Episode 20 — ஆட்டம் வெளியில் வந்தது

விக்ரம் ராயன் என்ற பெயரை கேட்டதும் நிலா சில நொடிகள் அமைதியாக நின்றாள்.

அவளுக்கு அந்தப் பெயர் எந்த நினைவையும் கொடுக்கவில்லை.

“அவர் யாரு?”

இமயவரம்பன் பதில் சொல்லும் முன் பார்வதி பேச ஆரம்பித்தார்.

“எனக்கும் தெரியாது.”

“அம்மா… அப்பா இந்தப் பெயரை எப்பவாவது சொல்லியிருக்காரா?”

பார்வதி யோசித்தார்.

“இல்ல. அவர் நிறைய பேர்கிட்ட கடன் வாங்கியிருந்தாரு. யாரெல்லாம் வந்தாங்கன்னே எனக்கு ஞாபகம் இல்ல.”

இமயவரம்பன் கோப்பிலிருந்த ஒரு ஆவணத்தை எடுத்தான்.

“இந்த கையெழுத்து உங்க அப்பாவோடதா?”

பார்வதி பார்த்துவிட்டு தலையசைத்தார்.

“ஆமா.”

“இந்த ஆவணம் கையெழுத்து போட்டதுக்கப்புறம்தான் உங்க சொத்து பிரச்சினை ஆரம்பிச்சிருக்கு.”

நிலா அந்தப் பக்கத்தை எடுத்துப் பார்த்தாள்.

“அப்பா இதுல என்ன கையெழுத்து போட்டிருக்காருன்னு அவருக்கே தெரியுமா?”

“தெரியாம இருந்திருக்கலாம்.”

அவள் மெதுவாக உட்கார்ந்தாள்.

அவளுக்கு அப்பாவைப் பற்றிய பழைய நினைவுகள் எல்லாம் ஒன்றாக வந்தது.

கோபம்.

குடி.

சந்தேகம்.

சண்டை.

ஆனால் அந்த எல்லாவற்றுக்கும் பின்னால் இருந்த காரணம் இப்போது வேறு மாதிரி தெரிந்தது.

“அப்பா… இவ்வளவு பிரச்சினையில இருந்தாரா?”

இமயவரம்பன் அவளைப் பார்த்தான்.

“அவருக்கு மட்டும் இல்ல. உங்க குடும்பத்துக்கே.”

அவள் எதுவும் பேசவில்லை.

சில நொடிகள் கழித்து அவன் எழுந்தான்.

“இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்.”

நிலா அவனைப் பார்த்தாள்.

“எதுக்காக?”

“உங்க குடும்பத்துக்கு வர வேண்டியதை திருப்பிக் கொடுக்கணும்.”

“ஆனா… உங்களுக்கு இதுல என்ன?”

இமயவரம்பன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.

“எல்லாத்துக்கும் காரணம் தேவைப்படாது.”

அவன் வெளியே நடந்தான்.

நிலா அவன் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு அந்த மனிதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால்…

அவன் பேசும்போது மட்டும் அவளுக்கு ஒரு விஷயம் நிம்மதியாக இருந்தது.

அவன் சொன்னதைச் செய்வான் போல இருந்தது.

அதே நேரத்தில்…

இமயவரம்பன் காரில் ஏறியதும் கைபேசி ஒலித்தது.

“சார்.”

“சொல்.”

“விக்ரம் ராயன் இன்னைக்கு நகரத்துல ஒரு முக்கியமான meeting வைத்திருக்கான்.”

“எங்கே?”

முகவரி வந்தது.

இமயவரம்பன் உடனே,

“அங்க போலாம்.”

விக்ரம் ராயன் அந்த நேரத்தில் ஒரு பெரிய ஹோட்டலின் தனியார் அறையில் இருந்தான்.

அவனைச் சுற்றி சில தொழிலதிபர்கள்.

மேசையின் மீது ஒப்பந்தங்கள்.

“இந்த deal முடிஞ்சதும் இந்த முழு பகுதியும் நம்ம control-க்கு வந்துரும்.”

ஒருவர் கேட்டார்.

“மருது இதை allow பண்ணுவாரா?”

விக்ரம் சிரித்தான்.

“மருதுவுக்கு தெரியாம தான் இது நடக்கணும்.”

“இமயவரம்பன்?”

அந்தப் பெயர் வந்ததும் விக்ரமின் முகம் மாறவில்லை.

“அவனை நான் பார்த்துக்கறேன்.”

அதே நேரத்தில் ஹோட்டலின் வெளியே ஒரு கார் வந்து நின்றது.

இமயவரம்பன் இறங்கினான்.

அவனுடன் அவனுடைய ஆட்கள்.

அவன் உள்ளே நடந்துசெல்லும்போது பாதுகாப்பு ஆட்கள் அவனைத் தடுக்க முயன்றார்கள்.

“சார், உள்ளே meeting…”

இமயவரம்பன் நின்றான்.

அவன் எதுவும் சொல்லவில்லை.

அவன் பின்னால் இருந்தவர்கள் முன்னே வந்ததும், பாதுகாப்பு ஆட்கள் விலகினர்.

அவன் நேராக அந்த அறையின் கதவைத் திறந்தான்.

உள்ளே இருந்த எல்லோரும் அவனைப் பார்த்தனர்.

விக்ரம் மட்டும் அமைதியாக இருந்தான்.

சில நொடிகள்—

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

பல வருடங்களாக மறைந்து நடந்துகொண்டிருந்த ஆட்டம்…

முதல் முறையாக நேருக்கு நேர் வந்தது.

விக்ரம் சிரித்தான்.

“வா, இமயவரம்பா.”

இமயவரம்பன் நாற்காலியை இழுத்து உட்கார்ந்தான்.

“என்னை எதிர்பார்த்தியா?”

“நீ வருவேன்னு தெரியும்.”

“அப்போ இந்த நாடகம் எதுக்கு?”

விக்ரம் சிரித்தான்.

“நாடகம் இல்ல. Business.”

இமயவரம்பன் மேசையில் இருந்த ஒப்பந்தத்தைப் பார்த்தான்.

“மருதுவோட நிலத்துக்கு பக்கத்துல இருக்குற எல்லா property-யும் வாங்குற.”

“Business வளர்க்கிறேன்.”

“வளர்க்கிறியா?”

அவன் சிரித்தான்.

“இல்ல… சுத்தி வளைக்கிறியா?”

அறையில் இருந்தவர்கள் அமைதியாகிவிட்டனர்.

விக்ரம் நிதானமாகப் பதிலளித்தான்.

“சில நேரம் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்காது.”

இமயவரம்பன் எழுந்தான்.

“ஒரு விஷயம் மட்டும் ஞாபகத்துல வை.”

அவன் விக்ரமுக்கு அருகில் சென்று நின்றான்.

“மருதுவோட விஷயத்துல கை வைக்குற வரைக்கும் நான் உன்னை business man-ஆ பார்த்தேன்.”

சிறிய இடைவெளி.

“இப்போ நீ என் எதிரி.”

விக்ரம் சிரித்தான்.

“அதுதான் எனக்கு வேணும்.”

இமயவரம்பன் அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு வெளியேறினான்.

விக்ரம் அவன் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இப்போதான் உண்மையான ஆட்டம் ஆரம்பம்.”

அதே இரவு…

நிலா வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்தாள்.

கைபேசி ஒலித்தது.

ஆதித்யா.

“என்ன பண்றீங்க?”

“மாடியில இருக்கேன்.”

“என்ன யோசனை?”

அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“இன்னைக்கு ஒருத்தர் வந்திருந்தாரு.”

“யாரு?”

“அந்த property விஷயம் பார்க்குறவர்.”

“அவரா?”

“ம்.”

“என்ன சொன்னாரு?”

நிலா நடந்ததைச் சொன்னாள்.

ஆதித்யா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

“நிலா…”

“ம்?”

“நீங்க பயப்படாதீங்க.”

“நான் பயப்படல.”

“உங்க குரல் வேற மாதிரி இருக்கு.”

அவள் சிரிக்க முயன்றாள்.

“எனக்கு என் அப்பாவைப் பற்றித்தான் யோசனையா இருக்கு.”

“புரியுது.”

சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர்.

பிறகு ஆதித்யா மெதுவாக,

“நான் இருக்கேன்.”

அந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் போதுமானதாக இருந்தது.

நிலா கண்களை மூடி சிரித்தாள்.

அதே நேரத்தில்…

இமயவரம்பன் தனது காரில் அமர்ந்திருந்தான்.

அவனுடைய கைபேசியில் ஒரு புதிய செய்தி வந்தது.

ஒரு புகைப்படம்.

அதில்—

நிலா.

அவள் அலுவலகத்திலிருந்து வெளியே வருகிறாள்.

அதற்குக் கீழே ஒரு வரி:

“உனக்கு முக்கியமானது எது என்று தெரிஞ்சுக்கிட்டேன்.”

இமயவரம்பனின் முகம் உடனே மாறியது.

அவன் கைபேசியை இறுக்கமாகப் பிடித்தான்.

அந்த நொடியில்தான் அவனுக்கு புரிந்தது.

விக்ரம் அவனை மட்டும் எதிரியாகப் பார்க்கவில்லை.

அவன் காப்பாற்ற நினைக்கும் மனிதர்களையும் தனது ஆட்டத்துக்குள் கொண்டு வர ஆரம்பித்துவிட்டான்.

இமயவரம்பன் மெதுவாகச் சொன்னான்—

“இப்போ நீ எல்லை தாண்டிட்ட.”

அவன் கார் வேகமாக இருளுக்குள் சென்றது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top