அசுரன் 117
ஆரத்தி எடுத்து ஆதியை உள்ளே அழைத்து வந்தாள்…
காலை தாங்கியபடி அவனது அறைக்குள் அவன் செல்ல பார்க்க..
நம்ம ரூம் இங்க இருக்கு தேவா…
இல்ல நான் என் ரூமுக்கு போறேன்…
இட்ஸ் ஓகே.. என்று தோள்களை குலுக்கி உடனே சம்மதித்து விட்டாள்..
நம்ம ரூம்ல கட்டில் கொஞ்சம் பெருசா இருக்கும் அதனால கொஞ்சம் தள்ளி தள்ளி படுக்கணும்…
உங்க ரூம்ல தான் கட்டில் கொஞ்சம் சின்னது… அப்பதான் கட்ட்ட்டி பிடிச்சு படுக்குறதுக்கு வசதியா இருக்கும்.. அதனால உங்க ரூமுக்கு போகலாம் என்று கூறியபடி முன்னேற போனவளை தடுத்து நிறுத்தி… அவர்களது அறைக்குள் சென்றான்..
வீட்டுக்குள் வந்தவுடன் கவனிப்பு என்னமோ தாராளம் தான்.. ஆனால் மறந்தும் மலரை அருகில் விடுவதில்லை ஆதி.
எந்த உணவுப் பொருள் எடுத்து வந்தாலும் அருகில் இருக்கும் டேபிளில் வைத்து விட்டு செல்ல சொல்லி விடுவான்..
டேபிள் மேல வை நான் எடுத்து குடிச்சுக்கிறேன்… எனக்கு இந்த கை நல்லா தான் இருக்கு.. எனக்கு யாரோட உதவியும் தேவை இல்லை… என்று கூறி விட முகம் வாடி தான் போவாள்…
பாத்ரூம் செல்வதற்கு கூட அவனாகவே சிரமப்பட்டு ஊன்றி எழுந்து தட்டு தடுமாறி தனியே தான் செல்வான்…
அவள் அருகே வந்தால்… உனக்கு வேற வேலை இல்லையா… கிட்ட வந்தா நான் மனுஷனா இருக்க மாட்டேன்… என்று சீறுவான்…
இரவு அருகில் தூங்க விடுவதில்லை… உன்னோட சைஸ்க்கு அந்த சோபா கரெக்ட்டா இருக்கும் அங்க போய் படு போ என்று துரத்தி விட்டு விட்டான்…
அடேங்கப்பா.. ரொம்ப தான்… என்று கழுத்தை வெட்டி சென்றாள்…
ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டு விட்டாள்… கண்ணீர் விட்டு அழுதும் பார்த்தாச்சு… ஆண் சிங்கம் மசிவதாயில்லை… பெண் அவளும் விடுவதாய் இல்லை…
இனி அவனிடம் மன்னிப்பு கேட்பதாய் இல்லை… “கதறி அழுகிறனே கல்நெஞ்சக்காரர் கரையிறாரா பாரு ” என்று மனதுக்குள்ளே வறுதெடுத்து கொண்டாள்.
அடுத்த கட்ட ஆயுதத்தை கையில் எடுத்தாள்…
ஐயோ அம்மா என்று அலறியப்படியே கண்ணை கசக்கி கொண்டு உள்ளே வந்தாள்.. கையில் ஏதோ தொழில் சம்பந்தமான புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டு இருந்தான் ஆதி….
அருகில் வந்து அமர்ந்தவள்… கண்ணுல ஏதோ தூசி விழுந்துடுச்சு கொஞ்சம் ஊத்தி விடுங்க ப்ளீஸ் என்றாள் அப்பாவியாய்…
பாவம் அவளது நடிப்பை உண்மை என்று நம்பி… புத்தகத்தை ஓரம் வைத்து விட்டு மூடி இருந்த முட்டை கண்ணை திறந்து.. ஊப்ப்.. ஊப்ப்… என்று வாயினுள் காற்று நிரப்பி ஊதினான்… பட்டாம்பூச்சி போல் படபடக்கும் இமை முடிகள் … தும்பைப் பூவை போல் வெள்ளையாய் இருந்த வெண்படலம்… அவனை மயக்கும் தேன் விழி… அனைத்தும் அவனை என்னவோ செய்தது…
அவனது அருகில் கொஞ்ச நேரத்தில் அந்த கண்கள் அதன் நடிப்பு என்று வெளிப்படுத்தி விட்டது… அவன் ஊதியத்தை நிறுத்தியதும்… முறைத்துப் பார்த்தான் அவளை…
அ… இப்போ சரியா போயிடுச்சு…
ஆனா இப்போ இங்கு தூசி விழுந்த மாதிரி இருக்கு என்று தனது உதட்டை குவித்து காண்பித்தாள்…
அவள் செய்கையில் மெல்லிய புன்னகையுடன் மெதுவாய் அவள் இதழ் அருகே குனிந்தவன்… அதைக் கடந்து அவள் காதின் அருகே சென்று… “எழுந்து போடி அடி வாங்க போற…” என்றான்…
கண்ணை மூடி முத்தத்தை எதிர்பார்த்தவள் அவன் குரலை கேட்டதும்… முஹூம்… என உதட்டை சுழித்து காட்டி சென்றாள்…
ஒரே இடத்தில் படுத்திருப்பவனுக்கு துளியும் போரடிக்காமல்… ஏதாவது ஒரு சேட்டை செய்து கொண்டே இருந்தாள் மலர்… உண்மையில் அவள் மேல் எந்த கோபமும் இல்லை… அது இரண்டு நாளில் மறந்தே போனது.. இப்பொழுது அவளது சேட்டைகளை ரசித்து பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறான்… அவனை வேண்டுமென்றே சீண்டி வம்பு இழுத்து சுற்றி சுற்றி வருவது பிடித்திருக்கிறது….
இதோ இன்று சுடுதண்ணி உடன் அறைக்குள் நுழைந்தவள்… அவனது டி-ஷர்டில் கை வைத்தாள்…
என்ன… கையை எடுடி முதல்ல…
எனக்கு ஒன்னும் உங்கள தொடணும்னு ஆசை இல்லை.. டவல் பாத் எடுக்கணும்…
டி-ஷர்டை கழட்டி உடம்பை துடைக்க ஆரம்பித்தவள்… வாய் ஒன்றும் சும்மா இருக்கவில்லை…
எளந்தாரி…. சொல்லு, என்ன.. வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்… உனப் பாத்தா, மல்லு கட்டத் தோணும்…
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும். வெரசா… தொடவா….
முழுசா…. கெடவா…
நெருங்காம தூர நின்னே,
நெல்லு குத்தாத…
இந்த பாடலுக்கு ஏற்றவாறு அவனை சில்மிஷம் செய்து கொண்டு இருந்தாள்… அவன் தான் கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்தான்… எங்கிருந்து இந்த மாதிரி பாட்டெல்லாம் புடிக்கிறானு தெரியல.. ஒருவேளை சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி இவளே பாட்டு எழுதி பாடுறாளா.. என்று புலம்பியவன்… பாடலின் கடைசி வரியில் விழி விரித்தான்… இதற்கு மேல் பொறுக்க முடியாது என்னும் நிலையில்…
நிறுத்து… நீ துடைக்க வேண்டாம் போ வெளியே… என்றான்.
Why?… என்றாள்.. அசால்ட்டாக…
ஏற்கனவே அவளின் மென்விரல்கள் உடம்பில் பட, பட ஏற்படும் குறுகுறுப்பு ஒரு பக்கம் பாடாய்படுத்த… இப்பொழுது தேன்குரலில் இந்தப் பாட்டை அவள் பாட… எக்குத்தப்பான வரிகலில் உணர்வுகள் கிளர்தெளப்போகும் நேரத்தில்.. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு…
என்னடி பாட்டு இது… என்றான்.
லவ் சாங்… மாவீரன் கிட்டு படத்துல வருமே… நீங்க கேட்டதில்லயா.. எனக்கு ரொம்ப பிடிக்கும் பா… என்றாள் ஒன்னும் தெரியாத குழந்தை போல்…
லவ் சாங்கா இது.. வாய மூடிக்கிட்டு துடைக்கணும் இல்லன்னா நான் வெளியே போயிடுவேன்… போட்டுமா?…
வேணாம் என்று தலையசைத்து உதடை பிதுக்கியவள்… வாயை மூடிக்கொண்டு… உடம்பை நன்றாக துடைத்து முடித்து… அடுத்து அவனது கீழ் ஷார்ட்ஸ்ல் கை வைக்க… அவள் கையை இறுக்கி பிடித்து தடுத்தவன்…
ஏய்… அங்க என்ன பண்ற… என்று பதறினான்.
எதுக்கு இப்படி கத்துறீங்க… உடம்ப சுத்தம் பண்ண போறேன்…
கொன்று வேண்டி.. மரியாதையா ஓடிரு… விரல் நீட்டி எச்சரித்தான்…
ஐயடா… என்று இடுப்பில் கை வைத்தவள்.. டாக்டர் தான் உடம்பு முழுக்க டவல் பாத் எடுக்க சொன்னாரு… அங்க மட்டும் தான் இன்னும் தொடைக்கல… கையை எடுங்க சீக்கிரம்… சுத்தம் பண்ண போறது நான்தானே.. நீங்க என்னமோ இப்படி பதறீங்க… என்று அவள் சாதாரணமாய் கேட்க…
அவள் செயலில் எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது என்னவோ ஆதிக்கு தான்… அவளின் இந்த அதிரடியில் முகம் எல்லாம் சிவந்து போனது பையனுக்கு… இன்னைக்கு என்னமோ ஒரு மார்க்கமா தாண்டி இருக்க…
நீ வச்சுட்டு வெளியே போ…நானே சுத்தம் பண்ணிக்கிறேன்…
அதெல்லாம் முடியாது.. என்று மறுத்தவள், டாக்டர் என்னைத்தான் சுத்தம் பண்ண சொன்னாரு… என்று அடம்பிடித்தாள்…
கனவுல பார்த்ததுக்கு காய்ச்சல் வந்துருச்சு… நேர்ல பாத்து ஏதாவது ஆகிட போகுது… இப்போ இருக்கிற நிலைமையில என்னால ஹாஸ்பிடல் கூட கூட்டிட்டு போக முடியாது… என்றான் கலாய்க்கும் தோனியில்…
ஹா… என்ன எப்ப பாரு இதையே சொல்றீங்க… பயந்தா அப்படியே விட்டுவிடுவீங்களா… என்னைக்கு நாளும் நான் பார்த்து தானே ஆகணும்… ஸ்கூட்டி ஓட்ட பயந்தேனே… அப்படியே விட்டுட்டீங்களா… பொறுமையா சொல்லி தரல… அதே மாதிரி சொல்லி தாங்க கத்துக்குறேன்… என்றாள் மலர்…
எதடி கத்து தரணும்…
அ… அது.. தானே… எதை… என்று வாயில் ஒரு விரலை வைத்து யோசித்தவள்… புள்ள அதுவே கன்பியூஸ் ஆயிடுச்சு.. பின் ஒரு சமாளிப்பாய்…
சொல்லி கொடுத்தா எதை வேணா கத்துப்பேன்… என்று குறும்பாய் சிரித்து, ஆதியைப் பார்த்து ஒற்றை கண் அடிக்க…
அவளின் இரட்டை அர்த்த பேச்சுக்களை கேட்டு… அவனுக்குமே உதட்டுக்குள் குறிஞ்சிரிப்பு தான்..
கொழுப்பு… உடம்பு முழுக்க கொழுப்பு கூடிப்போச்சு… என்று அவளை மேலிருந்து கீழ் ஒருமுறை பார்த்துவிட்டு கூறினான்… பின் பக்கவாட்டில் முகத்தை திருப்பி, கை மட்டும் சரியாகட்டும் மொத்தமா கரைக்கிறேன்… என்று முணுமுணுத்துக் கொண்டான்…
ரொம்பதான் கட்டுப்பாடா இருக்காரு ஸ்ட்ரிக்ட் ஆபீஸ் போல…
இதோ கடைசி ஆயுதம் பிரம்மாஸ்திரம்… சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது..
அவனுக்கு மட்டும் சமைத்து சாப்பிட கொடுத்து விட்டு.. ஒரு நாள் முழுக்க பட்டினி கிடந்தாள்… ( டேஸ்ட் பண்ணும் சாக்கில் அரை வயிறு நிரப்பி விடுவது வேறு கதை )
எதுக்கு இப்படி சாப்பிடாம கிடக்க…
நான் எப்படி போனா உங்களுக்கு என்ன… இனிமே நான் சாப்பிட போறதும் இல்ல உங்க கிட்ட பேச போறதும் இல்லை… என்று கூறிவிட்டு மூஞ்சி மூஞ்சிரு போல ஆகிவிட்டது..
தெரியும் அவள் கடைசியாக இங்கே தான் வந்து நிற்பாள் என்று.. அவனுக்கு தெரியும்..
இப்ப நான் என்ன பண்ணனும் சொல்ற…
அக்சப்ட் மை சாரி… என்றாள் முகத்தை தொங்க போட்டு…
உண்மையில் அந்த முகத்தை பார்க்கும் பொழுது இழுத்து வைத்து இச்சு வைக்கலாம் போல் இருந்தது… அவனுக்கு…
நான் மன்னிக்க அதுல என்ன இருக்கு?…
அப்போ கோபம் போயிடுச்சா? என்று கேட்டாள் ஆர்வமாய்…
கோபம் போகலன்னு சொன்னா என்ன பண்ணுவ… என்றான் புருவத்தை உயர்த்தி..
போற வரைக்கும் டார்ச்சர் பண்ணுவேன்… என்று பல்லை கடித்து பத்து விரல்களையும் சுருக்கி காண்பித்தாள்..
ம்ம்… அதைத்தான் தாங்க முடியல… என்று அயர்வாய் தலையசைத்தான்…
ஓகே… அப்ப சமாதானமா போயிடலாம் என்றாள்… குதூகலமாய்…
ம்ம்ம்.. போயிடலாம்.. வேற வழி… என்று தலையசைத்தான்…
வேகமாய் மெத்தையின் மேல் நான்கு காலில் தவழ்ந்து போய் அவனை கட்டிக் கொண்டாள்… அவன் முகம் எங்கும் முத்தம் தான்… ஏய் விடுடி…
ம்ம்ஹும்.. என்று கூறிவிட்டு மீண்டும் முகம் எல்லாம் முத்தம் பதித்து விட்டு அவன் கழுத்தில் புதைந்து கொண்டாள்…
அவனும் ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டான்… பக்கமாய் திரும்பி அவள் நெத்தியில் முத்தம் பதித்தான்…
உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா… என்றாள்.
அவன் வாயை திறந்து சொல்லவில்லை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டான்…
என்ன தனியா விட்டுட்டு போகணும்னு நினைப்பியா… என்றான்.
ஐயா சாமி.. 80 வயசுல பல்லு போயி.. எமன் என்ன கூப்பிட வந்தா கூட… என் புருஷனையும் கையோட கூட்டு போயிடுவோம்னு சொல்லி… சேர்த்து கூட்டிட்டு போறேன் போதுமா… என்று தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டாள்…
குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது ஆதிக்கு…
உண்மையில் அந்த சிரிப்பு அவளை மயக்கியது… நொடியில் ஆயிரம் புகைப்படங்களை கண்ணிமைக்குள் எடுத்துக் கொண்டாள்…
கோபம் வந்தா ரொம்ப தான் அடம் புடிக்கிறீங்க… இந்த மாதிரியே குழந்தைகளும் பொறந்தா அஞ்ச வைச்சு நான் எப்படி சமாளிக்கிறது… என்றாள் கவலையாய்… அவனது டி-ஷர்ட்டை ஒற்றை விரலால் திருகியப்படி…
அவன் எதுவும் பேசவில்லை சிறு புன்னகை மட்டுமே… அவன் நெஞ்சில் அவள்… ஏகாந்தமாய் இருந்தது அந்த பொழுது.
சாப்பாடு எடுத்துட்டு வா சாப்பிடலாம்…
ஒரே தட்டில் சாப்பாடு இட்டு வந்து.. அவனுக்கும் ஊட்டி தானும் சாப்பிட்டாள்…
அவன் முகத்தைக் கடை கண்ணால் பார்த்துக்கொண்டே சோபாவில் படுக்க சென்றவளை…
அங்க எங்க போற இங்க வா.. என்றான் அதட்டலாய்…
அவ்வளவுதான்… குடுகுடு என்று ஓடிவந்து அவனது அருகில் படுத்துக்கொண்டாள்…
என்னடி இப்படியே வந்து படுக்குற..
சேலையை கழட்டிட்டு வந்து படு என்றான்…
பதறிபோய் மார்பு சேலையில் கை வைத்தவள்… எதுக்கு என்றாள் குழப்பமாய்..
டைட்டாக ஹக் பண்ணி படுக்க போறேன் எனக்கு உன்ன முழுசா ஃபீல் பண்ணனும் போல இருக்கு… இந்த சேலை என்ன டிஸ்டர்ப் பண்ணுது… சோ… ப்ளீஸ்…
ம்ஹும்… வேணாம்… என்றாள்…
கைக்கு சிக்கினா நார் நாரா கிழிச்சு போடுவேன்… திரும்ப கட்ட முடியாது நீ தான் ஃபீல் பண்ணுவ பரவாயில்லையா…
இல்ல வேணாம் என்று கூறியபடியே தயங்கி தயங்கி சேலையின் பின்களை அவிழ்த்து.. மேனியிலிருந்து சேலையை உருவினாள்… அதை கீழே போட போக..
இங்க குடு என்று வாங்கி.. முகத்தின் மேலே போட்டுக் கொண்டவன் சிறிது நேரம் கழித்து எடுத்து அடிபட்ட கையின் மேல் போட்டுக் கொண்டான்… பொதுவாகவே அவள் மேனியை உருத்தாத மிகவும் மிருதுவான பருத்தி சேலைகளையே அணிவாள்…
அவன் செய்கையை விசித்திரமாய் பார்த்தாள் மலர்…
என்னடி பாக்குற.. உன் சேலை மேல ஆசை இருக்கு… அது உன் மேல இருந்தா தான் வெறுப்பா இருக்கு… என்றான் இரண்டு கண்ணையும் சிமிட்டியபடி..
ரொம்ப நல்லா பேசுறீங்க… என்று தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டினாள்…
இப்போதைக்கு என்னால பேச மட்டும் தான் முடியும் என்று ஒரு ஏக்கம் மூச்சு விட்டவன்… அவள் நின்றிருந்த கோலத்தை பார்த்தான்…
பச்சை நிற ஜாக்கெட்டும் பச்சை நிற பாவாடையும் அணிந்திருந்தாள்… எடுப்பாகவே இருந்தது அவளுக்கு… ஒரு கை கொண்டு அவள் மார்பின் மத்தியையும்… மறுக்கை கொண்டு அவளது தொப்புளையும் மறைத்திருந்தாள்.. அவள் செய்கையை பார்க்க ஆதிக்கு சிரிப்பு வந்தது…
இதெல்லாம் நான் இன்னும் பாக்காதது போல மறைச்சு வைக்கிறா…
மலரை வா என்று ஒரு கைக்கு நீட்டி அழைக்க… மெல்லமாய் வந்து அவனது கைக்குள் அடைக்கலம் ஆனாள்…
தனது டி-ஷர்டையும் ஒரே கையால் கழட்டினான்…
நீங்க பண்றது எல்லாம் பாத்தா தூங்குறது போல தெரியல… என்று அவள் மெதுவாய் சொல்ல..
ஒரு சிரிப்பு ஒன்று சிரித்தவன்.. அவளை இழுத்து தனது பாதி உடம்பின் மேல் போட்டுக் கொண்டான்…
இப்போ தூங்குடி ஒன்னும் பண்ண மாட்டேன்…என்றான்…
ஏசி அறையில் மெல்லிய குளிரில்.. நிலா வெளிச்சம் மிதமாய் ஊடுருவ… இருவரின் இதயத்துடிப்பையும் தாலாட்டாய் உணர்ந்து… இத்தனை நாள் இருந்த பிரிவின் துயரம், உயிர் போய் உயிர் வந்த நிகழ்வுகள்… அனைத்தையும் மறந்து இருவரும் நிம்மதியாய் உறங்கினர்.
அதன் பின்னர் வந்த நாட்களை… கவிதையாக கூட வடிக்கலாம்… அவ்வளவு அழகானவை…
உடல் நலக்குறைவால் ஓய்வு எடுக்கும் நாட்கள்… இப்படி தித்திக்குமா என்ன… என்று யோசிக்க வைத்தது ஆடவனை…
காமத்துக்கு சொந்தமான கட்டிலை இங்கு காதல் தத்து எடுத்துக் கொண்டது…
அவன் 24 மணி நேரமும் அந்த கட்டிலில் தான் வாசம்…
இருவரும் பல நேரம் இந்த கட்டிலில் தான் நேரத்தை கழித்தனர்… அவன் மார்பிலே சாய்ந்து கொண்ட படி பல கதைகளை பேசிக்கொண்டு இருப்பாள் மலர். கதை கேட்டபடியே தூங்கி விடுவான் ஆதி…
குழந்தை தூங்கியவுடன் அந்த இடைவேளையில் ஓடி போய் அனைத்து வேலைகளையும் முடிக்கவும் அன்னைமார்கள் போல்… சமையல் வேலையை முடித்துவிட்டு வருவாள் மலர்.
மூன்று வேலையும் ஒரே தட்டில் தான் இருவருக்கும் சாப்பாடு…
கவிதைகளை படிப்பர்… பல கதைகள் பேசுவர்… அலுவலக வேலைகளையும் செய்வர்…
இருவருக்கும் இடையில் ஒரு இதழ் முத்தம் கூட கிடையாது… ஆதி அதை முன்னெடுக்கவில்லை மலரும் அதை கண்டு கொள்ளவில்லை… காயங்கள் ஆறும் வரை கட்டுப்பாட்டுக்குள் இருக்க நினைத்தான்…
அலுவலக வேலைகளை அருண் விக்ரம் ரவி மூவரும் பிரித்துப் பார்த்தனர்…
மாலை வேலைகளில் கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக ஆதியை தேடி வருவர்…
ஆதிக்கு எலும்புகள் சீக்கிரம் வலுப்பெற சூப்புகள் தயார் செய்யும் பொழுது… அல்லது சிறப்பு உணவுகள் சமைக்கும் பொழுது…
இன்னைக்கு அருண் சாரையும் வர சொல்லுங்க… அவருக்கும் அடிபட்டுச்சே, இதெல்லாம் குடிச்சா உடம்புக்கு நல்லது… சீக்கிரம் காயங்கள் ஆறும்… என்று அவளே கூறுவாள்…
தன் நண்பர்களின் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படும் தனது மனைவியை நினைத்து பூரித்துப் போவான்…
மலரால் எப்போதும் தங்களுக்குள் எந்த பிரிவினையும் வராது என்பதே அவனுக்கு பெரும் நிம்மதி.
ஒரு மாத காலமும் மின்னல் வேகத்தில் ஓடியது… மலரின் கவனிப்பில் ஆதியின் உடல் நன்றாகவே தேறியது…
” யுவர் பர்பெக்ட்லி ஆல்ரைட் ” என்ற மருத்துவர் வாய்மொழியோடு ஆதியின் கட்டுகள் பிரிக்கப்பட்டன…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️