அத்தியாயம் 27

அத்தியாயம் 27

 

“இங்க எதுக்குக் கூட்டிட்டு வந்திங்க”

அவனிடம் கேட்க அவன் எங்கு பதில் கூறினான் காரில் இருந்து இறங்கி வெளியே சென்று இவளது கார்க் கதவைத் திறந்து விட்டான்.

“இறங்கு”

அவன் கண்ணசைத்துக் கூற மறுக்க முடியாமல் இறங்கினாள் நேத்ரா.

“இங்க எதுக்கு”

அவள் கேட்க வருவது புரிந்தது போல் ஆள்க்காட்டி விரலை வாயில் வைத்து ‘ஷ்ஷ்’ என்றவன் தலையசைத்து விட்டு முன்னால் நடக்க அவனைப் பின்த் தொடர்ந்தாள் அவனது மனையாள்.

உள்ளே சென்று ஒருவரிடம் அவன் கை குலுக்கிப் பேசினான்.

“இவங்களா”

அந்நபர் நேத்ராவின் பக்கம் திரும்பிப் பார்த்து விட்டு அக்ஷரனிடம் கேட்டார்.

“யஸ்.. ஷீ ஈஸ் நேத்ரா மை வைஃப்”

அவளை என்றும் போல் அறிமுகப்படுத்த இங்கு காரிகையவளது மனதினிலோ சொல்லற்ற உணர்வு.

“ஓகே..”

“பேஸிக்ல இருந்து சொல்லிக் கொடுக்கனும்”

“நீங்க வொர்ரி பன்னிக்க வேணாம் மிஸ்டர் அக்ஷரன் நாங்க பேஸிக்ல இருந்து சொல்லிக் கொடுத்துட்டு ட்ரைவிங் எக்ஸாம்க்கு ப்ரபெயார் பன்னிட்டு நாங்களே லைசன்ஸ்க்கு  அப்ளை பன்னுவோம்”

அவர் கூற தலையசைத்தான் அக்ஷரன்.

இவள் தான்.

‘என்னடா நடக்குது இங்க’

என்ற ரீதியில் அங்கு நின்றுக் கொண்டிருந்தாள்.

“வீக்கென்ட்ல தான் ட்ரைனிங் இருக்கு”

அந்நபர் கூறினார்.

“ஓகே.. அப்ளிகேஷன்ஸ் என்ட் ஃபீஸ்”

அக்ஷரன் வினவினான்.

“ஓஹ் ஓகே.. நா தாரேன்”

கூறியவன் அங்கு மேசையில் இருந்த விண்ணப்பப் படிவத்தை எடுத்து அக்ஷரனிடம் நீட்டினார்.

அதைப் பெற்றுக் கொண்டான் அக்ஷரன்.

“ஃபீஸ் ஒரு க்ளாஸ்க்கு எழுபத்தைந்தாயிரம் அட்மிஷன்க்கு ஒரு லட்சம்”

அந்நபர் கூற அக்ஷரன் தலையசைத்தான்.

நேத்ரா தான் அதிர்ந்து போய் அக்ஷரனைப் பார்த்தாள்.

“என்னாது.. எழுபத்தையாயிரமா.. யப்பா இது என்ன பகல்லையே கொள்ளையடிக்குறாங்க அதோட ஒரு லட்சத்தையும் கேக்குறாரு..இவர் எங்க அவ்ளோ குடுக்கப் போறாரு”

திறந்த விழியை மூடாமல் தனக்குள் நினைத்துக் கொண்டாள் நேத்ரா.

விண்ணப்பப் படிவத்தை அக்ஷரனே பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுத்து விட்டு முற்பணம் செலுத்துவதற்காக தனது வாலட்டை எடுத்து தனது கார்ட்டை அவரிடம் நீட்ட நேத்ரா அவசரமாக அவனுக்கு அருகில் சென்று எம்பி அவனது காதுக்குள் ரகசியமாக,

“எதுக்குங்க இவ்ளோ பணம் கட்டுறிங்க இவங்க பகல்லையே இப்பிடி கொள்ளையடிக்குறாங்க”

கிசுகிசுவென அவனது காதுக்குள் கூறினாள்.

அந்நபர் மறுபக்கம் திரும்பியிருந்த நேரத்தில் தான் இக்கூத்து நடைப்பெற்றது.

அக்ஷரனோ இரண்டடி அவளை விட்டு விலகியவன்

“கிட்ட வந்து பேசுற வேல வெச்சிக்காதே”

கடுமையானக் குரலில்க் கூற அவளது முகமோ சுருங்கிப் போனது.

“என்னமோ அவங்க மேல விழுந்தது போல இப்பிடி எரிஞ்சு விழுறாரு”

மனதினுள் நினைத்தவள் அவனை விட்டு விலகியே நின்றாள்.

பின் இருவரும் வெளியே வந்தனர்.

நேத்ரா அமைதியாக இருக்கையில் வந்து அமர அவன் அவளைப் பார்த்துக் கொண்டே வந்து காரில் ஏறி காரை எடுத்தான்.

இப்பொழுது நொடிக்கொரு தரம் அக்ஷரன் கடைக்கண்ணால் மனையாளைப் பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான்.

அவன் மனையாளோ மூடிய யன்னல் கண்ணாடி வழியே வெளியே வெறித்துக் கொண்டு வந்தாள்.

மறந்தும் அவனது முகத்தைத் திருப்பிப் பார்க்கவில்லை அவள்.

“சனி ஞாயிறுல தான் ட்ரைவிங் க்ளாஸ்”

அவன் கூற அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“இப்பிடி ட்ரஸ் தான் அதுக்குப் போட்டுப் போகனும் கன்ஃபடபளா இருக்கும்”

அவன்க் கூற அதற்கும் எந்த பதிலும் இல்லை அவளிடம் இருந்து.

“நா பேசின அதுக்கு ரியாக்ட் பன்னனும்”

அவன் அழுத்திக் கூற இவள் திரும்பி அவனைப் பார்த்தாள்

அவளது கண்களோ கலங்கி இருந்தது.

காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியவன் கலங்கிய அவள் விழிகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளும் பார்வையை அகற்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்களில் இருந்த கண்ணீர் அவளது கன்னத்தைத் தொடப் பார்க்க அவசரமாக கரத்தை எடுத்து அக்கண்ணீரைத் துடைத்து விட்டான்.

கன்னத்தைத் தொடாமலே கரைந்து போனது காரிகையவளது கண்ணீர் காளையிவனது கரத்தால்..!!

“அழாதே”

மிக மிக மிருதுவான இது வரை கேட்டிராத மென்மையான குரலில் அவன் அவளிடம் கூற ஒரு நொடி அவளது கண்கள் வியப்பில் விரிந்தது.

அவனோ அவளது விழிகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதையோ உணர்த்துவதற்கு உந்தும் அவன் விழிகள்.

எதை உணர்த்தப் பார்க்கிறது என தெரியாமல் தடுறாறும் அவள் விழிகள்.

ஒரு நொடியில் தன்னை மீட்டெடுத்தவன் காரை எடுத்தான்.

அவளும் முன்னால் திரும்பிக் கொண்டாள் அமைதியாக.ஆனால் இதயம் தாறுமாறாக துடித்தது அமைதி இன்றி.

“எதுக்கு இவ்ளோ பதட்டம்..”

யோசித்தாலும் பதில் சொல்லத் தெரியவில்லை.

கைகளை பிசைந்துக் கொண்டிருந்தாள்.உள்ளங்கை வேறு வியர்த்தது.

ஏதோ முதல்த் தடவையாக பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தால் உண்டாகுமே தடுமாற்றம்,பதட்டம்,வெட்கம் அவை அனைத்தையும் ஒத்திருந்தது அவளது செய்கை.

அவனும் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.

கை விரல்கள் ஸ்டியரிங்கை அழுத்தப் பிடித்திருந்தது.

காரில் அமைதி நிலவியது.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

அவன் காரை அப்பார்ட்மன்ட்டில் கொண்டு போய் விட்டு காரை விட்டு இறங்காமல்,

“இறங்கி உள்ள போ”

கூற எதுவும் பேசாமல் அவள் இறங்கியதும் காரைக் கிளப்பிக் கொண்டுச் சென்றான்.

இவளோ போகும் காரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு பெருமூச்சொன்றை விட்டு விட்டு உள்ளே சென்றாள்.

****

அம்மூன்று இளைஞர்களும் சுருண்டு படுத்து இருந்தனர்.

தரையை சுட்டெரித்துக் கொண்டிருந்தான் கதிரவன்.

அவ் வெப்பத்தின் வீரியத்தாலும்,மேலும் வலியின் வீரியத்தாலும் முகத்தை சுருக்கிக் கொண்டேப் படுத்துக் கொண்டிருந்தனர் அம்மூவரும்.

உள்ளே வந்தவனோ இடது பக்கமாக தலை சாய்த்து இடதுபுறமாக இதழ் வளைத்து அவர்களைப் பார்த்தவன்.

பேன்ட் போக்கெட்டினுள் இரண்டு கைகளையும் விட்டு தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான்.

ஓரிரண்டு வினாடிகள் அவ்வாறு நின்றுக் கொண்டிருந்தவன்.

“ச்ச்சுச்சு”

பரிதாபப்பட்டுக் கொண்டேஅவர்களை நெருங்க. அவன் வந்துவிட்டான் என அறிந்த போதும் உடலை அசைக்க கூட முடியவில்லை அம்மூவராலும்.

கடினப்பட்டு கண்களைத் திறந்தவர்கள் அவனை பீதியாகப் பார்த்தனர்.

அடுத்து என்ன செய்யப் போகிறான் இவன்?

என்ற பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது அவர்களது விழிகளில்.

அவனோ அவர்களிடம் வந்து குனிந்தவன் இடது தொடையில் கையைக் குற்றி கன்னத்தில்க் கை வைத்து அவர்களை பரிதாபமாகப் பார்த்தான்.

“உங்கள பார்க்கவும் பாவமா இருக்கே…”

வருத்தப்பட அவர்களது கண்களோ இன்னும் பயத்தை தத்தெடுத்துக் கொண்டது.

அவன் அனுதாபப்படுவது அன்பினால் அல்லவே??

“ஒன்னு செய்வோம் நீங்க இங்க இருந்து போய்டுங்க எனக்கும் இப்போ போரிங்கா இருக்கு உங்கள வெச்சி விளையாட்றதுக்கு”

அவன் தலை சாய்த்து வினவ.

மூவரது கண்களும் ஒரு நொடி பளிச்சிட்டது ஆனால் மறுநொடியே அச்சத்தில் உச்சத்தை அடைந்தது.

“ம்ம் என்ன பன்னலாம் உங்களால எழும்பி நடக்கவே முடியல அப்புறம் எப்பிடி இங்கிருந்து போவிங்க”

தாடையில் கை வைத்து அவன் யோசிக்க இவர்களோ பேச முடியாமல் அவனையே அச்சமாகப் பார்த்தனர்.

ஏனென்றால் பேச உதவும் நாவைத்தான் முன்தினம் சூடு வைத்து இழுத்து விட்டானே..!!

பின் எங்கனம் பேச அம்மூவரும்..?

“ஒரு வேல பன்னுவோம் நீங்க எழும்பி நடக்கவும் தேவையில்ல ஆனா இங்கிருந்து ஒரேடியா போய்டலாம்”

அவன் கண்ணடித்து ‘ஒரேடியா’ என்ற வார்த்தையை அழுத்திக் கூறிய விதத்திலையே அம்மூவரதும் இரத்த அழுத்தம் எகிறியது ஏகத்துக்கும்.

எழும்பியவன் அங்கு இருந்த போத்தல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து அவர்களை சுற்றி அப்போத்தலில் உள்ள திரவத்தை ஊற்ற நாசியின் உதவியால் அது என்னவென்று உணர்ந்தவர்கள் அவனை அதிர்ந்து போய் பார்த்தனர்.

அது பெற்றோல்,

“ம்ம்.. அஅஆ”

பேச முடியாமல் கத்த அவர்கள் கத்துவதை புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டே அவர்களை சுற்றி பெற்றோலை ஊற்றி முடித்தான்.

பின் அங்கிருந்த தீப்பெட்டியை எடுத்தவன் ஒரு நொடி அம்மூவரையும் விழிகள் சிவக்க வெறித்தவன் அத்தீக்குச்சியை வீசி விட அது பற்றியெறிந்தது பெற்றோலின் மேல்.

அம்மூவருமோ தட்டுத்தடுமாறி எழுந்து நின்று.. கையை அசைத்துக் கதறினர் காப்பாற்றுமாறு ஆனால் இரும்பினாலான இருதயத்தைக் கொண்டிருந்தவனோ இடதுபுறமாக இதழ் வளைத்து அவர்களையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாளைக்கு உயிரோட இருந்தா பாக்கலாம்.. உங்களுக்கு இது ஒரு ஒப்ஷன் இங்க இருந்து தப்பிக்குறதுக்கு.. யூஸ் இட் வெல்.. குட் பாய்”

கண்ணடித்துக் கூறியவன் அவர்களது கதறல் சத்தம் காதில் விழ சிறுபுன்னகையுடனே இருபக்கமும் தலையாட்டிக் கொண்டு அங்கிருந்து அகன்றான்.

அம்மூவரோ காப்பாத்துங்கள் எனக் கூட கூற முடியாத அவலநிலையில் கதறிக் கொண்டிருந்தனர் கண்களில் கண்ணீர் வடிய.

 

******

இரவு ஒன்று முப்பது என அக்காடிகாரம் அழுத்திக் கூறிக் கொண்டிருக்க வீட்டின் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டு ஸோபாவில் நடுவில் காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் நேத்ரா.

பகலேக் கூறி விட்டுத் தான் சென்றான் வர தாமதமாகும் என்று.. ஆனால் எவ்வளவு தாமதமாகும் எனக் கூறவில்லை.

இரவுக்கும் சேர்த்து சமைத்து விட்டு சாப்பிடுமாறுக் கூறி விட்டுச் சென்றிருக்க இவள் சாப்பிடவில்லை அவன் வந்தபின் சாப்பிடலாம் என எண்ணியிருக்க அவளது கணவன் தான் வந்தபாடில்லை இன்னும்.

அழைப்பு ஒன்றுக்கு நான்கு தடவை எடுத்திருக்க அவள் கணவனோ ஒரு தடவைக் கூட அழைப்பை ஏற்கவில்லை என்பது வேறு இவளது பயத்தை அதிகரித்திருந்தது.

யாரிடம் செல்லலாம் தேவிப்பிரியாவிற்கு அழைத்துக் கூறலாமா? என எண்ணியவள் வேண்டாம் அவர்களை இந்நேரத்தில் எதற்கு தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து அவ்வெண்ணத்தை விட்டவள்.

நேரம் செல்ல செல்லத் தான் பயமாக இருக்கின்றது.

“எங்க போனாங்க..”

மனம் திரும்பத் திரும்ப அதை மாத்திரம் தான் நினைத்தது.

அவனை இப்பெழுதே பார்க்க வேண்டும் என மனம் அடித்துக் கொள்ள கண்கள் கலங்கியது.

“எங்க போய் இருப்பாங்க…”

நினைத்துக் கொண்டவளது உடல் வேறு நடுங்க ஆரம்பித்தது.

தனிமை வேறு அச்சுறுத்தியது.

பல்லியின் சிறு சத்தத்தில் இருந்து வீசிச் செல்லும் தென்றலின் மொழி கூட பயத்தையே வரவழைத்தது.

“வந்துடுங்க வந்துடுங்க”

வாய் அதையே ஜபம் செய்தது.

கதவு திறக்கப்படும் சத்தத்தில் விழி உயர்த்திப் பார்த்தவள்.

அங்கு அவளது கணவன் தான் கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே வந்திருந்தான்.

புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தவன் ஏதோ சொல்ல வரவும்.

எப்பொழுதோ அவனைத் தனது தளிர்க் கரங்களால் அவளது மனைவி இறுக அணைத்திருந்தாள்.

இவனோ அதிர்ந்துப் போய் அவளைக் குனிந்துப் பார்க்க அவளோ உடல் நடுங்க அவனுள் இன்னும் ஒன்றிப் போனாள்.

*******

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top