அத்தியாயம் 25

மாலத்தீவில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டு இருந்தனர்… செல்லும் போது இருந்த இடைவெளி வந்த பின்னர் இருவருக்கும் இடையே காணாது போயிருந்தது…

 

அதை கண்டு திருப்தி அடைந்து கொண்டார் அதியமான்..

 

சொல்லப்போனால் அந்த இடைவெளியை குறைத்தது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தாள் அவந்திகா..

 

அதிரூபனுக்குத் தான் அவளை கண்டாலே பிடிக்காதே ..ஆனால் அவனை வெறுப்பேற்றுவது மட்டும் தான் தனது குறிக்கோள் என்பது போல வேண்டும் என்றே அவனுடன் ஒட்டி உறவாடி அவனை எரிச்சல் படுத்தலானாள் பெண்ணவள் …

 

காலை உணவு அவனுக்கு அருகிலேயே அமர்ந்து பார்த்து பார்த்து பரிமாறுபவள் சில சமயம் சட்டென ஊட்டி விட ஆரம்பித்துவிடுவாள்..

 

அதிரூபனுக்குத்தான் கோபம் பொத்துக் கொண்டு வரும்.. ஆனால் அவர்களுக்கு அருகே சிரிப்புடன் அமர்ந்து இருக்கும் அதியமானை கண்டதும் வேறு வழி இல்லாத பல்லை கடிப்பதற்கு பதிலாக மொத்த பல்லையும்  காட்டிக் கொண்டு இருப்பான் அதிரூபன் …

 

போதாது குறைக்கு அலுவலகத்திற்கு அவனுடனே ஒன்றாக காரில் ஏறிக் கொள்வாள்…

 

கடுப்பான அதிரூபனோ,

 

” உனக்கு வேற கார் அரேஞ்ச் பண்ணி தரேன்.. இனி நீ அதுல வா..என்கூட நீ வரது எனக்கு பிடிக்கலை…” என்றதும் வேண்டுமென்றே அவன் புறம்‌ சாய்ந்து  நெருங்கி வந்து ,

 

“என்ன அதிகுட்டி என்னை….” என பேச ஆரம்பிக்கவும் சட்டென அவள் முன்பு இரு கரங்களையும் கூப்பியவன்,

 

” போதும் நானே உன்ன டிராப் பண்றேன்.. போதுமா ..?..தயவு செஞ்சு என்னை அதி குட்டி பன்னிக்குட்டின்னு‌ மட்டும் கூப்பிட்டு  சாகடிக்காத…கேட்டாலே எரிச்சலா வருது..”  என எரிந்து விழுந்தவன் காரை கிளப்பி இருந்தான்..

 

அவனது எரிச்சலை கண்டு உள்ளுக்குள் குதூகலமானது அவந்திகாவிற்கு…

என்னவெல்லாம்  சொல்லி அவளை பயமுறுத்தி இருப்பான்…

 

 

அலுவலகம் வந்ததும் இருவரும் ஒன்றாக இறங்கி வருவதை கண்டதும் அங்கிருந்து ஊழியர்கள் இருவருக்கும் வணக்கம் வைத்தனர்…

 

சிறு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டவர்கள் ஒன்றாகவே லிப்டிற்குள் ஏறிக்கொண்டனர்..

 

அதிரூபன் பேண்ட் பாக்கெட்டில் ஒரு கரத்தை நுழைத்தவாறு மறுக்கரத்தில் கைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தான்…

 

அவந்திகா அமைதியாக தான் இருந்தாள்.. லிஃப்ட் நின்றதும்  இருவரும் வெளியேறி விட அவந்திகா எப்போதும் போல மேனேஜர் அறைக்குள் நுழைந்து கொண்டால்..

 

அதிருபனும் அவனுடைய அறைக்கு சென்று விட்டான் ..

 

சிறிது நேரத்தில் ஃபைல் ஒன்றை காட்டுவதற்காக அதிரூபன் அறைக்குள் நுழைந்து இருந்தாள் அவந்திகா…

 

தொழில் என வந்ததும் இருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு வேலையில் கவனமாகவே இருந்தனர் …

 

அந்த கோப்பையை பற்றி பேசியதும் சரியென அறையில் இருந்து கதவை திறந்த கணம் அவந்திகாவின் கண்ணில் அங்கு வந்து கொண்டிருந்த ரேவந்த் தான் விழுந்தான்…

 

சட்டென மீண்டும் கதவை மூடிவிட்டு அதிரூபனை நோக்கி வேகமாய் சென்றவள் அங்கு  கோப்பையை பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் வருவதை தலை உயர்த்தி கண்டு விட்டு முகம் சுருக்கி பார்த்தவாறு ,

 

“என்ன ஆச்சு ..??” என அவன் முழுதாய் கூட முடிக்கவில்லை சட்டென அவன் அமர்ந்து இருந்த  இருக்கையை தன் புறம்  திருப்பி அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டவள் கழுத்தில் இரு  கைகளையும் போட்டு அவனை தன் புறம் நெருக்கி உதட்டோடு உதடு பொருத்துப்போன நேரம் சட்டென கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இருந்தான் ரேவந்த் …

 

அவந்திகாவின் செயலில் அதிரூபனின் இதயமே வெளி வந்து இருக்கும் போல…அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவத்தை அசால்ட்டாக செய்து இருந்தாள் அவள்…

 

அக்காட்சியை கண்ட ரேவந்தின் முகம் அதிர்ச்சியின் உச்சத்தை காட்டியது…

 

ஆவென்று வாயை பிளந்து கொண்டு அவர்களை பார்த்தவன் உறைந்து போய் விட்டான்…

 

நொடியில் சுதாரித்துக் கொண்ட அவந்திகா ஏதோ அப்போது தான் ரேவந்தை பார்ப்பது போல அவனை பாவமாய் பார்த்து வைத்தவள்,

 

” என்ன ரேவந்த்.. ஒரு ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் தனியா இருக்கும் போது இப்படி தான் ரூம்குள்ள கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம நுழைவியா?..

 

என்னவோ சொல்லுவாங்களே..? ஹான்.. திறந்து வெச்ச வீட்ல ஏதோ ஒன்னு நுழையுதுனு.. அது மாதிரி இருக்கு..”  என இறுதி வாக்கியத்தை வேண்டும் என்றே நக்கல் கலந்த குரலில் கூறிடவும் சட்டென தன் சுயம் அடைந்த ரேவந்த் பல்லை கடித்துக்கொண்டு அவளை பார்த்த ரேவந்த்.. அவள் ஒட்டி அமர்ந்து இருந்த அதிரூபனை அனல் கக்கும் விழிகளால் சுட்டெறித்தான்…

 

அதிரூபனுக்கு அந்நேரத்தில் எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே புரியவில்லை.…

 

ரேவந்தை தான் அதிர்ந்து போய் பார்த்து வைத்தான் …அவந்திகா சாவகாசமாக அவன் தோள்களைப் பிடித்துக் கொண்டு,

 

“ப்ச்… பாரு நீ வந்ததால என்  அதிகுட்டி ஷாக் ஆயிட்டாரு… நல்ல ரொமான்ஸ் நடந்திருக்கும்.. எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டே..!..ச்சை..”  என சலிப்புடன் எழுந்து கொண்டவள் அதிரூபனை திரும்பிப் பார்த்து அவனது கன்னத்தை பிடித்து ஆட்டியவாறு,

 

” எல்லா ரொமான்ஸ்யும் நைட்டு வச்சுக்கலாம் அதி குட்டி..”  என செல்லம் கொஞ்சி விட்டு நகர்ந்து ரேவந்த்தை நோக்கி வந்தவள் அவனை  எள்ளலாக பார்த்து விட்டு அறையில் இருந்து வெளியேறி விட்டு இருந்தாள்… 

 

அவள் சென்ற அடுத்த கணம் அதிரூபனை நோக்கி பாய்ந்து சென்றான் ரேவந்த்…

 

” என்ன நடக்குது அதி இங்க…?? அவ என்னடானா உன் மடியில உட்கார்ந்திட்டு உன்னை கிஸ் பண்ண வரா…??..நீயும் அசையாம இருக்குற…?? ” என அவன் பாட்டிற்கு எகிறவும் அதிரூபன் திணறியவாறு,

 

“இல்ல…ரேவந்த்… அவ.. சடனா..அது.. நடந்துருச்சு.. அதான் எனக்கு.. என்ன பண்றதுன்னு தெரியல..”  என தன்னிலை விளக்கத்தை தர முயன்றான்…

 

ஆனால் அதை எதையும் கேட்காத ரேவந்தும் தலையை மறுப்பாக அசைத்தவாறு,

 

” என்னென்னவோ நடக்குது.. யாரை நம்பறதுனே எனக்கு தெரியல.. ஆனா ஒன்னு மட்டும் நல்லா புரியுது ரூபன்…” என அதிரூபனின் விழிகளை மாறி மாறி பார்த்த ரேவந்த் ,

 

“நாம சந்தோஷமா இருக்கணும்ங்றதுக்காக தான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன்…  ஆனா இப்ப ..?? எப்போ உனக்கு அவ கூட கல்யாணம் நடந்துச்சோ அன்னிலருந்து நம்ம ரெண்டு பேரோட சந்தோசமே போயிடுச்சு ..

 

எனக்கு ரொம்ப பயமா இருக்கு ரூப்…  காலம் பூரா இப்படியே நாம் இருந்து விடுவோமானு..?..

 

உன் கூட இருந்த அந்த பழைய நாட்களை எல்லாம் நான் ரொம்பவே மிஸ் பண்றேன்.. என்னோட அதி என்னை விட்டு தூரம் போயிட்டானோங்கற மாதிரி ஃபீல் ஆகுது…  என்னால எதும் பண்ண முடியல ..

 

ரொம்பவும் என்னை ஹர்ட் பண்ணிக்கிட்டு இருக்கா அந்த அவந்திகா.. அவளுக்கு நீயும் சப்போர்ட் பண்றது தான் என்னால ஏத்துக்கவே முடியல..”  என கண் கலங்க கூறியவன்  அதிரூபனை நோக்கி வலி மிகு பார்வையை வீசிவிட்டு அறையில் இருந்து வெளியேறி விட்டான்…

 

காதலி ஒரு புறம் மனைவி ஒரு புறம் என இருவரையும் பார்த்தவாறு தலையை பிடித்தபடி இருக்கையில் அமர்ந்து கொண்டான் அதிரூபன்..

அவனுக்கு யாரை எப்படி சமாதானம் செய்வது என்ன விளக்கம் அளிப்பது என்று தெரியவில்லை…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top