ராவணா 41

கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட அன்றே ஆடம்பரமாக எதுவும் வேண்டாம் என்றும் அண்ணன்களின் திருமணத்தை விமரிசையாக செய்யலாம் என தன்னவள் அன்பு கட்டளை விதித்திருக்க, மீறுவானா என்ன? 

திருமணத்திற்கு விருந்தினர்களாக பல காப்பகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பப்படிருந்ததால் மண்டபம் மட்டும் பெரிதாக வாடகைக்கு எடுத்திருந்தவன், உணவை தவிர மீதி ஆலங்கார வேலைப்பாடுகளையெல்லாம் ஆடம்பர வீண் செலவுகள் இன்றி திட்டமிட்டப்படி எளிமையாகவே செய்திருக்க, அந்த எளிமையிலும் மண்டபம் அவர்களின் மனம் போல அழகாக காட்சியளித்தது.

திருமண நாளுக்கு முந்தின நாள் மாலை பெண்ணுக்கு பட்டுக்கட்டி நிச்சயதார்த்தம் வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்படிருந்ததால் நெருங்கியவர்கள் முன்னிலையில் அனைத்து சம்பிரதாயங்களும் நடந்தேற துவங்கியது.

அவனது சகாக்களை பற்றி கேட்கவா வேண்டும் தங்களின் அண்ணனின் திருமணம் அள்ளவா, முகம் மலர மண்டபத்தை சுற்றி வந்தார்கள்.

எளிமையாக அலங்கரிக்கப்பட்ட மேடையில், மேனியை உருத்தாத பச்சை நிற மென் பட்டு வகை பட்டு உடுத்தி மிதமான ஒப்பனையில் ராவணன் தன்னவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிக்கொடுத்திருந்த நகைகள் அணிந்து பெண்களுக்கே உரிய அழகுடன்  அமர்ந்திருந்த அஜூதியா மெல்ல நிமிர்ந்து தன்னவனை தேடிய பொழுது இமைக்க மறந்தாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் ஆண்களுக்கே உரிய கம்பீர அழகுடன் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி மேடையேறி வந்த தன்னவனை கண்டதும் அஜூதியாவுக்கு யாவும் மறந்தது.

அவன் மட்டும் என்ன முதன் முதலில் தன்னவளை இப்படி அதீத நளினத்துடன் பார்க்கும் பொழுது சித்தம் கலங்காது போகுமோ? இப்பொழுதே யாரும் இல்லாத தன் பீச் ஹவுசுக்கு கடத்தி சென்றுவிடலாமா என்று துடிக்கும் மனதை அடக்க தெரியாது தவித்தான் ராவணன்.

ஒரு சில சடங்குகள் முடிந்த பிறகு, தாம்புல தட்டில் ரோஜா பூக்களுக்கு நடுவில் வைக்கப்படிருந்த மோதிரங்களோடு மீராவும் இந்திராவும் ராவணன் மற்றும் அஜூதியாவின் அருகே வந்தனர்.

அதன் பிறகு ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்து கொண்ட ராவணனும் அஜூதியாவும் ஒருவருக்கொருவர்  மோதிரங்களை அணிவிக்க  கைத்தட்டலும் விசில் சத்தமும் பறந்தது.

நிச்சயதார்த்தத்தில் மிகவும் நெருகியவர்கள் மட்டுமே பங்கெடுத்திருந்ததால் அனைவரும் தங்களுக்கான அறைகளில் சென்று ஓய்வெடுத்துக்கொள்ள, வேணி மட்டும் தன் கணவன் திலிப்புடன் காலை வருவதாக கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட, அஜூதியாவுடன் இந்திராவும் மீராவும் தங்கிக்கொண்டனர். 

பெண்கள் மூவரும் அரட்டை அடித்தபடி தங்களின் அலங்காரங்களை கலைத்து கொண்டிருக்க,

தன் அலைபேசியில் ஓசை கேட்கவும் எடுத்து பார்த்த மீரா,

“புடவைய மாத்தாம அப்படியே மாடிக்கு வா எனக்கு உன்னை பார்க்கணும்” என்ற சந்துருவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியில் முகம் சிவந்தவள், 

“ஒரு ஃபோன் மட்டும் பேசிட்டு வந்திடுறேன்” என்று கூறவும் பெண்கள் இருவரும் அவளது முக சிவப்பை வைத்தே அவள் யாரை பார்க்க செல்கிறாள் என்பதை கணித்து விட, மீராவை ஒருவழி செய்து விட்டே அனுப்பிவைத்தனர்.

இப்பொழுது அஜூதியாவுக்கு தன்னவனின் நினைவு வரவும் அவனுக்கு அழைப்பு விடுக்க அவனும் அவளது நினைப்பில் தான் இருந்திருப்பான் போலும் உடனே எடுத்தவன்,

“என்ன மேடம் இன்னும் தூங்கலையா” என்றான் துள்ளலாக.

“சாரும் இன்னும் தூங்கலை போல” தன் விரலில் அவன் அணிவித்த மோதிரத்தை வருடியபடியே பேசியவள் என்ன நினைத்தாளோ,

“உன்னை எனக்கு பார்க்கணும் எங்க இருக்க” என்று கேட்டுவிட, 

“ஹெலோ நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல தாலிகட்டுறதுக்கு முன்னாடி பொண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக்க கூடாதாம் மீனாட்சி அம்மா சொன்னாங்க” என்று சிரித்துக்கொண்டே தன் அறையின் கதவை திறந்தான் ராவணன்.

“சார் நமக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்சிருச்சு, இப்போ நான் உங்க பாதி பொண்டாட்டி, நீங்க எனக்கு பாதி புருஷன் மறந்திடாதீங்க” என்றவளோ இந்திரா இன்னும் பாத்ரூமில் இருந்து வராததை உறுதி படுத்திக்கொண்டு கொஞ்சம் சன்னமான குரலில்,

“சொல்லப்போனா இன்னைக்கு நாம பாதி பர்ஸ்ட் நைட் கூட கொண்டாடலாம்” என்று புன்னகையுடன் கூறினாள்.

அப்பொழுது பார்த்து கதவு தட்டப்படவும், 

“யாரு இந்த நேரத்துல” என்று கேட்க,

“ம்ம் பாதி பர்ஸ்ட் நைட் கொண்டாட உன் பாதி புருஷன் வந்திருக்கேன் வந்து கதவை திறங்க என் பொண்டாட்டியே” என்று ராவணன் அலைபேசி வழியாகவே கூறவும் நெஞ்சம் படப்படக்க நின்றிருந்தவளோ தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு,

“விளையாடத சக்கர உள்ள இந்து இருக்கா” என்றாள் அஜூதியா.

அப்பொழுது,

“என்னடி கதவை திறக்காம என்ன பண்ற” என்று பாத்ரூம் கதவை திறந்தபடி வந்த இந்திரா சென்று கதவை திறக்க, அங்கே ராவணனை பார்த்தவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை, அஜூதியாவோ சங்கடமாக தோழியை பார்க்க அவளோ, 

“உள்ள வாங்கண்ணா என்றவள் எனக்கு ஃபோன் பேசணும்” என்று கூறிவிட்டு தன் அலைபேசியை எடுத்து கொண்டு வெளியேறிவிட, கதவுக்கு தாலிட்டுவிட்டு முகத்தில் குறும்பு புன்னகையோடு தன்னவளை பார்த்த ராவணன்,

“என்ன பாதி பர்ஸ்ட் நைட் கொண்டாடிடுவோமா” என்று தன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, அவளுக்கு வெட்கத்தில் பேச்சே வரவில்லை.

பதட்டம்!

வெட்கம்! 

ஆர்வம்! என கலவையான உணர்ச்சிக் குவியலுக்குள் சிக்கிக்கொண்டு தவிப்புடன் நின்றிருந்தாள் அஜூதியா.

ஆனால் அவனோ அனைத்து தடையும் தாண்டி தன்னவள் தன் கை சேர போகிறாள் என்கின்ற சந்தோஷத்தில் திலைத்திருக்க, அஜூதியாவை இன்று மணப்பெண் கோலத்தில் பார்த்ததில் இருந்தே அவளை தனிமையில் சந்திக்க தவித்து கொண்டிருந்தவன் அவளே அழைக்கவும் விடுவானா என்ன? இதில் வேறு ஏதேதோ பேசி கட்டவிழ துடிக்கும் அவன் உணர்வுகளை வேறு அவள் தூண்டிவிட்டிருக்க, முதன் முறை தன்னவளை தலை முதல் கால் வரை தன் பார்வையாலே வருடினான்.

நகைகளை கழற்றி கொண்டே அழைத்திருப்பாள் போல ஒற்றை காதில் மட்டும் ஜிமிக்கி அசைந்து கொண்டிருக்க,  சற்று முன் செய்யப்பட்ட ஒப்பனைகளை எல்லாம் கலைத்து, நேர்த்தியாக உடுத்திருந்த பச்சை நிற பட்டுபுடவையை இப்போது ஒற்றையாக வழியவிட்டு, விரித்து விடப்பட்ட கூந்தலில் சில கற்றை முடி மட்டும் காற்றில் வந்து அவள் முகத்தில் மோத, எந்த ஆபரணங்களும் இல்லாது தன்னவனின் முன்னால் உயிருள்ள ஓவியமாய் நின்றபடி அவனது உயிரை பாதியாக்கி கொண்டிருந்தாள் அஜூதியா.

“இந்துவும் மீராவும் வந்திர போறாங்க” அலைபேசியில் பேசும் பொழுது ஒன்றும் தோன்ற வில்லை ஆனால் தனிமையில்?   அதுவும் அவனது உயிரை உருக்கும் பார்வை ஏதோ செய்ய, தவிப்புடன் கூறினாள்.

“அதுக்கு” என்று இழுத்தவன் அப்படியே அவள் கைகளை சுண்டி இழுக்க அவன் மீது மொத்தமாக மோதி நின்றாள் அஜூதியா.

தன் மார்பில் வந்து மோதிய தன்னவளை அப்படியே  தன் கரங்களுக்குள் சிறை வைத்த ராவணன்,

“வேண்டாமா” என்று அவளது காது மடலை முத்தமிட்ட படி கேட்க, அவன் எதை குறிப்பிடுகிறான் என்பதை நன்கு புரிந்து கொண்டவளோ, 

“ஐயோ தெரியாம சொல்லிட்டேன் ப்ளீஸ் கிளம்புங்க” என்று கெஞ்சவும் அட்டகாசமாக சிரித்தவன், அவளது ஒற்றை காதில் தொங்கிகொண்டிருந்த ஜிமிக்கியை கழற்றி அவள் கரத்தில் கொடுத்தவன், 

“போணுமா” அவளது வதனத்தை நாசியால் உரசிகொண்டே அவளை உணர்வின் பிடியில் சிக்கவைத்தப்படி கேட்டான்.

“ம்ஹூம்” இப்பொழுது மறுப்பாக மயக்கும் குரலில் மெல்லிசை போல கூறினாள்.

அவனோ புன்னகையுடன் தன்னவளின் நெற்றியில் இதழ் பதித்தவன், தன்னவளை கைகளில் ஏந்திக்கொண்டு மஞ்சத்தில் கிடத்தி, தானும் அவள் அருகே சரிந்திருந்தான்.

அதன் பிறகு மெல்ல தன்னவளின் முகம் பார்க்க திரும்பிய ராவணன், அவளின் பிறை நுதலில் முத்தமிட ஆரம்பித்து, பின் அவளது விழிகள், வதனம், மூக்கின் நுனி என முத்தமிட்டுக் கொண்டே சென்றவன், இறுதியாக அவளது செவ்விதழில் மூழ்கி முத்தெடுக்க தொடங்கினான்.

வழமை போல ஆடவனின் ஆதிக்கத்தின் கீழ் துவங்கிய முத்தப்போர், மென்மையாக ஆரம்பித்து பெண்ணவளின் ஒத்துழைப்பும் சேர்ந்து கொண்டதில் அழுத்தமாய் நீடிக்க, அது இருவரையும் கிறங்கடித்தது.

ராவணன், அஜூதியா ஆகிய இருவரும் மெய்மறந்து கிறங்கிய நொடி, அஜூதியாவின் கரங்கள் தானாக உயர்ந்து அவனது பின்னந்தலை முடியை தன் மென்கரங்களுக்குள் இறுக்கமாக பற்றிக்கொள்ள, மோக மிகுதியில் அவன் பக்கமிருந்து வந்த முத்தத்தின் தாக்குதல் வேகம் எடுத்தது.

கல்லுண்ட வண்டாய் அவனுக்குள் அப்படி ஒரு மயக்கம்! 

அதே மயக்கத்துடன் அவளது வெற்று இடையில் அழுத்தமாய் பதிந்திருந்த அவனது கரங்களும், அவளது இதழில் ஆழமாய் புதைந்திருந்த அவனது அதரங்களும் எல்லை தாண்டி பயணித்த பொழுது, தன்னவளின் தேகத்தில் தோன்றிய நடுக்கத்தில், மென்புன்னகையுடன் அவளை விட்டு விலகியவன் மிகவும் சிரமப்பட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, நீண்ட பெருமூச்சை வெளியிட்டு தன்னவளைப் பார்த்தான்.

கண்கள் மூடியிருக்க, உதடுகள் நடுங்க அப்படியே படுத்திருந்தாள். அவள் இன்னும் உணர்வின் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பது நன்றாகப் புரிய, அவளது காதை நோக்கி குனிந்தவன், தான் நடத்திய அகழ்வராய்ச்சியில் கலைந்து கிடந்த அவளது புடவையைச் சரி செய்தபடியே, 

“என்ன தொடங்கினதை முடிச்சு வச்சிடுவோமா?” என்றான் குறும்பாக.

அதில் சட்டென்று சுயம் பெற்றவளோ அதிர்ந்து விழிக்கவும், ரசனையோடு அவளின் விரிந்திருந்த இரு விழிகளிலும் முத்தம் பதித்தவன், அப்படியே அவளைத் தன் மார்பில் இழுத்துப் போட்டு இறுக்கமாக அணைத்துக் கொண்டு,

“இன்னைக்கு பாதி போதும், நாளைக்கு முழுசா கொண்டாடிக்கிறேன்” என்று சொல்லி கண்ணடிக்கவும், அதில் ஆசுவாசமாக மூச்சை வெளியிட்டவள் அவன் நெஞ்சில் காதலோடு குத்தினாள்.

ஆனால் ராவணனோ விடாமல்,

“பேச்சு மட்டும்தான்டி!” என்று கூறி வம்பிலுத்தபடி அட்டகாசமாக  சிரிக்கவும், 

“யாரு இப்போ உங்கள தடுத்தது? உங்களுக்குத்தான் அடுத்து என்ன பண்ணனும்னு தெரியலன்னு நினைக்கிறேன்!” என்று கூறி பதிலுக்கு அவனை கேலி செய்து கிளுக்கிச் சிரித்தாள் அஜூதியா.

உடனே ராவணனோ, “யாருக்குடி தெரியல? இருடி, நாளைக்கு இதுக்கே உன்னை என்ன பண்றேன்னு பாரு!” என்கவும் அவனது மார்பில் செல்லமாய்க் கடித்தவள்,

“பார்ப்போம்!” என்று கூறி வெட்கத்தில் அவன் மார்புக்குள்ளே புதைந்து கொள்ள, அவனும் ரசனை தழும்பச் சிரித்துக்கொண்டான்.

@@@@

அதே நேரம் காரிடாரில் குறுக்கே நெடுக்கே நடந்து கொண்டிருந்த இந்திராவோ,

“எவ்வளவு நேரம் இங்கையே இருக்கிறது, ல்வர்ஸ் கொஞ்சம் நேரம் ஜாலியா இருக்கட்டும் நாம மாடிக்கு போவோம்” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டவள் அப்படியே மாடிக்கு செல்லும் படிக்கட்டில் ஏறினாள்.

ஏற்கனவே அறைக்குள்ளே அவனவன் அலைபேசியை வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்ததில் சலிப்புடன் மேல வந்த தேவராஜின் கண்களில் மீராவும் சந்துருவும் முத்தமிட்டு கொள்ளும் காட்சி பட்டுவிட, 

“இங்கையுமா” என்று சலிப்புடன் அவன் திரும்ப இருந்த கணம், 

அவனுக்கு பின்னால் வந்திருந்த இந்திராவுக்கோ, அவன் எதையோ பார்ப்பது போல் தெரியவும் என்னவா இருக்கும் என்று எண்ணியவள், அவன் அருகே இன்னும் நெருங்கி வந்து எட்டி பார்க்க முயற்சிக்கவும் அதை கண்ட தேவராஜ் அவள் கண்களில் தன் கரம் வைத்து மறைத்தவன் அப்படியே அவளை தன்னை நோக்கி திருப்பிருக்க, அவளோ அவனது செய்கையில், 

“ஏய்” என்று சத்தம் போடவும் அவள் விழிகளை மறைத்த தன் கரங்களை கொண்டு உடனே அவள் இதழை மூடியவன், 

“சத்தம் போடாத” என்க இப்பொழுது அவள் தலை சரி என்பதாய் தானாக அசைந்தது.

மண்டபதிற்கு சற்று தள்ளி இருந்த தாபாவில், காரின் பேனட் மீது ஏறி அமர்ந்திருந்த இந்திராவிடம்,

“சூடா இருக்கு புடிச்சிகுவியா” என்று கேட்டான் தேவராஜ்.

அதற்கு, “ம்ம்” என்ற இந்திரா டீ கிளாசை வாங்கிக்கொள்ள, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஆவி பறக்க டீ அருந்தினர்.

“ஆமா உனக்கு ஆள் யாரும் இல்லையா?” பிஸ்கட்டை டீயில் முக்கி வாயில் போட்டபடி இந்திரா கேட்க, 

“இல்லை, உனக்கு?” குடித்துக்கொண்டே அவள் முகம் பார்த்தான்.

“எனக்கும் இல்லை, ஆமா ஏன் நீ யாரையும் லவ் பண்ணல?” டீ குடித்ததால் தன் மேலுதட்டில் படிந்திருந்த அந்த நுரையை தன் நாவால் துடைத்தபடியே அவள் கேட்க, அவளது செய்கையில் தன் தொண்டைக்குழி ஏறி இறங்க அவளைப் பார்த்த தேவராஜோ, “டைம் இல்லை” என்றான் எங்கோ பார்த்தபடி.

அதற்கு அவளோ, “ம்ம் சார் பெரிய கலெக்டர்” என்று கேலியாக உதட்டை வலைக்கவும்,

முறைத்தவன், “நீயேன் லவ் பண்ணல” என்று கேட்டான்.

அதற்கு,”எவனும் சிக்கல” என்றவளை ஏற இறங்க பார்த்தவன், ‘சிக்கிருந்தா செத்துருப்பான்’  என்று முணுமுணுக்க, 

“என்ன சொன்ன” தீவிர முகபாவனையுடன் கேட்டாள் இந்திரா.

இந்திராவின் முகபாவம் மாறவும் “ஒன்னும் இல்லை” என்ற தேவராஜோ அவளது டீ கிளாசையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போக, புன்னகையுடன் அவனை பார்த்தாள் இந்திரா.

இப்படியே காதல் என்ற தென்றல் சத்தமில்லாமல் அனைவரின் மனதிற்குள்ளும் மெல்லிய குளுமையை வீசி செல்ல, அனைவரது மனமும் சுகமாக அந்த ஏகாந்த அமைதியில் திளைத்தது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top