அத்தியாயம் 34

அத்தியாயம் 34

அக்ஷரன் வெளியே சென்றிருக்க நேத்ரா வீட்டில் இருந்தாள்.

சிறிது நேரத்தில் தேவிப்பிரியா வந்தாள்.

“என்ன கொஞ்ச நாளா காணல்ல”

நேத்ரா கையில் இருந்த தண்ணீர் கிளாசை கொடுத்துக் கொண்டு கேட்டாள்.

“இல்லடா கொஞ்சம் உடம்புக்கு முடியல ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்”

சோர்வாகக் கூறினாள்.

“என்னாச்சு”

பதறினாள் நேத்ரா.

“ஒன்னும் இல்லடா… கொஞ்சம் கால் வீக்கம் அதோட உடம்பெல்லாம் வலி அதான் டாக்டர்கிட்ட போனேன் அப்போ அட்மிட் பன்னிட்டாங்க ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்து நேத்து தான் வீட்டுக்கு வந்தேன்”

“எனக்கு விஷயமே தெரியாது”

நேத்ரா கவலையாகக் கூறினாள்.

“அதுக்குத் தான் வீட்டுக்கு வரனும்ங்குறது.. இல்லன்னா நா செத்துப் போய் இருந்தாலும் சொர்க்கத்துல தான் மீட் பன்னியிருப்போம் நீ அது வரைக்கும் என்னைய தேடி இருக்க மாட்ட”

தேவிப்பிரியா நக்கலாகக் கூறி சிரிக்க.

“எதுக்கு இப்பிடியெல்லாம் பேசுற”

கடிந்துக் கொண்டாள் தோழி.

“வேற என்ன நீ தான் எங்க வீட்டுக்கெல்லாம் வரமாட்டேங்குறியே..”

அவள் ஆதங்கமாகக் கூற.

“சரி இப்போ போலாம் வா”

நேத்ரா எழும்பினாள்.

“பார்ர்ரா..பெரிய ஆளு தான் நீங்க உங்க புருஷன்கிட்ட பர்மிஷன் கேக்கனும்ல புருஷப்பத்தினி”

அவள் நியாபகப்படுத்த.

“இரு ஃபோன் பன்னி கேக்குறேன்”

கூறியவள் தனது கணவனுக்கு அழைப்பை எடுத்தாள்.

ஓரிரண்டு ரிங்கில் அழைப்பை ஏற்றான் அவளது கணவன்.

“என்ன விஷயம் சொல்லு”

அன்று போல் இன்றும் அவனது குரலில் உள்ள பதட்டத்தை இவளது மனம் குறித்துக் கொண்டது.

“தேவிப்பிரியாவோட வீட்டுக்கு போய்ட்டு வரட்டுமா”

தயக்கமாக கேட்டாள்.

ஏனெனில் இருவரது கணவன்மாரும் பேசிக் கொள்வதில்லை என்பது இவளும் அறிந்த விடயமாயிற்றே.

“ம்ம் ஓகே.. அதோட இன்னைக்கு ஈவினிங் ரெடியா இரு.. கார அனுப்புறேன்”

அவன் கூறினான்.

“நீங்க எங்க போகப் போறிங்க”

எங்கு போவதற்கு என்பதைக் கேட்கவில்லை அவன் எங்கு செல்லப் போகிறான் என்பதே பெரும் யோசனை.

“நா எங்கயும் போகல்ல நீ ரெடியாகி இரு சரியா நாலு மணிக்கு கார் வந்துடும்”

அடுத்த நொடி அழைப்பைத் துண்டித்தான்.

“எங்க போறோம்ன்னாச்சும் சொல்றாரா எல்லாம் அவரோட விருப்பத்துக்குத் தான் நடக்குது”

மனதுக்குள் புலம்பத் தான் முடிந்தது.

இதுவே மனம் ஒத்த தம்பதிகளாக இருந்தால் கணவனுக்கு மீண்டும் அழைத்து இப்புலம்பலை புலம்பியிருப்பாளோ என்னவோ..!!

வரவேற்பறைக்கு வர தேவிப்பிரியா இருந்தாள்.

“என்ன பர்மிஷன் கிடைச்சிருச்சா”

தேவிப்பிரியா நக்கலாகக் கேட்டாள்.

“ம்ம் ஆமா”

நேத்ரா புன்னகைத்தாள்.

“சரி வா போலாம்”

அவள் கூறி எழுந்து முன்னால் செல்ல நேத்ராவும் மொபைலை எடுத்துக் கொண்டு துப்பட்டாவை சரியாகப் போட்டுக் கொண்டு தேவிப்பிரியாவிற்கு பின்னால் சென்றாள்.

*****

தேவிப்பிரியா அவளது வீட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே செல்ல நேத்ராவும் அவளுடன் சென்றாள்.

“வெல்கம் டு மை வீடு..”

தேவிப்பிரியா கூறி புன்னகைக்க நேத்ராவும் புன்னகைத்தாள்.

நேத்ராவினது வீட்டைப் போலவே தான் இவர்களது வீடும் அமைந்திருந்தது.

அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது அவ்வீடு.

“ரொம்ப அழகா இருக்கு வீடு”

நேத்ரா சுற்றிப் பார்த்துக் கொண்டேக் கூறினாள்.

“ம்ம் இப்போ ரொம்ப நீட்டா இருக்கும் பேபி வந்து ஓடி ஆடி விளையாடினதுக்கப்புறம் இருக்கு ஆப்பு..எல்லாம் இழுத்துப் போட்டு இருக்கும்ல”

அவள் வயிற்றைத் தடவிக் கொண்டு முகம் கொள்ளாப் புன்னகையுடன் கூறினாள்.

நேத்ராவும் புன்னகைத்தாள்.

அவர்களது வரவேற்பறை சுவற்றில் ஒரு சிறு பிள்ளையின் கார்ட்டூன் படத்திற்கு மாலை இடப்பட்டிருந்தது.

நெற்றி சுருக்கி அதைப் பார்த்த நேத்ரா அதுக்கு அருகில் சென்று தேவிப்பிரியாவைத் திரும்பிக் கேள்வியாகப் பார்க்க அவளது பார்வையை உணர்ந்த தேவிப்பிரியாவும் வலியுடன் புன்னகைத்தாள்.

“என்ன தான் நா திரும்பவும் அம்மாவாகினாலும்…. என்னோட முதல் கொழந்த என்கிட்ட இல்லயே..”

உதட்டைப் பிதுக்கி அவள் கூற நேத்ராவும் கவலையாக தேவிப்பிரியாவை வேதனையாகப் பார்த்தாள்.

“ச்ச்ச பாரு.. வீட்டுக்கு வந்தவக்கிட்ட சும்மா தேவையில்லாத எல்லாம் பேசிக்கிட்டு நா ஒரு மடச்சி”

அவள் தலையில் அடித்துக் கொண்டு கூறினாள்.

இப்போவாச்சும் ஒத்துக்க மனசு வருதே பெரிய விஷயம் தான்”

நேத்ராவும் கதையை மாற்றுவதற்காக புன்னகைத்துக் கொண்டு கூற தேவிப்பிரியா நேத்ராவைப் பார்த்து போலியாக முறைத்தாள் இடுப்பில் கை வைத்து.

“இரு.. என்னோட பையன் வரட்டும் அவன வெச்சே உன்ன ஓட ஓட வெரட்டுறேன்”

தேவிப்பிரியாக் கூற.

நேத்ரா புன்னகைத்தாள்.

“இல்ல இல்ல உன்ன வெரட்டக் கூடாது.. உன்னோட மகள்ல லவ் டாச்சரரல வெரட்ட வைக்குறேன்”

தேவிப்பிரியா கூற நேத்ரா புரியாமல் பார்த்தாள்.

“எனக்கு எங்க மகள் இருக்கா”

அவளிடம் கேட்க.

“இன்னும் ஒரு வருஷத்துல சமத்தா என்னோட பையனுக்கு பொண்டாட்டிய பெத்துக் கொடுத்துடு”

தேவிப்பிரியா அசால்ட்டாகக் கூற இவளுக்குத் தான் என்னவோ போல் ஆகியது.

“ஏய் என்ன ஓகேயா”

தேவிப்பிரியாக் கேட்க.

“என்ன பேச்சு இது”

வெட்கத்தால் சிவந்த கன்னத்தை மறைக்க மறுபக்கம் திரும்பிக் கொண்டாள் நேத்ரா.

“என்ன பேச்சா.. ஹெலோ மேடம் நீங்க இன்னும் ஸ்கூல் பொண்ணு இல்ல கல்யாணமாகிருச்சு..”

தேவிப்பிரியா கண்ணடித்துக் கூறி சிரிக்க நேத்ரா தலையைக் குனித்துக் கொண்டாள்.

“வீட்டுக்கு வந்தவங்களுக்கு காஃபி குடுக்குற பழக்கம் எல்லாம் இல்லையா”

நேத்ரா அவளது பேச்சில் உண்டான வெட்கத்தை கடினப்பட்டுத் தள்ளி வைத்து விட்டு தேவிப்பிரியாவிடம் கேட்டாள்.

“அட ஆமால்ல.. காஃபி குடிக்கிறியா.. இல்லன்னா ஐஸ்கிறீம் இருக்கு சாப்ட்றியா”

தேவிப்பிரியா கேட்டாள்.

“ஐஸ்கிறீம் ஓகே..”

முகம் பளிச்சிடக் கூறினாள் நேத்ரா.

“ஐஸ்கிறீம்ன்னா புடிக்குமா என்ன”

தேவிப்பிரியா குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்துக் கொண்டுக் கேட்டாள்.

“புடிக்குமாவா அவ்ளோ புடிக்கும்… ஆனா இப்போ ஆறேழு வருஷமா சாப்பிடவே இல்ல”

நேத்ராவினது குரல் சோகமானது.

“ஏன்டா”

ஐஸ்கிறீமை கப்பில் போட்டுக் கொண்டு வந்து நேத்ராவிடம் நீட்டிக் கொண்டுக் கேட்டாள்.

“அது… நா வயசுக்கு வந்த டைம் ஒரு தடவ ஐஸ்கிறீம் சாப்டேன்.. அப்போ அவ்ளோ காய்ச்சல்ல கஷ்டபட்டேன்.. அதுல இருந்து அத்தையும் மாமாவும் ஐஸ்கிறீம கண்ணால கூட காட்ட மாட்டாங்க.. இவரு அவங்களுக்கு திட்டிட்டாரு..”

“பார்ர்ரா… அந்த நேரமே பாசம் பொங்கியிருக்கு..”

தேவிப்பிரியா கூறி புன்னகைத்தாள்

“ம்க்கும்.. பொங்கல் தான் பொங்கிச்சு.. அவரு தான் டாக்டர கூட்டிட்டு வர போய் டாக்டர் அந்நேரம் இல்லாம வெளியூர் எல்லாம் போய் கூட்டிட்டு வந்தாரு.. அந்த கோவத்துல அத்தைக்கும் மாமாக்கும் திட்டினாரு இனி இவ கண்ணுல ஐஸ்கிறீம காட்டுங்க அப்போ இருக்குன்னு திட்டினாரு… அதுக்கப்புறம் அத்தையும் மாவாவும் நா காய்ச்சல்ல கஷ்டப்பட்டத பார்த்துட்டு வாங்கிக் கொடுக்கவே இல்ல”

ஐஸ்கிறீமை நாவில் வைத்து ஆழ்ந்து அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டுக் கூறினாள்.

“அதுவும் ஒருவகை பாசம் தான்.. காய்ச்சல் கூடி ஃபிட்ஸ் எல்லாம் வரும்.. உனக்குத் தெரியும்ல.. அப்பிடி வந்தா உயிருக்குக் கூட ஆபத்தாகும்.. இப்போ நா கொடுத்தது தெரிஞ்சா உன்னோட புருஷன் என்கிட்ட போர்கொடி தூக்குவாரா..”

தேவிப்பிரியாக் கூறிப் புன்னகைக்க.

“பயப்டாதே நா சொல்ல மாட்டேன்”

நேத்ராவும் புன்னகைத்தாள்.

இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க வீட்டு காலிங் பெல் அடித்தது.

“இரு போய் யாருன்னு பாக்குறேன்”

தேவிப்பிரியா எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

அபிலேஷ் தான் வந்திருந்தான்.

“என்னங்க இந்நேரம்”

அவனுக்கு உள்ளே வர வழி விட்டு அவனுக்குப் பின்னாலே வந்துக் கொண்டு கேட்டாள்.

“இல்லடா ரொம்ப தல வலிக்குது.. அதான் ஹாஃப்அ டே லீவ்ல வந்தேன்”

அவன் கூறிக் கொண்டு உள்ளே வர நேத்ரா தயக்கமாக எழுந்து நின்றாள்.

“அட வாம்மா… இப்போவா எங்க வீடெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சுது உட்காருமா..”

அபிலேஷ் புன்னகையுடன் கூற நேத்ராவும் புன்னகைத்தாள்.

“நீங்க இருங்க நா போய் உங்களுக்கு சுட சுட சுக்கு காஃபி போட்டு எடுத்துக்கிட்டு வாரேன்.. அப்புறம் பாருங்க தலவலி பறந்தே போய்டும்..”

தேவிப்பிரியா கூறினாள்.

“அதுக்காகத் தானே ஆபிஸ்ல இருந்து வந்தேன்”

அவனும் புன்னகைத்துக் கொண்டுக் கூறினான்.

“ஹேய் நேத்ரா நீ உட்காரு நா இதோ வாரேன்”

தேவிப்பிரியா போகும் போது தனது கணவனின் தலை முடியை கலைத்து விட்டுச் செல்ல அவனும் புன்னகைத்தான்.

இருவரது பார்வைகளும் சரி செயல்களிலும் சரி காதல் மாத்திரமே..!!

இதைப் பார்த்தவளது மனதோரம் ஏக்கம் ஒரு துளி இல்லாமல் இல்லை..

“எப்பிடிடா இருக்க சந்தோஷமா பார்த்துக்குறானா என்னோட ஃப்ரன்ட்”

அபிலேஷ் சகஜமாகப் பேசினான்.

“ம்ம்”

அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள்.

“உன்கிட்ட என்ன பத்தி சொல்லியிருக்க மாட்டான்.. நானும் அவனும் காலேஜ்ல இருந்து… திக் ஃப்ரன்ட்ஸ்.. இப்போ கொஞ்ச நாளா தான் இப்பிடி”

புன்னகையுடன் சொன்னான்.

நேத்ரா தயக்கமாக அவனைப் பார்த்தாள்.

“என்னடா ஏதாச்சும் கேக்கனுமா”

அவளது தயக்கத்தைப் பார்த்து தானாகக் கேட்டான்.

“அது.. அவங்களுக்கு ஶ்ரீஜா கூட காலேஜ்ல இருந்தே பழக்கமா”

அவள் கேட்க அபிலேஷ் அவளை அதிர்ந்து போய் பார்த்தான்.

“உனக்கு எப்பிடி”

“தெரியும்ண்ணா… ஶ்ரீஜா கூட முன்னாடியே அவருக்கு பழக்கமாண்ணா”

அவள் கலக்கமாகக் கேட்டாள்..

“அது.. ஶ்ரீஜா தான் என்கிட்ட ஒரு தடவ சொன்னா நானும் அக்ஷரனும் லவ் பன்றோம் ஆனா அக்ஷரன் இப்போ என்கிட்ட முன்னாடி போல இல்ல நீங்க தான் உங்க ஃப்ரன்ட்கிட்ட பேசி எப்பிடியாச்சும் அவர பழையபடி என்கிட்ட பேச வைக்கனும். நா முதல்ல நம்பல்ல அப்புறம் அக்ஷரன்கிட்ட போய் கேட்டேன்.. ஆனா அவன் எதுவும் பேசல்ல அப்புறம் தான் அது உண்மைன்னு நா புரிஞ்சிக்கிட்டேன் ஆனா அதுக்கப்புறம் அவன் என்கூட பேசுறத நிறுத்திட்டான்.. நா ஏன்னு கேக்கவும் இனிமே என்னோட வாழ்க்கைல தலையிடாதேன்னு கறாரா சொல்லிட்டான்… இத்தனைக்கும் நா அத சும்மா நம்பல்ல ஶ்ரீஜா அவங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருக்குற போல ஒரு ஃபோட்டோவ காட்டினா அதையும் அக்ஷரன்கிட்ட உண்மையான்னு கேட்டதுக்கு உண்மைன்னு சொல்லவும் தான் நா நம்பினேன்.. ஆனா அவன் அதுக்கப்புறம்  என்கிட்ட பேசுறது இல்ல.. இப்போ உன்ன கல்யாணம் பன்னினதுக்கப்புறம் அவன் அந்த ஶ்ரீஜாகூட பேசுறது இல்ல போல”

நண்பனை விட்டுக் கொடுக்க முடியாமல் தனக்கு தெரிந்தவற்றைக் கூறினான்.

நேத்ரா எதுவும் பேசவில்லை.

“அப்போ ஶ்ரீஜா என்கிட்ட சொன்னது போல தான் இவருகிட்டயும் சொல்லியிருக்காங்க.. அவரும் அப்பிடி தான் இருந்திருக்காரு..”

மனதால் நினைத்துக் கொண்டவளுக்கோ ஏதோ உறுத்தலாக இருந்தது.

சிறிது நேரம் தேவிப்பிரியாவிடம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு தனது வீட்டிற்குச் சென்றாள்.

மாலை நான்கு மணியளவில் அக்ஷரனிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ரெடியா”

எடுத்ததும் கேட்டான்.

“ம்ம் ஆமா.”

“ஓகே கீழ கார் வந்திருக்கும் வந்துடு”

அவன் கூறி விட்டு இவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் வைத்து விட்டான்.

இவளும் கீழே வந்து பார்க்க ஒரு காரிற்கு அருகில் ஒருவன் பவ்யமாக நின்றுக் கொண்டிருந்தான்.

“மேடம் வாங்க”

இவளைக் கண்டதும் பின்னிருக்கையின் கார்க் கதவைத் திறந்து விட இவளும் ஏறி அமர்ந்தாள்.

காரை அவன் எடுத்தான்.

“எங்க போறோம்”

வாய் வார்த்தையாக அந்நியன் ஒருவனிடம் கேட்க முடியாமல் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் கார் ஓரிடத்தில் நிற்க யோசனையுடனே அவ்விடத்தைப் பார்த்தாள்.

அது ஒரு சினிமா தியேட்டர்.

“மேடம்”

ட்ரைவர் இருக்கையில் இருந்தவன் அழைக்கவே தன்னிலை அடைந்தவன் அவனைப் பார்க்க.

“ஸர் இங்க தான் வர சொன்னாரு”

அவன் கூற தலையசைத்துக் கொண்டே காரை விட்டு கீழ் இறங்கினாள்.

அந்த சினிமா தியேட்டரில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

“இவர் எங்க இருக்காரு..”

என நினைத்துக் கொண்டு சுற்றுப்புறம் பார்த்தவளது பார்வை ஓரிடத்தில் நிலைக்குற்றி நின்றது.

விழிகள் விரிந்தது.

அந்த ஐட்டம் பாடல் நடிகை அக்ஷரனது தோளைப் பிடித்திருக்க அவனும் அவளது தோளைப் பிடித்து தன்னுடன் இறுக்கியிருந்தான்.

 

********

இன்னும் நெறைய டைப் பன்னனும் பட் டைம் இல்ல புரிஞ்சிக்கோங்க..

நேக்கும் புரியுது ஸ்டோரி போரிங்ன்னு… அட்ஜஸ்ட் கரோ.. இன்ட்ரஸ்ட்டா கொண்டு போக ட்ரை பன்றேன் 

தொடரும்..❤

 

💜அஷு💜

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top