அத்தியாயம் 35
அங்கு கண்ட காட்சியை விழி விரித்துப் பார்த்தாள்.
அடுத்த நொடி பக்கென சிரித்தும் விட்டாள்.
அக்ஷரனது தோளில் சாய்ந்திருந்தவளை பிடித்து விலக்கி விட்டவன்.
விட்டான் ஒரு அறை.
அதைப் பார்த்ததும் தான் இவளுக்கு பக்கென சிரிப்பு வந்தது.
ஏனென்றுத் தெரியவில்லை.
அப்பெண் அவனது தோளில் சாய்ந்திருப்பதைப் பார்த்ததும் கோவம் வர அடுத்து அவனவள் செய்த வேலையை பார்த்ததும் தன்னையறியாமலே புன்னகைத்தாள்.
அந்த நடிகையோ கன்னத்தில் கை வைத்து அக்ஷரனைப் பாவமாகப் பார்ப்பதும் அதற்கு இவன் விரல் நீட்டி ஏதோ எச்சரிக்கை செய்வதும் இங்கிருந்து விளங்க அதைப் பார்த்துக் கொண்டே அங்கு சென்றாள் நேத்ரா.
அவள் போகும் நேரம் அந்ந நடிகை அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்.
இவள் அமைதியாக அவனுக்கு அருகில் போய் நின்றாள்.
“என்ன இவ்ளோ நேரம்”
இவளிடமும் சிடுசிடுத்தான்.
“இப்போ தான் வந்தேன்… ஆமா அவங்க யாரு உங்க ஃபேனா”
அவள் தெரியாதது போல் வினவ அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.
“ஆமா பெரிய்ய்ய ஃபேன் ஆட்டோகிராஃப் கேட்டு வந்தாங்க கொடுத்து அனுப்பினேன்”
முறைத்துக் கொண்டே கூற இவள் இதழ்க் கடித்து சிரிப்பைக் கட்டுப்படுத்தினாள்.
“பேசாம உள்ள வா”
அவளிடம் சிடுசிடுத்துக் கொண்டு கூறி விட்டு முன்னால் நடக்க அவனுடன் சேர்ந்து நடந்தாள் அவன் மனையாள்.
அந்த தியேட்டருக்கு உள்ளே போகப் போக அங்கிருந்த ஒவ்வொருவரும் இவனுக்கு மரியாதையாக வணக்கம் வைப்பதும், சிநேகமாகப் புன்னகைப்பதுமாக இருந்தது.
அனைத்தும் என்றும் போல் சிறு தலையசைப்புடன் பெற்றுக் கொண்டு முன்னோக்கிச் சென்றான் மனைவியுடன்.
“வாங்க ஸேர்.. வாங்க மேடம்”
அன்று இசை வெளியீட்டு விழாவின் போது வரவேற்றது போலவே வரவேற்றான் பட இயக்குனர் ராகவ்.
அவனுக்கு தலையசைத்தவன் மனைவியுடன் தியேட்டருக்கு உள்ளே நுழைந்தான்.
“ஹாய் அக்ஷரன்”
யாரோ அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து கை குலுக்க கை நீட்ட.
“ஹெலோ”
இவனும் கை நீட்டினான்.
“யாரு உங்க வைஃபா.. அன்னைக்கு பங்ஷனுக்கும் கூட்டிட்டு வந்திங்கல்ல.. நாங்க எங்களோட வைஃப இப்பிடியான இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு வாரதில்லையே”
அவர் நேத்ராவைப் பார்த்து புன்னகைத்து விட்டு அக்ஷரனிடம் கூற அவரது கூற்றுக்கு சிறிதாக இதழ் விரித்தவன்,
“அதான் சொல்லிட்டிங்களே.. இவ என்னோட வைஃப்ன்னு”
அவனும் புன்னகைத்துக் கொண்டேக் கூறினான்.
அவரும் புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்துச் சென்றான்.
தியேட்டரின் முன் வரிசையில் அக்ஷரன் சென்று அமர்ந்தான் அவனுக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள்.
அவர்கள் இருவருக்கும் அருகில் உள்ள இருக்கைகள் காலியாகத் தான் இருந்தது.
அதற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் அக்ஷரனைப் பார்த்து புன்னகைக்க இவனிடம் இருந்து சிறு தலையசைப்பு மாத்திரம் தான்.
“என்னங்க எதுக்கு வந்திருக்கோம்”
அவ்வளவு நேரமும் சுற்றுப் புறத்தையே பார்த்தவள் கணவனது காதுக்கு அருகில் கிசு கிசுவெனக் கேட்டாள்.
“ம்ம் பூஜைக்கு”
அவன் எப்பொழுதும் போல் கூற இவள் முறைக்க முடியாமல் அவனை முறைத்துப் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் அரங்கமே இருளில் மூழ்கிவிட்டது.
இவள் தான் அவனுக்கு அருகில் நன்றாக நெருங்கி அமர ஆடவன் விடும் மூச்சுக் காற்று அவளது முகத்தில் பட்டது.
அடுத்த நொடி திரையில் ஒளிர்ந்தது அக்ஷரனது தயாரிப்பில் ராகவனினது இயக்கத்தில் உருவான திரைப்படம்.
முதலில் அவனுக்கு மிக அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தவள் பின் விலகி அமர்ந்து அந்த திரைப்படத்தைப் பார்த்தாள்.
படத்தில் எடுக்கப்பட்டிருந்த அனைத்து காட்சிகளும் பாராட்டக்குரியவை தான்.
அதிலும் அப்படத்தின் வரும் அனைத்து பெண்களும் மதிக்கத்தக்க கதாப்பாத்திரங்களில் தான் நடித்திருந்தனர்.
பட இடவேளையின் போது அனைவரும் எழுந்து வெளியே சென்றனர்.
அக்ஷரன் அங்கு அமர்ந்து ஃபோனைப் பார்க்க இவள் தான் அந்த அரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏதாச்சும் சாப்ட வேணுமா..”
அவன் கேட்க.
“ம்ஹும்.. ஆனா தாகமா இருக்கு”
உரிமையாகவே சொன்னாள்.
அடுத்த நொடி எழுந்து சென்றான் அவன் இவளும் எழப் பார்க்க,
“நீ இரு.. ”
அவளிடம் கூறி விட்டு அவன் செல்ல இவள் அமைதியாக அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அக்ஷரன் வந்தான்.
இவளுக்கு சோடா போத்தல் ஒன்றைக் கொடுக்க அமைதியாக வாங்கினாள் அவனுக்கு எதுவும் அவன் கொண்டு வந்திருக்கவில்லை.
இரண்டு மிடர் குடித்சவள்.
“உங்களுக்கு..”
அவனிடம் கேட்க.
“நீ குடிச்சிட்டு ஹாஃப் தா”
அவன் கூற.
“அப்போ உங்களுக்கு ஒன்னு எடுத்துக்கிட்டு வரலாமே”
“கைல காசு இல்ல”
அவன் கூற அவனை நம்பாத பார்வைப் பார்த்தவள்.
“உண்மையாவா”
“ஆமா.. ஏன் காசு தரப்போறியா”
அவன் புருவம் உயர்த்தி கேட்டான்.
அவள் எதுவும் பேசாமல் குடித்துவிட்டு அரைவாசியை அவனிடம் நீட்ட அவன் எதுவும் பேசாமல் அந்த போத்தலிலே வாய் வைத்துக் குடிக்க,
“அது.. எச்சில்”
இவள் தான் கூறினாள்.
அவளைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவன் அவளது இதழையும் ஒரு மார்க்கமாகப் பார்த்து விட்டு அமைதியாகக் குடித்தான்.
“இல்ல நீங்க தான் எச்சில் பட்டது ஒன்னும் சாப்டமாட்டிங்களே”
அவள் விடுவதாக இல்லை.
திரும்பி அவளை அழுத்தமாகப் பார்த்தவன்.
“அது அப்போ இது இப்போ”
அவன் முழுதாகக் குடித்து முடித்தான்.
“எப்போ இருந்தாலும் நீங்க நீங்க தானே”
வாய்க்குள் முனகியவள் முன்னால் திரும்பிக் கொண்டாள்.
(நோட் பன்னிக்கோங்க மக்காள்.. நேத்ராவோட புத்திசாலித்தனத்த🤣)
அவள் பேசியதை கேட்டாலும் எதுவும் கூறாமல் அவன் அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் படம் மீண்டும் தொடங்கியது.
இறுதியில் அப்படத்தில் நாயகி இறப்பது தான் கதை.
அந்த காட்சியில் நேத்ராவிற்கு கண்கள் கலங்கியது.
அந்த நடிகரும் நடிகையையும் அவ்வளவு ஆத்மார்த்தமாக நடித்திருந்தனர்.
நிஜக் காதல் ஜோடிகளாகவே அப்படத்தில் நடித்திருந்தனர்.
அதைப் பார்த்து விட்டு இறுதியில் நடிகை இறப்பது அனைவரையும் கண்கலங்க வைத்தது என்னவோ உண்மை தான்..!!
நேத்ரா திரும்பி அக்ஷரனைப் பார்த்தாள்.
அவனோ என்றும் போல் உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் தான் அமர்ந்திருந்தான்.
இவளுக்குத் தான்,
“இவங்களுக்கு உணர்வே இல்லையா..”
என நினைக்கத் தோன்றியது.
பொய் என்றாலும் சில திரைப்படங்கள் நமது கண்களை கலங்க வைத்து விடுவது உண்மை தானே..?
சில நேரம் அப்படத்தை பார்த்து விட்டு நாம் அழுததே நமது கன்னம் நனைந்திருப்பதைப் பார்த்து தான் உணர்ந்துக் கொள்வோம்..
அப்படியான ஒரு திரைப்படம் தான் இதுவும்.
திரைப்படம் இனிதே நிறைவுற்றது.
திரையரங்கம் மீண்டும் வண்ண விளக்குகளால் உயிர்ப்பெற்றது.
அனைவரும் ராகவனை கைகுலுக்கி வாழ்த்தினர்.
அக்ஷரனும் சென்று வாழ்த்தினான்.
“கங்ரஜுலேஷன்..”
இவ்வளவு தான் அவனது வாழ்த்து ராகவனுக்கு அதுவே பெரிய வெற்றி தான்.
முதல் முறையாக தன்னை நம்பி தனது கதையை நம்பி படத்தை தயாரிப்பதற்கு அக்ஷரன் ஒத்துக்கொண்டதே பெரிது.
இன்று எந்தவித குறையுமின்றி படம் வெற்றிப்படமாக மாறியதற்குக் காரணமே அக்ஷரன் தானே.
அவன் கூறிய சில காட்சிகளை மாற்றியமைத்தால் படம் இன்னும் பிரபல்யமாகும் எனக் கூறியது அக்ஷரன் தானே.
முதலில் அதை விரும்பாமல் அவனது தயாரிப்பதற்கு மறுத்து விடுவானோ என்ற பயத்தால் அக்காட்சிகளை மாற்றியமைத்தாலும் இப்பொழுது படம் சூப்பர்ஹிட் ஆகுவதற்கு காரணமே அக்ஷரன் மாற்றியமைக்கக் கூறிய அக்காட்சிகள் தானே.
“ரொம்ப தேங்க்ஸ் ஸேர்”
அவன் புன்னகைத்துக் கொண்டுக் கூற அதற்கும் சிறு தலையசைப்பு மாத்திரம் தான்.
நேத்ரா ராகவனின் முகபாவனையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இது அவங்க எழுதின கதையா”
அக்ஷரனிடம் மெதுவாகக் கேட்டாள்.
“ஆமா”
அவன் கூறினாள்.
“சூப்பர் தான்… கதைகள் எழுதி பேப்பர்ல மட்டும் தான் கொடுக்கலாம்ன்னு நெனச்சிட்டிருந்தேன்.. ஆனா இப்பிடி படமும் எடுக்கலாமா??”
ஆச்சரியம் தான் அவளுக்கு.
“ம்ம் ஆமா… வேணும்ன்னா நீயும் ஒரு ஸ்டோரி சொல்லு படமா எடுத்துடலாம்”
அவன் கூற
“விளையாடாதிங்க.. நா எங்க படம் எடுக்குறது அதுவும் இது போல சூப்பர் படம் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது”
அவள் அலுத்துக் கொள்ள அவளை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.
மீடியாக்காரன்கள் எப்பொழுதும் போல் வெளியே வந்ததும் ரசிகர்களை சூழ்ந்துக் கொள்ள அவர்களது திருப்தியான பதிலில் அப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும் பேட்டிக் கண்டனர்.
பின் அப்படத்தின் இயக்குனரிடம் பேச,
“இது தான் உங்களோட முதல் படம்ன்னு சொல்லுறாங்க.. பார்த்தா அப்பிடி தெரியல.. இந்த படமே உங்களோட திறமைய காட்டுது.”
ஒருவன் மைக்கை நீட்டிக் கொண்டு ராகவனிடம் கேட்க.
“என்னோட முதல் படம் இது தான்.. முதல்ல நா அக்ஷரன் ஸேர்க்கு நன்றி தெரிவிச்சிக்குறேன்.. அவரோட ஹெல்ப் இல்லன்னா சத்தியமா உங்க முன்னாடி இப்பிடி ஒரு டைரக்டரா நின்னுருக்க முடியாது.. எத்தனையோ ப்ரடீயூஸர்கிட்ட என்னோட கதைய எடுத்துக்கிட்டு போனேன் ஆனா யாரும் எனக்கான வாய்ப்ப கொடுக்கல்ல அக்ஷரன் ஸேர் தான் எனக்கான வாய்ப்ப கொடுத்தாரு… என்னோட கதைல திருத்த வேண்டியதெ்லாம் சொல்லிக் கொடுத்து இன்னைக்கு ரசிகர்கள் ரசிக்கக் கூடிய படமா மாத்தி தந்தாரு.. ரொம்ப நன்றி ஸேர்”
அவன் அக்ஷரனை புகழ்ந்துத் தள்ள அடுத்தது மீடியாக்கரர்கள் மைக்கைத் தூக்கிக் கொண்டு அக்ஷரனிடம் நெருங்க அவனுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நேத்ரா அவனது முதுகுக்குப் பின்னால் ஒழிந்துக் கொண்டாள்.
“உங்களோட கம்பனி ப்ரடியூஸ் பன்னின படம் தான் இன்னைக்கு சூப்பர் ஹிட்.. நீங்க என்ன நினைக்குறிங்க ஸேர்”
ஒருவர் கேட்க.
“ரொம்ப சந்தோஷம்.. ராகவனோட திறமையால தான் இன்னைக்கு இந்த படம் இந்தளவு பேசப்படுது”
அவன் பெருந்தன்மையாகக் கூறினான்.
“நீங்க அறிமுக இயக்குனர்களுக்குத் தான் வாய்ப்புக் கொடுக்குறிங்க போல”
இன்னுமொருவரிடம் இருந்து கேள்வி வந்தது.
“கண்டிப்பா.. அறிமுக இயக்குனர்களுக்கு மட்டும் இல்ல திறமையுள்ள எல்லாருக்கும் வாய்ப்புக்கள் என்னால முடிஞ்சளவு கொடுக்கப்படும்”
அவன் கூறினான்.
“ஸேர் நீங்க அடுத்தது யாரோட படத்த ப்ரடீயூஸ் பன்ன போறிங்க”
“என்னோட மனைவியோட இயக்கத்துல ஒரு படம் வர இருக்கு அந்த படத்த தான் ப்ரடீயூஸ் பன்ன இருக்கேன்”
இவன் சொல்ல அவனது முதுகுக்குப் பின்னால் பதுங்கியிருந்தவளுக்கு பக்கென இருந்தது.
“என்ன இவங்க இப்பிடி சொல்றாங்க”
அவள் அதிர்ந்து போய் நினைத்துக் கொண்டாள்.
“ஓஹ்… வாவ்.. உங்க மனைவி வந்திருக்காங்களா.. எப்போ படம்”
அனைவரும் ஆர்வமாகக் கேட்க சிறு புன்னகை உதிர்த்தவன்.
“கண்டிப்பா அவங்க மீடியா முன்னாடி வருவாங்க.. பட் இப்போ இல்ல.. கூடிய சீக்கிரம் அடுத்த சூப்பர் ஹிட் படம் கொடுப்பேன்னுற நம்பிக்க எனக்கு இருக்கு”
அவன் அத்துடன் முடித்துக் கொள்ள மீடியாக்காரர்களும் கலைந்து சென்றனர்.
“நீங்க இப்போ என்ன சொன்னிங்க”
அவனுடன் காரை நோக்கி நடந்துக் கொண்டே அவள் கேட்கா.
“ஏன் காது அவுட்டா”
அவனிடமிருந்து எப்போதும் போல் அலட்சியத்தனமான பதில் வந்தது.
“அதில்ல நா எப்போ சொன்னேன் நா படம் இயக்கப் போறேன்னு”
“நீ சொன்னன்னு நா சொல்லவே இல்லயே”
அவன் காரைத் திறந்துக் கொண்டு அமர இவளும் முன்னிருக்கையில் சென்றமர்ந்தாள்.
“என்னைய நம்பி நீங்க எப்பிடி சொன்னிங்க”
அவள் அவனிடம் கேட்க அவன் எதுவும் பேசவில்லை.
“அப்போ உன்ன வேற வேலையில்லாமலயா தயாளன் ஸேர்கிட்ட அசிஸ்டன்ட்டா சேர்த்து விட்டேன்”
அவன் கூற இவள் எதுவும் பேசவில்லை.
“உண்ம தான் ஆனா என்னால முடியுமா”
அவள் சோர்ந்து போய் சொன்னாள்.
“முயற்சி பன்னா தெரிஞ்சிடப் போகுது”
அவன் தோளைக் குலுக்க அவள் எதுவும் பேசவில்லை.
ஆனால் பயமாக இருந்தது.
முதன் முதலில் பெரிய வேலை ஒன்றை ஏற்றுக் கொண்டால் எப்படி இருக்குமோ அம்மனநிலையில் தான் இருந்தாள்.
“நீ ஒன்னும் இப்போ படம் எடுக்கப் போறதில்ல பயப்டாமா இரு”
அவன் கூற இவள் அமைதியாக இருந்தாள்.
*****
தொடரும்..❤
💜அஷு💜
அக்ஷரன் நல்லவனா கெட்டவனா.. நீங்க என்ன நினைக்குறிங்க சொல்லுங்க..😍