அத்தியாயம் 25

அத்தியாயம் 25

அவன் கேட்டதில் இவளது நெஞ்சுக் கூடு அதிர்ந்து அடங்கியது என்னவோ உண்மை.

“இருக்கா”

அவன் அழுத்திக் கேட்க தலை தானாக ஆம் என ஆடியது 

“ஓகே நீ உள்ள போ”

அவன் கூற அவசரமாக குளியலறைக்குள் நுழைந்தாள்.

இளம் நிறத்திலாலான சுடிதார் அணிந்திருப்பதால் இரத்தக் கறை நன்றாக விளங்கியது.

“அச்சோ அதான் அவங்க தூக்கிட்டு வந்தாங்களா”

நினைத்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள்.

இவன் அங்கிருந்த அவளது ஆடைப் பையினுள் தேடி நப்கினை எடுத்துக் கொண்டு சென்று குளியலறை கதவைத் தட்டினான்.

“கொஞ்சம் இருங்க”

மெல்லிய குரலில் அவள் கூறினாள் ஓரிரு நிமிடங்களில் கதவைத் திறக்க இவன் கையில் இருந்ததை நீட்ட அதைப் பெற்றுக் கொண்டவள் கதவை மீண்டும் மூடிக் கொண்டாள்.

இவனோ சமயலறைக்குள் நுழைந்தான்.

இவள் சிறிது நேரத்தில் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள்.

அறையில் அவனைத் தேட அவன் இருக்கவில்லை.

நிற்கக் கூட முடியாத அளவில் வயிற்று வலியும் இடுப்பு வலியும் அவளைப் பாடப் படுத்த.

அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்தாள்.

“வ..லிக்கு..து”

வாயிற்குள் முனகியவள் குனிந்து வயிற்றை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்..

தன் முன் நிழலாடுவது போல் இருக்க தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

அவளது கணவன் தான் கையில் ஏதோ பானத்துடன் நின்றிருக்க வலியில் முகம் சுருங்கினாலும் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“இந்தா குடி வலி கொஞ்சம் குறையும்”

அவன் அதை அவளிடம் நீட்ட அதை வாங்காமல்,

“என்ன இது”

அவன் நீட்டியதை கேள்வியாகக் கேட்டாள்.

“ம்ம் பீர்”

அவன் கடுப்பாகக் கூற அவனை முறைத்தாள்.

“நானே வலில இருக்கேன் கடுப்பேத்தாம சொல்லுங்க”

அவள் வாய்க்குள் முனக அதைக் கேட்டவன் அவளை முறைத்துக் கொண்டேக் கூறினான்.

“ம்ம் மோருல இஞ்சிச் சாறும் பெருங்காயமும் சேர்த்து இருக்கு இதக் குடி கொஞ்சம் வலி குறையும்”

அவன் கூற அவள் அவ்வலியிலும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“உங்களுக்கு எப்பிடி தெரியும்”

அவனிடம் கேட்டாள்.

அவனோ அவளது கையில் அந்த கிளாசை திணித்தவன்.

“கேள்விக்குப் பொறந்தவ போல கேள்வி கேட்காம மூடிட்டு குடி”

அவள் வலியில் இதழ்க் கடித்துக் கொண்டுக் கேட்கும் விதத்தில் கடுப்பாகக் கூறினான். அவனை முறைத்துக் கொண்டு அவன் கொடுத்ததைக் குடித்தாள்.

அவள் குடிக்கும் போது இவன் குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

சிறிது நேரத்தில் வந்தவன் அவள் இன்னும் வலியில் முனகுவதைப் பார்த்து விட்டு அருகில் வந்தான்.

“இப்போ எப்டி இருக்கு”

அவன் கேட்டான்.

“அப்பிடியே தான் இருக்கு”

“முன்னாடி சொல்லியிருக்கலாமே இன்னைக்கு உனக்கு பீரியட்ஸ்ன்னு”

அவள் சாப்பிடும் போது கூற வந்து தயங்கியதை நினைவில் வைத்துக் கொண்டுக் கேட்டான்.

“இல்ல.. ரெடியாகித் தான் போனேன்.. ஆனா”

இழுக்க.

“இங்கப் பாரு நீ இன்னும் என்னோட பொண்டாட்டி தான் என்கிட்ட மறைக்குற வேல வெச்சிக்காதே அதோட பெரிய மனுஷி ஆகினதும் முதல்ல என்கிட்ட தான் சொல்லியிருக்க அத மறந்துடாதே”

அவன் கோவமாகக் கூற.

“இன்னுமா அது நியாபகம் இருக்கு”

எச்சில் விழுங்கிக் கொண்டு அவள் கேட்க அவன் முறைத்தான்.

“கொஞ்ச நேரம் படு”

அவன் கூற தலையசைத்தவள் போர்வையை எடுத்து தரையில் போடப் பார்க்க அதை இழுத்தெடுத்தான் அவள் கணவன்.

“கட்டில்ல படு”

அவன் அழுத்தமாகக் கூறினான்.

அவனைத் தயக்கமாகப் பார்த்தவள்.

“இல்ல அது.. இந்த நேரத்துல”

அவள் இழுக்க அவளது கையைப் பிடித்துக் கொண்டு போனவன் அவளைக் கட்டிலில் அமர வைத்தான்.

“மூடிட்டு படு எதாச்சும் தேவைன்னா கூப்டு வெளில தான் இருக்கேன்”

அவன் கூறி விட்டு அறையை விட்டு வெளியேறினான்.

“நானே வலில இருக்கேன்.. கொஞ்சம் பாசமா சொன்னா என்னவாம்”

அவன் அறையில் இருந்து வெளியேறியதும் வாய் விட்டேக் கூறிக் கொண்டாள்.

கட்டிலில் சாய்ந்தமர்ந்தவள்.

அவன் கூறிய

‘நீ பெரிய மனுஷியாகினதும் முதல்ல என்கிட்ட தான் சொன்ன மறந்துடாதே’

என்ற கூற்றே காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

“இன்னுமா அது நியாபகம் இருக்கு அவங்களுக்கு”

நினைத்தவளுக்கு இதழ்க் கடையோரம் புன்னகைத் துளிர்த்தது.

கண்களை மூடிக் கொண்டவளுக்கு அன்றைய நினைவுகள் மனக்கண் முன் ஓடியது.

நேத்ராவிற்கு பதின்மூன்று வயது, அக்ஷரனுக்கு இருபது வயது.

இருவருக்கும் இடையில் ஏழு வருட இடைவெளி.

அன்று தேவகியும்,ஞானவேலும் சொந்தக்கார் வீடு ஒன்றில் திருமண வைபத்திற்குச் சென்றிருந்தனர்.

நேத்ரா பாடசாலையில் தந்த வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் எனக் கூறி வர மறுக்க இவர்களும் அருகில் தான் என நினைத்து அவளுடன் அக்ஷரனும் வீட்டில் இருப்பதால் அவளை விட்டு விட்டுச் சென்றனர்

வீட்டில் வேலை செய்பவர்கள் கூட விடுமுறை.

நேத்ரா வரவேற்பறையில் அமர்ந்துக் கொண்டு பாடசாலை வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.

அக்ஷரன் அறையில் இருந்தான்.

இப்பொழுது எல்லாம் தான் அக்ஷரன்,நேத்ராவிடம் எரிந்து விழுவான்.

அவன் வெளியே வராத நேரத்தில் தான் இவள் வெளியே வந்து இருப்பாள்.

சிறிது  நேரத்தில் வயிற்றுக்குள் சுளீர் என வலிக்க ஆரம்பிக்க வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.

“ஆஆ.. வலிக்குதே”

வயிற்றைப் பிடித்துக் கொண்டு முனகியவள் எழுந்து குளியலறைக்குள் நுழைந்தாள்.

அங்குக் காத்திருந்தது அதிர்ச்சி அச்சிறு பெண்ணிற்கு.

இரத்தக் கறையைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள்.

“ஐயோ எனக்கு என்னாச்சு”

பயத்தால் வியர்வைத் துளிகளும் நெற்றியில் பூத்தது.

தேவகி அவளிடம் பூப்பெய்தல் பற்றி எதுவும் கூறவில்லை.

தான் அவளுடன் தானே இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் அது பற்றிக் கூறவில்லை அவர்.

“இப்போ என்ன பன்னனும்.. அத்த வாங்களே”

உதட்டைப் பிதுக்கி அத்தையை துணைக்கு அழைத்தாள் அச்சிறுப் பெண்.

“எனக்கு ஏதாச்சும் நோயா கடவுளே”

எண்ணியவள் அவசரமாக ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

யாரிடம் சொல்ல வேண்டும் எனத் தெரியவில்லை.

பயத்தில் என்ன செய்ய வேண்டும் எனக் கூடத் தெரியவில்லை.

அத்தையும் மாமாவும் இன்னும் வந்திருக்கவில்லை.

வேறு வழியில்லை அக்ஷரனிடம் தான் சென்றாக வேண்டும்.

போய் சொன்னால் திட்டுவானோ??

எரிந்து விழுவானா??

எரிந்து விழுவான் தான் ஆனால் வேறு வழியில்லையே..!!

என எண்ணியவள் தயங்கிக் கொண்டே சென்று அக்ஷரனது அறைக் கதவைத் தட்டினாள்.

இரண்டு மூன்று முறைத் தட்டியும் பதில் வரவில்லை மீண்டும் ஓங்கி இரண்டு தட்டுத் தட்ட 

“என்ன”

அறைக்குள் இருந்து குரல் வந்தது.

“அது.. கொஞ்சம் வெளில வாங்களே”

தயக்கமாக மெதுவான குரலில் கூற ஓரிரண்டு நொடிகளின் பின்னர் கதவுத் திறக்கப்பட்டது.

வெற்று மார்பில் ஷோர்ட்ஸுடன் நின்றுக் கொண்டிருந்தான்.

மீசை வளர்ந்து வாலிப வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் இளைஞன்.

தன் முன்னே உயரமாக வளர்ந்திருப்பவனை சங்கடமாகப் பார்த்தாள் நேத்ரா.

அவனோ தனது இடுப்பளவுக் கூட வளர்ந்து இல்லாதவளைக் கடுப்பாகத் தான் பார்த்து வைத்தான்.

“எதுக்கு கூப்ட்ட”

அவன் கேட்க மிரண்ட விழிகளுடன் அவனைப் பார்த்தவள்.

“அது..”

என ஒரு நொடி தயங்கி அவனது முறைப்பிற்கு பயந்து அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள் பள்ளி மாணவி போல்.

இவள் சொல்வதைக் கேட்டவனது புருவமோ வியப்பில் உயர்ந்தது ஒரு நொடி.

அவனுக்குப் புரிந்தது அவள் பெரிய பெண்ணாகி விட்டாள் என்பது.

அவள் பயந்திருப்பதும் புரிந்தது.

“எனக்கு ஏதாச்சும் நோயா”

பயந்துக் கொண்டு அவள் கேட்டாள்.

“இல்ல அது”

எனக் கூற வந்தவன்.

“ஒன்னுமில்ல நீ போய் ரூமல் இரு”

அவன் கூற அசையாமல் அங்கையே நின்றுக் கொண்டிருந்தாள்.

“என்ன”

அவள் அங்கு நின்றிருப்பதைப் பார்த்து அவன் வினவ.

“எனக்கு நோய் ஒன்னுமில்லையே”

கண்களில் கண்ணீர் துளிர்க்க அவள் கேட்ட விதத்தில் யாராக இருந்தாலும் இழுத்து அணைத்து ஆறுதல் சொல்லுவர் ஆனால் இவனோ அனைத்திற்கும் மாறுபட்டவன் அல்லவா!??

“ஆமா பெரிய நோய்..இனி குணப்படுத்தவே முடியாது”

அசால்ட்டாகக் கூறி விட்டு அறைக்குள் நுழைந்தவன் டீஷேர்ட்டை அணிந்துக் கொண்டு வெளியே வந்து  அவளை இழுத்துக் கொண்டு சென்று அவளது அறையில் விட்டான்.

“ரூம்க்குள்ள இரு வெளில வராதே”

கூறி விட்டு அவன் செல்ல இவளோ கண்கள் கலங்க போகும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்போ நா செத்துப் போவேனா”

கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் விவரம் அறியா அப்பேதை.

அக்ஷரன் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மனியை அவளுடன் சிறிது நேரம் துணைக்கு இருக்குமாறு கூறி விட்டு அவசரமாக சென்று தனது தாய் தந்தையை அழைத்துக் கொண்டு வந்தான்.

என்ன ஏது என கேட்டவர்களிடம் ஒன்றும் கூறாமல் அழைத்து வந்தவன் வீட்டிற்குள் வந்ததும் தான் தனது தாயிடம் விடயத்தைக் கூறினான்.

தேவகியோ அதிர்ந்து போனார் அச்சிறு பெண்ணிற்கு இது பற்றி சொல்லிக் கொடுக்காத தனது மடத்தனத்தை எண்ணியவர் தனக்குத் திட்டிக் கொண்டே அவளைப் பார்க்கச் சென்றாள்.

அறைக்குள் இருந்தவள் தனது அத்தையைக் கண்டதும் அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையில் பெருங் குரல் எடுத்து அழுதாள்.

“அத்த நா சாகப் போறேனா”

எனக் கூறி அழ அவளுக்குப் பொறுமையாக எடுத்துக் கூறியவர் அனைத்துப் பெண்களது வாழ்விலும் நடைபெறும் ஓர் அழகிய நிகழ்ச்சி தான் என்றுக் கூற இவளோ அக்ஷரன் தனக்குக் கூறியவற்றைக் கூறி அக்ஷரனுக்கு அவரிடம் நான்கு அடிகளைப் பரிசாகப் பெற்றுக் கொடுத்தது எல்லாம் வேறு கதை.

பின் ஊர் அறிய வெகு விமர்சையாக நடத்தினார் ஞானவேல் தனது வளர்ப்பு மகளின் சடங்கை.

****

அதை நினைத்துப் பார்த்தவளுக்கோ இன்னும் சிரிப்பு தான் வந்தது.

“நோயாம் நோய்.. உண்ம தான் நோய் தான்”

கூறி பெருமூச்சொன்றை விட்டவளுக்கு வயிற்று வலி கொல்ல வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டவள் சுருண்டு படுத்தாள்.

சிறிது நேரம் கழிய வயிற்று வலி கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வயிற்றுக்கு மேல் ஏதோ பாரமாக இருப்பதைப் போல் உணர்ந்தவள்.

விழிகளைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தவளது விழிகளோ விரிந்தது.

அங்கு கட்டிலுக்கு அருகில் கதிரை ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அக்ஷரன் அமர்ந்திருந்தான்.

அவனது கரமோ அவளது வயிற்றை வருடி விட்டுக் கொண்டிருந்தது.

அவனோ கட்டிலில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

கைகளோ அதன் பாட்டில் அவளது மணி வயிற்றைத் தடவிக் கொடுத்தது.

அவனது செய்கையில் ஒரு நொடி தேவகியும் இப்படித் தானே இந்த நேரத்தில் இவள் வயிற்று வலியில் அவதிப்படுவதைப் பார்த்து விட்டு இரவு முழுக்க அவளது வயிற்றைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்க அவள் உறங்கிய பின் அல்லவா அவர் உறங்குவார்.

ஆனால் இங்கு இவனோ உறங்கியவளுடைய வயிற்றை அல்லவா தடவி விட்டுக் கொண்டிருந்தான்.

இவள் உறக்கத்தில் வலியில் முனகியிருப்பாள் அதனால் தான் அவன் வயிற்றைத் தடவிக் கொடுத்து இருப்பான் என ஒரு நொடியில் யூகித்தவளுக்கோ இதயத்தின் உள்ளே ஏதோ ஒன்று சுரப்பது போல் இருந்தது.

****** *****

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top