று அவள் ஏதோ சொல்ல வர…
ஆதி தீயாய் முறைத்தான்… அவ்வளவுதான் வாய் டேப் போட்டது போல் ஒட்டிக்கொண்டது…
மருந்து மாத்திரைகளை கூட.. தாதி எடுத்துக் கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்தான்.
அண்ணா அண்ணா ப்ளீஸ் அண்ணா நீங்களாவது பேச சொல்லுங்க அண்ணா… கோவமா இருக்காரு… என்று விக்ரமைத் துணைக்கு அழைக்க…
டேய் ரொம்ப ஓவரா பண்ணாத என் தங்கச்சி கூட பேசு… பாவம் அந்த பொண்ணு ரொம்ப ஃபீல் பண்ணுது.. என்று மலருக்கு சாதகமாய் விக்ரம் பேச போக..
அவ மேல கொல காண்டுல இருக்கேன்… மரியாதையா போயிரு… இல்ல.. அவளுக்கு பதிலா உன்ன பிடிச்சு சாத்தப் போறேன் பாரு… என்று ஆதி அவன் பாணியில் கூற…
ஆள விடுமா தாயே… உன் பாடு உன் புருஷன் பாடு… அவன் அடிக்கிற அடியை தாங்க இப்ப என் உடம்புல தெம்பு இல்ல… என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு ஓடி விட்டான் விக்ரம்.
டேய் ராஜு… நீ தான் பெரிய சீக்ரெட் ஆஃபீஸர் ஆச்சே… ஏதாவது ஐடியா கொடு… என் புருஷன சமாதானப்படுத்த… என்று ராஜேஷ் இடம் ஐடியா கேட்க போய்..
முரட்டு சிங்கிள்… அவன் கொடுத்த ஐடியாக்கள் எல்லாமே… படு சொதப்பல்… அதன் விளைவாக… கடுப்பான ஆதி, அடுத்த நாள் இரவே ராஜேஷ் விமானத்தில் ஏற்றப்பட்டான்.
சக்கரவர்த்தி, அகல்யா, ரவி, நந்தினி ஆகியோர் வந்து ஆதியை பார்த்து நலம் விசாரித்து விட்டு சென்றனர்..
மூன்று நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து வீடு திரும்பினர் ஆதியும் மலரும்…
வீட்டுக்குள் வந்ததும் சிங்கம் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாய் உணர்ந்தாள் மலர்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️