அத்தியாயம் 26
அக்ஷரனையே விழியகலாமல் பார்த்தாள் நேத்ரா.
அவனதுக் கை இன்னும் அவளது வயிற்றையேத் தடவிக் கொண்டிருந்தது.
வலி முற்றாக நீங்கவில்லை என்றாலும் சற்று மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
ஏதோ யோசனையில் அவனது தலை முடியைக் கோதிக் கொடுக்க தூக்கிய கை ஒரு நொடி அந்தரத்தில் இருந்தது.
“வேணாம் நேத்ரா இந்த அன்புக்கு அடிமையாகாதே உனக்கானது இல்ல”
அவள் தனக்குள் கூறிக் கொள்ள.
“ஆனாலும்.. இந்த பாசம்..”
நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் கோர்த்தது.
“இந்த அன்புக்கும் நா தகுதி இல்ல இவங்களுக்கும் நா தகுதி இல்ல”
மனதினுள் எடுத்துக் கொண்ட உறுதி கொஞ்சம் கொஞ்சமாகக் கரைவது போல் இருந்தது இவனது இக்கரிசணை முன்னால்,
அவன் அசைவது போல் இருக்க அவசரமாக கையை இழுத்துக் கொண்டவள். விழியையும் இறுக மூடிக் கொண்டாள்.
அக்ஷரன் விழியைத் திறந்துப் பார்த்தான்.
திறந்த விழிகளுக்கு முன்னால் அவனவள் உறங்கியிருக்க சட்டென மின்னி மறைந்தது அவனது இதழில் ஓர் வளைவு.
கையால் பின்னங் கழுத்தை வருடியவன் நெட்டி முறித்தான்.
அவளது மூடிய விழிகள் அங்கும் இங்கும் அசைவதை உற்றுப் பார்த்தவனோ இதழ்க் கடித்து அவளைப் பார்த்தான்.
“பார்த்து முழி ரெண்டும் வெளில பாஞ்சிடாம”
அவனது குரலில் அவளது நெஞ்சு பக்கென்றாகியது.
“அச்சோ தூங்கல்லன்னு தெரிஞ்சிடுச்சா”
நினைத்துக் கொண்டவள் விழிகளைத் திறக்கவே இல்லை.
இவனோ இரண்டு பக்கமும் தலையாட்டி விட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றான்.
குளியலறைக் கதவு மூடப்படும் சத்தத்தில் பட்டென விழிளைத் திறந்தாள் நேத்ரா.
“ஒழுங்கா தூங்குற போல நடிக்கக் கூட முடியல்ல”
தலையில் அடித்துக் கொண்டவளுக்கு சிரிப்பாக இருந்தது.
பின் அவன் வரும் முன்னர் அவசர அவசரமாக எழுந்தவள் அறையில் இருந்து வெளியே சென்றிருந்தாள்.
அவன் குளியலறையில் இருந்து வெளி வரும் நேரம் அவள் அறையில் இருக்கவில்லை.
“இவ எங்க போனா”
நினைத்தவன் வெளியே வந்துப் பார்க்க சமயலறையில் சத்தம் கேட்டது.
சமயலறைக்குச் சென்று பார்த்தான்.
அங்கு காஃபி ஊற்றிக் கொண்டிருந்தாள் நேத்ரா.
“உனக்கு வலி எப்பிடி இருக்கு”
பின்னால் அவன் குரல் கேட்க அவன் வந்ததை அவனது பிரத்யேக நறுமணமே உணர்த்தியிருக்க காஃபிக் கப்பை எடுத்துக் கொண்டு மறுபக்கம் திரும்பினாள்.
“இந்தாங்க”
அவள் காஃபி கப்பை அவனிடம் நீட்ட அதை அவன் வாங்காமலே அவளை அழுத்தமாகப் பார்த்தான்.
‘நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறு’
என்பது போல் அவனது பார்வை இருக்க அதை உணர்ந்தவள்.
“பரவல்ல”
பட்டும் படாமலும் அவள் கூற அவளைப் பார்த்துக் கொண்டே காஃபியை வாங்கியவன் அதை எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்தான் அக்ஷரன்.
இவளும் காஃபியை அருந்தி விட்டு அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்.
அக்ஷரன் இருக்கவில்லை வெளியே சென்றிருப்பான் போல்.
இவளது அழைப்பேசி அலற அதை எடுத்தாள்.
தேவகி தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க அத்த”
அவள் சோர்வாகக் கேட்டாள்.
மறுபக்கத்தில் இருந்த தேவகியோ,
“எப்பிடி கண்ணு இருக்க”
“ம்ம் இருக்கேன் அத்த”
அவளது குரலே அவளது வலியை உணர்த்த.
“நேத்து ராத்திரி அக்ஷரன் ஃபோன் பண்ணி ஒரே திட்டு தான்”
தேவகிக் கூற நேத்ராவின் புருவங்களோ சுருங்கியது.
“எதுக்கு அத்த”
“ம்ம் வேற எதுக்கு நா சொல்லல்லன்னு தான்”
தேவகிக் கூற
“எது..”
எனக் கேட்க வந்தவள் அவன் திட்டியதற்கான காரணம் புரிந்தது.
“எதுக்கா நேத்து உனக்கு உடம்புக்கு முடியாதுன்னு எதுக்கு என்கிட்ட முன்னாடியே சொல்லல்ல அவ தான் அறிவில்லாம இருக்கான்னா நீங்களும் அப்பிடி இருக்கிங்கன்னு ஒரே திட்டு தான்”
தேவகி புன்னகைத்துக் கொண்டுக் கூறினார்.
“அது.. அத்த”
இவள் தயங்கினாள்.
“அவன் உன்மேல இருக்குற அக்கறைல தான் அப்பிடி எனக்கு திட்டினான்னு நினைக்கும் போது மனசு நெறஞ்சிப் போகுது கண்ணு”
அவர் மற்றைய அத்தைமார்களில் இருந்து வித்தியாசம் தான்
“அப்புறம் இந்த நேரத்துல என்ன என்ன சாப்டனும்ன்னு கேட்டான் நானும் சொன்னேன்”
அவர் கூற இவள் அமைதியாகி விட்டாள்.
“சரிடா இப்போ தான் இருந்த கொஞ்ச பாரமும் மனச விட்டி நீங்கினது போல இருக்கு இனி அவன் உன்ன பார்த்துப்பான் பத்திரமா இரு கண்ணு”
கூறி விட்டு அவர் அழைப்பேசியைத் துண்டிக்க இவளது மனதில் தான் ஏதோ பாரம் அழுத்துவது போல் இருந்தது.
இவள் அவ்வாறே அமர்ந்திருக்க உள்ளே வந்தான் அக்ஷரன்.
கையில் ஏதோ பைகள் இருந்தன.
இவள் அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
பைகளை அங்கிருந்த மேசையில் அப்பைகளை வைத்தவன் தன்னையே கேள்வியாகப் பார்க்கும் அவளைக் கண்டுக் கொள்ளாமல் சமயலறைக்குள் நுழைந்தான்.
இவள் பொறுத்துப் பார்த்து விட்டு சமயலறைக்குள் நுழைந்தாள்.
அவன் சமைத்துக் கொண்டிருந்தான்.
“ம்க்கும்”
இரும அவன் எதுவும் பேசவில்லை.
அவளே பேச ஆரம்பித்தாள்.
“நீங்க இப்பிடி எல்லாம் பன்னுறது சரியில்ல”
அவள்க் கூற நிதானமாக திரும்பிப் பார்த்தான் அவளை அக்ஷரன்.
“எப்பிடி”
புருவம் உயர்த்தினான்.
“அது.. அத்தைக்கிட்ட அப்பிடி சொல்றது”
“அதான் எப்பிடி”
அவன் கேட்டுக் கொண்டே திரும்பி தனது வேலையைத் தொடர,
“அதான் அப்பிடி”
அவள் சொல்ல முடியாமல் திணறினாள்.
“ப்ப்ச்ச் எப்பிடின்னு சொல்ல முடியும்ன்னா சொல்லு இல்லன்னா எடத்த காலி பன்னு”
அவன் சலித்துக் கொண்டுக் கூற.
“நீங்க இப்பிடி பன்னுறதால அவங்க நினைப்பாங்க நாங்க சந்தோஷமா இருக்குறோம்ன்னு”
“உனக்கும் அதானே வேணும்”
“அது.. இப்போ சந்தோஷமா இருக்குற போல காட்டிக்கிட்டாலும் அப்புறம் நாங்க பிரியுறப்போ இன்னும் வலிக்கும்”
“யாருக்கு..”
“அத்தைக்கும் மாமாக்கும் தான்”
அவசரமாக வெளி வந்தது.
“ஆஹான்.. அத நா பார்த்துக்குறேன் நீ கவலப்படாதே.. உனக்கு அத்த மாமா ஆகுறதுக்கு முன்னாடி அவங்க என்னோட அம்மா அப்பா..அவங்கள எப்பிடி சந்தோஷமா வெச்சிக்கனும்ன்னு எனக்குத் தெரியும்”
அவனது குரல் இருந்த இலகுத் தன்மை தொலைந்திருக்க
இவள் அமைதியாகி விட்டாள்.
அவன் சமைக்க இவள் அமைதியாக வந்து அமர்ந்துக் கொண்டிருந்தாள்.
“ம்ம்.. அவங்களோட அப்பா அம்மாவ சந்தோஷமா வெச்சிக்கத் தான் இந்த நாடகம் போல”
அவள் வழமையாக தனக்குள் எண்ணிக் கொள்வது போல் இதையும் எண்ணிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் சமைத்துக் கொண்டு வந்து டைனிங் டேபளில் வைத்து இவளை சாப்பிட அழைக்க இவளும் வந்து சாப்பிட அமர்ந்தாள்.
இருவரும் அமைதியாக சாப்பிட்டு முடிந்தனர்.
பின் அவனே சாப்பிட்ட தட்டுக்களைக் கொண்டு போய் கழுவ இவள் எவ்வளவு தடுத்துப் பார்த்தாலும் அவற்றை ஒரு முறைப்பால் ஓரம் தள்ளியவன் அனைத்தையும் சுத்தப்படுத்தி விட்டு கையில் பழரசத்துடன் அறைக்குள் வந்தான்.
இவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
வயிறு வலித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
வலியை வெளியே காண்பித்தால் எங்கு அவன் தனது பெற்றோரை திருப்திப்படுத்த தன் மேல் அன்பு உள்ளது போல் நடிக்க நேரிடும் என்ற காரணத்தினாலே அவள் வலித்தும் வலிக்காதது போல் இருந்தாள்.
அவள் யோசிக்க மறந்த விடயம் தான் அவன் ஒரு போதும் தனது பெற்றோருக்கு பயந்தவன் இல்லை என்று அதற்கு உதாரணம் தான் அவளுடனான அவனது திருமணம்… அத்துடன் இங்கு இல்லாத பெற்றோருக்காக அவன் எதற்கு தன்னிடம் அன்பாக இருப்பது போல் நடிக்க வேண்டும்.. என்பதையும் தன் வசதிக்கேற்ப மறந்து விட்டாள் நேத்ரா.
அவன் கொண்டு வந்து நீட்டியதை வாங்காமல் அவனைப் பார்க்க.
“இந்த டைம்ல ஃப்ருட்ஸ் சாப்ட்டா நல்லமாம் இல்லன்னா இப்பிடி ஜூஸ்”
அவன் கூற.
“ப்ப்ச்ச் எதுவும் வேணாம்”
அவள் பல்லைக் கடித்துக் கொண்டுக் கூறினாள்.
“வேணுமா வேணாமான்னு உன்கிட்ட பர்மிஷன் கேக்கல்ல குடின்னு சொல்றேன்”
அவன் அழுத்திக் கூற அவனுடன் இன்னும் வாதம் செய்ய வலியில் முடியாமல் அதை வாங்கிக் குடித்தாள்.
குடித்ததும் சற்று உடம்புக்கு இதமாகத் தான் இருந்தது.
இவ்வாறே அடுத்த நாளும் சென்றது.
அவன் அடாவடியாகக் குடுக்கும் பழச்சாற்றை வேண்டாம் என மறுப்பதும் அவனது ஒரு முறைப்பில் அதை குடிப்பதும் என இருந்தது.
தர்ஷனுக்கு அழைத்து இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறுவதற்காக அழைப்பேசியில் அழைக்க
“உன்னோட புருஷன் ஏற்கனவே இன்ஃபோம் பன்னிட்டாரே நீ ஒரு வீக்குக்கு வரமாட்டேன்னு”
தர்ஷன் கூற இவள் தான் விழித்தாள்.
“அதுவும் உன்னோட புருஷன் பர்மிஷன் எல்லாம் கேக்கல்ல ஜஸ்ட் லீவுல இருக்கா ஆஃப்டர் வன் வீக்ல வந்துடுவான்னு இன்ஃபோர்ம் பன்னுறாரு.. ம்ஹும் குடுத்து வெச்ச ஆள் தான்மா நீயெல்லாம்”
அவன் கூறி விட்டு அழைப்பேசியை துண்டித்தான்.
“ம்க்கும் அவர் யாருகிட்ட அனுமதி கேட்டிருக்காரு.. எல்லாம் அடாவடித்தனம் தான்”
இவள் நொடித்துக் கொண்டாள்.
இவள் குணமாகும் வரை அவனும் வெளியே எங்கும் செல்லவில்லை.
அவளுக்கு கட்டிலில் படுக்கக் கூறியவன் அங்கிருந்த ஸோபாவில் படுத்தான்.
அது நேத்ராவிற்கே போதுமாக இருக்காது.
இவனோ ஆறடியில் உடற்பயிற்சியினால் உரமேறிய உடலை வைத்துக் கொண்டு அந்த ஸோபாவில் படுப்பது மிகக் கடினம் தான்.
“நீங்க வந்து கட்டில்ல படுங்க நா கீழ படுக்குறேன்”
நேத்ரா கூறினாலும் அவன் அதை எங்கு கேட்டான்.
கட்டிலில் அவனுடன் படுக்க தயக்கமாக இருந்தது அதே சமயம் அந்த அறையில் தனியாக படுக்கவும் பயமாக இருந்தது.
இப்படி ஒரு வாரம் கழிய அன்று இவள் தலைக்கு குளித்து விட்டு வெளியே வரவும் அவன் எங்கோ வெளியே செல்ல ஆயத்தமாக இருந்தான்.
இவள் அவனைப் பார்க்காமல் சமயலறைக்குள் நுழையப் பார்க்க.
அவன் குனிந்துக் கொண்டு ஷூ லேஸைக் கட்டி விட்டு எழுந்து நின்றவன்.
“அன்னைக்கு கொண்டு வந்த ட்ரஸ போட்டுட்டு வா”
கட்டளையாகக் கூற இவள் திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“எத”
“அந்த டெனிம் ஷேரட்ஸ் அத”
அவன் கூற இவள் திகைத்தாள்.
“அது எதுக்கு எனக்கு”
அவள் அரண்டு போய் கேட்டாள்.
“ம்ம் ஃபேன்ஸி காம்படிஷன் ஒன்னு இருக்கு சேர்த்து விட்றதுக்கு”
அவன் கூற இவள் நம்பாமல் அவனைப் பார்த்தாள்.
“என்ன பார்வ போய் ட்ரஸ் பன்னிட்டு வா”
மீண்டும் அழுத்திக் கூற மறுத்துப் பேச வந்தவள் அவனது முறைப்பில் வாய்க்குள் முனகிக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
சென்று அந்த ஆடைப் பையை திறந்து கறுப்பு நிறத்திலாலான பெண்கள் அணியக் கூடிய டெனிமையும்,சதுரம் போட்ட வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலாலான ஷேர்ட்டையும் கையில் எடுத்தவள் முகத்தை சுளித்தாள்.
“இத போட்டுட்டு எப்பிடி வெளில போக முடியும்”
அவள் அவ்வாறு நினைத்துக் கொண்டாலும் அணிந்துக் கொண்டு வெளியே வரவில்லை என்றால் அவன் முறைத்தே பரலோகம் அனுப்பக் கூடும் என்றப் பயத்தில் அந்த ஆடையை அணிந்தாள்.
கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தவள் ஒரு நிமிடம் திகைத்தாள்.
இது தான் தானா இல்லை வேறு யாராவதா என எண்ணி,
அந்த டெனிம் அவளுக்கு அளவாகப் பொருந்தியிருக்க அந்த ஷேர்ட் கூட அவளது உடலமைப்பைக் காட்டாத வகையில் சற்று பெரிதாகத் தான் இருந்தது ஆனால் அவளுக்கு ஏற்ற விதத்தில்.
“நாம தானா இது”
சுற்றி தன்னைத் தானே பார்த்தவள் தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.
குளித்து இருப்பதால் முடியை பின்னால் விட்டு இரண்டு பக்கங்களிலும் இருந்து சிறு முடிக்கற்றைகளை ஒரு கிளிப்பில் அடக்கியவள் கறுப்பு நிறப் பொட்டை வைத்து விட்டு அங்கிருந்த குங்குமச் சிமிழில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றி வகுட்டில் வைத்துக் கொண்டாள்.
அழகாக இருப்பது போன்ற பிரம்மை அவளது கண்களுக்கு.
மையிடாத அழகிய மான் விழிகளில் இருந்த இமை முடிகள் நீண்டு குடைப் போல் இருக்க..
செதுக்கி வைத்தாற் போன்ற அந்த நீண்ட மூக்கில் மூக்குத்தியும் தனி அழகே..
குளித்து விட்டு வந்திருப்பதால் இதழ்கள் ஈரமாகியிருந்தது.
இதழுக்கு இடப்பக்கத்தில் சற்று கீழாக இருக்கும் மச்சம்.
கன்னங்களோ ஒப்பனைகள் இன்றி மஞ்சள் பூசி குளித்ததால் மினுங்கியது.
மொத்தத்தில் தனி அழகு தான் இவள்.
“ம்ம் பரவல்ல இப்போ இவரோட முன்னுக்கு இப்பிடியா போய் நிக்கனும்”
தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
அவன் வாங்கிக் கொடுத்த சேலையை அணிந்து அவன் முன் செல்ல வராத தயக்கம் அவன் வாங்கிக் கொடுத்த பேன்ட் ஷேர்ட்டினை அணிந்துக் கொண்டு போய் நிற்க நினைக்கும் போதே வந்தது.
“இன்னும் எவ்ளோ நேரம்”
அவன் வரவேற்பறையில் சலித்துக் கொண்டுக் கூறுவது அறையில் இருக்கும் இவளுக்குக் கேட்க
“வேற வழியில்ல போகனும்”
நினைத்தவள் தயங்கித் தயங்கி மெதுவான எட்டுக்களால் வரவேற்பறையை வந்தடைந்தாள்.
அவனோ தயங்கித் தயங்கி மெதுவாக வருபவளையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸோபாவில் அமர்ந்து முழங்காலில் இரண்டு கைளையும் கோர்த்து சற்று முன்னோக்கி அவன் அம்ர்ந்திருந்த விதம் ரசனையாகத் தான் இருந்தது.
ஆனால் அவனவளோ தலையைக் கூட நிமிர்த்திப் பார்க்கவில்லையே.
அவள் அருகில் வந்து தலையை குனித்துக் கொண்டவள் அவன் ஏதாவது கூறுவான் என நினைத்திருக்க.
“சரி வா போலாம்”
அவன் ஒன்றும் கூறாமல் எழுந்து செல்ல இவள் தான் விழித்தாள்.
“என்ன ஒன்னுமே சொல்லாம போறாங்க”
என எண்ணியவள் தன்னை மேலிருந்து கீழாக இன்னுமொரு தடவைப் பார்த்துக் கொண்டாள்.
“அவ்வளவு கேவலமாவா இருக்கேன் இல்லையே”
என நினைத்துக் கொண்டு அவனைப் பின்த் தொடர்ந்தாள்.
காரில் போகும் போதும் தான் அவன் ஏதாவது கூறுவான் என அவனது முகத்தைப் பார்ப்பதும் பின் திரும்புவதுமாக அவள் இருக்க,
அது அவனுக்கு புரிந்தாலும் எதுவும் கேட்கவில்லை என்பதை விட அவளைப் பார்க்கவேயில்லை அவன்.
“உஃப்”
அவன் இதழ் குவித்து ஊத திரும்பி அவனைப் பார்த்தாள் அவள் ஆனாலும் அவன் பார்க்கவில்லை.
சிறிது நேரத்தில் கார் ஓரிடத்தில் நிற்க இவள் அவ்விடத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனது குரலில் தன்னிலை அடைந்தவள்.
“இறங்கு”
அவன் கூற திரும்பி அவனைப் பார்த்தவள்
“இங்க.. எதுக்கு”
மெதுவாகக் கேட்க திரும்பி அவளைப் பார்த்தவன்.
“தோச சுட்றதுக்கு”
கேலியாகக் கூறினான்.
அவர்கள் வந்திருந்த இடமானது ட்ரைவிங் ஸ்கூல் ஒன்று.
*****
தொடரும்..❤
இந்த கதைல கதாப்பாத்திரங்களோட குணங்கள நா வேறையா சொல்லல்ல கதை போக்குல உங்களுக்கே புரிஞ்சியிருக்கும்.
அப்பிடி உங்களுக்கு புரிஞ்சியிருக்குறத சொல்லுங்க தங்கம்ஸ்..
அப்போ தான் எனக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்
💜அஷு💜