அத்தியாயம் 21
குளியலறைக்குள் சென்றவள் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
எதற்கு அழுகின்றோம் என தெரியவில்லை அவளுக்கு ஆனால் அழுகை வந்தது.
தண்ணீரால் முகத்துக்கு அடித்தவள்.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.
கண்ணீர் வற்றாத கண்கள்.
அழுததினால் சற்று சிவந்து போன மூக்கு.
மூக்கில் ஒய்யாரமாக இருக்கும் மூக்குத்தியும் கண்ணீராலோ தண்ணீராலோ எதுவோ ஒன்றினால் மினுங்கியது.
உலர்ந்த உதடுகள் இறுக மூடியிருந்தது.
அவளைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு இன்னும் அழுகை முட்டியது.
“எப்பிடியும் நீ அவங்களுக்கு பொருத்தமில்ல..”
மனசாட்சி அடித்துக் கூறியதை இவளும் ஏற்றுக் கொண்டாள்.
“ஆமா நா அவங்களுக்கு பொருத்தமில்ல அவங்களோட தகுதிக்கு நா கொஞ்சம் கூட ஏத்தவ இல்ல அவங்க அந்த ஶ்ரீஜாகூட தான் சேரனும் ஏன்னா அவங்க தான் அவருக்கு பொருத்தமானவ. அதோட அவரோட வாரிச அவங்க தான் சுமக்குறாங்க..இனி அவரு அவங்க மேல அன்பா இருக்குறது ஒன்னும் குத்தமில்லையே”
தனக்கு தானேக் கூறிக் கொள்ள கண்ணீர் மிதந்தது கண்களில்.
“அப்போ இந்த அழுக எதுக்கு”
மனசாட்சி கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை.
“தெரியலையே”
வாய் விட்டேக் கூறினாள்.
முகத்துக்கு தண்ணீர் அடித்துக் கழுவி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள்.
“என்னடா யாரு ஃபோன்ல”
தேவகி ஞானவேலுக்கு காஃபியைக் கொடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்த நேத்ராவிடம் கேட்டார்.
“அது.. தெரியல அத்த யாரோ தெரியாத நம்பர்ல இருந்து”
கூறி விட்டு சமயலறைக்குள் நுழைந்தாள்.
தேவகியும் சென்றார் சமயலறைக்கு.
பகல் உணவை சமைப்பதற்கு.
பகல் உண்ணுவதற்கு வீட்டிற்கு வந்தான் அக்ஷரன்.
நேத்ராவோ அவனை பார்க்கவே இல்லை.
முன்னர் வெட்கத்தில் அவனைப் பார்க்காமல் இருந்தவள் இப்பொழுது என்னவென்று தெரியாத காரணத்தினால் அவனைத் தவிர்த்தாள்.
அதை அவன் உணர்ந்தாலும் ஒன்றும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்தான்.
இவளோ சமயலறையை சுத்தம் செய்து விட்டு அறைக்குள் வந்தாள் அவனோ மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
“ஆமா அந்த லொக்கேஷன் ஓகேயா. ம்ம் அக்ரிமன்ட்ல சைன் பன்னனும். ஓகே பார்க்கலாம்”
பேசி விட்டு ஃபோனை வைத்தவன் அங்கு இவனிடம் ஏதோ பேசுவதற்கு தயங்கி நிற்கும் நேத்ராவை புருவம் உயர்த்தி பார்த்தான்.
“என்ன சொல்லனும்”
அவனாகவே கேட்டான்.
“அது.. ஶ்ரீஜா ஃபோன் பன்னியிருந்தாங்க நீங்க அவங்கள செக்கப்க்கு கூட்டிட்டு போனிங்கன்னு சொன்னா ரொம்ப சந்தோஷம்”
அவள் கூற மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டியவன் அவளையே தலை சாய்த்து அழுத்தமாகப் பார்த்துக் கொண்டு இருந்தானே தவிர எதுவும் பேசவில்லை.
“அதோட அவங்க இப்போ இருக்குற நிலமைல உங்கள அதிகமா தேடுவாங்க”
அவள் தலையை குனித்துக் கொண்டுக் கூறிக் கொண்டே செல்ல
“அப்போ நா அவங்க வீட்டுக்குப் போகவா இல்ல அவங்கள இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வரவா”
அவன் கேட்க பட்டென தலை உயர்த்தியவள்.
“இப்போ.. எப்பிடி அத்த மாமா இருக்காங்களே”
அப்பாவியாக அவனிடமே கேட்டாள் அவன் மனையாள்.
இரண்டு கைகளாலும் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டவன் அவளை அழுத்தமாகப் பார்த்து விட்டு அமைதியாக சென்று கட்டிலில் படுத்தான்.
அவளுக்குத் தான் புரியவில்லை.
“அப்போ அவங்களுக்கும் ஶ்ரீஜாவ இங்க கூட்டிட்டு வர ஆச இருக்கு போல”
அவள் நினைக்கவே மனம் என்னவோ போல் ஆகியது.ஆனால் என்னவென்று தெரியவில்லை. கண்கள் கலங்க கண்ணை சிமிட்டி கண்ணீரை உள் இழுத்தவள் பெருமூச்சொன்றை விட்டு அறையில் இருந்து வெளியேறினாள்.
அக்ஷரனோ கை முஷ்டியை இறுக மூடி கட்டில் மெத்தைக்குக் குத்தினான்.
நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டவன் கட்டிலில் சாய்ந்தமர்ந்தான்.
அவனது முகத்திலோ யோசனை ரேகைகள்.
***** *** ***
இரவு உணவின் போது நால்வரும் அமைதியாக சாப்பிடி ஞானவேல் அவ்வமைதியை தகர்த்தார்.
“நாளைக்கு காலைல ஊருக்குப் போகனும்”
பொதுவாக கூற தேவகி அவரை யோசனையாக அவரைப் பார்த்தார்.
“ஐயோ மாமா வந்து ரெண்டு நாள் கூட ஆகல்ல இன்னும் ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு போகலாமே”
முகத்தை சுருக்கிக் கொண்டு கெஞ்ச அக்ஷரனோ விழியை நிமிர்த்தி ஒரு தடவை அவளைப் பார்த்து விட்டு மீண்டும் தட்டில் பார்வை பதித்து நிதானமாக சாப்பிட்டான்.
“இல்ல ராசாத்தி நாளைக்கு வயலுக்கு உரம் வருது நா அங்க கட்டாயம் இருக்கனும் அதனால நாளைக்கு காலைல ஊருக்குப் போகனும்”
அவர் கூற பரிதாபமாக அத்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
“அப்போ அத்த தங்கிட்டு வரட்டுமே”
“இல்ல கண்ணு உங்க மாமாக்கு வெளி சாப்பாடு எதுவும் ஒத்துக்காது அதோட வீட்டுல வேலை பாக்குற வள்ளியும் பொண்ணோட பிரசவத்துக்கு ஊருக்கு போய் இருக்கா நானும் போகனும்டா இன்னொரு நாள் வந்து வாரக்கணக்குல தங்கிட்டு போறோம்”
தேவகி சமாதனமாகக் கூற தலை அசைத்தாலும் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை அவளது வாடிப் போன முகமே உணர்த்தியது.
இத்தனைக்கும் அக்ஷரன் எதுவும் பேசவில்லை.
சாப்பாடு ஒன்றே எனக்கு முக்கியம் என்பது போல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டான்.
“இவங்களாச்சும் சொல்லலாமே அத்தைக்கும் மாமாக்கும் தங்கிட்டு போக சொல்லி என்னமோ சாப்பாட்ட கண்ணால பார்க்காதது போல அப்பிடி சாப்ட்றாரு”
மனதால் அவனை அர்ச்சித்துக் கொண்டிருக்க தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்து புருவத்தைத் தூக்கி என்ன என்று கேட்டான் அவளது கணவன்.
மனதுடன் பேசிக் கொண்டு அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் அவ்வாறு பார்ப்பான் என கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
திரு திருவென விழித்தபடி அவனைப் பார்த்து தலையை இடவலமாக ஆட்ட அவனோ தோளை உலுக்கிக் கொண்டு மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
இவளுக்கு அப்பொழுது தான் நின்ற மூச்சு மீண்டும் வந்தது.
*** **** ****
மறுநாள் காலை தங்களது ஆடைப் பையுடன் தேவகியும் ஞானவேலும் வரவேற்பறையில் இருந்தனர் ஊருக்கு கிளம்புவதற்குத் தயாராகி.
“மாமா நீங்க இன்னைக்கு ராத்திரி இல்லன்னா நாளைக்கு காலைல வாங்க அத்த இருக்கட்டும்”
நேத்ரா ஞானவேலிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
“இல்லடா இன்னும் நெறைய வேல இருக்கு இன்னொரு நாளைக்கு கண்டிப்பா வந்து தங்கிட்டு தான் போவோம்”
ஞானவேல்க் கூறினார்.
“சத்தியமா”
அவரிடம் கையை நீட்டி சிறு பிள்ளைப் போல் சத்தியம் கேட்க புன்னகைத்துக் கொண்டே அவளது கைக்கு மேல் தன் கையை வைக்க இவளும் புன்னகைத்தாள்.
“ஜாக்கிரதையா இருடா கண்ணு”
என நேத்ராவிடம் கூறிய தேவகி அக்ஷரனிடம் திரும்பி.
“அவள பத்தரமா பார்த்துக்க சின்ன பொண்ணு உன்னோட முரட்டுத்தனத்த அவக்கிட்ட காமிக்காதே ஏதாச்சும் தப்பு பன்னினால்ன்னா எடுத்து சொல்லு புரிஞ்சிப்பா அவகூட அன்பா இரு”
ஆயிரம் அறிவுரைகளை அன்பு மகனிடம் அள்ளித் தெளித்தார் அந்த அன்னை.
தனது தாய் சொன்னவற்றிற்கு தலையை அசைத்தாலும் பார்வை என்னவோ நேத்ராவிடம் தான்.
அவனது பார்வையை உணர்ந்து தான் என்னவோ அவன் பக்கம் திரும்பவே இல்லை.
ஞானவேலோ அக்ஷரனுக்கு அருகில் வந்தார்.
அவன் அவரை பார்க்க
“மருமகள நல்லா பார்த்துக்க”
அவர் கூற தலையசைத்தவன் அடுத்த நொடி அவரை அணைத்துக் கொண்டான்.
அவரும் அவனை அணைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
பின் விலகியவன்.
“ஸோரிப்பா”
அவன் கூற அவர் தலையசைத்து புன்னகைத்தார்.
அவனும் லேசாகப் புன்னகைத்தான்.
நேத்ரா தான் இருவரையும் விழி விரித்துப் பார்த்தாள் தேவகியோ புன்னகை முகமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
“சரி போய்ட்டு வாரோம்”
நேத்ராவின் தலையை வருடி விட்டு அவர் கூற தேவகியும் அக்ஷரனையும் நே்ராவையும் அணைத்து விட்டு விடைப்பெற்றுச் சென்றார்
அவர்கள் வீட்டிலிருந்து சென்றதுமே நேத்ராவினது கண்கள் கலங்கியது.
தாய்க்கு தாயாக,தந்தைக்கு தந்தையாக அனைத்து விதத்திலும் பாசத்தைக் காட்டி வளர்த்தவர்கள் ஆயிற்றே.
“கெளம்பு போகனும்”
அக்ஷரன் கூற திரும்பி அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
“எங்க போகனும்”
“வேலைக்கு ஏன் நியாபகம் இல்லையா”
அவன் புருவம் உயர்த்திக் கூற இவள் நெஞ்சில் கை வைத்து அவனை மிரட்சியாகப் பார்த்தாள்.
“போ போய் ரெடியாகிட்டு வா இன்னைக்கு ஷூட்டிங் இருக்கு”
அவன் கூற முடியாது எனக் கூற வந்தவள்
“இல்ல அவங்க சொன்னது போல இனிமேலாச்சும் தண்டச் சோறு சாப்பிடாமா நானே சம்பாரிச்சு சாப்டனும்”
மனதால் நினைத்தவள் அமைதியாக சென்றாள் தயாராகுவதற்கு.
இவன் ஸோபாவில் அமர்ந்து மொபைல் பார்த்துக் கொண்டிருக்க ஐந்து நிமிடங்களில் தயாராகி வெளியே வந்தாள் நேத்ரா.
வெள்ளை நிறத்தில் பச்சை நிற அலங்காரத்தில் அழகிய சுடிதார் ஒன்றை அணிந்து அவள் வர தலையசைத்துக் கொண்டே எழுந்தவன் முன்னே செல்ல அவனைப் பின்த் தொடர்ந்து இவளும் சென்றாள்.
காரை ஸ்டார்ட் செய்தவன் காரின் ப்ளேயரில் பாடலை ஒலிக்க விட்டான்
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு…
வாழ்வின் எல்லை சென்று…
ஒன்றாக வாழலாம்….
ஆயுள் காலம் யாவும்…
அன்பே நீயே போதும்….
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்…
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…
என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….
என் வானம் நீ…
என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி…
என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….
என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி….
ஓ….
நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்….
தாய் மொழி போலே
நீ வாழ்வாய் என்னில்…
உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே
உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே
என்னை உன்னில்…
தாமதமாய்…
உன்னை கண்ட பின்னும்
தாய் மடியாய்…
வந்தாய் நான் தூங்கவே…
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்…
உன் தேவையை
நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்…
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்…
உன் பாதியும்
என் மீதியும்
ஒன்றே தான்
என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்….
சாலை ஓர பூக்கள்
சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை
பெண்ணே நாளும்
வாழலாம்….
ஓ நீயும் நானும் அன்பே…
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்…
என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….
என் வானம் நீ
என் பூமி நீ என் ஆதி
அந்தம் நீயடி….
என் பாதை நீ
என் பாதம் நீ நான்
போகும் தூரம் நீயடி….
என் வானம்
நீ என் பூமி நீ என்
ஆதி அந்தம் நீயடி….
ஓ நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக் கொண்டு
வாழ்வின் எல்லை
சென்று ஒன்றாக வாழலாம்….
பாடல் முடியவும் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
இவள் கார் நின்ற பின் கேள்வியாக அவனைப் பார்க்க அவனும் அவளைத் தான் பார்த்தான்.
“இறங்கு”
அவன் கூற “ஙே” என விழித்தாள்.
“நீங்க”
“நீ தானே வேலைக்குப் போற நா எதுக்கு நீ மட்டும் போ”
அவன் கூற அதிர்ந்தாள்.
“இல்ல..”
தலையசைத்தாள்.
“ப்ச் குயிக்கா இறங்கு எனக்கு வேற வேல இருக்கு”
அவன் கொஞ்சம் காட்டமாகக் கூற அவனது கர்ஜிக்கும் குரலுக்குப் பயந்தவள் தயங்கிக் கொண்டே இறங்கினாள் காரை விட்டு.
இவள் இறங்கிய அடுத்த நொடி கார் சென்றது.
இவளோ போகும் காரை கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தனித்து விடப்பட்ட உணர்வு.
கைகளைப் பிசைந்துக் கொண்டு அவ்விடத்தை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள் பயந்து போன முயலக்குட்டி ஒன்று போல் விழிகளை உருட்டிக் கொண்டு..!!
**** ***** ****
தொடரும்..❤
💜அஷு💜