அத்தியாயம் 20
நேத்ரா தயங்கிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள்.
அவனோ அவள் உள்ளே வருவதைக் கண்டும் காணாதது போல் டீசேர்ட்டை கலற்றி விட்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
இவள் தான் அவனது முகத்தைப் பார்க்க முடியாமல் தலையை குனித்துக் கொண்டிருந்தாள்.
சற்று முன்னர் நடைபெற்ற நிகழ்வு நினைவலையில் வந்து மோத அவளை அறியாமலே அவளது கன்னங்கள் சிவப்பேறியது.
அவனது மேல் அவள் விழ இவன் அவளது முதுகை சுற்றிக் கைப்போட்டான்.
விழுந்ததில் அவளது இதழ் அவனது முதல் இரண்டு பட்டன்களும் திறந்து விடப்பட்டிருந்ததால் தெரிந்த திரண்ட மார்பில் பதிந்தது யார் செய்த வினை.
அது தற்செயலாக நடைப்பெற்றது தான் என்றாலும் இருவரது விழிகளும் விரிந்தது என்னவோ உண்மை.
அவளது விழிகள் அதிர்ச்சியில் விரிய அவனது விழிகள் விரிந்ததுக்கான காரணம் அவனுக்கே வெளிச்சம்.
இவளோ ஒரு நொடி அதிர்ந்து மறுநொடி அவனில் இருந்து விலகப் பார்க்க அது முடியாமல் மீண்டும் அவனது மேல் வந்து விழுந்தாள்.
தன் மேல் பூக்குவியல் ஒன்றைப் போல் விழுந்தவளது முதுகை சுற்றி போடப்பட்டிருந்த அக்ஷரனது கரங்களோ இறுகியது.
இவளோ அவனது விழிகளை பார்க்க முடியாமல் தடுமாறி மீண்டும் ஒரு முறை அவனில் இருந்து எழப் பார்க்க எழ முடியாத படி அவனது கரங்கள் அவளை சுற்றியிருந்ததல்லவா??
“நா..நா போக”
வார்த்தைகள் வேறு வராமல் நேரம் பார்த்து சதி செய்தது காரிகை அவளுக்கு.
ஆடவனோ அவளில் இருந்து பார்வையை அகற்றவில்லை.
முழுவதுமாக அவளது உடல் அவன் மேல் படர்ந்திருந்தது.
தண்ணீர் துளிகள் வேறு அவனது முடியிலும் அவளது உடலில் சிறிதாகவும் கொட்டியிருந்தது.
அவனது முன்னுச்சி முடிக் கற்றையில் இருந்த ஓரிரண்டு நீர்த்துளிகள் அவளது கழுத்தில் இடம்பெயர்ந்து அதற்கும் கீழாக இடம்மாறியது.
அவனறியாமலே அவளை நெருங்கி வர இவளோ மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.
அவளது மிரண்ட விழிகள் ஆடவனுக்கு எதையோ உணர்த்த அவசரமாக அவளை சுற்றி போடப்பட்டிருந்த கைகளை எடுத்தான் அவளில் இருந்து.
அவன் கைகளை எடுத்தவுடன் அவசரமாக எழுந்தவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து ஓடியே விட்டாள்.
இவனோ போகும் அவளது முதுகை வெறித்துப் பார்த்து விட்டு எழுந்து நின்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து
“உஃப்”
என மேலே பார்த்து உதட்டை குவித்து ஊதியவன் தலையை இடவலமாக ஆட்டினான்.
ஆட்டிய அவனது தலை முடியின் ஓரத்தில் இருந்த நீர்த்துளிகள் தெறித்தன.
இப்பொழுது அதை நினைத்தாலும் இவளுக்கு என்னவோ போல் இருந்தது.
அவனுக்கு முன்னால் நிற்கவே முடியவில்லை வெட்கம் பிடுங்கித் தின்றது பாவையவளை.
அவன் சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து வெளியே வர இவளும் அவசரமாக குளியலறைக்குள் சென்று முகம் கழுவி வந்தாள் உறங்குவதற்கு.
அவன் கட்டிலில் அமர்ந்து அழைப்பேசி பார்த்துக் கொண்டிருக்க இவள் அமைதியாக போர்வையை எடுத்து தரையில் போட்டு படுத்தாள்.
படுத்தாலும் தூக்கம் வரவில்லை.
ஏதேதோ நினைவுகள் மூடிய விழிகளுக்குள் வர இன்னும் இறுக மூடினாள் விழிகளை.
காற்றை தரும்
காடுகளே வேண்டாம்
ஓ தண்ணீர் தரும்
கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே
பூமி வேண்டாம்
தேவை எதுவும் தேவையில்லை
தேவை எல்லாம் தேவதையே
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று
சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று
யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை
நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே
வத்திகுச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில்
நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்
அக்ஷரன் மொபைலில் பாட்டை ஒலிக்க விட வருவதற்கு மறுத்த நித்ரா தேவி நேத்ராவைத் தழுவிக் கொண்டாள்.
அக்ஷரனோ தரையில் படுத்திருக்கும் நேத்ராவையே விழியகலாமல் பார்த்துக் கொண்டே உறங்கிப் போனான்.
அவனது இதழோ சற்று விரிந்திருந்ததை உற்று கவனித்திருந்தால் புரிந்திருக்கும்..!!
*****
அந்த பிரபலமான வைத்தியரின் அறையில் அமர்ந்திருந்தனர் அக்ஷரனும், ஶ்ரீஜாவும்.
அக்ஷரனோ காலுக்கு மேல் கால் போட்டு இடது காலின் தொடையில் தாளமிட்டுக் கொண்டிருந்தான்.
ஶ்ரீஜாவோ முகம்கொள்ளா புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.
“நா ரொம்ப ஹெப்பி அக்ஷரன் நீங்க என்ன கூட்டிட்டு வருவிங்கன்னு நா நம்பவே இல்ல ரொம்ப தேங்க்ஸ்”
உணர்ச்சிவசமாக அவள் பேசிக் கொண்டு செல்ல இடதுபுறமாக இதழ் வளைத்து புன்னகைத்தவன்
“அது என்னோட கடம”
அழுத்தமாக வெளிவந்தது வார்த்தைகள்.
அவளோ சந்தோஷமாக தலையசைத்தாள்.
சிறிது நேரத்தில் வைத்தியர் உள்ளே வந்தார்.
“ஹெலோ மிஸ்டர் அக்ஷரன்”
எனக் கூறிக் கொண்டு வந்தார்.
“ஹெலோ டொக்டர் பிரபு”
என எழும்பி கை குலுக்க ஶ்ரீஜாவோ புருவம் சுருக்கி அவ்வைத்தியரைப் பார்த்து விட்டு திரும்பி மேசையின் மேல் இருக்கும் வைத்தியர்ப் பெயர்ப் பலகையைப் பார்க்க அதிர்ந்தது அவளது முகம்.
“சின்ன சேர்ஜரி ஒன்னு அதான் லேட் ஸோரி”
அவ்வைத்தியர் மன்னிப்பை வேண்ட.
“நோ இட்ஸ் ஓகே ஷீ இஸ் ஶ்ரீஜா”
என ஶ்ரீஜாவை அறிமுகப்படுத்த பிரபு அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
ஶ்ரீஜாவோ புன்னகைக்க முடியாமல் கட்டாயத்தின் பேரில் புன்னகைத்தாள்.
“ஓகே இவங்களுக்கா செக்கப்”
“எஸ் இவங்களுக்குத் தான்”
“ஓகே வாங்க போலாம்”
பிரபு ஶ்ரீஜாவை அழைக்க.
“அ..அது இல்ல நா”
தடுமாறினாள்.
“என்ன ஶ்ரீஜா செக் பன்ன தானே போய்ட்டு வா பேபியோட கன்டிஷன் எப்பிடி இருக்குதுன்னு பாக்கனும்ல”
நக்கல் இருந்ததோ அவனது குரலில்.
“இல்ல அக்ஷரன்.. நா புக் பன்னின டாக்டர் வேற இவரு என்னோட டாக்டர் இல்ல”
அக்ஷரனிடம் சொன்னாள்.
“இஸ் இட் நானும் இந்த ஹாஸ்பிடல்ல தான் அப்பொய்மென்ட் போட்டேன் பிரபு என்னோட ஃப்ரன்டும் கூட அதான் பட் இட்ஸ் ஓகே இப்போ போய் இவன்கிட்ட செக் பன்னு அடுத்த தடவ நீ சொன்ன டாக்டர் கிட்ட போகலாம் செக்கப்க்கு”
“இல்ல.. இல்ல அவரு எனக்காக வைட் பன்னிட்டு இருப்பாரு அப்பொய்மென்ட் போட்டிருக்கேனே அதான்”
ஶ்ரீஜா இழுத்தாள்.
“ஓஹ்..”
புருவத்தை நீவி விட்டுக் கொண்டான்.
“இட்ஸ் ஓகே அக்ஷரன் நீங்க அந்த டாக்டர்கிட்டயே செக்கப்க்கு போங்க நோ ப்ரப்ளம்”
பிரபு கூறினார்.
“ஸோரி பிரபு.. என்னோட மிஸ்டேக் தான் வெரி ஸோரி”
“இட்ஸ் ஓகே அக்ஷரன் நோ ப்ரப்ளம்”
பிரபு கூற அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தனர் இருவரும்.
“அக்ஷரன் இன்னைக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு அதோட அந்த டாக்டர்கிட்ட அப்பொய்மென்ட் போட்ட டைம் கூட முடிஞ்சிருச்சு நாளைக்கு இல்லன்னா இன்னொரு நாளைக்கு செக்கப் வரலாமே”
ஶ்ரீஜா முகத்தினைத் துடைத்துக் கொண்டு கூற அவளைப் பார்த்தவன்.
“ஓகே உன்னோட முகத்துல கூட டையர்ட் வெளங்குது நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு பேபியோட ஹெல்த் கன்டிஷன் ரொம்ப முக்கியம்ல”
அவன் கூற அவனைப் பார்த்து புன்னகைத்தவள் அவனிடமிருந்து விடை பெற்றுச் சென்றாள் வைத்தியசாலையிலிருந்து.
அவள் போனதும் வெளியே வந்த பிரபு.
“உங்க கெஸ்ஸிங் கர்க்ட் அக்ஷரன்..”
கூற அவரைப் பார்த்து தலையசைத்தவனது இதழோ இடது புறமாக வளைந்தது.
******
நேத்ரா தனது அத்தையுடன் இணைந்து தன்னுடைய விருப்புக்குரிய மலரான ஓர்க்கிட்டிற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள்.
“அத்த நா கூட நம்பவே இல்ல இங்க ஓர்கிட் பூ இருக்கும்ன்னு அத பார்த்ததும் மனசுக்கு அப்பிடி ஒரு சந்தோஷம்”
நேத்ரா சிலாகித்துக் கொண்டுக் கூற தேவகி புன்னகைத்தார்.
“உன்னோட புருஷனுக்கு அப்போவே தெரியும் போல பொண்டாட்டிக்கு எது புடிக்கும் புடிக்காதுன்னு அதான் எல்லாம் உனக்கு புடிச்சது போல வாங்கி வெச்சிருக்கான்”
தேவகி பெருமையாகக் கூற அவரைப் பார்த்து புன்னகைத்தாள் நேத்ரா.
அது மகிழ்ச்சியின் வெளிப்பாடு என தேவகி நினைக்க அது வலியின் வெளிப்பாடு என நேத்ராக்கு மாத்திரமல்லவா தெரியும்..!!!
சிறிது நேரம் பல்கணியில் நின்று பேசிக் கொண்டிருக்க அறைக்குள் இருந்த நேத்ராவின் அழைப்பேசி அதிர்ந்து தனது இருப்பிடத்தை உணர்த்தியது.
“அத்த இருங்க”
எனக் கூறியவள் துள்ளியபடி ஓடினாள் அறைக்கு.
மேசையின் மேல் இருந்த அழைப்பேசியை கையில் எடுத்தவளது புருவங்களோ இடுங்கியது யோசனையில்.
அழைப்பு வந்தது என்னவோ அறியாத எண்ணில் இருந்து தான்.
அழைப்பை ஏற்க பயமாக இருந்தாலும் அக்ஷரன் வேறு எண்ணில் இருந்து அழைக்கிறாரோ என எண்ணி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.
மறுபக்கத்தில் என்ன கூறப்பட்டதோ இவளது கண்கள் கலங்கியது.
ஒரு ஐந்து நிமிடம் போல் பேசியவள்.
இறுதியில் போலியாகப் புன்னகைத்து.
“ரொம்ப சந்தோஷம்ங்க நீங்களும் அவரும் கூடிய சீக்கிரம் ஒன்னு சேருவிங்க”
தொண்டை அடைத்தது ஆனாலும் கூறினாள்.
கண்களிலிருந்து வழியும் கண்ணீரை புறங்கையால் துடைத்தாலும்..
துடைக்கத் துடைக்க வந்துக் கொண்டே இருந்தது கண்ணீர்.
பின் அழைப்பேசியை வைத்தவள் அதை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
கதறி அழ வேண்டும் போல் இருந்தது ஆனாலும் முடியவில்லை அழும் சத்தம் வெளியே கேட்டால் அத்தையை சமாளிக்க வேண்டி வருமே என எண்ணியவள் கையால் வாயை மூடிக் கொண்டு அழுதாள்.
“எதுக்கு அழுற அவரோட கடமைய அவர் செய்றாரு அதோட நீ சந்தோஷப்படனும்”
மனசாட்சி சமாதானப்படுத்துறேன் என்றப் பெயரில் இன்னும் காயத்தை கிளறி விட்டது.
“ம்ம் எனக்கு ரொம்ப சந்தோஷம்”
கூறி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாலும் இன்னும் பீறிட்டுக் கிளம்பியது கண்ணீர்.
முடியவில்லை அவளால் குளியலறைக்குள் ஓடியவள் தண்ணீரைத் திறந்து விட்டுக் கொண்டு கதறி அழுதாள்.
அந்தத் தண்ணீரைப் போல் இவளது கண்ணீரும் கரைந்து சென்றது யாரும் அறியா வண்ணம்..!!!
******
தொடரும்..❤
💜அஷு💜