அசுரன் 101
தனது படுக்கையறையில் மகனை நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்தபடி விட்டத்தை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான் அருண்..
ஆதியின் திருமணத்திற்கு முதல் நாள் விக்ரமும் அருணும், அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள்…
இல்லை அருண் புலம்பி கொண்டு இருந்தான்…
எனக்கு துரோகம் பண்ணிட்டோம்னு அவனுக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தலாவே இல்லையாடா… நான் அவ்வளவு தூரம் பேசுறேன் ரெண்டு பேரும் அமைதியா கல்லு மாதிரி நிக்கிறாங்க என்ன சுத்தி இருக்குற எல்லாருமே எனக்கு துரோகம் பண்றாங்கடா என்று அருண் புலம்ப…
அவன் அவனை முழுதாய் புலம்பவிட்ட விக்ரம்… சிறிது அமைதிக்கு பின்
ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுடா என்றான்.
ஒருத்தன் ரொம்ப நாளா ஒரு பொக்கிஷத்தை தேடிட்டு இருந்தான்.. கடவுள் அதை அவன் கண்ணுல காட்டாம… காரணமே இல்லாம நீ கேட்காமலே அந்த பொக்கிஷத்தை கடவுள் உன் கையில் கொடுத்தார்… ஆனா அதுல 100 குறைய கண்டுபிடிச்சு எனக்கு இந்த குப்பை தேவையில்லை அப்படின்னு சொல்லி நீ குப்பையில் தூக்கி போட்டுட்டு போய்ட்ட… அந்த பொக்கிஷத்தை ரொம்ப நாளா தேடிட்டு இருந்தவன்… குப்பையில இருந்து அத எடுத்து தூசி தட்டி திரும்ப தன் கைக்குள்ள பொக்கிஷமாவே வச்சுக்கிட்டான்…
இப்ப போய் நீ திரும்ப நான் வச்சிருந்த பொக்கிஷத்தை நீ திருடிட்டு வந்துட்டன்னு சொல்லி சொன்னா… என்னடா அர்த்தம்… தூக்கிப் போட்டது போட்டது தான்… அது திரும்ப உனக்கு கைக்கு வராது அருண்… இதுல எந்த இடத்துல ஆதி உனக்கு துரோகம் பண்ணதா நினைக்கிறே…
ஒன்னு நீ முழுசா புரிஞ்சுக்கணும்…
ஆதி வருஷ கணக்கா காதலிச்சுட்டு இருந்த பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணி வந்த… நீ கல்யாணம் பண்ணிட்டு வந்த பொண்ண ஒன்னும் அவன் காதலிக்கல…
மலர் இல்லன்னா உனக்கு ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்க அருண்… ஆயிரம் பொண்ணுங்க கிடைச்சாலும் மலர்தான் வேணும்னு நிப்பான் ஆதி. ரெண்டும் வேற வேற டா.. புரிஞ்சுக்கோ…
ஆதிய பொறுத்த வரையும் அவனோட முழு உலகமே மலர் மட்டும்தான்… ஆனா அப்படிப்பட்ட மலரையே உனக்காக தான் அவன் விட்டுக் கொடுத்தான்…
ஆதியின் காதலைப் பற்றி ஆரம்பித்து அவன் வெளிநாடு சென்று வந்தவரையிலும் சொல்லி முடித்தான்…
நான் கேட்டேன் டா… இவ்வளவு லவ் பண்ண பொண்ணு கல்யாணத்த ஏண்டா தடுத்து நிறுத்தலனு… அருணோட உயிர் விஷயத்துல எந்த வகையிலும் நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்லைன்னு சொல்லிட்டாண்டா… நான் கடைசி வரைக்கும் தனியாவே வாழ்ந்திடலாம்னு நினச்சேன்ன்னு சொன்னான்டா… காதலியா நண்பனான்னு வரும்பொழுது… அவன் ஒரு நாளும் உன்னை விட்டுக் கொடுத்ததில்லை..
ஆனா நீ கொஞ்சம் கூட யோசிக்காமல்… அவன் மேல வார்த்தையால சேத்த வாரி இறைச்சுவிட்டு வர.. துரோகம் பண்ணிட்டான்னு சொல்லி பொலம்புற..
அன்னைக்கு மலர பார்த்து, ஃபர்ஸ்ட் நான் ,அடுத்து ராஜேஷ், அடுத்து ஆதியானு கேக்குற மனசாட்சியை தொட்டு சொல்லு… அவ உன் கூட பழகினாளா?… உனக்கு கிடைக்கலைன்னு ஒரே காரணத்துக்காக அந்த பொண்ணோட மனசை சுக்கு நூறா உடைச்சிட்டு வரயே டா… உன்னோட உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி தான் வலுக்கட்டாயமா உங்க அம்மா அந்த பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தாங்க… அந்த பொண்ணோட வீட்டு டாக்குமெண்டை எடுத்து வச்சுக்கிட்டு, அந்த பொண்ண இங்க தங்க வச்சாங்க… உன்னோட குழந்தைக்கு உடம்புக்கு முடியலன்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட தான் போய் நேரா உதவி கேட்டு நின்ன…. யாருக்கு எந்த உதவினாலும் யோசிக்காம செய்வாடா அந்த பொண்ணு… அந்த பொண்ண போய் பல்ல கடிச்சிக்கிட்டு வாய்க்கு வந்தபடி பேசிட்டு வர… நீ பேசுனது எதுவும் ஆதிக்கு கேட்கல… ஆனா நான் கேட்டேன்.. ரொம்ப தப்பு டா இது…
ரதி அன்னைக்கு அடுத்தவனுக்கு முத்தம் கொடுக்க போய்ட்டான்னு சொல்லி உனக்கு அவ்வளவு கோவம் வந்தது.. தாலி கட்டி அந்த பொண்ண உன் கூட தங்க வச்சிட்டு ரதி கூட குடும்பம் நடத்தி வாழ்ந்துட்டு இருந்த அப்ப அந்த பொண்ணுக்கு எப்படி இருந்திருக்கும்… பழைய கதைய பத்தி எதுவும் பேச விரும்பல…
உனக்கு இன்னுமே மலரோட அருமை புரியல… அதனாலதான் அவ மேல கண்டபடி பழி போடுற… உண்மையா மலரோட அருமை புரிகிற அன்னைக்கு… உன்னால அந்த பொண்ண தலை நிமிர்ந்து பார்க்க கூட முடியாதுடா குற்றம் உணர்ச்சியில்…
நாளைக்கு ஆதிக்கும் மலருக்கும் கல்யாணம்… நானும்,அகி,அங்கிள் மூணு பேரும் போறோம்… எனக்கு நீ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவனும் முக்கியம்.. அவனுக்கு ஒரு நல்ல காரியம் நடக்கும் போது நான் கூட இருக்கணும்னு நினைக்கிறேன்…
அன்று விக்ரம் பேசிய முழுதையும் என்று நினைத்துப் பார்த்தவன்.. ஒரு பெருமூச்சோடு… இன்று அலுவலகத்தில் பல நாட்களுக்குப் பிறகு மலரின் சமையலை சாப்பிட்டவன் மனதில் விக்ரம் கூறியது போல் ஒரு இனம் புரியாத உணர்வு ஒன்று எழுந்தது உண்மை.. ஆனால் அவ்வளவு எளிதில் விக்ரம் போல் வாய் விட்டு அவனால் சொல்ல முடியவில்லை…
தான் அன்று பேசிய வீரியமிக்க வார்த்தைகளை கூட மறந்துவிட்டு புன்னகை முகத்துடனே ஆதியும் மலரும் அருணுக்கு சாப்பாடு பரிமாறினர்.. ஆதியின் திருமணத்திற்கு பிறகு… இன்று தான் இருவரையும் பார்க்கிறான்… இருவர் முகத்திலும் அப்படி ஒரு கலை, ஒரு வித தேஜஸ்…
சாப்பிட்டு எழும்போது தான் மலரின் முகத்தை ஒரு தடவை பார்த்தான்… இந்த வீட்டில் வாழும் போது ஒரு நாளும் இந்த சந்தோஷத்தை அவள் முகத்தில் காண முடியாது… இன்று தான் உணர்ந்தான் ஒருவேளை விக்ரம் சொல்வது போல் கையில் இருந்த பொருள் ஒரு பொக்கிஷம் என்பதே தெரியாமல் வாழ்ந்து விட்டேனா?.. இன்று வரையிலும் அதன் அருமை தெரியாமல் இருக்கிறேனா… என்று யோசித்துக் கொண்டு இருக்கையில்… கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ரதி…
மச்… இது வேற ஒரு வேலை என்று சலித்துக் கொண்டான் அருண்…
ஒரு காலத்தில் தனக்கு பிடித்த வேலையாக இருந்தது… இன்று கடமைக்கு செய்யும் வேலையாகி போனது…
அருணின் மொத்த வன்மையைக் கூடலில் காட்டினாலும்…. “ஸ்பீடு பத்தல… இன்னும் வேகமா” எ ன்று அவள் கூறும் பொழுது சலிப்பாய் “ஐயோ சாமி என்ன விடுங்கடா” என்று ஓட தோணுகிறது அருணுக்கு…
அவளின் தேவைக்கு இணங்க சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறான்… முதலில் காரசாரமாய் ருசித்த இந்த வாழ்க்கை இப்பொழுதெல்லாம் பச்சைக்கறியை திங்க சொல்வது போல் குமட்டி கொண்டு வருகிறது…
குழந்தையை கொடுத்து அனுப்பிவிட்டு… கூடலுக்கு தயாரானான் அருண்.. இப்பொழுது எல்லாம் கூடலுக்கு மனதளவிலும் உடலளவிலும் அவன் தயாராவதற்கு பெரும் பாடாக மாறுகிறது… உடல் அளவில் ரதி தயாராக்கினாள்… ஆனால் மனதளவில் அவளுடைய தொடுதலை மனம் வெறுக்கிறது… எப்படியோ ஒரு வழியாக கூடலை முடித்துவிட்டு கட்டிலில் படுக்க… முகமெல்லாம் வியர்த்து ஒரு குமட்டல் ஒன்று தோன்றுகிறது அருணுக்கு அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கிறான்.
வர வர நீ ஒன்னும் சரியில்ல அருண்… உன்கிட்ட சுத்தமா ஸ்டாமினா இல்ல.. ஐ அம் நாட் சாடிஸ்பைட்… டெய்லி உன் கிட்ட ஏதோ ஒன்னு எதிர்பார்த்து ஏமாந்து போறேன்.. என்று ரதி இகழ்வாய் கூற….
இந்த வார்த்தையில் அருணின் ஆண்மை அடி வாங்கியதை போல் உணர்ந்தான்… பல நாள் கட்டிலில்… போதும் அருண்… வேகத்தை கம்மி பண்ணுங்க… ப்ளீஸ் கம் டவுன்… என்று இன்று அவனது ஆண்மையை பறைசாற்றிய படி, அவனது தோளை பிடித்து நிதானப்படுத்தும் பல பெண்களின் குரல் அவன் காதில் கேட்டது.. அதுவே அவன் அடுத்தக் கூடலுக்கு முன்னேற பாதையாய் அமைந்தது… ஆனால் இப்பொழுதெல்லாம் ரதியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் அவனை தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுகிறது… அவனுடைய முழு சக்தியை பிரயோகித்து கூடலில் இறங்கினாலும் அவளிடம் இருந்து வரும் வார்த்தை “not enough”… ஒவ்வொரு முறையும் முழு முயற்சி செய்தும் பரிட்சையில் தோற்ற மாணவன் போல் அவன் நிலை மாறிவிட்டது… ஒருவேளை தன்னிடம் தான் ஏதோ குறை உள்ளதோ… ஒரு பெண்ணை தன்னால் திருப்தி படுத்த முடியவில்லையோ என்றெல்லாம் எண்ண தோன்றுகிறது… ஆண்மை குறைபாடு காண காரணங்களை அவன் இணையத்தில் ஆராயும் பொழுது அதில் முதன்மை காரணமாக மது அருந்துதல் வரவே அதையும் இப்பொழுதெல்லாம் தவிர்த்து வருகிறான்…. ஆனால் விருப்பமில்லாத கூடல், சுற்றி பற்றி எரியும் நெருப்புக்கு நடுவே.. கட்டிலில் படுத்திருப்பது போல் ஒரு பிரம்மை…
இதைப் பற்றி மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கலாமா என்ற எண்ணமும் தோன்றுகிறது… ஆனால் இந்த விஷயம் சிறிது வெளியில் கசிந்தாலும் தனக்கு பெரும் அவமானம் நேரிடும் என்று மனது உறுத்துகிறது… ஆனாலும் இதைப் பற்றி மனதிற்குள்ளேயே வைத்து புலம்புவதை விட.. தனது தோழி மருத்துவர் சைலஜாவிடமே கலந்து ஆலோசித்து விடலாம் என்று எண்ணி தைரியமாக மருத்துவமனைக்கும் சென்று விட்டான்….
உள்ளே வந்து பத்து நிமிடமாக அமைதியாக தரையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தவனை… பொறுமையாக பார்த்த சைலஜா புரிந்து கொண்டார் ஏதோ ஒரு சொல்ல முடியாத பிரச்சனை என்று… இங்கு வரும் பல குழந்தை இல்லா கணவன்மார்கள்…. தங்களின் பிரச்சினைகளை கேட்பதற்கு இப்படித்தான் தயங்கி நிற்பார்கள்…
என்ன அருண் எதுவும் பிரச்சனையா எதுனாலும் தயங்காம சொல்லு… அந்த விஷயம் நம்ம ரெண்டு பேர தவிர வேற யாருக்கும் போகாது…. என்ன நம்பி சொல்லு என்று அவனின் மனநிலை புரிந்து அவன் கை மேல் தன் கை வைத்து உறுதியளித்தார்…
அப்பொழுதுதான் நிம்மதி பெருமூச்சுடன்… தனது பிரச்சினையை சொல்ல துவங்கினான் அருண்…
வாரத்துக்கு எத்தனை நாள் ஒண்ணா இருப்பீங்க…
எல்லா நாளும்… சலிப்பாய் தலையை திருப்பி கொண்டான்..
எத்தனை தடவை..
மச்.. அவ போதும்னு சொல்ற வரைக்கும்… ஒரு பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது அவனிடமிருந்து…
உனக்கு இதுல விருப்பமில்லையா அருண் என்று மருத்துவர் கேட்க…
கண்ணை மூடி ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு… இப்ப கொஞ்ச நாளா அவ மேல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல… ஐ ஹேட் திஸ் இன்டிமேட்… என்றான் முகத்தை சுருக்கியபடி….
இன்னும் பல கேள்விகளை கேட்டுவிட்டு மருத்துவர்,… நீ சொல்ற எல்லா பதிலும் ஒரு மனிதன் அவனால அதிகபட்சமா கொடுக்க முடிந்த முயற்சியின் அளவு… அதனால உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… நீ நார்மலா தான் இருக்க பயப்படாதே… என்றார் மருத்துவர்…
ஆனா அவ சேடிஸ்பைடு ஆகலன்னு சொல்றா எனக்கு ஸ்டாமினா இல்லன்னு சொல்றா.. ஐ ஃபீல் யூஸ்லெஸ்.. என்று சொல்லும்போது தலை தாழ்த்தி கொண்டான்.
அருணை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவர்… அப்போ உன்னோட பிரச்சனை ரதி சேடிஸ்பைட் ஆகலங்கறது தானா?…
ஆமாம்…. என்ற தலையசைதான் அருண்…
அப்டினா…. அவள உன்னால எப்பவுமே சேட்டிஸ்ஃபை பண்ண முடியாது அருண்…
ஏன் என்னும் விதமாக புருவத்தை உயர்த்தி பார்த்தான் அருண்..
பிகாஸ்.. அவ ஒரு டிரக் எடுத்துக்கிறா… சோ அதனால அவளோட உணர்வுகள் ஹையா இருக்கும்… ஒரு நார்மல் மனுஷனால அவள சேட்டிஸ்ஃபைடு பண்ண முடியாது… அவள மாதிரியே டிரக் எடுத்துக்கிற ஒருத்தனால மட்டும் தான் அவளை திருப்தி படுத்த முடியும்… என்று மருத்துவர் கூற…
பேயறைந்ததைப் போல் முழித்தான் அருண்…
லாஸ்ட் டைம் அவள கூட்டிட்டு வந்து செக் பண்னும் போது , பிளட் டெஸ்ட் எடுத்தப்ப தான் இது எங்களுக்கு தெரிஞ்சது…
பட் இதை ஏன் நீ இதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லல… என்றான் அருண்.
உனக்கு தெரியும்னு நினைச்சேன் அருண்… பட் உன்னோட பெட் பார்ட்னர் பத்தி உனக்கு எப்படி தெரியாம இருக்கும்…
ஒரு விரக்தி சிரிப்புடன்… கண்கலங்கி விட்டத்தை பார்த்து இருக்கையில் தளர்வாய் சாய்ந்து அமர்ந்தவன்… அது சரிதான்… நான் தான் அவளை பத்தி தெரியாமலே இத்தனை நாள் வாழ்ந்துட்டேன்.. அவளை பத்தி மட்டும் இல்ல, கூட வாழ்ந்த யாரை பத்தியும் தெரிஞ்சுக்காம இருந்தது என் தப்பு தான்… ஒட்டுமொத்த முட்டாள் தனமும் என்னோடது தான்… யாரு மேலையும் குறை சொல்ல நான் விரும்பல… ஒவ்வொரு அதிர்ச்சியாய் கேட்டு கேட்டு மனம் அடிவாங்கி விரத்தியின் உச்சத்திற்கே சென்று விட்டான்… மனம் தளர்ந்து உணர்வற்று எழுந்து அறையை விட்டு செல்ல நினைத்தவனை நிறுத்தி…
அவள திருப்தி படுத்துவதற்காக, முட்டாள்தனமா நீயும் தயவு செஞ்சு இந்த மாதிரி ட்ரக் எதுவும் ட்ரை பண்ணிராத அது டோட்டலா உன்னோட பாடி புல்லா கொலாப்ஸ் பண்ணிடும்… ஒரு உறுப்பு விடாமல் எல்லா உறுப்பும் பாதிக்கப்படும்… என்று தோழன் என்ற அக்கறையில் மருத்துவர் கூற…
ஒரு நாளும் நான் அப்படி செய்ய மாட்டேன் சைலஜா… என் பையன் கூட நான் ரொம்ப நாள் வாழனும்… அவனுக்கு நான் மட்டும் தான் இருக்கேன்.. ஒரு நிமிடம் அமைதிக்கு பின்… எனக்கும் அவன் மட்டும் தான் இருக்கான்… என்றான்.
உண்மையில் மனம் நொந்து வெளியேறும் அவனைப் பார்க்க மருத்துவர்கே ஒரு மாதிரியாகி போனது… ஒவ்வொரு முறையும் அவன் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொழுதும் ஒவ்வொரு அதிர்ச்சி அவனை ஆட்டுவிக்கிறது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️