அத்தியாயம் 24
அன்று நேத்ராவிற்கு விடுமுறை.
முந்தைய நாள் தர்ஷன் கிளம்பும் போது கூறினான் நாளை ஷூட்டிங் இல்லை என்று.
ஆகவே பள்ளி விடுமுறை கிடைத்தால் தூங்கும் பள்ளி மாணவர்கள் போல் அவளும் விடிந்தும் இன்னும் எழவில்லை.
அக்ஷரன் வாக்கிங் போய் வந்து அறையை எட்டிப் பார்த்தான்.
அவனது மனையாள் இன்னும் எழாததைப் பார்த்து புருவம் சுருங்கினாலும் சமையலறைக்குச் சென்று காஃபி ஊற்றிக் கொண்டு அறைக்குள் வந்தான்.
சுருண்டு படுத்திருப்பவளை எழுப்ப மனமில்லை என்றாலும் இன்னும் தூங்கினால் இரவு வெகு நேரமாகியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பாள் என எண்ணியவன் குனிந்து அவளதுத் தோளைத் தட்டினான்.
“ப்ப்ச்ச்”
சலித்துக் கொண்டு இன்னும் சுருண்டாள்.
“ஹேய் எழும்பு.. நேரமாச்சு”
அவன் தட்டி எழுப்ப முகத்தை சுருக்கினாள்.
“எழும்பு கெட் அப்”
அவன் கூற இதழை சுளித்தவள் கடினப்பட்டு திறக்க முடியாத விழிகளை திறக்க அவளவனே தான் கையில் காஃபி கப்புடன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து அவனைப் பார்த்து விழித்தாள்.
அவனோ அவளை முறைத்துப் பார்த்து விட்டு கையில் இருந்த காஃபியை அவளது கையில் திணித்து விட்டு வெளியே சென்றான்.
“அச்சோ இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போல அதான் முறைக்குறாங்க”
அவள் நினைத்துக் கொண்டு அவன் கையில் திணித்த காஃபியை உறிஞ்சினாள்.
என்றும் போல் தேனாக இனித்தது அவளது கணவனது காஃபி.
காஃபியைக் குடித்து விட்டு குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள்.
அவளது கணவன் சமயலறையில் இருந்தான்.
மெதுவாக சென்று சமயலறைக்குள் தலையை போட்டு எட்டிப் பார்த்தாள்.
காதில் ப்ளூடூத் பொருந்தியிருக்க யாருடனோ பேசிக் கொண்டே காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தான்.
இறுகிய அவனது தசைக் கோளங்களைப் பார்த்ததும் எந்த பெண்ணுக்கும் ஏன் ஆண்களுக்கு கூட ரசிக்கத் தோன்றும்.
சாம்பல் நிற டீஷேர்ட் மற்றும் கறுப்பு நிற பொட்டம் அணிந்து இருந்தான்.
அவனது செய்கை ஒவ்வொன்றாக ரசித்துக் கொண்டிருந்தாள் தன்னையறியாமலே பெருமூச்சு ஒன்று வெளியேறியது அவளிடம் இருந்து.
“இப்பிடி பார்க்காதே தப்பு”
அவள் மனசாட்சியைக் கட்டுப்படுத்த முயன்றாள்.
“புருஷன் அதுவும் உன்னோட புருஷன்.. ரசிச்சா தப்பில்ல”
மனசாட்சி அவளை அடக்கி விட்டு மீண்டும் அவனை ரசிக்க ஆரம்பிக்க.
“ஆனா ஶ்ரீஜாவோட லவ்வர்”
இவள் கூறினாள்.
“லவ்வரா பெரியது.. புருஷனா.. நீயே சொல்லு”
மனசாட்சி அவளிடம் கேட்டது.
“ஶ்ரீஜாவோட வயித்துல வளர்ர குழந்தையோட அப்பா.. அது தான் பெரியது”
முற்றாக முற்றுப் புள்ளி வைத்தாள் அவ்வெண்ணத்திற்கு.
“சாப்பாடு ரெடி”
அவன் கூறிக் கொண்டு டைனிங் டேபளில் சாப்பாட்டை கொண்டு போய் வைத்து விட்டு அமர இவளும் அமைதியாக சென்று அமர்ந்தாள் சாப்பிடுவதற்கு.
“இன்னைக்கு வீட்டுக்கு கொஞ்சம் திங்க்ஸ் எடுக்கனும் வெளில போகனும் ரெடியா இரு”
அவன் அறிவிப்பாக சொன்னான்.
“இல்ல நா வரல்ல”
சாப்பாட்டை கையால் அளந்துக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் அவள் கூறினாள்.
நிமிர்ந்து அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.
“வாரியான்னு கேக்கல்ல வரனும்ன்னு சொன்னேன்”
அவன் மீண்டும் அழுத்தமாகக் கூறினான்.
“இல்ல அது..”
அவள் தயங்கினாள்.
“என்ன”
அவன் கேட்க தலையை மறுப்பாக ஆட்டியவள்.
“வாரேன்”
கூறி விட்டு அமைதியாக சாப்பிட அவனும் நிதானமாக சாப்பிட்டான்.
***
“இன்னும் இல்ல அத்த”
அவன் வெளியே செல்லுவதற்காக அறைக்குள் தயாராக சென்றிருக்க தயாராகி இருந்த நேத்ரா தனது அத்தை தேவகிற்கு அழைத்திருந்தாள்.
“பத்துரமா இரு கண்ணு”
அவர் கூறினார்.
“சரி அத்த நா பார்த்துக்குறேன் நீங்க பயப்டாதிங்க”
அவருக்கு அவள் ஆறுதல் கூறினாள்.
“இல்லடா உனக்கு ரொம்ப வலிக்குமே அங்க எப்பிடி தாங்கிக்குவ நா அக்ஷரன்கிட்ட ஒரு வாட்டி சொல்லிட்றேன் கண்ணு”
அவரது குரலில் கவலை தோய்ந்திருந்தது.
“ஐயோ அத்த தயவு செஞ்சி சொல்லிடாதிங்க நா பார்த்துக்குறேன் நீங்க பயப்டாதிங்க”
அக்ஷரன் அறையில் இருந்து வெளியே வருவதைக் கண்டவள்.
“அவரு வராரு நா அப்புறம் பேசுறேன் அத்த”
எனக் கூறியவள் அழைப்பேசியைத் துண்டித்திருந்தாள்.
“போலாம்”
அவன் தலையசைத்துக் கூறிக் கொண்டு வர இவளும் அமைதியாக அவனுக்கு பின் சென்றாள்.
*****
அந்த பெரிய ஷாப்பிங் மோலினது பிரம்மான்டத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நேத்ரா.
“போலாம்”
அருகில் கணவனது குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள்.
“இங்க என்ன எடுக்கனும்”
அவனுடன் நடந்துக் கொண்டே கேட்டாள் அவனது மனையாள்.
“ம்ம் ஷாம்போ ஸோப்பு எடுக்கனும்”
அவன் கேலியாகக் கூற இவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
திரும்பி அவளைப் பார்த்து புருவம் உயர்த்தியவன்.
“முறைக்கக் கூட தெரியும் போல”
அவன் சிறு சிரிப்புடன் கூறினான்.
இவள் தான் அவனது சிரிப்பை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
அவளது பார்வையை உணர்ந்தவன்.
“என்ன அப்பிடி பாக்குற”
இடது புருவம் உயர்த்தி அவன் கேட்ட விதத்தில்.
“இல்ல நீங்க கொஞ்சம் சிரிக்கும் போதே இவ்ளோ அழகா இருக்கிங்களே நல்லா சிரிச்சா எப்பிடி இருப்பிங்கன்னு நெனச்சி பார்த்தேன்”
தானாக உளறிக் கொட்ட அவனது இரண்டு புருவங்களும் வியப்பில் உயர்ந்தது.
“அப்பிடியா”
அவன் கேட்கவே என்ன கூறினோம் என நினைவில் வந்தது.
“அது.. ஒன்னுமில்ல”
அவசரமாகக் கூறியவள் தலையைக் குனித்துக் கொண்டாள்.
இவனோ தலையை இரண்டு பக்கமும் ஆட்டிக் கொண்டு முன்னே சென்றான்.
“ஐயோ இப்பிடி தான் மனசுக்குள்ள பேசுறேன்னு உளறிக் கொட்டுறதா.. கடவுளே என்னைய பத்தி என்ன நெனச்சிருப்பாங்க.. இப்பிடியா சொல்றது இதுக்கப்புறம் எப்பிடி அவங்க முகத்த பார்ப்பேன்”
மனதுக்குள் அலறினாள் அக்ஷரனது மனையாள்.
அவன் அங்கு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க அமைதியாக அவனுக்கு அருகில் சென்று நின்றுக் கொண்டிருந்தாள்.
“இவங்களுக்குத் தான்.. ”
இவளைக் கைக் காட்ட இவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
அங்கு நின்றிருந்த பெண்ணோ அவளிடம்.
“மேடம் உங்களுக்கு எக்ஸா இல்லன்னா மீடியம் சைஸா”
நேத்ராவிடம் வினவ.
“மீடியம்”
அவளது கணவன் கூற அப்பெண் சிறு புன்னகையுடன் முன்னால் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகளை எடுத்தாள்.
அனைத்தும் பெண்கள் அணியக் கூடிய டெனிம் தான்.
இவள் அக்ஷரனை திரும்பிக் கேள்வியாகப் பார்த்தாள்.
“உனக்கு புடிச்சத செலக்ட் பன்னு”
அவன் கூறினான்.
“எனக்கு எதுக்கு”
அவள் அரண்டு போய் கேட்டாள் அவள் தான் சுடிதார் சேலையைத் தவிர இது வரை வேறு எதுவும் அணிந்ததில்லையே.
“போட்றதுக்கு”
கைகளைப் பேன்ட் பொக்கெட்டில் விட்டுக் கொண்டு அவன் கூற இவளுக்குத் தான்
“இவரு தெரிஞ்சா பேசுறாரு.. இது வரைக்கும் இப்பிடி துணியெல்லாம் கையால கூட புடிச்சதில்லையே”
அவள் மனதுக்குள் பேசினாள்.
“அவசரமா செலக்ட் பன்னு இந்த கலர் ஓகே..”
கருநீல கலரிலும் கறுப்பு நிறங்களிலும் அங்கு அப்பெண் எடுத்துப் போட்டிருந்த டெனிமைக் கையில் எடுத்து அவன் கூற இவளோ அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது ஓகேவா”
அவளுக்கு அருகில் நெருங்கி அவன் கேட்க
“இதெல்லாம் எதுக்கு.. நா இதுக்கு முன்னாடி இதெல்லாம் போட்டதில்லங்க”
அவனது காதுக்குள் கிசுகிசுப்பாக அவள் கூற அவளை விட்டு ஒரு அடி தள்ளி நின்றான் அவசரமாக.
இவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“அது.. இதுக்கப்புறம் தேவப்படும் ஸோ எடு”
முதலில் தடுமாறியவன் பின் அழுத்தமாகக் கூற இவள் தான் அவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எடு”
அவன் மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூற அங்கு இருந்த டெனிமை கண்ணால் பார்க்கக் கூட இல்லாமல் ஒன்றை அப்பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தாள்.
அவன் அவளைப் பார்த்து விட்டு இன்னும் நான்கு ஐந்து டெனிம்களை அப்பெண்ணிடம் தூக்கிக் குடுத்தவன்.
“இத பெக் பன்னுங்க லேடீஸ் டீஷேர்ட் ஷேர்ட் எங்க இருக்கு”
அப்பெண்ணிடம் கேட்டான்.
“அதோ அங்க இருக்கு ஸர்”
அப்பெண் கைக் காட்ட இவன் அங்கு நகர்ந்தான் இவளும் அவனுக்குப் பின்னால் செல்லப் பார்க்க.
“ஹாய்”
என்ற குரல் ஒன்று வந்தது பின்னால் திரும்பிப் பார்த்தாள் அங்கு இவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ஶ்ரீஜா.
நேத்ராவினது முகத்திலோ தானாகவே இறுக்கம் குடிக் கொண்டது.
“இங்க என்ன பன்றிங்க அக்ஷரனும் வந்திருக்கானா”
அவள் கேட்க இவள் தலையை மேலும் கீழுமாக ஆட்டவும்.
“இங்க என்ன பன்னுற”
எனக் கூறிக் கொண்டு நேத்ராவைத் தேடி வந்தவன் அங்கு ஶ்ரீஜா நின்றிருப்பதைப் பார்த்து விட்டு திரும்பி நேத்ராவைப் பார்த்தான்.
“நீங்க பேசிட்டு வாங்க நா அங்க போய் இருக்கேன்”
அமைதியாக அவள் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் நேத்ரா.
அவள் மறுபக்கம் திரும்பி நின்றுக் கொண்டிருந்தாள் நேத்ரா.
சிறிது நேரத்தில் அருகில் யாரோ வருவது போல் இருக்க திரும்பிப் பார்க்கவும் அந்தரத்தில் மிதக்கும் உணர்வில் மிரண்டுப் போனவள் திரும்பிப் பார்த்தாள்.
அங்கு அக்ஷரன் தான் அவளைப் பூக்குவியல் ஒன்று போல் இரண்டு கைகளிலும் தூக்கியிருக்க இவள் மிரளாமல் இருந்தால் தான் ஆச்சரியம்..!!
“எ..ன்..ன”
அதிர்ச்சியில் பேச்சுக் கூட வர மறுத்தது.
அவனோ எதுவும் பேசவில்லை.
திரும்பி அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண்ணிடம்.
“அந்த பார்ஸல் எல்லாத்தையும் கார்ல கொண்டு வந்து வைங்க”
அதிகாரமாகக் கூறியவன் அவளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
இவள் தான் அவனது கையில் நெளிந்துக் கொண்டிருந்தாள்.
“இறக்கி விடுங்க”
அவனது இறுகிய பிடியில் அவளது உடலெல்லாம் சிலிர்த்தது.
மேலும் அந்த ஷாப்பிங் மோலில் இருப்பவர்கள் வேறு இவர்களைப் பார்த்து தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டு.
அத்துடன்,
“ஹௌ ஸ்வீட்”
என கமன்ட் வேறு அடிக்க இவளுக்குத் தான் இம்சையாகிப் போனது.
அவனுக்கு அப்பிடி எதுவும் இல்லை போலும்..!!
மெதுவாக அவனிடம் அவள் கூறினாள்.
“கொஞ்சம் சும்மா இரு”
அவளை அடக்கியவன் அந்த ஷாப்பிங் மோலில் இருந்து வெளியே வந்து அங்கு நின்றிருந்த காவலாளியிடம் கண்ணைக் காட்ட முன்னிருக்கையைத் திறந்து விட்டான் அக்காவலாளி.
அவளை முன்னிருக்கையில் அமர வைத்தவன்.
அங்கு காரின் பின்னிருக்கையில் வாங்கிய ஆடைகளைப் போட்டவன் ட்ரைவர் இருக்கையில் வந்து அமர்ந்து அவசரமாக காரை எடுத்தான்.
“எதுக்கு தூக்குனிங்க எல்லாரும் ஒரு மாறியா பார்த்தாங்க”
அவனிடம் அவள் குறை பட நிதானமாக அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“ம்ம் திருப்பதிக்கு வேண்டுதல் அதான் தூக்கிட்டு வந்தேன்”
கூறி விட்டு முன்னால் திரும்ப இவள் தான் வாய்க்குள் எதையோ முனகினாள்.
“எல்லாம் அவங்க இஷ்டம் தான்”
வாய்க்குள் முனக அதைக் கேட்டவன் திரும்பி அவளைப் பார்த்து விட்டு முன்னால் திரும்பினான்.
கார் அப்பார்ட்மென்ட்டை அடைந்தது.
காரை நிறுத்தியவன் இறங்கப் போனவளது கையைப் பிடித்தான் இவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இறங்காதே”
கூறி விட்டு அவன் இறங்கிச் செல்ல இவள் தான் புரியாமல் விழித்தாள்.
இறங்கியவன் அவளது பக்க கார்க்கதவைத் திறந்து மீண்டும் அவளைத் தனது கையில் ஏந்திக் கொண்டான்.
அவளும் அவனது கழுத்தை சுற்றி கைகளை மாலை போல் போட்டவள்.
“எதுக்குங்க தூக்குறிங்க”
சலிப்பாகக் கேட்டாள்.
அவனோ அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே வீட்டிற்கு முன் வந்து நின்றவன் தனது விரல் ரேகையினை பதிக்க வீடு திறக்கப்பட்டது.
நேராக அறைக்குள் வந்தவன் குளியலறை வாசலில் அவளை இறக்கி விட இவள் கேள்வியாக அவனைப் பார்த்தான்.
“உள்ள போ.. நஃப்கின் இருக்கா”
அவன் கேட்க இவளது முட்டைக் கண்களோ விரிந்தது.
“எ..ன்ன…அப்போ”
நெஞ்சுக் கூடு ஏற இறங்க அவனிடம் கேட்டவளுக்கோ ஒரு மாதிரியாகிப் போனது.
*****
தொடரும்..❤
💜அஷு💜