அத்தியாயம் 23
வழமையாக காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேத்ராவை அக்ஷரன் கொண்டு போய் விடுவான்.
அவள் மட்டும் இறங்கிச் செல்ல இவனோ அடுத்த நொடி வண்டியை எடுப்பான்.
“இறங்கி வந்தா கொறஞ்சா போய்டுவாங்க”
மனதுக்குள்ளால் தினமும் அவனுக்கு அர்ச்சிப்பவளுக்கு எங்கு தெரியப் போகிறது தர்ஷன் வந்து நேத்ராவிடம் பேசிய பின் தான் அங்கிருந்து செல்வான் அக்ஷரன் என்று.
பின் ஷூட்டிங் முடியவும் சரியாக நேரத்திற்கு வந்து நிற்பான் காரில்.
“இவங்களுக்கு எப்பிடித் தெரியும் நா வேற அவங்ககிட்ட ஷூட்டிங் இந்த நேரத்துல தான் முடியும்ன்னு சொல்லவே இல்லையே”
வழமை போல் அவனை ஆச்சரியமாகப் பார்ப்பாள் அவனது மனையாள்.
அவள் அறிய வாய்ப்பில்லையே அவளது கணவனுக்கு ஷூட்டிங் முடியவும் தர்ஷன் மெஸேஜ் ஒன்றைத் தட்டி விடுவது பற்றி.
அவளது கணவனது ஏற்பாடு அல்லவா அது என்று.
ஷூட்டிங் ஸ்பாட்டும் படப்பிற்கு ஏற்ப வேறுபடும்.
சில நேரங்களில் வெளி இடங்களில் படப்பிடிப்பு எடுக்கப்படும்.
இல்லையென்றால் பாதை போன்ற பொது இடங்களிலும் எடுக்கப்படும்.
அன்றும் அது போலவே நாயகியிடம் ஒருவன் தவறாக நடப்பது போலும் அதைத் தூரத்தில் இருந்து நாயகன் பார்ப்பதும்.
பின் நாயகி அங்கிருந்து அகன்றதும் தவறாக நடந்து கொண்டவனிடம் வந்த நாயகன் அவனை வெழுத்துக் கட்டுவதே அன்றைய படப்பிடிப்பு.
அதில் நடிப்பவர்களது சிறு சிறு தவறுகளால் மீண்டும் மீண்டும் அக்காட்சி எடுக்கப்பட்டது.
அங்கு தர்ஷனுக்கு அருகில் நின்றுக் கொண்டு அந்த காட்சியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
“இது என்ன லூசுத்தனமா இருக்கு ஹீரோயின்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா உடனே தூக்கிப் போட்டு மிதிக்கனுமா அந்த பையனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்ல”
நேத்ரா தன்பாட்டிற்கு தர்ஷனிடம் கூற திரும்பி அவளை அதிசயமாகப் பார்த்தான் தர்ஷன்.
அவனது பார்வையை உணர்ந்தவள் திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இல்ல இப்போ நல்லா பேசக் கத்துக்கிட்ட”
அவன் புன்னகைத்துக் கொண்டுக் கூற இவளும் புன்னகைத்தாள்.
ஆம் இங்கு வந்த சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக தனது தயக்கங்களை தகர்த்தி விட்டு தனது கூட்டிலிருந்து வெளி வந்தாள் நேத்ரா.
தர்ஷனிடம் தான் பேசுவாள் மற்றவர்களுடன் அவ்வளவாக அவளாக சென்று பேசுவதில்லை.
அவர்கள் ஏதாவது கேட்டால் பதில் சொல்லுவாள் அவ்வளவே..!!
“இப்போ சொன்னல அத போய் அதோ அங்க இருக்காரே என் அப்பன் தயாளன்கிட்ட சொல்லு”
தர்ஷன் அங்கே மைக்கை வைத்துக் கொண்டு ‘கட் கட்’
எனக் கத்திக் கொண்டிருந்த தயாளனைக் கைக் காட்ட.
“நா சொன்னா மாத்திடுவாரா”
நேத்ரா கேட்டாள்.
“சொல்லிப் பாரேன் மாத்துவாரா இல்லையான்னு பாக்கலாம்”
“ம்ஹூம் எதுக்கு நானே போய் திட்டு வாங்குறதுக்கா”
அவள் பின் வாங்க இவன் புன்னகைத்தான்.
“அதோட இந்த சீன் அவ்ளோ கேவலம் இல்ல பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்குறவன்கிட்ட கூப்ட்டு உட்கார வெச்சி கூல் ட்ரிங் கொடுத்து அட்வைஸ் பன்னுறது எல்லாம் வேஸ்ட். நாலு தட்டு தலைல தட்டி ரெண்டு கையையும் உடச்சிப் போட்டா திரும்ப பொண்ணுங்கள பார்க்கவே பயப்படுவான்”
தர்ஷன் சீரியஸாகச் சொல்ல நேத்ராவோ சலித்துக் கொண்டாள்.
“ஆனாலும் இன்னைக்கு கை கால உடஞ்சிருச்சுன்னா அவசரமா குணமாகுமா இல்லையே”
அவள் வருத்தப்பட்டாள்.
“ம்க்கும் சரி இப்போ உன்கிட்ட எவனாச்சும் தப்பா நடந்துக்கிட்டா உன் புருஷன் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாரா”
தர்ஷன் புருவம் உயர்த்த மின்னல் வெட்டியது போல் நினைவில் வந்தது அன்று அந்த விழாவில் ஒருவன் தனது கையைப் பிடித்ததும் பின் அக்ஷரன் விழா முடிந்ததும் சென்று அவனது கையை முறித்ததும் நினைவில் வர இவளறியாமல் ஏதோ ஒன்று இதயத்தில் வந்து மோதியது.
இதயம் இலகுவானது போல் இருந்தது.
“எனக்காககவா அப்பிடி பன்னியிருப்பாங்க”
நினைக்கவே இனித்தது ஆனால் மறுநொடியே அந்த இனிமை தொலைந்தது.
“நீ அப்பிடி நினைக்குறதே முட்டாள்த்தனம் அவர் என்ன உன்ன காதலிக்குறாரா ஒருத்தன் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா கோவப்பட்றதுக்கு”
மனசாட்சி நிதர்சனத்தை எடுத்துரைக்க அமைதியாகி விட்டாள்.
அவளது முகம் வாடியது..
“ஹேய் என்ன ஓஃபாகிட்ட”
தர்ஷன் வினவ அவனைப் பார்த்து புன்னகைத்தவள் எதுவும் பேசவில்லை.
ஷூட்டிங் முடிந்து வெளியே வரவும் அக்ஷரன் வந்து நின்றிருந்தான்.
இவள் அமைதியாக சென்று காரிற்குள் அமர அவனும் அமைதியாகக் காரை எடுத்தான்.
சிறிது தூரம் அமைதியாகச் சென்றவள் திரும்பி அவனது முகத்தைப் பார்த்தாள்.
அவனோ என்றும் போல் உணர்வு தொலைத்த முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருக்க இவள் அடிக்கடி திரும்பி அவளது முகத்தைப் பார்ப்பதும் முன்னால் திரும்புவதுமாக இருந்தாள்.
வழமை போல் அவனேக் கேட்டான்.
“என்ன கேக்கனும்”
அவன் கேட்கவே தயக்கமாக அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்.
“இல்ல அன்னைக்கு நீங்க அந்த ஹீரோவோட கைய ஒடச்சிங்க தானே எதுக்கு அப்பிடி பன்னினிங்க என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதுக்கா”
கடைசி வரியை வாய்க்குள் முனகினாலும் கேட்க வேண்டியவனுக்கு அது நன்றாகவே கேட்டது.
திரும்பி அவளது முகத்தைப் பார்த்தவன் ஆச்சரியமாக புருவம் இரண்டையும் உயர்த்தினான்.
“திடீர்ன்னு எதுக்கு கேக்குற”
அவள் கேட்ட கேள்விக்கு அவனும் பதில் கூறாமல் பதில் கேள்வி கேட்டான்.
அவள் இன்று நடைபெற்றவையும் தர்ஷன் கூறியவற்றையும் மறைக்காமல் கூறினாள்.
“ஓஓஓஹ்”
இடது புருவத்தை நீவி விட்டுக் கொண்டு அவன் அமைதியாகி விட இவள் தான் இன்னும் அவனது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் பதில் சொல்லவே இல்லையே”
அவள் மெதுவாக அவனிடம் மீண்டும் கேட்டாள்.
இரண்டு தோளையும் குலுக்கியவன்.
“அவனுக்கு நா கடன் குடுத்திருந்தேன் அத அவன் தரல்ல அதான் கைய ஒடச்சிட்டேன்”
அவன் சீரியசாக சொல்ல அவனது முகத்தில் பொய் சொல்வதற்கான அறிகுறியைத் தேடியவள் அப்படி ஒன்றே இல்லை என்பதை உணர்ந்து அமைதியாகி விட்டாள்.
அமைதியாக விழிகளை மூடி சாய்ந்தமர்ந்தவள்.
“எதுக்கு அவங்ககிட்ட கேட்ட நா தான் சொன்னேன்ல”
மனசாட்சிக் கூற எதுவும் பேசவில்லை அவள்.
இவனோ திரும்பி தன்னவளைப் பார்த்து விட்டு வலது பக்கமாக இதழ் வளைத்துப் புன்னகைத்தான் அவளது கணவன்.
****** ****** ********
அன்று அக்ஷரன் வெளியே சென்றிருக்க வீட்டிற்கு வந்திருந்தாள் தேவிப்பிரியா.
அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
“எப்பிடி போகுது ஷூட்டிங் ஸ்பாட்ல”
தேவிப்பிரியா வினவ.
“ம்ம் பரவல்ல போகுது பேபி என்ன சொல்லுது”
அவளது ஆறு மாத மேடிற்ற வயிற்றை தடவி விட்டுக் கொண்டேக் கேட்டாள்.
“ம்ம் சீக்கிரமா வெளில வரனுமாம்”
அவள் கூறி புன்னகைக்க நேத்ராவும் புன்னகைத்தாள்.
“உன்னோட அத்த வீட்ல இருந்து ஒருத்தரும் வரல்லையா”
நேத்ரா கேட்க அவ்வளவு நேரமும் புன்னகைத்துக் கொண்டிருந்த தேவிப்பிரியாவினது முகம் வாடியது.
அவளது வாடிய முகத்தைப் பார்த்த நேத்ரா.
“மன்னிச்சிடு நா சும்மா தான் கேட்டேன்”
அவள் தயக்கமாகக் கூற அவளைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்தவள்.
“நீ எதுக்கு மன்னிப்பு கேக்கனும் நீ சும்மா தான் கேட்டன்னு எனக்குத் தெரியும்டா.. நா சொன்னேன்ல அவரோட அம்மாக்கு முதல்ல இருந்தே என்னைய புடிக்காதுன்னு. அப்புறம் முழுமனசோட என்னைய ஏத்துக்கல்ல அபிலேஷோட பிடிவாதமும் அக்ஷரன் அண்ணா சொன்னதால தான் எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க அதோட அவங்களுக்கு இந்த ஸொஸைட்டில பெரிய ஸ்டேட்டஸ்.. அதனால தான் என்னைய போல ஒரு அனாதைய அவங்களோட வீட்டு மருமகள ஏத்துக்க விரும்பல்ல.. அப்புறம் அவங்களோட மகனுக்காகன்னு சொல்லி எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.. கல்யாணமாகின கொஞ்ச நாள் ஏதோ பேசனும்ங்குறதுக்காக என்கிட்ட பேசினாங்க.. அப்புறம் ஒவ்வொன்னா சொல்லிக்காட்டி கிடைக்குற நேரத்துல எல்லாம் என்னைய மட்டம் தட்டுவாங்க.. அனாத… பணக்காரன வளச்சிப் போட்டுட்டான்னு வீட்டு வேலைக்காரங்க முன்னாடி எல்லாம் அவ்ளோ கேவலமா பேசுவாங்க.. என்ன வீட்டு வேலைக்காரி போல தான் ட்ரீட் பன்னுவாங்க.. ஆனா அவங்களோட பையன்க்கு முன்னாடி எதுவும் காட்டிக்க மாட்டாங்க.. நானும் அபிலேஷ்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்.. அவங்களுக்கு அம்மான்னா அவ்ளோ புடிக்கும்… நா இத சொன்னா அம்மாக்கும் பையனுக்கும் இடைல தேவையில்லாம பிரச்சின வரும்ன்னு சொல்லல்ல.. அப்புறம் தான் நா ப்ரக்னட் ஆகினேன்.. அவ்ளோ சந்தோஷப்பட்டேன்.. நானும் அம்மாவாகிட்டேன் எனக்குன்னு இன்னொரு உறவு நினைக்கும் போது அவ்ளோ சந்தோஷம்.. ஆனா அந்த சந்தோஷத்தக் கூட கடவுள் நிலைக்க விடல்ல.. அவங்க… அவரோட அம்மாக்கு என் மூலமா அவங்களுக்கு வாரிசு வாரது புடிக்கல்ல… ஏதோ கருக்கலைப்பு மெடிசின நா குடிக்குற பால்ல போட்டு என்னோட… என்னோட. கொழந்தைய கருவுலையே அழிச்சிட்டாங்க..”
கூறியவள் கதறி அழுதாள்.
நேத்ரா திகைத்தாள்.
“ஏய்.. தேவி அழாதே”
கூறி அவளது தோளை ஆதரவாக அணைத்துக் கொண்டவளது கண்களும் கலங்கியது..
தேவிப்பிரியாவோ எவ்வளவு முடியுமோ அவ்வளவு கதறினாள்.
“என்..கொழ.. கொழந்த…”
கூறியவள் கதறி அழுதாள்.
சிறிது நேரம் அவளாகவே அழுகையை நிறுத்தியவள் விசும்பினாள்.
அவளது முதுகை நீவி விட்ட நேத்ரா அங்கிருந்த தண்ணீர் கிளாசை அவளிடம் நீட்ட அதை மறுக்காமல் பெற்றுக் கொண்டவள் ஒரு மூச்சாகக் குடித்து முடித்தாள்.
“இப்போ எதுவும் சொல்லாதே போதும்”
தேவிப்பிரியாவை அணைத்து நேத்ராக் கூற மறுப்பாகத் தலையசைத்தவள்.
“ம்ஹும் இல்ல நா சொல்லிட்றேன் அப்போ தான் மனசு கொஞ்சம் லேசா இருக்கும்”
எனக் கூறியவள் மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.
“இந்த விஷயம் எனக்குத் தெரியாது.. அந்த கரு என்னோட வயித்துலையே அழிஞ்சதும் அவ்ளோ அழுதேன்.. ஏன் எனக்கு மட்டும் இப்பிடி.. பொறக்கும் போதே அப்பா அம்மா இல்ல.. எல்லாத்துக்கும் சேர்த்து அன்பா பார்த்துக்குற புருஷன் கெடச்சா.. அவரோட அன்ப கூட முழுசா அனுபவிக்க விடாம அவங்க அம்மா தடையா இருந்தாங்க இப்போ எனக்குன்னு வந்த என்னோட இரத்த உறவு கூட எனக்கு இல்ல.. ரொம்ப விரக்தியாகிட்டேன்.. ரொம்ப அழுதேன்.. என்னப் பார்த்து அபிலேஷ் தான் ரொம்ப உடஞ்சி போய்ட்டாரு.. அவருக்காக பழையபடி இருக்க முயற்சி பன்னேன்.. கொஞ்சம் கொஞ்சமா பழையபடி இருக்கும் போது தான்.. ஒரு நாள் அபிலேஷ் வீட்டுக்கு வந்ததும் வராததுமா.. அவங்க அம்மாகிட்ட கத்திக்கிட்டு இருந்தாரு.. எனக்கு என்ன விஷயம்ன்னு தெரியல.. நா போய் அபிலேஷ தடுக்கப் பார்க்ககிட்ட தான் அவர் சொன்னாரு.. நம்ம குழந்தைய என்னோட அம்மா தான் கொன்னுட்டாங்கன்னு எனக்கு ஷாக் ஆயிடுச்சி…. அவங்க அப்பிடியும் பன்னுவாங்களான்னு.. அவங்ககிட்ட போய் கேட்டேன் எதுக்கு எந்த தப்பும் பன்னாத என்னோட குழந்தைய கொன்னுட்டிங்கன்னு.. அப்போ தான் அவங்களோட உண்மையான முகத்த அபிலேஷ் பார்த்தாரு.. என்கிட்ட அவ்ளோ தப்பா பேசினாங்க.. அது என் பையனோட குழந்தைன்னு எப்பிடி நம்புறது நீ தான் அனாதையாச்சே.. எவன்கூட.. ”
கூறும் போதே தேவிப்பிரியாவின் குரல் கமறியது.
நேத்ரா அவளது முதுகை தட்டிக் கொடுக்க அவளைப் பார்த்து புன்னகைத்தவள்.
“அப்புறம் அபிலேஷ்க்கு அப்பிடி கோவம் வந்துச்சு.. அவங்ககூட இனிமே இருக்க முடியாதுன்னு சொல்லி என்னைய கூட்டிட்டு வந்துட்டாரு.. நா எவ்ளவோ சொல்லிப் பார்த்தேன் அவங்ககிட்ட ஆனா கேக்குற நெலமைல அவரு இல்ல.. இப்போ கூட சொல்லுவேன் எனக்குத் தான் அவரு திட்டுவாரு.. அவங்க அப்பிடி நடந்துக்கிட்டத எதுக்கு என்கிட்ட மறச்சன்னு இன்னும் கோவப்பட்றாரு.. ஆனா அவர்கிட்ட எப்பிடி சொல்லி புரிய வைக்க.. அம்மாங்குற உறவு இல்லாதவங்களுக்குத் தான் புரியும்ன்னு.. அம்மா நல்லவங்களா இருந்தாலும் கெட்டவங்களா இருந்தாலும் அம்மா அம்மா தானே.. அதுவும் அவங்களுக்கு என்னைய தானே புடிக்காது.. அவங்க பையன்னா அவங்களோட உயிரு.. இப்போ கூட எனக்குத் தான் திட்டுவாங்க அவங்க பையன அவங்ககிட்ட இருந்து பிரிச்சிக் கூட்டிட்டுப் போய்ட்டான்னு.. இத்தனைக்கும் அபிலேஷ்க்குக் கூட அம்மான்னா அவ்ளோ பாசம்.. ஆனா அவங்களால ஏத்துக்க முடியல அவரோட குழந்தைய கொல்ல எப்பிடி மனசு வந்துச்சுன்னு என்கிட்டயே கேப்பாங்க.. அப்புறம் நா திரும்ப ப்ரக்னட்டாகிட்டேன்.. ரொம்ப சந்தோஷப்பட்டாரு.. அவ்ளோ பாதுகாப்பா பாத்துக்குவாரு… கொஞ்சம் முகம் வலில சுளிச்சாலும் உடனே ஹாஸ்பிட்டல்க்குக் கூட்டிட்டுப் போவாங்க..”
கூறியவள் பெருமூச்சொன்றை விட்டு நேத்ராவைப் பார்த்து புன்னகைத்தாள்.
“இப்போ தான் மனசுல இருந்த பாரம் இறங்கினது போல இருக்கு”
அவள் கூற நேத்ரா கடினப்பட்டு புன்னகைத்தாள்.
“யாருக்கிட்டயாச்சும் இப்பிடி மனசு விட்டு பேசனும் போல இருக்கும் ஆனா அபிலேஷ்கிட்ட சொன்னா இன்னும் வருத்தப்படுவாரு.. அதனாலே வெளில சொல்லாம மனசுக்குள்ளையே வெச்சிக்கிட்டிருப்பேன்.. இப்போ தான் எனக்குன்னு ஃப்ரன்ட் நீ இருக்கியே.. உன்கிட்ட மனசு விட்டு பேசலாம்ல”
அவள் தலை சாய்த்துக் கேட்க நேத்ராவும் புன்னகைத்துக் கொண்டே.
“கண்டிப்பா என்கிட்ட எதுவா இருந்தாலும் சொல்லு.. உன்னோட கஷ்டத்தக் கேக்குறதுக்கு எப்பவும் நா இருப்பேன்”
அவள் கூறவும் தேவிப்பிரியா புன்னகைத்தாள்.
சோகமோ,கோவமோ,மகிழ்ச்சியோ,விரக்தியோ மனம் விட்டுப் பேச ஓர் உறவு இருந்தால் போதும்.. அனைத்தும் மயமாகி விடும்.
“அப்புறம் உன்னோட அத்தைய பாக்கல்லையா..”
நேத்ரா கேட்க தலையை இல்லை என ஆட்டினாள்.
“அபிலேஷ்கிட்ட சொன்னா என்ன பார்த்து முறைப்பாரு.. நா அதுக்கப்புறம் அவரோட அம்மாவ பார்க்கல்ல.. தனியாத் தான் இருப்பாங்க.. சில நேரம் நினைக்கும் பாவம்ன்னு..”
தேவிப்பிரியாக் கூற நேத்ரா அவளைப் பார்த்தாள்.
“எதுக்கு அப்பிடி பாக்குற”
தேவிப்பிரியா அவளது பார்வையை உணர்ந்து கேட்க.
“இல்ல அவங்க அவ்ளோ செஞ்சும் எப்பிடி நீ இப்பிடி நினைக்குற”
அவள் கேட்க அவளைப் பார்த்து விரக்தியாகப் புன்னகைத்தவள்.
“உனக்கு அப்பா அம்மாவா பார்த்துக்குற அத்தையும் மாமாவும் இருக்காங்க.. ஆனா எனக்கு அப்பிடி யாரும் இல்லையே.. நானும் முன்னாடி எல்லாம் நினைப்பேன் என்னோட புருஷன் வீட்டுல இருக்குறவங்ககிட்ட ரொம்ப உரிமையா பழகனும்ன்னு ஆனா அபிலேஷோட அம்மாக்கு என்னைய சுத்தமா புடிக்காது.. ஆனா அவங்களோட பையன அவங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டேன்னு நானே நினைப்பேன்.. இல்லாதவங்களுக்குத் தானே இருக்குறவங்களோட அருமை புரியும்.. எனக்கு அம்மா இல்ல அதனால அம்மாவோட அருமை எனக்குத் தெரியும் அதான் அபிலேஷ அவங்க அம்மாகூட பேச வைக்க ட்ரை பன்றேன்.. ப்ப்ச்ச் எங்க நடக்க போகுது..”
அவள் சலித்துக் கொள்ள.
“அவங்க அப்பிடி பன்னினது உனக்கு கோவமே இல்லையா”
நேத்ராக் கேட்க.
“கோவம் வருத்தம் எல்லாம் இருக்குது தான்.. ஆனா அது தான் கடவுளோட விருப்பம் போல நா என்ன பன்னட்டும்.. அதோட அந்த கொழந்த பொறக்காம இருந்ததுலையும் ஏதாச்சும் நல்லது இருக்கும்ன்னு நானே என்னைய தேத்திப்பேன்.. அதோட அந்த கொழந்த தான் என்னோட வயித்துக்குள்ள இருக்குதே.. அது என்கிட்டயே திரும்ப வந்துடுச்சே.. அப்புறம் எதுக்கு கோவப்படனும்..”
வயிற்றைத் தடவிக் கொண்டே தேவிப்பிரியாக் கூற நேத்ராவும் அமைதியாகி விட்டாள்.
இத்தனைக்கும் அபிலேஷினது தாயையை அத்தை என்று உரிமையாக தேவிப்பிரியா அழைக்கவில்லை என்பதை நேத்ரா குறித்துக் கொண்டாள்.
******* ****** ******
தொடரும்..❤
💜அஷு💜