அத்தியாயம் 19
ஶ்ரீஜாவோ கண்கள் கலங்க அக்ஷரனைப் பார்த்தாள்.
“இப்போவே போலாம் வா”
அக்ஷரன் அழைக்க.
“இன்னைக்கு வேணாம் நாளைக்கு போலாமே”
கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு கூற நெற்றியை பெருவிரலால் நீவி விட்டவன்.
“ஓகே”
தோளை உலுக்கினான்.
“என்னோட காதல நம்புறிங்க தானே”
அவள் கண்களில் தவிப்பை வைத்துக் கொண்டு ஏக்கமாக அவனிடம் கேட்க அவளை அழுத்தமாகப் பார்த்தவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.
“தேங்க் யூ தேங்க் யூ ஸோ மச்”
அவள் கூறிக் கொண்டு அவனை நெருங்க இரண்டடி பின்னால் நகர்ந்தவன்.
“இப்போ எத்தன மன்த்ஸ்ன்னு சொன்ன”
யோசனையாக புருவத்தை நீவ.
“டூ மன்த்ஸ் ஆகுது”
வெட்கப்பட்டுக் கொண்டேக் கூறியவள்.
“அந்த பொண்ணுக் கிட்ட இருந்து எப்போ டைவோர்ஸ் வாங்குவிங்க உங்கள பிரிஞ்சி என்னால இருக்க முடியல”
அப்பட்டமான ஏக்கம் அவளது குரலில்.
“ம்ம் வாங்கலாம்”
அவன் யோசனையாகக் கூறினான்.
“ஓகே நா கெளம்புறேன் இப்போ தான் எனக்கு மைன்ட் ரிலேக்ஸா இருக்கு இன்னைக்கு தான் நிம்மதியா தூங்குவேன்”
அவள் திரும்பி ஒரு அடி எடுத்து வைத்து விட்டு பின்னால் திரும்பியவள்.
“லவ்யூ”
அழகாகப் புன்னகைத்துக் கொண்டே அவள் இவனிடமிருந்து வெறும் தலையசைப்பு மாத்திரம் தான்.
பின் வெட்கப்பட்டுக் கொண்டே அங்கிருந்து நகர இவனோ பேன்ட் போக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டுக் கொண்டு அங்கையே நின்று கொண்டிருந்தான்.
“இன்னும் அந்த பொண்ணுகூட பழகுறதையும் நீ நிறுத்தல்லையா”
ஆக்ரோஷமான குரல் முதுகுக்குப் பின்னால் கேட்க தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக் கொண்டு.
“ப்ப்ச்ச்”
சலித்துக் கொண்டே திரும்பினான்.
அங்கு அவனது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் அபிலேஷ்.
கோவமாக முறைத்துக் கொண்டு.
“எத்தன தடவ டா உன்கிட்ட சொல்றது ஒழுங்கா இரு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கைல விளையாடாதே பொண்ணுங்க பாவம் சும்மா விடாது.”
அவன் கோவமாகக் கூற.
“எத்தன தடவ சொல்றதுன்னு சொல்ற உனக்கே தெரியலன்னா கேக்குற எனக்கு எப்பிடி தெரியும் நீ தான் கவுன்ட் பன்னிக்கனும்”
அவன் கூறியவற்றில் முதல்பாதியை மாத்திரம் ஏற்றுக் கொண்டவன் அதற்கு மாத்திரம் பதில் சொல்லி விட்டு மீதிப் பாதியை கிடப்பில் போட்டான்.
அவனது பதிலில் முன்னால் உள்ளவனது இரத்த அழுத்தம் தான் உயர்ந்தது.
“முன்னாடி தான் அந்த பொண்ணு கூட பழகிக்கிட்டு இருந்த இப்போ தான் கல்யாணம் ஆகிருச்சுல்ல அந்த பொண்ணு கூட இன்னும் பழகுற தப்பில்ல”
பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அபிலேஷ் கேட்க.
“இல்லையே.. கல்யாணமாகிருச்சுன்னா வேற பொண்ணுங்ககூட பேச கூடாதா இது எந்த ஊரு நியாயம்டா”
அவள் அளவுக்கதிகமான நக்கலைக் குரலில் தேக்கி சொன்னான்.
“பேசலாம் தப்பில்ல ஆனா எக்ஸ் லவ்வர் கூட கல்யாணமானதுக்கப்புறம் பேசினா அது உன்னோட கல்யாண வாழ்க்கையத் தான் பாதிக்கும்”
புரிந்துக்கொள் எனும் கோரிக்கை அவனது கூற்றில்.
அவனை அலட்சியமாகப் பார்த்த அக்ஷரன்.
“என்னோட கல்யாண வாழ்க்கைய எது பாதிக்கும் எது பாதிக்காதுன்னு எனக்கு தெரியும் நீங்க மூடிட்டு உங்க வேலையப் பாருங்க”
இப்பொழுது கடுமை பரவியது அக்ஷரனது குரலில் மட்டுமல்ல முகத்திலும் கூட.
“உன்னோட நல்லதுக்காகத் தான்டா சொல்றேன் உன்னோட பொண்டாட்டி ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா அவளுக்கு துரோகம் பன்னாதே”
அவனும் கடுமையாகக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
போகும் அவனையே வெறித்தவனது இதழோ இடதுபுறமாக வளைந்தது.
******
“ஐயோ அத்த சொல்லிக் கொடுங்க”
கெஞ்சிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
“முடியாதுன்னா முடியாது தான் உனக்கெதுக்கு கண்ணு நா தான் சமைக்குறேன்ல”
தேவகி உறுதியாவே மறுத்தார்.
“இல்ல அத்த எனக்கும் சொல்லிக் கொடுங்க நானும் எவ்ளோ நாளைக்குத் தான் உங்க பையன் கையாலையே சாப்ட்றது”
அவள் கூற தேவகி அவளை போலியாக முறைத்தார்.
“ஹிஹி அப்பிடி இல்ல அத்த அவரும் பாவம்ல அதான் தயவுசெஞ்சு சொல்லிக் கொடுங்க அத்த”
அவள் கண்களை சுருக்கி கெஞ்ச
“சரி சரி சொல்லிக் கொடுக்குறேன்”
கூறியவர் அடிப்படையில் இருந்து அவளுக்கு சமைப்பதற்கு சொல்லிக் கொடுக்க அவளும் ஆர்வமாக சமையலைக் கத்துக் கொண்டாள்.
ஞானவேல் அறையில் இருந்தார்.
அக்ஷரன் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வர சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது.
யோசனையாக புருவங்கள் சுருங்க சமையலறைக்குள் நுழைந்தான்.
அங்கு அவனது தாய் சொல்லிக் கொடுக்கும் விதத்தில் வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தாள் அவனது மனைவி.
“அத்த இப்பிடி நீளவாக்குல வெட்டினா சரியா”
“ஆமாடா அப்பிடி வெட்டினா சரி முதல்ல எண்ணெய்ல இஞ்சிபூண்டு போடனும் அதோட கடுகும் போடனும்”
ஒவ்வொன்றாகக் கூற தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இங்க என்ன நடக்குது”
அக்ஷரனது குரல் வர தேவகி குரல் வந்த திசையைப் பார்த்தார்.
நேத்ராவும் பார்த்தாள்.
அங்கு மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான் அக்ஷரன்.
“இல்லடா இவ தான் சமைக்க சொல்லிக் கொடுங்க உன்னோட கையாலையே எவ்ளோ நாளைக்குத் தான் சாப்பிட்றதுன்னு என்கிட்ட கேக்குறா அதான் சமைக்க சொல்லிக் கொடுத்தேன்”
வெகுளியாக தேவகிக் கூற நேத்ரா கலவரமாக அக்ஷரனது முகத்தைப் பார்த்தாள்.
அவள் நினைத்தது போலவே அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அக்ஷரன்.
“இல்ல இல்ல அப்பிடி இல்ல நானும் கத்துக்கனும்ல அதான்”
அவசரமாக மறுத்தாள்.
“ம்ம்மா அவளுக்குத் தான் சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாதே நீ சொல்லிக் கொடுக்கப் போய் அவ ஏதாச்சும் பன்னிக்கப் போறா”
அவன் தாயிடம் கூற.
“எனக்கு எல்லாம் தெரியும்”
மூக்கை சுருக்கி அவள் கூற மூக்குத்திக்கூட மின்னியது.
“ஸ்ஸ்ஸ்…. ஆஆஆ”
கூறியவள் கையை உதறி வலியில் கத்தினாள்.
“கண்ணு என்னாச்சு”
தேவகி நேத்ராவிடம் நெருங்க முன்னரே ஒரே எட்டில் அவளிடம் நெருங்கியிருந்தான் அக்ஷரன்.
அவளது ஆள்காட்டி விரலை கத்தி பதம் பார்த்திருந்தது.
இரத்தம் வேறு கசிந்தது.
அவளை முறைத்தவன் திரும்பி தாயையும் சேர்த்து முறைத்து விட்டு வெளியே சென்று முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்து அவளது அந்த விரலில் இருக்கும் சிறிய காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட்டான்.
“இனிமே உன்ன இங்க பார்த்தேன்னு வை அப்புறம் நடக்குறதுக்கு நா பொறுப்பு இல்ல”
அழுத்தமாகக் கூறியவன் முறைத்து விட்டு அங்கிருந்து செல்ல இவள் தான் பாவமாக அத்தையைப் பார்த்தாள்.
“அவனுக்கு உன்மேல ரொம்ப பாசம் தான்டா”
தேவகிக்கோ மனம் குளிர்ந்து போனது.
ஆனால் இவளது மனமோ குதர்க்கமாகவே யோசித்ததை பாவம் அவர் அறியவில்லையே.
“அவங்க அம்மா இருந்ததால தான் இப்பிடி நடந்துக்கிட்டாங்க போல அதோட எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா அவங்களுக்குத் தானே சிரமம் அவங்கள தானே மாமாவும் அத்தையும் திட்டுவாங்க”
அவளது மனம் இவ்வாறு தான் சிந்தித்தது.
பகல் உணவை நால்வரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
ஞானவேல் வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க அக்ஷரன் அறைக்குள் இருந்தான்.
இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை.
அத்தையும் மருமகளும் சமயலறைக்குள் இருந்தார்கள்.
“அத்த நீங்க போய் இப்போவாச்சும் ஓய்வெடுங்க”
நேத்ரா கூற
“சரிடா நீயும் போய் கொஞ்சம் தூங்கி எழும்பு”
அவர் கூறிவிட்டு செல்ல இவள் வேறுவழியின்றி அறைக்குள் நுழைந்தாள்.
அங்கு அக்ஷரன் கால்களை ஆட்டிக் கொண்டு மொபைல் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளோ தயங்கிக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
என்ன செய்வது என்றுத் தெரியவில்லை.
வெளியே போய் இருக்க முடியாது அத்தை வேறு ஓய்வெடுக்க சொன்னார்.
அமைதியாக அங்கு நின்றுக் கொண்டிருந்தவளைக் கடைக்கண்ணால் பார்த்தான் அக்ஷரன்.
“என்ன ஆர்மில சேரப் போறியா”
அவன் கேட்க இவள் விழித்தாள்.
“எனக்கு தண்ணி கொஞ்சம் கொண்டு வந்து கொடுக்குறியா”
அவன் கேட்க தலையை ஆட்டியவள் வெளியே சென்று தண்ணீர் கிளாஸ் ஒன்று எடுத்துக் கொண்டு அவனுக்கு அருகில் வரவும் அவன் காலை மடக்கவும் சரியாக இருந்தது.
அதில் தடுக்கியவள் எதிர்பாரா விதமாக அவன் மேலே விழுந்தாள்.
அவளின் கையில் இருந்த தண்ணீர் கிளாஸும் அவர்கள் மேல் கொட்டியது.
அவள் அவன் மேல் பஞ்சுப் பொதியாக விழவும் அவனது கையில் இருந்த மொபைலில் மியூசிக் செட்டிலிருந்து பாடல் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
உன் கருவிழியில் விழுந்தேன் மறுமுறை பிறந்தேன் உன்னால் எனையே மறக்கிறேன்
எனது கனவில் தினம் தினம் உனை நான் ரசித்தேன் விழித்திட அன்பே மறுக்கிறேன்
உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம் என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும் நீ திருடி கொண்டாயோ
உலகின் அல்லி பூக்களின் அரசியோ உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ உன் மகுடம் நான்தானோ
மயங்குகிறேன் மயங்குகிறேனா உன் அருகில் தயங்குகிறேனே நான் பெண்ணானதேனோ உன் கை சேரத்தானோ
உணருகிறேன் உணருகிறேனா உன் அழகில் உலருகிறேனே நான் ஆணானது ஏனோ உன் உயிர் சேரத்தானோ
ஓ பெண் நிலவே மறையாதே என் காதல் என்றும் மாறாதே
என் உறவே பிரியாதே என் ஆருயிரே…
யார் இவளோ அந்த பிரம்மன் கவிதை குரலோ
நீ ரசிகன் என்னை படிக்க வந்ததென்ன உன் இதழோ
உன் கருவிழியில் விழுந்தேன் மறுமுறை பிறந்தேன் உன்னால் எனையே மறக்கிறேன்
எனது கனவில் தினம் தினம் உனை நான் ரசித்தேன் விழித்திட அன்பே மறுக்கிறேன்
உன் அருகினில் வாழ்வது சுகம் சுகம் என் இருதயம் உருகுதே அனுதினம்
இந்த பெண்ணின் வெட்கம் அனைத்தையும் நீ திருடி கொண்டாயோ…
உலகின் அல்லி பூக்களின் அரசியோ உன்னை தாங்கும் நிலம் நானோ
தினமும் என்னை ஆளும் அரசனோ உன் மகுடம் நான்தானோ
****
இரவும் நால்வரும் சாப்பிட்டனர்.
நேத்ராவோ அக்ஷரனது முகத்தை மறந்தும் கூட பார்க்கவில்லை.
ஆனால் அக்ஷரனது பார்வையோ அவளில் இருந்து மீளவில்லை.
இதை அவனது பெற்றோர்கள் கண்டும் காணாதது போல் இருந்தனர்.
சாப்பிட்டு முடிந்து தேவகியும் ஞானவேலும் உறங்குவதற்கு அறைக்குள் நுழையப் போக.
தேவகியின் அருகில் வந்த நேத்ரா அவரது கைகளைப் பிடித்துக் கொண்டே.
“அத்த இன்னைக்கு நா உங்ககூட படுக்குறேனே”
கெஞ்ச தேவகி புன்னகைத்தார்.
திருமணத்திற்கு முன்னைய இரவு வரை அவருடன் அல்லவா அவள் உறங்கினாள்.
ஞானவேல் அறைக்குள் சென்றார்.
அக்ஷரனோ நேத்ராவை அழுத்தமாகப் பார்த்தான்.
“மக்கு பொண்ணு இப்போ தான் உன் புருஷன் இருக்கான்ல அவன்கூட போய் படு கண்ணு”
அவளது தலையில் தட்டி தேவகிக் கூறினார்.
“இல்ல அத்த உங்ககூட படுக்கனும் போல இருக்கு”
அவள் கெஞ்ச அவளை அழுத்தமாகப் பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்தான் அக்ஷரன்.
“அங்க பாரு உன்னோட புருஷன் போய்ட்டான் நீயும் போய் படுமா”
கூறியவர் புன்னகைத்துக் கொண்டே அறைக்குள் செல்ல.
திக்குத் தெரியாத இடத்தில் மாட்டிக்கிட்டது போல் பயந்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் நேத்ரா அக்ஷரன்.
******
தொடரும்..❤
💜அஷு💜