அசுரன் 102
தேவன் கன்ஸ்ட்ரக்சன் கீழே உள்ள ஒரு குடோனில் ஆதி விக்ரம் , ராஜேஷ் என அனைவரும் இருந்தனர்…
எதிரே, மாஸ்க் அணிந்தபடியே கை கால்கள் இருக்கையில் கட்டியபடி ஒருவன் அமர்ந்திருந்தான்… இரவு மயக்க மருந்து தெளித்ததின் விளைவாக மயக்கத்தில் இருந்தவனை தட்டி எழுப்பினான் ராஜேஷ்…
மெல்லமாய் குழப்பத்துடன் கண் திறந்தவன்… இரண்டு மூன்று தலை குழுக்களுக்கு பின் நிதானத்திற்கு வந்தான்.
எதிரில் அமர்ந்திருந்த ஆதி அவனை தான் ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்தான்… சில கணங்களுக்கு பின் பேச தொடங்கினான்…
என்னடா மாஸ்க் போட்டு இருக்கோமே எப்படி கண்டுபிடிச்சேன் அப்படின்னு தானே யோசிக்கிற…
நீ யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு தான் இந்த ஒரு வாரமும்… இல்லனா… நீ முதல் நாள் என் பொண்டாட்டி கிட்ட பேசும்போதே உன்னை பிரிச்சு உறி உறினு உறிச்சிருப்பேன்… காலேஜ் படிக்கும் போது கடவாய ஒடச்சதுக்கு காலம் கடந்து பழிவாங்க வந்து இருக்கீங்க… அப்ப இதனை நாள் என்கிட்ட ஃப்ரெண்டு மாதிரி பழகுனது எல்லாம் நடிப்பு…
அதுக்கு ஏன் இத்தனை வருஷம் காத்திருக்கணும்…
இத்தனை வருஷம் நீ சிங்கிளா தான் டா இருந்த.. என்றான் ராகேஷ்.
நான் உன்ன அடிச்சதுக்கு திரும்ப நீ என்னை அடிச்சா சரியா போச்சு… அதுக்கு நடுவுல மலர் எதுக்கு…
நீ என்ன அடிச்சதுனால என் முகத்தில் மார்க் விழுந்திருக்கு… காலேஜ்ல எனக்குன்னு இருந்த இமேஜ் மொத்தம் கொறஞ்சி… எல்லாரும் என்ன அற்ப புழு மாதிரி பார்த்தாங்க… என்ன அடிச்சத வச்சு நீ பெரிய ஹீரோ ஆயிட்ட… பொண்ணுங்க எல்லாம் உன் பின்னாடி தானே சுத்தி வந்தாங்க…
நான் அடிவாங்கியத பாத்துட்டு என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் காரி மூஞ்சில துப்பிட்டு போயிட்டா…
மூணு வருஷம் உண்மையான லவ் டா… எனக்கு எப்படி வலிக்குதுன்னு தெரியுமா… அந்த வலி உனக்கும் தெரியணும்… உன்ன பத்தி தெரிஞ்சுக்க தான் உன் கூடவே பழகினேன்… நீதான் பொண்ணுங்க பக்கமே போகலையே… அதனாலதான் இத்தனை வருஷம் காத்துட்டு இருந்தேன்… அப்பத்தான் ஒரு நாளு… நீ இவளுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்ததை பார்த்தேன்… யார் கூடவும் கிட்டயே போகாத நீ ஒரு பொண்ணு கூட இவ்வளவு க்ளோசா பழகுரேனா… அவளை சும்மா விட எனக்கு மனசு இல்ல…
அதனாலதான் மாலுக்கு நீ அவ கூட வந்திருக்கும் போது… என்னோட ஆளுங்கள அனுப்பி… கூட்டத்துல அவ மேல கை வைக்க சொன்னேன்… அதைப் பார்த்து நீ கதறுவேன்னு நினைச்சேன்… அன்னைக்கும் ஹீரோ மாதிரி வந்து காப்பாத்திட்ட…
இவளுக்கே போன் பண்ணி… சொல்லாம கொள்ளாம அவனை விட்டு ஓடிவிடு என்று சொன்னேன்… கிளம்பி போனவள வழியை மறைச்சு கூட்டிட்டு வந்துட்ட…
அதுக்கப்புறம் நான் சொல்லட்டுமா… என்றான் ஆதி.
நீயே எதிர்பாக்காதது தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது… மலரோட ஊர்ல இருக்கிற உன்னோட மால்ல தான் வந்து நான் தாலி வாங்கினேன்… நான் மெட்டி வாங்க போன கேப்ல.. நான் வாங்குன தாலி இல்ல மைக்ரோபோன் செட் பண்ணிட்ட… எங்க கல்யாணத்துக்கு கூட ஆள் அனுப்பி வீடியோ ல லைவா(live) பார்த்து இருக்க… பின்ன மலர பிளாக்மெயில் பண்றதுக்காக ஒரு லாரிய நீயே ஏற்பாடு பண்ணி எங்களை இடிக்கிற மாதிரி வர வச்ச… ஏன்னா உன்னோட பிளான் எங்கள கொல்றதில்ல.. மலரையும், என்னையும் பிரிக்கிறது மட்டும்தான்..
அப்புறம் நீ தாலிக்குள்ள செட் பண்ண மைக்ரோபோன் மூலமா கேட்ட எல்லா விஷயத்தையும் மலர் கிட்ட சொல்லி உன்னோட பிளாக் மெயில் ஸ்டார்ட் பண்ணேன்…
பரவாயில்ல என் பொண்டாட்டி புத்திசாலி… உன்னோட பிளான் ஆரம்பத்திலேயே என்கிட்ட சொல்லிட்டா.. அதனாலதான் உன்னை இவ்வளவு சீக்கிரமா என்னால புடிக்க முடிஞ்சது, ஒருவேளை உனக்கு பயந்துகிட்டு அவ சொல்லாம இழுத்து அடிச்சிருந்தா இன்னும் பெரிய பிரச்சனைகளை நீ கொண்டு வந்து விட்டிருப்ப…
உன் பொண்டாட்டி ஒன்னும் நல்லவ இல்ல டா… இத்தனை நாள் நீ தூங்குனதுக்கப்புறம் என் கூட தான் போன்ல சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தா… இப்போ உன்கிட்ட கையும் களவுமா மாட்டுனதுக்கு பின்னாடி என்னென்னமோ சொல்லி சமாளிக்கிறா…. என்னோட போன்ல அவ பேசின எல்லா ரெக்கார்டும் இருக்கு எடுத்து நீயே கேட்டு பாரு சந்தோஷப்படுவ… இந்த ஒரு வாரமும் அவ எனக்கு எத்தனை முத்தம் கொடுத்து இருப்பான்னு அவளுக்கே தெரியாது நான் ஒன்னும் கேட்டா அஞ்சு கொடுத்து போன வப்பா… இன்னும் கொஞ்ச நாள் போயிருந்தா… என் கூட வாழ வந்திருப்பா… என்றான் ஏளனமாய்…
இதைக் கேட்ட விக்ரம்… ராஜேஷை பார்த்து… எல்லாம் நீ பண்ண வேலை தான்… என்று கேலியாய் கூற…
சரி இப்ப அவளுக்கு கால் பண்ணு.. என்றான் ஆதி…
அவன் ஒரு கையை அவிழ்த்து அதில் போனை விக்ரம் கொடுக்க… மலர் எண்ணுக்கு அழைத்தான் ராகேஷ்.
அவனின் பின்னால் போன் ரிங் ஆனது… திரும்பிப் பார்க்க முடியவில்லை… ஹலோ என்றான்.. ராகேஷ்.
ஹலோ சொல்லுங்க… என்றபடி பேசிக் கொண்டே அவன் முன்னே வந்து நின்றான் ராஜேஷ்…
என்ன ப்ரோ உம்மா வேணுமா? என்று ராஜேஷ் குரலில் கண்ணை சிமிட்டி சரசமாய் பேச போனில் மலர் குரலில் கேட்டது…
ஏய்…. ச்சீ…. இடியட்.. என்று முகத்தை சுளித்தவன்… எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்துறீங்களா… உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன் டா.. இதுக்கு நீங்க ரொம்ப அனுபவிப்பீங்க… என்று கத்தினான் ஏமாற்றத்தில்…
ஏண்டா எருமை கடா மாதிரி இருக்க… நீ யூஸ் பண்ண அதே டெக்னாலஜி நாங்களும் யூஸ் பண்ணுவோம் உனக்கு தெரிய வேண்டாமா… என்றான் ராஜேஷ்.
இவனை என்ன பண்ணலாம் என்று விக்ரம் ஆதியிடம் கேட்க…
தன் வசம் இருந்த அடியாட்களிடம் கூறி அவனை குடோனில் கட்டி போட சொல்லி அனுப்பி வைத்தான்… நிதானமா யோசிச்சு அவன ஏதாவது பண்ணலாம்… கோடீஸ்வரர் வீட்டுக்கு ஒரே புள்ள… சுத்தி வளைச்சு தேடுவாங்க… பொலிட்டிக்கல் பிரஷர் வரும்… அவசரப்பட வேண்டாம்… கொஞ்ச நாள் நம்ம கஸ்டடியில் இருக்கட்டும்.. உடம்புல உயிர் மட்டும் மிச்சம் வைங்க… என்று சொல்லி அனுப்பி வைத்தான்..
அருண் முகமே சரியில்ல என்னனு விசாரி என்று விக்ரமிடம் கூற…
சரிடா அவனை நான் பாத்துக்குறேன்…
சரி ப்ரோ அப்ப நான் என்னோட திங்ஸ் எடுத்துட்டு ஊருக்கு கிளம்புறேன் என்று கூறிவிட்டு சென்றான் ராஜேஷ்.
அனைத்தையும் முடித்துவிட்டு ஆர்வத்துடன் வீடு வந்து சேர்ந்தான் ஆதி.
வாங்க என்று வாசலில் உபசரித்த மனைவி… என்ன ஆச்சு… அவர என்ன பண்ணீங்க… என்று தன் சேலை தலைப்பை திருத்தியபடி ஆர்வமாய் கேட்டபடியே அவனை பின்தொடர்ந்தாள் மலர்.
நின்று அவள் முகத்தை ஒரு கணம் பார்த்தவன்… ஒன்னும் பண்ணல கூப்பிட்டு விசாரிச்சு இரண்டடி அடிச்சு அனுப்பி வச்சுட்டோம்… என்றான் ஆதி.
அவனை நம்பாத பார்வை பார்த்தவள்… அவ்வளவுதானா.. இனிமேல் வந்து நம்ம லைஃப்ல பிரச்சனை பண்ண மாட்டாரே… என்று கேட்டாள்.
இல்லை என்ற தலையசைத்தவன்
குளிப்பதற்காக ஆடையுடன் குளியல் அறைக்கு சென்றான் ஆதி.
யோசனையுடனே அமர்ந்திருந்தாள் மலர்.
அப்பொழுது, சரியாய்.. இந்த வீட்டில் இருக்கும் தன்னுடைய பொருள்களை எடுத்து விட்டு செல்வதற்காக ராஜேஷ் வந்தான்.
வா ராஜு… அந்த மாஸ்க் மேன்.. என்ன பண்ணீங்க என்று எதுவும் தெரியாது போலவே கேட்டாள்…
தெரியல ஆதி ப்ரோ குடவுன்ல கட்டி போட சொன்னார்… என்ன பண்ணுவார் என்று தெரியலை…
ஆனா கண்டிப்பா சும்மா விட மாட்டார் என்று மட்டும் தெரியும்…
உனக்கு ஒன்னு ஞாபகம் இருக்கா… ரதி ஒரு தடவை பார்ட்டி வச்சிருந்தப்ப.. யாரோ ரெண்டு பேரு உன்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணதா… நீ அவங்க ரெண்டு பேரையும் அடிச்சிருக்க… அவங்கள காப்பாத்தி ஆதி தான் ஹாஸ்பிடல் அனுப்பி வச்சிருப்பாரு அவரோட கார்ல…
ஆமா.. என்றாள்.. நகத்தை கடித்து யோசித்தப்படியே…
அவங்களையே ஒரு வாரம் கட்டி போட்டு அடி அடின்னு அடிச்சு கடைசியில நடு விரலை கட் பண்ணி தான் அனுப்பி வைத்திருக்காரு உன் புருஷன்.. என்று ராஜேஷ் சொல்ல..
ஐயோ.. திடுக்கிட்டு அதிர்ச்சியாய் வாயில் கை வைத்தாள் மலர்..
சின்ன தப்பு பண்ணுன அவனுங்களுக்கே அந்த நிலைமைனா… உங்க ரெண்டு பேருக்கும் இவ்வளவு பெரிய தொல்லை கொடுத்த இவனுக்கு என்ன நிலைமையின்னு என்னால யோசிச்சு கூட பாக்க முடியல… அது உன்னோட புருஷன் கையில தான் இருக்கு…
என்ன பண்ணுவாரு?…
நோ ஐடியா… என்றான் தோள்களை குலுக்கியபடி..
எதுக்காக பழி வாங்கணும்னு வந்திருக்காரு…
எனக்கு அத பத்தி தெரியல… ஆதி கிட்ட கேட்டு பாரு…
ராஜேஷ் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் அதை மட்டும் நீ தெளிவுபடுத்து.. என்றாள் மலர்.
அருண் வீட்ல இருக்கும் பொழுது என் கூட எல்லா நாளும் கூட இருந்த நீ.. அருண் என்ன கோவில்ல விட்டுட்டு போகும்போது துணைக்கு ஏன் வரல… அதுக்கப்புறம் எங்க போன?.. என்று மலர் கேட்க..
சிரித்தபடியே ராஜேஷ்… உன்ன தான் ஒப்படைக்க வேண்டியவங்க கிட்ட ஒப்படைச்சிட்டேனே… எனக்கு கொடுத்த வேலையை நான் முடிச்சுட்டேன்.. அப்புறம் எனக்கு இங்க என்ன வேலை… அதனாலதான் நான் கிளம்பிட்டேன்.. என்றான் ராஜேஷ்….
இதைக் கேட்டவளுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது… தூக்கி வாரி போட்டது…
என்ன சொல்ற ராஜேஷ் நீ..
நீ நினைக்கிறது சரிதான்… அருண் வீட்ல உன்ன பாத்துக்க சொல்லி என்னை அனுப்பி வச்சது ஆதி தான்.. உனக்கு அங்க ஏதோ சொல்ல முடியாத பிரச்சனை அதை தீர்த்து வைக்க சொன்னாரு… உனக்கு எந்த பிரச்சனையும் வராம பாத்துக்க சொன்னாரு… எனக்கு ஆதி ப்ரோவோட லவ்வ பத்தி தெரியும் உன்ன வலை போட்டு தேடுனவங்கல்ல நானும் ஒருத்தன்… நான் கொஞ்சம் ஓவரா போயி.. உன்ன அருண் ப்ரோ கிட்ட இருந்து பிரிச்சே கூட்டிட்டு வந்துட்டேன்…. உன்னை கோயிலுக்கு கூட்டிட்டு போறாங்கன்னு சொல்லி.. உன்னோட லொகேஷனை ஆதி ப்ரோவுக்கு அனுப்பி வச்சது நான் தான்.. அதுக்கு மேல ஆதி உன்ன பார்த்து பாருனு எனக்கே தெரியும்… அதனால நானும் எங்க அம்மாவை கூட்டிட்டு ஊருக்கு கிளம்பிட்டேன் ..
அப்ப இத்தனை நாளும், என் கூட பிரண்டா இருக்கிற மாதிரி நடிச்சியா ராஜு… என்று கலங்கி போய் மலர் கேட்க..
உனக்கு செக்யூரிட்டியா இருக்க தான் என்னை அனுப்பி வைத்தார்… ஆனா நான் தான் உன் கூட பிரண்டா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்… அது நம்ம ரெண்டு பேரோட பர்சனல்… அதுல தலையிட இங்க யாருக்கும் உரிமை இல்லை…
உன் மேல எனக்கு இருக்கிற அன்பு எப்போதுமே தூய்மையானது அது யார் நினைச்சாலும் மாற்ற முடியாது மலர்… அவளது கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி.. நெத்தி முட்டினான்.
அப்போது சரியாய் உள்ளே கோபமாய் நுழைந்தான் ஆதி. அசையாமல் அவர்களைத்தான் பார்த்துக்கொண்டு நின்றான்.
ஆதியை கண்டதும் ஒரு அடி விலகி நின்றாள் மலர். வேண்டும் என்று நிற்கவில்லை… அவனை கண்டதும் கால்கள் தன்னால் பின்னால் நகன்றது. ராஜேஷின் கண்கள் மிரட்ச்சியில் திருட்டு முழி முழித்தது என்பது உண்மை.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️