அசுரன் 133

அசுரன் 133

 

கல்யாணம் பண்ணிக்கலாமாடி… என்றவனிடம்… 

 

ம்ம்ம்.. பண்ணிக்கலாம்…

என் சைடு ஆதிசாரும் மலரும் வந்து கையெழுத்து போடுவாங்க உன் சைடு ரெண்டு பேர  வந்து கையெழுத்து போட சொல்லு.. ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் தேவைப்பட்டா மாலை மாத்திக்கலாம் என்றாள்… அவனைப் பார்க்காமல்.  

 

தாலி கட்ட வேணாமா? … 

 

கணினியில் இருந்து அவன் பக்கம் தலையை திருப்பியவள்… பையனுக்காக தானே அப்ப சட்ட படி பண்ணா போதும்… என்று தனது பேச்சை முடித்து விட்டாள்..

 

ஆதி மலர் வளைகாப்பிற்கு முதல் நாள்…

 

நந்தினி சொன்னது போல் சட்டப்பூர்வ திருமணம் நடந்தேறியது… 

 

அன்றே ஆதியின் வீட்டின் அருகில் தான் வாங்கிய புதிய வில்லாவிற்கான ரிஜிஸ்ட்ரேஷனையும் முடித்து இருந்தான் அருண்…

 

நேரே குழந்தையையும் மனைவியையும் அங்கே தான் கூட்டி சென்றான்..

புது வீட்டை பார்த்ததும் ஆசையாக உள்ளே ஓடி சென்றான் அர்ஜுன்…

எந்த வேலையும் இல்லாமல் அனைத்து பொருட்களுடன் தயாராக இருந்தது வீடு…

 

உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம, இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க… என்ன சின்ன வீடா வச்சுக்கலாம் பாத்தியா… என்றாள்…

 

ஏய்… ச்சீ… போகுது பாரு புத்தி என்று அவளது தலையில் தட்டியவன்…

 

எங்க அம்மா கோடிஸ்வர பொண்ணா பாத்துட்டு இருக்காங்க… இப்ப கொண்டு போய் உங்க ரெண்டு பேரையும் அவங்க கண்ணு முன்னாடி நிக்க வச்சா… ஒட்டுமொத்த கோவத்தை உங்க ரெண்டு பேரு மேல தான் காட்டுவாங்க… கல்யாணம் ஆனத அம்மாகிட்ட சொல்லிட்டேன்… குழந்தை இருக்கிறதையும் சொல்லிட்டேன்… வீட்டுக்கு வராத சொத்துல பங்கு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க… நானும் வர மாட்டேன்னு சொல்லிட்டேன்…

என்னோட சேவிங்ஸ் வச்சு இந்த வில்லாவை வாங்கிட்டேன் இனிமேல் நம்ம இங்கதான் இருக்க போறோம்… என்றான்..

 

பூவாக்கு என்ன பண்ண போற என்றாள்… சாப்பிடுவது போல் சைகை செய்து நக்கல் தோணியில் …

 

உன்ன தாண்டி சாப்பிடணும்…

 

அவள் முறைத்து பார்த்த பின்…

 

இனிமேல் ஒண்ணா தாண்டி சாப்பிடணும்… நீ எனக்கு சோறு போட மாட்டியா என்றான் குறும்புடன்.

 

ம்ம்… சரி.. தான்.. என்று தலையாட்டினாள்…

 

ஆபீஸ் அப்பா பேர்ல தான் இருக்கு அவர் என்ன எதுவும் சொல்ல மாட்டார் அதனால பிசினஸ்க்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… 

 

உனக்கு தான் உங்க அப்பாவ பிடிக்காதே… என்றாள் அறைகளை எட்டிப் பார்த்தபடி…

 

நான் அப்பாவான உடனே எங்க அப்பாவ பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு… என்று சிரித்தபடி அவன் சொல்லிவிட்டு திரும்ப வாசலில் தான் நின்று இருந்தார் சக்கரவர்த்தி.. 

 

தங்களை விரித்து ஆச்சரியமாய்… அப்பா… நீங்க என்ன இங்க…

 

ஏண்டா வரக்கூடாதா…

 

ஐயோ நான் அந்த மீனிங்ல சொல்லலப்பா என்று நெற்றியை நீவியவன்… திடீர்னு எப்படி இங்க வந்தீங்க ன்னு கேட்டேன்…

 

என் பிரண்டோட வீடு தாண்டா இது… நான் தான் உனக்காக கேட்டு பார்த்தேன்… மகளும், மகன்களும் கிட்ட கிட்ட இருந்தா அலைச்சல் இல்ல பாரு எனக்கு… என்றார்…

 

வாழ்த்துக்கள் மா… ஆரத்தி எடுத்து அழைக்க ஆள் இல்லைன்னு நினைச்சுக்காத இந்த மாமாவோட ஆசிர்வாதம் உனக்கு எப்பயும் இருக்கும் என்று நந்தினி என் தலையில் கை வைக்க காலில் விழுந்து முழு ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டாள்…

 

காலில் விழுந்தவள்.. தலையை மட்டும் நிமிர்த்தி அருணை பார்க்க..  இல்லை முறைக்க… அவனும் விழுந்தான்… நானும் நானும் என்று கூவியப்படியே ஓடி வந்து அர்ஜுனனும் சேர்ந்து விழுந்தான்… ம்ஹும்… படுத்து உருண்டான்…

 

மகனையும் மருமகளையும் ஆசீர்வதித்து விட்டு பேரனின் சேட்டையை பார்த்து சிரித்தவர் அர்ஜுனை தூக்கிக்கொண்டார்…

 

அவர் பேசிக் கொண்டு இருக்கையில் டிரைவர் சக்கரவர்த்தியின் பொருள்களை வீட்டினுள் எடுத்து வந்தார்…

 

என்னப்பா இது என்பது போல் அருண், சக்கரவர்த்தியை பார்க்க…

 

இனிமேல் பேரனை பார்த்துட்டு நான் இங்க இருக்கேன் டா நீயும், நந்தினியும் கம்பெனிய பாத்துக்கோங்க… என்றார்.

 

அப்போ… அம்மா…

 

ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவர்… அவ திருந்துற மாதிரி தெரியலடா… சில ஜென்மங்கள் அப்படித்தான் என்ன பட்டாலும் திருந்தாது… திருந்துற வரைக்கும் அவ தனியா இருக்கட்டும்… அவள விடு… போ போ நீ போய் வேலையை பாரு… என்று அனுப்பி வைத்தார்.

 

***********

 

ஏய் மலரு… இதுக்கு எதுக்குடி என்ன ஊர்ல இருந்து வரவைக்கணும்… உன்கிட்ட யாரையுமே விடறது இல்ல மாப்பிள்ளையே தான் எல்லாமே பாக்குறாரு..  அப்புறம் எதுக்கு நான் இங்க…

 

குழந்தைக்கு பால் கொடுக்கப் போறா… கொஞ்சம் வெளியே இருங்க மாப்ளன்னு…. நான் கதவை சாத்த போனா… 

நீங்க கொஞ்சம் வெளியே இருங்க அத்தை நான் பார்த்துக்கிறேன்…  சொல்லி அவர் கதவை சாத்துறாரு… எந்த புள்ள பெத்த வீட்லயாவது  இப்படி நடக்குமா?.. 

 

என்னதான் பெரிய ஊர் உலகத்துல இல்லாத புருஷன், பொண்டாட்டியோ… என்று வாய் விட்டே சலித்துக் கொண்டார் வாசுகி.

 

பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது எதுத்தாப்புல ஆம்பள ஆளு உட்கார்ந்த சங்கட்டமா இருக்காதா… கொஞ்சமாவது புரிஞ்சுக்க வேணாம்…

 

அம்மா அவர் எதுத்தாப்புல எல்லாம் உட்கார மாட்டாருமா… 

 

என்னமோ போ… நீ சொல்ற… நான் கேட்கிறேன்… பாவம் உத்தம மருமகன் பால்கனியில் போய் நின்று இருப்பார் என்று நினைத்து விட்டார்…

ஆனால் உண்மை நிலவரம் வேறு… 

 

மருமகனின் தொல்லையை சலித்துக் கொண்டும் புலம்பிக் கொண்டு இருந்தாலும்… மலரை கவனித்துக் கொள்வதில் குறை வைக்கவில்லை வாசுகி…

 

மருந்து குழம்பு,…  பிரசவ லேகியம் பத்திய சாப்பாடு… முதல் 30 நாளுக்கு மலருக்கு வழங்கப்பட்டது…

 

நான்தான் பச்சை உடம்புக்காரி அதனால பால் சுரக்க இதை கொடுக்குறாங்க வேற வழி இல்லாம பொறுத்துக்கிட்டு இந்த ருசி இல்லாத சாப்பாட சாப்பிடுறேன்…

நீங்க உங்களுக்கு புடிச்சதை செஞ்சு தர சொல்லி சாப்பிட வேண்டியது தானே நீங்களும் எதுக்கு இதையே சாப்பிடுறீங்க… ஏன் உங்களுக்கும் பால் சுரக்க போகுதா என்றாள் அவனை சீண்டும் தோரணையில்…

 

அவள் எதிரில் அமர்ந்து… மேல் ஒரு கையும் கீழ் ஒரு கையும் கொடுத்து குழந்தையை ஏந்திய படி … சுச்சு.. சுச்சு… என்று கொஞ்சிக் கொண்டிருந்தவன்…

 

அப்படி மட்டும் சுரந்தா… உன்ன மாதிரி நான் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ண மாட்டேன் டி… போதும்… பையனுக்கு வேணும் விடுங்கன்னு… சொல்ல மாட்டேன்..  முழுசா உனக்கு தான்… என்றான்… ஒற்றைக் கண்ணை சிமிட்டி படி…

 

ச்சீ… பேச்சை பாரு.. என்று தன் முன்னால் அவன் நீட்டிருந்த காலை நறுக்கென்று கிள்ளிவிட்டாள்…

 

என்று தொடங்கியது இந்த தாகம்…

குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பிக்கும் காலத்தில்..  குழந்தை ஒரு பக்கம் குடித்தபடி தூங்கி விட மறுபக்கம் மேலாடை நனைவதை பார்த்து… குழந்தை ஒரு சங்கு அளவு தான் குடிப்பான்… குழந்தை வளர வளர சரியா போகும்..  இப்போ ஒரு துணி வச்சு கட்டிக்கோ… என்று வாசுகி பேசிக் கொண்டிருந்தது தலைவன் காதில் விழுந்துவிட்டது…

அன்றிலிருந்து ஒரு துளியையும் வீணாக்குவதில்லை… 

 

மேலாடையும் நனைவது இல்லை பால்வாடையும் வருவதில்லை… ஒருவேளை மலருக்கு பால் சுரப்பு சரி இல்லையோ என்று நினைத்த வாசுகி… 30 நாளுக்குப் பின்.. பால் சுறா…  இரா தொக்கு… கருவாடு… சுவரொட்டி, மலைபூண்டு என்று விதவிதமாய் பால் சுரப்புக்கு தேவையான அத்தனை பொருட்களையும் களத்தில் இறக்க…

 

தேவன் இரவு உணவே எடுத்துக் கொள்வதில்லை இப்பொழுதெல்லாம்…

 

அதன் உபயம் 

மச்சான் கொஞ்ச நாளா உன்கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன்…. என்னடா பேஸ் கிரீம் யூஸ் பண்ற போகப்போக எம்ஜிஆர் கலர்ல மாறிட்டு வரீயே என்று சந்தேகம் கேட்டான் விக்ரம்.

 

அது…. இப்ப எல்லாம் நான் டீ, காபி குடிக்கிறது இல்லடா… என்று பொதுவாய் சொல்லி வைத்தான்…

 

சிட்டு.. சிட்டு… என்ற குரல் வீடு முழுக்க எதிரொலிக்க….

 

சோபாவில் அமர்ந்து குழந்தையின் குட்டி குட்டி துணிகளை மடித்து வைத்துக் கொண்டு இருந்தாள்….

 

இப்போ எதுக்கு ரெண்டு பேரும் அலர்றீங்க இப்படி…

 

ஏண்டி…  நானும் பிள்ளையும் “உங்கா” வேணும்னு கத்திக்கிட்டு இருக்கோம் உனக்கு காதுல விழுகலையா.. சீக்கிரம் வா என்று கூறி விட்டு செல்ல… 

 

சமையல்கூடத்தின் அருகில் இருந்த வாசுகி முன்… மலருக்கு தான் சங்கடமான சூழ்நிலை…

 

அம்மா அவருக்கு பசிக்கும் போல அதான் கத்துறாரு நீங்க கொஞ்சம் சாப்பாடு எடுத்து வைங்க வருவாரு என்று சமாளித்துவிட்டு அறைக்குள் செல்ல…

 

நீ என் பக்கம் வராத… அப்பா உன் பக்கம் வரமாட்டேன்… என்று கொஞ்சிய மொழியில் தன் மகனிடம் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டிருந்தான்..  

தன் உணவு தந்தையால் திருடப்படுவது தெரியாமல்… தந்தை தன்னிடம் கதைப்பதை நினைத்து… கிக்கி பிக்கி என்று பொக்கை வாயை திறந்து சிரித்துக் கொண்டு இருந்தது அந்த குட்டி…

 

தேவநேத்ரன்  கணவன் மனைவி இருவரும் ஒருமித்து இந்த பெயரை சூட்டினர் மகனுக்கு.

 

இரு மாதங்களில் வாசுகி ஊருக்கு கிளம்பி விட்டார்… பாத்து பத்திரமா இரு மலரு… புருஷன் பொண்டாட்டி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கிவிட்டு, என்ன சொன்னாலும் நீங்க ரெண்டு பேரும் கேக்க போறது இல்ல என்னமோ பண்ணுங்க போங்க என்று சலித்துக் கொண்டே கிளம்பினார்…

 

கன்னுகுட்டிக்கு இணையாக மார்பில் முட்டும் காளையை பிடரியைப் பிடித்து இழுத்து தள்ளி வாயில் பட்டென்று அடி போட்டாள்…

 

முன் முகம் முழுவதும் வட்டமாய் வேர்த்து, கடைவாயில் திரவம் ஒழுக…, அதை துடைத்தபடி அப்பாவியாய் முழித்தான் தேவா…

 

எதுக்கு கடிக்கிறீங்க… வலிக்குது… என்றாள்… நெஞ்சை தேய்த்தபடி…

 

ஏய்… நான் ஒன்னும் பண்ணல டி… முழு நேரமும் உன் கூடவே இருக்கிற அவன் கிட்ட கேக்காம என்ன மட்டும் கேக்குற… என்றான்..

 

இதைக் கேட்டு முறைத்தவள் அவன் கிட்ட எப்படி கேட்க முடியும் அவனுக்கு என்ன பல்லா இருக்கு… என்று மகனுக்காக வாதாட…

 

செய்யாத தப்புக்கு குறை சொல்கிறாளே என்று நினைத்தவன்… விரல்ல என்ன காயம்? என கேட்க… விரலை நீட்டி அவள் பார்க்க… ஆள்காட்டி விரலை பிடித்து குட்டியின் வாயில் வைத்துவிட்டு அனுபவி என்று கூறி விட்டு சென்று விட்டான் ஆதி… முன் பற்கள் துகள்களாக வெளியே எட்டிப் பார்க்கும் ஈறுகளால் இறுக்கமாக பிடித்துக் கொண்டான் குட்டி…

 

அஆ… ஐயோ.. அம்மா… டேய்.. விடுடா… என்று அவள் கத்த…

 

அம்மாவின் கதறல் சின்னவனுக்கு சங்கீதமாய் கேட்டிருக்கும் போலும் கடித்துக் கொண்டே குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தான் நேத்ரன்…

 

நேத்ரனோ… மிகவும் சமத்து… தந்தையைப் போன்றே அழகன்… தான் உண்டு தன் வேலை உண்டு என்னும் ரகம்… தேவையில்லாமல் சிணுங்குவது கூட கிடையாது… இரவில் முழிப்பதே இல்லை… மலராக எழுந்து பால் கொடுத்தால் தான் உண்டு… கேட்டு அழும் ரகமில்லை… அவனுக்காக அவன் தந்தை தான் போராடுவான்… (குழந்தைக்காக தான் நம்புங்கள்🫣) குழந்தை வளர்ப்பு இவ்வளவு எளிதா என்று நினைக்கத் தோன்றியது தம்பதியருக்கு…

 

உரிய நேரத்தில் குப்புற விழுந்தான், நகர்ந்தான், தவழ்ந்தான்.. இதோ நடக்கிறான்…

 

எதற்கும் தாய் தந்தையரை ஏங்க வைக்கவில்லை… தடுப்பூசி போடுவதை தவிர்த்து அதிகமாய் மருத்துவமனை கூட சென்றதில்லை…

 

அப்படி இருக்கையில் பெண்ணவளோ பெரும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்… இப்பொழுதெல்லாம் கணவன் தன்னிடம் இருந்து விலகியே இருப்பது போல் உணர்ந்தாள் மலர்…

 

ஏனாம் அப்டி..

 

அவளிடம் இருந்து அனைத்தையும் பாரபட்சம் பார்க்காமல், நேரங்காலம் இல்லாமல்  எடுத்துக் கொள்பவன்… கூடல் வரையில் கொண்டு செல்வதில்லை… குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து இவள் தான் முன்னெடுத்து அடம் பிடித்து… கூடல் வரையில் கொண்டு சென்றாள்… 

 

அன்றிலிருந்து இன்று வரை… தன்னவனின் நெருக்கத்தில் ஒரு முழுமை இல்லை… கொலுசு சத்தத்திற்கு இணையான உறுமல் சத்தத்தை கேட்க முடிவதில்லை.. நேரம் காலம் பார்த்து தான் இணைகிறான்… அதிலும் 

முடிவுரையில் அவசரமாக எழுந்து குளியல் அறைக்குள் சென்று விடுகிறான்… தலை வாழை இலை போட்டு அறுசுவை உணவு உண்டு, அதில் தித்திக்கும் பாயாசம் இல்லாத குறையாகி போகிறது.. பெண்ணவளுக்கு… முழுதாய் சாப்பிட்ட உணர்வு இல்லை… தன்னவனின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள…

கணவன் வருகைக்காக காத்திருந்து, தனது ஏக்கத்தை சொல்ல.. 

 

ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவன்… சட்டை பட்டன்களை அவிழ்த்தபடியே… எனக்கு நேத்ரன் மட்டும் போதும்,  என்றான். 

 

கையைக் கட்டிக்கொண்டு சுவத்தில் சாய்ந்த படி ஏன் எனும் விதமாக அவன் முகத்தை பார்க்க…

 

பிரசவம் இவ்வளவு கஷ்டம்னு முன்னமே எனக்கு தெரியல… இப்ப தெரிஞ்சுகிட்டேன்…  என்ற படிய உடையை மாற்றினான்…

 

வலி எடுத்துப் பெத்தவ நானு… நானே ஓகே சொல்கிறேன்… உங்களுக்கு என்ன…

 

நீ சொல்லுவ டி… உனக்கு என்ன… கத்தி எடுத்துட்டு உன் கிட்ட வரும்போது உயிர் போனது எனக்கு தான் தெரியும்… அந்த இடம் முழுக்க ஒரே ரத்தம்… நினைத்து பார்த்து தலையை குலுக்கியவன்… இனிமேல் இது மாதிரி ஒரு சூழ்நிலையில உன்ன அழ வச்சி என்னால பாக்க முடியாது… என்றான் உறுதியாக…

 

சரி ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பெத்துக்கலாம்… நீங்க கொஞ்ச வேண்டாமா…

 

அதுக்கு தான் எனக்கு நீ இருக்கியே… என்று அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவன்… வேற யாரும் வேணாம் என்று கூறிவிட்டு, மேலும் பேச்சை தொடராமல் அந்த இடத்தை விட்டே சென்று விட்டான்…

 

தன்னவன் உறுதியான எண்ணத்தை புரிந்து கொண்டவள்… நேர்மையாக நடந்து, குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிந்துகொண்டு…. குறுக்கு வழியில் போக முடிவு எடுத்தாள்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top