அத்தியாயம் 22

அத்தியாயம் 22

அவன் எங்கு விட்டுச் சென்றானோ அங்கையே நின்று கொண்டிருந்தாள் நேத்ரா.

கண்கள் கலங்கி அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

இதழ்க் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.

இருந்தும் இரு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் கன்னத்தை நனைத்தன.

“இப்போ என்ன பன்றது எங்க போறது யாரப் பாக்கனும்”

மனதால் நினைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே கையைப் பிசைந்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள்.

“நேத்ரா”

என்ற குரல் வர குரல் வந்த திசையினைத் திரும்பிப் பார்த்தாள்.

அங்கு இருபத்தி ஐந்து வயதைக் கடந்த வாலிபன் ஒருவன் புன்னகைத்துக் கொண்டு இவளைப் பார்த்துக் கொண்டிருக்க பதில்க் கூட புன்னகைக்காமல் அவனையே மிரட்சியாகப் பார்த்தாள் நேத்ரா.

“ஹப்பா நீ தான் நேத்ரா ஓகே”

அவன் புன்னகைத்துக் கொண்டுக் கேட்க மிரட்சியுடனே தலையை ஆம் என அசைத்தாள்.

“அதான் புரிஞ்சிடுச்சே உன்னோட இந்த பார்வையே நீ தான் நேத்ரான்னு புரிய வெச்சிச்சு”

அவன் கூறி புன்னகைக்க இவள் இன்னும் அவனை அதே பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய்.. நா யாருன்னு உனக்குத் தெரியாதுல்ல நா தான் தர்ஷன்”

எனக் கூற இப்பொழுது தான் கொஞ்சம் ஆசுவாசமடைந்தவள் சிறிதாக இதழ் விரித்துப் புன்னகைத்தாள் அவனைப் பார்த்து.

“பார்ர்ரா உனக்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா”

அவன் கேட்க இவள் எதுவும் பேசவில்லை புன்னகைத்தாள்.

“சரி வா உள்ள போகலாம்”

அவன் கூறி உள்ளே போக அவனுக்குப் பின் திரும்பி பின்னால் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள்.

அவ்வளவு நேரமும் அவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அக்ஷரன் அவள் உள்ளே சென்றதும் தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றான் அவளறியா வண்ணம்.

உள்ளே சென்ற நேத்ராவோ அவ்விடத்தை அதிசயமாகவேப் பார்த்தாள்.

படம் எடுப்பதற்கு தயாராக இருந்தது அவ்விடம்.

சண்டைக் காட்சி ஒன்று எடுப்பதற்கு ஏற்றவாறு அரைவாசி கட்டி விடப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் படக்குழுவில் காணப்படுவோர் குழுமியிருந்தார்கள்.

அனைவரும் தங்களுக்கு உரிய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் தலையை நிமிர்த்தி இவளைப் பார்த்து விட்டு தங்களது வேலையைத் தொடர்ந்தனர்.

இவள் தான் முதல் தடவையாக படம் எடுப்பதை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“ஹேய்.. நேத்ரா இங்க வா”

தர்ஷன் அழைக்க அமைதியாக அவனுக்கு அருகில் போய் நின்றுக் கொண்டிருந்தான்.

அவனோ எதோ தாளை கையில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.

படத்தின் நாயகனாக இருக்க வேண்டும் சட்டை இன்றி பேன்ட்டுடன் அங்கு இருந்த கதிரையில் அமர்ந்திருக்க அவனுக்கு அருகில் ஒப்பனைக் கலைஞர் அவனுக்கு ஒப்பனை செய்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் பட நாயகியாக இருக்க வேண்டும் பாவாடை சட்டையில் ரெட்டை ஜாடைப் பின்னியிருக்க காலுக்கு மேல் காலை போட்டு ஆட்டிக் கொண்டே அங்கிருந்தவர்களை ‘அதை எடு இதை எடு’ என ஏவிக் கொண்டிருந்தாள்.

இன்னும் அங்கு ரவுடிப் பசங்களைப் போல் இருந்த ஆறு ஏழு தடிமாடுகளுக்கும் ஒப்பனை செய்துக் கொண்டிருந்தார்கள் ஒப்பனைக் கலைஞர்கள்.

இவள் அவற்றையே பிரம்மிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்க தர்ஷன் பேசியது கேட்கவில்லை அவளுக்கு.

“நேத்ரா”

முகத்துக்கு நேராக கையை ஆட்டி அவன் பேச அவன் புறம் திரும்பினாள் அவசரமாக.

“என்ன ஸர்”

பள்ளி மாணவி போல் வினவ அவன் புன்னகைத்தான்.

“ஸர் மோர் ஒன்னும் வேணாம் தர்ஷன்னே கூப்டு நீ போய் அங்கிருக்குற வாட்டர் பொட்ல்ல கொஞ்சம் எடுத்துக்கிட்டு வாரியா”

அவன் கேட்க தலையசைத்தவள் அவன் கூறிய இடத்திற்குச் சென்று தண்ணீர் போத்தலை எடுத்துக் கொண்டு வரும் போது ஒருவன் வேணும் என வந்து அவள் மேல் மோத கையில் இருந்த தண்ணீர் போத்தல் கீழே விழுந்தது.

“ஹேய் ஸோரி ஸோரி”

எனக் கூறியவன் அவள் குனிந்து தண்ணீர் போத்தலை எடுப்பதைப் பார்த்து தானும் அந்த தண்ணீர் போத்தலை எடுக்கக் குனிந்து அவளது கைக்கு மேல் தனது கையை வைக்க இவள் மிரட்சியாகப் பார்த்தாள்.

அதில் புன்னகைத்துக் கொண்டே கையை எடுக்க இவள் அவசரமாக எழும்பினாள்.

“நா இங்க அஸிஸ்டன்ட் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நீ என்ன”

அவன் கேட்க இவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகரப் பார்க்க.

“ஹேய் அப்போ உன்னோட நம்பரக் குடு”

அவன் கேட்க இவள் எதுவும் பேசாமல் அவனை முறைத்துப் பார்த்து விட்டுச் சென்றாள்.

“டேய் உன்னோட வால வெச்சிக்கிட்டு சும்மா இரு அந்த பொண்ணு தர்ஷன் ஸேருக்கு வேண்டப்பட்டவ போல”

அவனது நண்பன் வந்து கூற அவனைப் பார்த்து கண்ணடித்தவன்.

“செம்மையா இருக்காடா.. இங்க இந்த பெயின்ட் மூஞ்செல்லாம் பார்த்து பார்த்து புளிச்சு போச்சு அதான் இந்த பைங்கிளிய கரக்ட் பன்னலாம்ன்னு”

அவன் ராகம் இழுத்துக் கூற.

“நீயெல்லாம் பட்டா தான் திருந்துவ”

அவனது நண்பன் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“போடா போடா பொறாம புடிச்சவன் அவள கரக்ட் பன்னிக் காட்றேன்”

என சபதம் எடுத்தவன் திரும்பி நேத்ராவைப் பார்த்து விட்டுச் சென்றான்.

நேத்ரா தர்ஷனுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தாள்.

“நீ இதுக்கு முன்னாடி ஷூட்டிங்க்ஸ் பார்த்திருக்கியா”

தர்ஷன் கேட்க தலையை இடவலமாக ஆட்டினாள்.

“என்ன இன்னைக்கு மௌன விரதமா நீ பேசவே மாட்டியா எப்பிடி இவ்ளோ சைலன்ட்டா இருக்க என்னால எல்லாம் அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாமலும், அரமணித்தியாலத்துக்கு மேல சாப்டாமலும் இருக்க முடியாது”

அவன் கூறிய விதத்தில் இவளுக்கு புன்னகை வந்தது.

“அப்பிடி இல்ல பேசுவேன்”

அவள் மெதுவாகக் கூற.

“ஹப்பா உங்களுடைய திருவாயையைத் திறந்து விட்டீர்களே தேவி மட்டற்ற மகிழ்ச்சி”

அவன் மார்பில் கை வைத்து தலை குனித்து சொன்ன விதத்தில் இவளது இதழ் முழுதாக விரிந்தது புன்னகையில்.

“தர்ஷன் ஃபேன் எங்க இந்த பக்கம் திருப்பி விடு வியர்க்குது”

அவனது தந்தை தயாளன் கூற அவரைப் பார்த்து கடுப்பாக வாய்க்குள்ளால் ஏதோ முனகியவன்  அங்கிருந்த விசிறியை அவரது பக்கத்திற்குத் திருப்பி விட்டான்.

நேத்ரா அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கையில் பேனாவும் தாளையும் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒருவரிடம் எதைப் பற்றியோ வதாடிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அருகில் பல இலட்சங்கள் பெறுமதியான கெமாரக்கள் இருந்தது படப்பிடிப்பிற்காக.

“தர்ஷன் இந்த சீன் தான் இன்னைக்கு. இதக் கொண்டு போய் ஹீரோவோட டயலோக்ஸையும் மத்தவங்களோட டயலோக்ஸையும் சொல்லிக் கொடு”

அவனிடம் அந்த தாளை நீட்ட தலையசைத்துக் கொண்டே அதைப் பெற்றவன் நாயகனிடம் சென்றாள்.

போகும் முன் நேத்ராவிடம்.

“வா போகலாம்”

எனக் கூறி விட்டு செல்ல அவனைப் பின்த் தொடர்ந்து சென்றாள் நேத்ரா.

அவன் அங்கு கதிரையில் ஒப்பனையை முடித்து விட்டு அமர்ந்துக் கொண்டிருந்த படத்தின் ஹீரோவிடம் சென்றான்.

ஹீரோவுக்கு அருகில் அவனுக்கு குடைப் பிடித்துக் கொண்டு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

“ஸர் நீங்க இந்த டயலோக் தான் இந்த சீன்ல பேசனும்”

தர்ஷன் கூறி அந்த ஹீரோவிற்கு அவன் பேச வேண்டியவற்றை சொல்லிக் கொடுக்க ஹீரோவும் கவனமாக கேட்டுக் கொண்டு மீண்டும் அதைக் கூற அதில் ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்டி மீண்டும் சொல்லிக் கொடுத்தான்.

இவ்வாறே ஒவ்வொருவரிடம் அவர்கள் பேச வேண்டியவற்றை சொல்லிக் கொடுத்து அவர்கள் அதை சொல்லும் போது ஏற்படும் தவறுகளை எடுத்துக் கூறி அவர்கள் சரியாக சொல்லும் வரை அருகில் இருந்து பொறுமையாக சொல்லிக் கொடுத்தான்.

அவன் சொல்லிக் கொடுக்கும் விதமும் அவர்கள் தவறாக சொன்னால் சிரித்துக் கொண்டே அவற்றைத் திருத்தும் அவன் விதத்தையே அவதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.

“ரொம்ப பொறும வேணும்ல”

நேத்ரா அவனிடம் கேட்க அவளைப் பார்த்து புன்னகைத்தவன்.

“ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப ரொம்ப”

அவன் அழுவது போல் கூற இவள் லேசாகப் புன்னகைத்தாள்.

பின் அந்த சண்டைக் காட்சியை படம் பிடித்தனர்.

நடிகன் விடும் சில தவறுகளால் மீண்டும் ஒரு முறை அக்காட்சி எடுக்கப்படும்.

இவ்வாறு ஒவ்வொருவரும் விடும் சில தவறுகளினாலும் அக்காட்சியை மீண்டும் முதலில் இருந்து எடுக்க வேண்டும்.

தயாளன் இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு தவறுகளை மீண்டும் எடுத்துக் கூறி அந்த காட்சியைப் படம் பிடித்தார்.

இவளோ அவற்றை எல்லாம் பொறுமையாக ஒவ்வொன்றாக அவதானித்துக் கொண்டிருந்தாள்.

பின் அன்றைய படப்பிடிப்பு முடிய நடிகர்கள் சென்றனர்.

“இப்போ கெளம்பனுமா”

நேத்ரா தர்ஷனிடம் கேட்க.

“சாப்ட்டு தான் போகனும்”

“இல்ல நா..”

அவள் மறுத்துக் கூற வர.

“இல்ல நொல்ல ஒன்னுமில்ல வா சாப்ட்டு போகலாம்”

அவன் கூறிச் செல்ல அவன் பின்னால் சென்றாள் நேத்ரா.

அங்கிருந்த அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.

“என்ன தர்ஷன் அஸிஸ்டன்ட்டா”

அங்கிருந்த பெண்ணொருத்தி தர்ஷனிடம் வினவ.

“ஆமா ஏன் இருக்கக் கூடாதா”

அவன் புன்னகைத்துக் கொண்டு கேட்க அப்பெண்ணும் புன்னகைத்து விட்டு சாப்பிட்டாள்.

நேத்ரா தர்ஷனிற்கு அருகில் அமர்ந்து இருக்க அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப் பட்டது.

இவளுடன் மோதியவன் இடைக்கிடையே இவளைப் பார்த்து புன்னகைக்க இவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

பின் அனைவரும் சாப்பிட்டு முடிந்தனர்

“நல்லா சாப்டியா”

தர்ஷன் கேட்க தலையசைத்தாள்.

“நேத்ரா இன்னைக்கு என்ன பாடம் கத்துக்கிட்ட”

தர்ஷன் வினவ.

“ம்ம் இந்த வேலைக்கு ரொம்ப பொறும வேணும்”

அவள் கூற இவன் புன்னகைத்தான்.

“ஓகே இப்போ எப்டி கிளம்புவ நா வேணா ட்ரொப் பன்னவா”

தர்ஷன் வினவ இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவளது கணவன் எதுவும் கூறவில்லையே.

யோசனையாக அவனைப் பார்க்க.

“சொல்லு எப்பிடி போவ”

அவன் மீண்டும் கேட்டான்.

“தெரியல”

உதட்டைப் பிதுக்கினாள்.

“நேத்ரா கம்”

மிகவும் பரிச்சயமான குரல் வர அவசரமாக பின்னால் திரும்பினாள்.

அங்கு அவளது கணவன் தான் கார்க் கதவின் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டு மார்புக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் என்னவென்று சொல்லத் தெரியாத உணர்வு ஒன்று வந்து மோதியது.

முகம் தன்னாலே பிரகாசித்தது.

“அட புருஷனப் பார்த்ததும் பல்ப் எரியுது முகத்துல”

தர்ஷன் கலாய்க்க அவனது குரலில் தன்னிலை அடைந்தவள் அவனைப் பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தாள்.

“வா போகலாம்”

அக்ஷரன் தலை அசைத்து அழைக்க இரண்டே எட்டில் காரை நெருங்கினாள்.

“என்ன மேடம் சொல்லிட்டு போக மாட்டிங்களா”

தர்ஷன் வினவ திரும்பினாள்.

“போய்ட்டு வாரேன்”

அவள் கூற தலை அசைத்தான்.

அக்ஷரன் கார்க் கதவைத் திறந்து விட ஏறி அமர்ந்தாள்.

அக்ஷரனும் தர்ஷனிடம் தலை அசைத்து விட்டு காரில் ஏறி காரை எடுத்தான்.

காரிற்குள் அமைதி நிலவியது.

அக்ஷரன் ஏதாவது பேசுவான் கேட்பான் என அடிக்கடி அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் நேத்ரா.

அவனோ எதுவும் பேசாமல் அமைதியாகக் காரை செலுத்தினான்.

“என்ன கேக்கனும்”

அவன் சாலையில் பார்வைப் பதித்துக் கொண்டு அவளிடம் வினவ.

“அது…  ஒன்னுமில்ல”

ஏதோ கூற வந்தவள் தயங்கி நின்றாள் திரும்பி ஒரு முறை அவளை அழுத்தமாகப் பார்த்தவன் மீண்டும் முன்னால் திரும்பிக் கொண்டான்.

“அவங்ககிட்ட சொல்வோமா.. அந்த பையன் நம்பர் கேட்டத வேணாம் அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க அதோட அவங்ககிட்ட சொன்னாலும் சொல்லல்லன்னாலும் எதுவும் ஆகிடாது”

அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அப்பார்ட்மென்ட்டை அக்ஷரனது கார் அடைந்தது.

அக்ஷரன் இறங்க நேத்ராவும் இறங்கினாள்.

இருவரும் அப்பார்ட்மென்ட்க்குள் நுழைய தேவிப்பிரியாவும் அபிலேஷும் அங்கு பார்க்கில் நடந்துக் கொண்டிருந்தார்கள்.

“ஏய் நேத்ரா ஹாய்”

தேவிப்பிரியா சத்தமாக சொல்ல குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள் நேத்ரா தேவிப்பிரியாவும் அபிலேஷும் நின்றுக் கொண்டிருந்தனர்.

தேவிப்பிரியாவைப் பார்த்து புன்னகைத்தவள் தன்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பவனை தவிர்க்க முடியாமல் அபிலேஷையும் பார்த்து புன்னகைத்தாள்.

திரும்பி தனது கணவனைப் பார்த்தாள் அவனோ பேன்ட் போக்கெட்டிற்குள் கையை விட்டுக் கொண்டு அபிலேஷை முறைத்தான்.

அவனும் இவனுக்கு நிகராக முறைத்துப் பார்த்தான்.

“எங்க போய்ட்டு வார”

தேவிப்பிரியா கேட்டாள்.

“அது.. வெளில”

நேத்ரா கூறினாள்.

“ஓகே ஓகே நீ டயர்ட்டா இருக்க போய் ரெஸ்ட் எடு பாய் அண்ணா”

என்று அக்ஷரனையும் பார்த்து புன்னகைக்க அவளைப் பார்த்து அக்ஷரனும் புன்னகைத்தான்.

பின் அக்ஷரனும் நேத்ராவும் உள்ளே சென்றனர்.

அக்ஷரன் வீட்டின் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே செல்ல இவளும் அவனுக்குப் பின்னால் சென்றாள்.

அக்ஷரன் அறைக்குள் நுழைந்து குளியலறைக்குள் சென்றான்.

இவளோ வரவேற்பறையில் அமர்ந்தாள்.

அவளது அழைப்பேசி அதிர்ந்தது.

எடுத்துப் பார்த்தாள் அவளது அத்தை தான் அழைத்திருந்தார்.

“ஹெலோ அத்த”

“ஹெலோ எப்பிடி கண்ணு இருக்க”

“நான் நல்லா இருக்கேன் அத்த நீங்க எப்போ போனிங்க பயணம் எப்பிடி சௌகரியமா”

அவளும் நலம் விசாரித்தாள்.

இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அழைப்பேசியை துண்டித்தவள் அக்ஷரன் அறையில் இருந்து வெளியே வரவும் இவள் அறைக்குள் நுழைந்து.

குளித்து விட்டு அறைக் கதவை நியாபகத்துடன் மூடி விட்டு ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

அக்ஷவன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான்.

கையில் ஜூஸ் கிளாஸ் ஒன்று இருக்க இவள் பல்கணி பக்கம் செல்லப் பார்க்க.

“இந்தா ஜூஸ்”

என அங்கிருந்த இன்னொரு கிளாசை நீட்ட அமைதியாக அதைப் பெற்றுக் கொண்டவள் அங்கு அமர்ந்து குடித்தாள்.

அவனோ அழைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருக்க இவளும் அமைதியாகக் குடித்து முடித்து விட்டு பல்கணிக்குச் சென்றாள்.

அங்கு இவளது வருகையை எதிர்ப்பார்த்து பூத்துக் குலுங்கியிருந்த ஓர்கிட் மலர்களுக்கு அருகில் குனிந்தவள்.

“இன்னைக்கு தெரியாதவங்ககூட எல்லாம் பழகினேன்”

புன்னகைத்துக் கொண்டுக் கூறினாள்.

“நல்லவங்களும் இருக்காங்க கெட்டவங்களும் இருக்காங்க.. நாம தான் பிரிச்சி பார்த்து பழகனும்”

தனக்குத் தானேக் கூறிக் கொண்டாள் போலும்..!!

பின் சிறிது நேரத்தில் எழுந்து உள்ளே சென்றாள்.

அக்ஷரன் இருக்கவில்லை அறைக்குள் போலும்..!!

அங்கிருந்த பேப்பரை எடுத்தவள் ஏதோ எழுதினாள்.

சிறிது நேரத்தில் அப்படியே தூங்கினாள் ஸோபாவிலே.

இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் கண் விழித்தாள்.

அறைக்குள் இருந்தாள் அதுவும் கட்டிலில்.

“நா எப்பிடி”

அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

அறைக்குள் அக்ஷரன் இருக்கவில்லை.

நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள முகத்தை துடைத்துக் கொண்டவள் அறையை விட்டு வெளியே சென்றாள்.

சமயலறையில் அக்ஷரன் சமைத்துக் கொண்டிருக்க அவனிடம் பேசவும் என்னவோ போல் இருந்தது.

“நா இங்க தானே தூங்கிட்டு இருந்தேன் எப்பிடி ரூம்ல”

அவள் மெதுவாக கேட்க நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்.

“உனக்கு தூக்கத்துல நடக்குற வியாதி இருக்கு போல”

அவன் கூற இவள் விழித்தாள்.

“உண்மையாவா”

“ம்ம் ஆமா அப்புறம் எப்பிடி ரூம்ல போய் படுப்ப”

அவன் கேட்க.

“ஆமால்ல இந்த நோய குணப்படுத்த முடியாதா”

அவள் அப்பாவியாகக் கேட்டாள்.

“ம்ம்.. யாரையாச்சும் கட்டிப்பிடிச்சிக்கிட்டுப் படுத்தா தூக்கத்துல நடக்க மாட்ட இல்லன்னா இப்பிடி தான் நடப்ப”

அவன் கூற 

“யாராக் கட்டிப்பிடிக்க”

அவனிடமே கேட்க அவன் தோளை குலுக்கினான்.

“வேற வைத்தியம் இல்லையா”

அவள் கேட்டாள்.

“எனக்குத் தெரிஞ்சி அது மட்டும் தான் வைத்தியம்”

அவன் கூறி விட்டு தனது வேலையை கவனிக்க.

“அப்போ ஊர்ல இருந்து அத்தைக்கு வர சொல்றேன்”

அவள் கூற நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்.

“சரி தான்”

தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டுக் கூறினான்.

சிறிது நேரத்தில் டைனிங் டேபளுக்கு சாப்பாட்டைக் கொண்டு சென்றவன் அவளைப் பார்க்க அவளும் வந்து அமர இருவரும் சாப்பிட்டனர்.

அவள் சாப்பிட்டு விட்டு எழ இவன் நிதானமாக சாப்பிட்டு விட்டு எழுந்தான்.

அவன் சென்று வரவேற்பறையில் அமர்ந்துக் கொண்டிருக்க இவள் சமயலறைக்குள் சென்று அனைத்தையும் சுத்தப்படுத்தினாள்.

பின் இவள் வெளியே வரவும் அவன் எழுந்து அறைக்குள் செல்லவும் சரியாக இருந்தது.

“என்னைய இந்த துப்பட்டாவால கட்டிப் போடுங்க”

அவள் துப்பட்டாவை நீட்ட இவன் அவளைப் பார்த்தான்.

“இல்ல அப்பே நா தூக்கத்துல நடக்க மாட்டேன்ல”

அவள்க் கூற அவளைப் பார்த்தவன் இதழ் கடித்தான்.

“தேவையில்ல நீ எங்கயும் போகாம நா பார்த்துக்குறேன் நீ படு”

அவன் கூற.

“உண்மையாவா”

“ம்ம்”

அவன் கூறவே தரையில் போர்வையை விரித்துப் படுத்தாள்.

அவனோ தலையை இருபக்கமாக ஆட்டிக் கொண்டே கட்டிலுக்குச் சென்று படுத்தான்.

அவளோ உலகில் உள்ள அனைத்து கடவுளிடமும் தூக்கத்தில் நடக்கக் கூடாது என வேண்டிக் கொண்டுப் படுத்தாள்.

இவன் அவளைப் பார்த்து வலதுபக்க இதழை வளைத்து விட்டு அவளையேப் பார்த்துக் கொண்டு உறங்கிப் போனாள்.

****

மறுநாள்க் காலையும் அதே படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் இறக்கி விட்டு முந்தைய நாளைப் போல் அக்ஷரன் செல்ல முந்தைய நாள் போல் பயமும்,தயக்கமும் சற்று நீங்கியிருக்க மெதுவாக உள்ளே சென்றாள்.

அவள் போகும் வரை அங்கே நின்றுப் பார்த்து விட்டு சற்று இதழ் விரித்துப் புன்னகைத்து விட்டுச் சென்றான் அக்ஷரன்.

இவள் உள்ளே சென்ற போது அனைவரும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தார்கள்.

“ஹாய் நேத்ரா”

தர்ஷனும் கூறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு வேலை செய்துக் கொண்டிருந்தான்.

இவள் அங்கு நின்றுக் கொண்டிருக்க பக்கத்தில் சென்ற இரு பெண்கள் பேசியது இவளுக்கும் கேட்டது.

“ஆமாடி நேத்து நைட் தான்”

ஒருத்திக் கூற.

“பாவம் தான் ஆனா அந்த அஸிஸ்டன்ட் மேக்கப் ஆர்டிஸ்ட் ஓவர் ஜொல்லு டி அவனுக்கு இது தேவ தான்”

“இருந்தாலும் பாவம்டி.. பைக்ல போகும் போது எக்ஸிடன்ட்டாச்சாம்.. எழுந்து நடப்பானா இல்லையான்னு டாக்டர்ஸ்க்கே தெரியாதாம்”

அப்பெண்கள் இருவரும் பேசியது முந்தைய நாள் தன்னுடன் பேசியவனைப் பற்றி தான் எனப் புரிந்ததும்.

அவனது தற்போதைய நிலையை எண்ணி வருத்தப்பட்டாள் அந்த இளகிய மனம் படைத்த மங்கை.

“பாவம் கடவுள் தான் அவங்கள குணப்படுத்தனும்”

கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் அவள்.

*****

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top