அத்தியாயம் 42
அக்ஷரன் அந்த காகிதத்தில் இருப்பதை முழுவதுமாக வாசிக்க இவள் தான் முள் மேல் நிற்பது போல் அவஸ்தையாக உணர்ந்தாள்.
முழுமையாக நிதானமாக வாசித்து முடித்தவன்.
அவளை ஏறிட்டுப் பார்க்க அவளும் கலக்கமாக அவனைப் பார்த்தாள்.
“உன்னோட கதையா”
அவன் கேட்க பக்கென்றாகியது.
“ஹாங் என்ன”
அவள் படபடக்கும் விழிகளுடன் கேட்டாள்.
“இல்ல நீ எழுதின கதையா”
புரியாமல் அவளிடம் கேட்டான்.
“ஆமா என்னோடது தான்”
விழிகளை மூடித் திறந்து அவள் கூறினாள்.
“ஓஓஹ்.. பட் என்னவோ ஒன்னு குறையுதே”
அவன் கூற.
“என்ன”
“ம்ஹும் உனக்கே புரியும் அப்போ எழுது”
அவளது கையில் அதைத் திணித்தான்.
இவளுக்குத் தான் அடியும் புரியவில்லை நுனியும் புரியவில்லை.
“ஒகே நீ கெளம்பு”
“இன்னைக்கு ஷூட்டிங் இருக்கான்னு தெரியல”
“இருக்காம் தர்ஷன் சொன்னான் கீழ கார் இருக்கும் கெளம்பு”
“சமைக்கனுமே”
“வருவாங்க”
“இல்ல இன்னைக்கு..”
இவள் தயங்க
“என்னால முடியும் நீ போ”
அவன் உறுதியாகக் கூற.
“இல்லங்க.. அது உங்களுக்கு வஷ்ரூம் போகனும்ன்னா”
அவள்க் கூற
“அத நா பார்த்துக்குறேன் நீ கெளம்பு”
அவன்க் கூற இவள் சோர்வாகக் கூறி வி்ட்டுச் சென்றாள்.
இங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை ஆரம்பமாகி இருந்தது.
“தர்ஷன் இப்போ கதையே மாறியிருக்குமே”
நேத்ரா கேட்டாள்.
“ம்ம் ஆமா.. அரைவாசி ஷூட்டிங் தானே பன்னினோம்.. இறந்த ஹீரோயின படத்துலையும் இறந்ததுல போலவே எடுக்குறாம் அப்புறம் இன்னொரு ஹீரோயின் என்ட்ரியாம்”
அவன் கூற.
“ஓஹ்.. இப்பிடி சிட்டுவேஷன்கள்ல டக்குன்னு கதைய மாத்துறதுக்கும் தோணனும்ல”
“ம்ம் இதுவும் நாம கத்துக்க வேண்டியது தான்”
தர்ஷன் கூற இவளுக்கும் அது சரியெனப் பட்டது.
இவளது ஷூட்டிங் முடிந்ததும் வழமை போலவே அக்ஷரனது காரை எடுத்துக் கொண்டு வந்து நின்றிருப்பர் அக்ஷரனால் அனுப்பப்பட்ட சாரதி.
“ஹெலோ..”
இதோடு ஷூட்டிங்க்கு வந்து பத்து தடவையாக அழைப்பை ஏற்படுத்தி இருப்பாள் மனையாள்.
“ப்ப்ச்ச்.. இதுக்கப்புறம் ஃபோன் பன்னினா ப்லோக் பன்னிடுவேன்”
குரலில் கொஞ்சமும் கோவம் இல்லை என்பதை உணர்ந்தவளுக்கு இதழ் விரிந்தது புன்னகையால்.
“இல்லங்க வார வழில கோயில் ஒன்னு இருக்கு போய்ட்டு வரட்டுமா”
அவள் கேட்க,
“எதுக்கு..”
“கோயில்க்கு எதுக்கு போவாங்க சாமி கும்பிடத்தான்..”
“தேவையில்ல வீட்டுக்கு வா”
“ஐயோ.. இல்லங்க சாமிக்கிட்ட வேண்டிக்கிட்ட உங்களுக்கு எந்த ஆபத்தும் வராதுல்ல”
இவள் கூற.
“ஆஹாஆஆன்.. எனக்காகவா”
அவனது குரலில் எதுவோ ஒன்று.
“சொல்லுங்களே.. போய்ட்டு வாரேன்”
அதுக்கு பதில் கூறாமல் அவள் கேட்க.
“ஓகே.. டென் மினிட்ஸ் தான்”
காலவரையறைக் குறிப்புட,
“ஐயோ பத்து நிமிஷத்துல போய் என்ன பன்ன ஒரு அரமணித்தியாலத்துல வந்துட்றேன்”
இவள்க் கூற.
“ப்ப்ச் ஓகே..”
சலித்துக் கொண்டேக் கூறினான்.
“அண்ணா கோயில்க்கு போகனும் வண்டிய கொஞ்சம் நிறுத்துங்க”
ட்ரைவரிடம் கூற வண்டியை கோயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டது.
இவள் இறங்கிச் சென்று அர்ச்சதைத் தட்டை எடுத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று சந்நிதானத்தில் இருக்கும் கடவுளை கண் மூடி நின்று வணங்கினாள்.
“கடவுளே அவருக்கு எதுவும் ஆகக் கூடாது அவர் நல்லா இருக்கனும்..அவரோட வாழ்க்கைல எந்த கஷ்டத்தையும் கொடுத்துடாதே.. நா அவர விட்டு விலகிப் போறது தான் அவருக்கு நல்லது.. அவருக்கு மனசுக்குப் புடிச்சவங்களோட சந்தோஷமா வாழனும்..”
அவனுக்ககாவே வேண்டியவள் அவளை அறியாமலே அவளுகக்கும் சேர்த்து வேண்டினாள்.
பின் விபூதியை வாங்கிக் கொண்டு கண்ணார கடவுளைக் கண்டுக் கழித்தவள் அங்கிருந்து செல்லப் பார்க்க அவளைக் கடந்து ஒரு பெண்மனி சென்றார்.
“இவங்க அபிலேஷ் அண்ணாவோட அம்மா தானே”
நினைத்தவள்.
“அம்ம்மா”
அவரை அழைக்க அவரோ நின்று திரும்பிப் பார்த்தார்.
அவருக்கு அருகில் நெருங்கியவள்,
“என்னையத் தெரியுதா”
அவள் கேட்க,
“அட அக்ஷரனோட வைஃப் தானே”
அவர் புன்னகைத்துக் கொண்டே கேட்க இவளும் புன்னகைத்தாள்.
“அக்ஷரன்கிட்ட சொன்னனே உன்னைய கூட்டிட்டு விருந்துக்கு வீட்டுக்கு வான்னு அவன் தான் டைம் இல்ல டைம் இல்லன்னு அதே பல்லவியப் பாட்றான் நீயாச்சும் அவன கூட்டிட்டு வீட்டுக்கு வாம்மா”
அவர் சகஜமாகப் பேச இவள் புன்னகைத்தாள்.
“நீங்க வாங்களே எங்களோட வீட்டுக்கு”
அவள் அழைக்க.
“இன்னொரு நாளைக்குக் கண்டிப்பா வாரேன்..”
“இப்போவே வராலமேம்ம்மா..”
“இல்லடா..”
என மறுக்க வர
“நீங்க எங்க வீட்டுக்கு வந்ததில்லையே வாங்களே”
நேத்ரா கெஞ்ச அவளது அப்பாவித்தனத்தில் புன்னகைத்துக் கொண்டே,
“சரிடா.. என்னோட கார் இன்னும் வரல்ல”
“என்கூட வாங்க அப்பிடியே கார்ல உங்க வீட்ல விட சொல்றேன்”
அவள் கூற சரியென்று கூறியவர் நேத்ராவுடன் புறப்பட்டார் அவளது வீட்டிற்கு.
கார் அப்பார்ட்மென்ட்டிற்குச் சென்றது நேத்ராவுடன் காரில் இருந்து இறங்கினார் சவித்ரா அபிலேஷின் தாயார்.
“வாங்க”
நேத்ரா சிரித்துக் கொண்டே அழைக்க அவரும் புன்னகைத்துக் கொண்டே இறங்கினார்.
“ஹேய் நேத்ரா”
ஒரு குரல் வர திரும்பிப் பார்த்தாள் அங்கு தேவிப்பிரியா தான் வயிற்றில் கை வைத்துக் கொண்டு இவளை பார்த்து கை அசைத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன இப்போவா வேல முடிஞ்சிது”
அவள் கேட்டுக் கொண்டே அவளுக்கு அருகில் வர அங்கு நேத்ராவிற்குப் பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்தார் சவித்ரா தேவிப்பிரியாவின் அத்தை.
அவரைப் பார்த்ததும் என்ன செய்வதென்றுத் தெரியாமல் விழித்தாள் தேவிப்பிரியா.
அவரோ அவளைப் பார்க்காமல் முகத்தை மறுபக்கத்திற்குத் திருப்பிக் கொள்ள அதில் இருந்தே புரிந்தது அவருடைய கோவம்.
“ஆமா இப்போ தான் வந்தேன்”
நேத்ரா சகஜமாகப் பேச,
“ஓகே.. நா அப்புறம் வாரேன்”
அவள் அங்கிருந்து செல்லப் பார்க்க.
“சரி இன்னைக்கு கிள்னிக்ன்னு சொன்ன என்னாச்சு”
நேத்ரா கேட்க.
“அது இன்னைக்கு ஸ்கேன் பன்னாங்க”
“அப்பிடியா”
“ம்ம் ஆமா என்ன பேபின்னு பார்த்தோம்”
தேவிப்பிரியாக் கூற
“என்ன பேபின்னு சொன்னாங்க”
“ம்ம் நா சொன்னது போலவே மகன் தான்”
தேவிப்பிரியா புன்னகைத்துக் கொண்டேக் கூற அவ்வளவு நேரமும் அவர்களது பேச்சைக் கண்டும் காணாதது போல் முகத்தை மறுபக்கத்திற்குத் திருப்பிக் கொண்டிருந்த சாவித்ராவினது பார்வை ஒரு நொடி தேவிப்பிரியாவின் வயிற்றினைத் தழுவிச் செல்ல அதைத் தேவிப்பிரியா காணா விட்டாலும் நேத்ராவினது விழிகள் படம் பிடித்தன.
“ஓகேடா நாம அப்புறம் பேசலாம்”
தேவிப்பிரியா கூறி விட்டு சாவித்ராவைப் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
“நீங்க வாங்கம்மா”
நேத்ராக் கூற ஏதோ யோசனையில் இருந்தவர்.
“ம்ம் சரிடா போலாம்”
அவளுடன் சென்றார்.
“வாங்க உள்ளே”
நேத்ரா வீட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
“அக்ஷரன் எங்கடா”
“அவருக்கு எக்ஸிடன்ட்டாகிடுச்சு அதனால கால்ல கொஞ்சம் கீறல்”
அவள் கூற
“ஐயோ எப்போடா”
“நேத்து தான்”
அவள் கூறிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் அக்ஷரன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு ஃபோன் பார்த்துக் கொண்டிருக்க
“சாப்டிங்களாங்க”
அவளது குரல் கேட்க தலையை உயர்த்தி அவளை முறைத்தான்.
“இதுவா நீ சொன்ன அரமணித்தியாலம்”
அவன் கடிகாரத்தைக் கண் காட்டிக் கேட்க.
“இல்லங்க அது நா”
“ஃபோன் எங்க”
“அது கோயில்க்கு போகும் போது சைலன்ட்ல போட்டேன்”
“வெளில வந்து ஃபோன் எடுத்து பார்க்க மாட்டியா”.
அவன் விடுவதாக இல்லை.
“அச்சோ.. அது நினைவுல இல்ல உங்கள பார்க்க ஒருத்தங்க வந்திருக்காங்க”
அவள் கூற புருவம் சுருங்கியது ஆடவனது.
“யாரு”
அவன் கேட்கவும் சாவித்ரா உள்ளே வந்தார்.
“என்னடா ஆச்சு”
அவர் கேட்க சற்று எழுந்து அமர்ந்தவன்.
“வாங்கம்மா”
“நா வாரது இருக்கட்டும் உனக்கு என்னாச்சு இப்போ எப்பிடி இருக்கு”
அவர் கேட்க
“ப்ப்ச்ச் ஒன்னுமில்லம்மா லைட்டா கார் ஸ்லிப் ஆகிருச்சு”
அவன் சாதரணமாகக் கூற.
“லைட்டா கார் ஸ்லிப்பாகிருச்சுன்னு எவ்ளோ அசால்ட்டா சொல்றாரு”
மூவருக்கும் காஃபி எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் நேத்ரா.
“அதான் பார்த்து பத்தரமா ஓட்டனும்ல”
சாவித்ரா கூற அவன் அமைதியாக நேத்ராவைத் தான் பார்த்தான்.
அவளது முகமோ இன்னும் வேதனையில் தான் இருந்தது.
“இப்போ ஓகே”
அவளைப் பார்த்து தான் கூறினான்.
“சரி.. ”
இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் கிளம்பினார்
“இந்தாங்க”
அவள் கோயிலில் இருந்து கொண்டு வந்த விபூதியை அவனிடம் நீட்ட
“எனக்கு வேணாம்”
அவன் முகத்தை சுழித்துக் கூற.
“சாமியோடது அப்பிடி வேணாம்ன்னு சொல்லக் கூடாது”
எனக் கூறியவள் அவன் என்ன ஏது என உணரும் முன்னரே அவனது நெற்றியில் வைத்து விட்டிருந்தாள்.
அவன் துடைத்து விடப் பார்க்க அவனது கையைப் பற்றியவள்.
“வேணாம்ங்க”
மூக்கை சுருக்கிக் கூற அவளை ஒரு நொடிப் பார்த்தவன் கையை கீழே எடுத்தான்.
“சாப்டிங்களா”
அவள் கேட்க தலையை மறுப்பாக ஆட்டினான்.
“காலைல கூட சாப்டல்லையா”
அவள் கேட்க இல்லையென்று தலையாட்டினான்
“அச்சோ இருங்க”
அவள் கூறி விட்டுச் சென்று அடுத்த பத்து நிமிடங்களில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்தாள்.
“சாப்டுங்க”
அவளிடம் நீட்டினாள்.
“நீ”
“நா சாப்ட்டேன்”
“பரவல்ல சாப்டு”
அவளுக்கும் நீட்ட ஏதோ போல் இருந்தது அவளுக்கு.
“தனியா சாப்ட முடியாதுன்னா சாப்டல்ல”
அவனிடம் கேட்க விழி உயர்த்தி அவளைப் பார்த்தவன்.
“ஏன்.. இதுக்கு முன்னாடி நா சாப்டல்லையா”
அவன் புருவம் உயர்த்திக் கேட்க
“இல்லன்னு சொல்ல மாட்டேன்”
அவள் அதுக்கு பிறகு என்ன கூறுவதென்றுத் தெரியவில்லை அமைதியாக சாப்பிட்டனர்.
பிறகு அவன் குளியலறைக்குச் செல்ல இவள் தான் அழைத்துச் சென்றாள்.
பின்னர் இரவும் சாப்பாட்டை செய்வதற்கு மணிமேகலை மாலை வந்தார்.
அவர் சமைத்து விட்டுச் செல்ல இரவும் அறைக்கு சாப்பாட்டைக் கொண்டு வந்து அக்ஷரனுடன் அமர்ந்து சாப்பிட்டாள் நேத்ரா.
அக்ஷரன் என்றும் போல் கட்டிலில் படுக்க நேத்ரா தரையில் போர்வை விரித்துப் படுத்தாள்.
“ஏதாச்சும் தேவைன்னா எழுப்பாட்டுங்க”
அவள்க் கூற அவன் தலையசைத்தான்.
*****
அந்த காட்டு வழியே உள்ள பாதையில் பாவாடை தாவணி அணிந்த ஒரு பதினெட்டு வயது நிரம்பிய பெண் பிள்ளை ஒருத்தி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட அவளைப் பின்த் தொடர்ந்து ஓடினர் மூன்று ஆண்கள்.
எவ்வளவு ஓட முடியுமோ அவ்வளவு ஓடினாள்.
அவள் ஒடிய வேகத்தில் அங்கிருந்த தடி ஒன்றில் கால் தடுக்க அப்படியே விழுந்தாள்.
தாவணி அங்கே இருந்த கம்பியில் மாட்டிப்பட்டு கிழிந்திருக்க அதை எடுத்து தன்னைப் போர்த்திக் கொண்டே எழும்பப் பார்க்க அவள் எழுந்து ஓட முடியாதது போல் அவளது தோள்ப்பட்டையை அழுந்தப் பிடித்திருந்தான் பின்னால் வந்த மூவரில் ஒருவன்.
“என்னம்மா எங்க ஓடுற”
நா குழற அவளுடைய மேல் வந்து விழப் பார்ப்பது போல் அவன் பேச அவனிடமிருந்து வீசிய மது வாடை முன்னால் இருந்த பேதையின் முகத்தை சுழிக்க வைத்தது.
*****
தொடரும்..❤
💜அஷு💜